இலங்கை தமிழரிடம் கனிமொழி வாக்குவாதம்?

சென்னை: 'டெசோ' மாநாடு ஆய்வரங்கத்தில் வரைவுத் தீர்மானங்கள் மீது, காரசாரமான விவாதம் நடந்தது. ஈழம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்களுக்கு, வெளிநாட்டு பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் தங்களது நாட்டின் தலைவர்களிடம் முடிவு கேட்டு தான், தீர்மானத்தில் கையெழுத்திடுவோம் என வாதிட்டனர்; ஒரு சிலர் வெளிநடப்பு செய்ய…

புலம்பெயர் தமிழர்களில் சிலர் கோத்தபாயவுடன் சந்தித்து பேச்சு?

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் ௭ன்று நம்பப்படுகின்ற புலம்பெயர் தமிழர்களில் சிலர் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அந்தப் புலம்பெயர் தமிழர்கள் குழு வடக்கு மற்றும் கிழக்கிற்கும் பயணம்…

கொழும்பில் டெசோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; கருணாவின் உருவபொம்மை எரிப்பு!

டெசோ மாநாட்டை நடத்துவதற்கு முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு அனுமதி வழங்கியதற்காக இந்திய மத்திய அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்று இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்றது. இலங்கையின், ''தேசத்தைக் காக்கும் அமைப்பு'' என்னும் அமைப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம், கொழும்பில் உள்ள இந்திய தூதுவரின் அதிகாரபூர்வ இல்லத்தின்…

மட்டக்களப்பில் முஸ்லிம் பள்ளிவாசல் எரிக்கப்பட்டது

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் இருநூறுவில் கிராமத்திலுள்ள மொகிதீன் ஜூம்மா பள்ளிவாசல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அடையாளம் தெரியாத குழுவொன்றினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது அங்கு அமைக்கப்பட்டிருந்த நான்கு தற்காலிக குடிசைகளும் கடையொன்றும் இக்குழுவினரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்தனர். உழவு இயந்திரமொன்றில்…

டெசோ மாநாடு : கருணாநிதிக்கு சிக்கல் மீது சிக்கல் வருகுது!

சென்னை: இலங்கை தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னையில் நடத்த தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. தமிழக போலீஸ் தரப்பில் கேட்கப்படும் விளக்கத்திற்கு உரிய பதில் தி.மு.க., அளிக்கவில்லை என்றும் இதனால் சென்னையில் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் அரசு தரப்பில் ஆஜராக…

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த சீனர்கள் கைது

இலங்கையில் கிழக்குக் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 37 சீன நாட்டவர்கள் உட்பட 39 பேர் ஞாயிறு இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஏனைய இருவரும் இலங்கை பிரஜைகள் என்றும் கடற்படை தெரிவிக்கின்றது. பொத்துவில் பிரதேசத்திலுள்ள அறுகம்பை கடல் பகுதியில் கரையிலிருந்து…

எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளினால் நாட்டிற்குக் குந்தகம் ஏற்படுமாம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எஞ்சியோர் இலங்கைக்கு வெளியே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். அவர்களால் நாட்டுக்கு குந்தகம் ஏற்படக் கூடும். எனவே படைவீரர்கள் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ பக்சே தெரிவித்துள்ளார். திருகோணமலை சீனன் குடாவிலுள்ள விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற…

இலங்கையில் சில முன்னேற்றம், ஆனால் பல தேவைகள்

இலங்கையில் போருக்கு பிறகான முன்னேற்றம் இருந்தாலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளனர் என்று ஐநாவின் ஒரு உயரதிகாரி தெரிவித்துள்ளார். போர் முடிந்து மூன்று ஆண்டுகளில் வடகிழக்கு இலங்கையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை பார்வையிடச் சென்ற, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான பணிகளுக்கான…

தமிழ்நாடும் புதுடில்லியும் இணைந்தே இலங்கை இறுதிப்போருக்கு உதவின

"இறுதிப் போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும், தமிழக அரசும் கூட்டுச் சேர்ந்து தான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும் கூட தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசியிருக்கிறேன்." இவ்வாறு மனித உரிமைச் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான அருந்ததி ராய்…

புலிகளுக்கு எதிரான தடையை மேலும் நீடித்தது அமெரிக்கா

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிரான தடையை அமெரிக்க அரசாங்கம் நீடித்துள்ளது. அமெரிக்க ராஜாங்கத் துறையின் புதிய அறிக்கைகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அந்நாட்டு அரசாங்கம் நீடித்துள்ளது. 2011ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் துறையின் அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பு…

இலங்கையில் மதச் சுதந்திரம் குறித்து அமெரிக்கா கவலை

கொழும்பு: இலங்கையில் கடந்த ஆண்டு பல மதவழிபாட்டுத் தலங்களும், சிறுபான்மை சமூகத்தினரும் தாக்குதலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவாலயங்கள் மற்றும் கிறித்துவ சமூகத்தின் மீது கடந்த ஆண்டு பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. அதே போல…

உரிமைப் போராட்டத்திற்கான முன்னெடுப்புகள் தொடர்கிறதா?

பொது நலத்தின் அடிப்படை சுயநலன்தான் என்ற கருத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. அதற்காக பொதுநலன் என்பதில் இருக்கக் கூடிய பொதுமையான நன்மைகள் குறித்தும் நாம் உதாசீனம் செய்துவிடக்கூடாது. பொது நலன் பற்றிய சிந்தனைகளே இந்த உலகை சமத்துவமான மனிதவாழ்வை ஏற்படுத்த உதவியது-உதவுகிறது. எனவே பொதுநலம் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டதாயினும்…

தேர்தலுக்கு முன்பு மறு குடியமர்வு என்கிறார் பாசில் ராஜபட்ச

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த அனைவரும் தேர்தலுக்கு முன்பே மறு குடியமர்வு செய்யப்படுவர் என்று அந்த நாட்டு மூத்த அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பாசில் ராஜபட்ச நேற்று தெரிவித்தார். அதேநேரத்தில் இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் அல்லாதவர்களை குடியேற்ற இலங்கை அரசு…

ஆழ்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்கள் மீட்கப்பட்டனர்

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சட்ட விரோத பயணம் மேற்கொண்டு ஆழ்கடலில் தத்தளித்த 28 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளரான கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். தென் கிழக்குக் கடலுக்கு அப்பால் 300 கடல் மைல் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, காப்பாற்றப்பட்ட இவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலி மீன் பிடித்…

தமிழீழம் என்ற இலக்கில் தொடர்ந்து பயணிக்க உலகத் தமிழ் அமைப்புகள்…

தமிழீழம் என்ற இலக்கை அடைவதற்கான போராட்டப் பயணத்தில் தொடர்ந்தும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடன் Read More

இந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா?

இலங்கையில் தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக எதிர்கொண்ட பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அந்த ஒப்பந்தம் வெற்றியா அல்லது தோல்வியா என்கிற கேள்விகள் இன்றும் தொடருகின்றன. எனினும் அந்த ஒப்பந்தம் இன்றளவும் இந்தியாவின் மிகப்பெரிய ராஜந்திர…

ஒலிம்பிக் தொடக்க விழாவில் ராஜபக்சே! துரத்தியடிக்க தயராகும் லண்டன் தமிழர்கள்

லண்டனில் நாளை ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் போர்க்குற்றவாளியும் இலங்கை குடியரசுத் தலைவருமான மகிந்த ராஜபக்சே பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜபக்சே லண்டனுக்குள் நுழைந்தால் துரத்தியடிக்க தாமும் தயராக இருப்பதாக லண்டன் வாழ் அனைத்து தமிழர்களும் சூளுரைத்துள்ளனர். அத்துடன், மகிந்தவுக்கு எதிராக லண்டன் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை…

மரண அச்சுறுத்தல் இருப்பதனாலேயே மக்கள் ஆஸ்திரேலியா செல்கின்றனர்: ஐ.தே.க.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி இனவாதத்தை அரசாங்கம் தூண்டிவிட்டுள்ளது. நாட்டில் மரண அச்சுறுத்தல் இருப்பதனாலேயே ஆபத்தென்றாலும் படகில் அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு பொதுமக்கள் தப்பித்துப் போகின்றார்கள் ௭ன்று இலங்கையின் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது. பொய்யினால் தொடர்ந்தும் ஆட்சியை தக்க…

அவசரகாலசட்டம் இல்லாதது தான் பிரச்சனை என்கிறார் கோட்டா

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த சூழ்நிலையில் அவசரகாலச் சட்டம் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையால் தான் குற்றவாளிகள் தடையின்றி செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சே கூறியுள்ளார். குற்றச்செயல்கள் பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்ற முறையால்தான் நாட்டில் தொடர் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக கருத்துக்கள் வளர்ந்து வருவதாகவும் அது தவறு…

ராசபக்சவின் இணைப்பாளர் மீது அம்பாறையில் கிளைமோர் தாக்குதல்!

மகிந்த ராஜபக்சேவின் அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளரும் கருணாவின் சகாவுமான இனியபாரதி என்பவரை இலக்கு வைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இத்தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2004-ஆம் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்று சிங்கள அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட கருணா என்ற…