அம்னோ பொதுக் கூட்டம் மக்களிடமிருந்து விடுபட்டுள்ளது என்கிறார் அன்வார்

கடந்த வாரம் அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பேராளர்கள் ஆற்றிய ஆவேசமான போர்க்கால பேச்சுக்கள் பற்றிப் பக்காத்தான் ராக்யாட் கவலைப்படவில்லை . அவ்வாறு தெரிவித்த பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் , மக்களைப் பாதிக்கின்ற விஷயங்களை விவாதிக்கத் தவறியதின் மூலம் மக்களிடமிருந்து தான் விடுபட்டுள்ளதை அது காட்டியதே…

அன்வார்: மூசாவும் தீபக்-கும் தகவல்களை வெளியிட்டதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை

அம்னோ தலைவர்களுக்கு எதிராக அண்மையில் முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானும் வணிகர் தீபக் ஜெய்கிஷனும் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்களுக்கு எதிர்க்கட்சிகளே காரணம் எனக் கூறப்படுவதை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று மறுத்துள்ளார். "அவ்வாறு கூறப்படுவதற்கு ஆதாரமே இல்லை. நான் மூசாவைச் சந்தித்தேனா…

பாஸ்: நஜிப் தமது பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு கிடைத்த அரிய…

கடந்த வாரம் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அம்னோ பொதுப் பேரவையில் பதில் அளிக்கத் தமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தவற விட்டு விட்டதின் மூலம் நாட்டை ஏமாற்றி விட்டதாக பாஸ் கட்சி கூறுகின்றது. "உண்மையில் நஜிப்பின் நிறைவு உரையில் மக்கள் அவருடைய…

இந்திய சமூகத்துக்கு டிஏபி ஆற்றியுள்ள பங்கு அலட்சியம் செய்யப்பட்டுள்ளது

பினாங்கு மாநில அரசாங்க நிதி உதவியுடன் மாதம் இரு முறை வெளியிடப்படும் புல்லட்டின் முத்தியாரா (Buletin Mutiara) என்ற சஞ்சிகையில் இந்திய சமூகத்துக்கு மாநில அரசாங்கம் செய்துள்ள நன்மைகள் பற்றி போதுமான அளவுக்குச் செய்திகள் இடம் பெறவில்லை என மாநில டிஏபி சோஷலிச இளைஞர் பிரிவு உதவித் தலைவர்…

அம்னோ: புதை மணலில் சிக்கிக் கொண்டு மூழ்குகிறது

"12வது பொதுத் தேர்தலில் சந்தித்த எதிர்பாராத தோல்விகளுக்குப் பின்னர் அம்னோ மறு தோற்றம் பெற்று வாக்காளர்கள் எண்ணுவது தவறு என நிரூபிக்கும் என நான் எதிர்பார்த்தேன். அதற்கு மாறாக தான் எந்தத் தவறும் செய்யவில்லை என அது சொல்லிக் கொண்டே இருக்கிறது." அம்னோ போர் முரசு கொட்டுவது நல்ல…

லிம் கிட் சியாங்: யார் சொல்வது சரி ?

பிஎன் புத்ராஜெயாவிலிருந்து அகற்றப்பட்டால் எந்த இன வம்சாவளி அதிகமான இழப்பை எதிர்நோக்கும் என்பதில்  அம்னோவும் மசீச-வும் மாறுபட்ட ஆரூடங்களைச் சொல்கின்றன. அது ஆளுவதற்கான சட்டப்பூர்வத் தன்மையை அவை இழந்து விட்டதைக் காட்டுகின்றது என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். நடந்து முடிந்த அம்னோ…

பக்காத்தானில் மலாய்க்காரர்களிடமே தொடர்ந்து அதிகாரம் இருக்கும் என்கிறது டிஏபி

புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் ஆட்சி புரியும் போது மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழப்பர் என்னும் தோற்றத்தை அளிப்பதற்கு அம்னோ முயலுவதை அதன் அண்மைய ஆண்டுப் பொதுக் கூட்டம் உணர்த்துவதை டிஏபி உறுப்பினர்கள் அறிந்திருக்க வேண்டும் என பினாங்கு மாநில டிஏபி தலைவர் சாவ் கோன் இயாவ் கூறியுள்ளார். 13வது பொதுத்…

பினாங்கு தனது ‘பொன்னான’ எதிர்காலத்தை இழக்கக் கூடாது

பினாங்கு மாநில டிஏபி மாநாட்டில் அதன் தலைவர்கள் மிகுந்த நம்பிக்கையைக் காட்டிய போதிலும் எதிரிகளுடைய வலிமையை குறைவாக மதிப்பிட வேண்டாம் என கட்சி உறுப்பினர்களுக்கு தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் நினைவுபடுத்தியுள்ளார். வரும் தேர்தலில் கூட்டரசு நிலையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கும் பினாங்கை மீண்டும்…

பிஎன் எல்லோருக்கும் நியாயமாக நடந்து கொள்கிறது என்கிறார் பிரதமர்

தேசிய உருமாற்றத் திட்டங்களின் அமலாக்கத்தின் வழி கிடைக்கின்ற நாட்டின் வளப்பத்தை விநியோகம் செய்வதில் பிஎன் அரசாங்கம் எல்லாத் தரப்புக்களுக்கும் நியாயமாக நடந்து கொள்வதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். பொருளாதாரத் துறையில் இந்த நாடு அடைந்துள்ள வெற்றியை அம்னோ மக்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்களும் அனுபவிக்கின்றனர் என…

முகமட் அலியும் குதத்தை ஆட்டும் அவரது சகாக்களும் நாட்டுக்கு அவமானச்…

"உண்மையில் ஆயுதப் படைகளில் எத்தகைய மக்கள் உள்ளனர் ? நமக்கு இது போன்ற 'மூத்த சகோதரர்கள் இருந்தால்' நமக்கு எதிரிகளே வேண்டாம்" 'குதத்தைக் காட்டும் ஆட்டக்காரர்கள்' அன்வாரைக் குறி வைக்கின்றனர் நம்பாதவன்: இந்த மனிதர் மலேசிய ஆயுதப் படைகளுக்கு ஒர் அவமானச் சின்னம். அவரது மூளையும் குதமும் இடம்…

தீபாக்கின் குற்றச்சாட்டுக்கு பதில்: மௌனம்; ஆனால் பிரதமருக்கு பாராட்டு

பிரதமர் நஜிப் மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக வணிகர் தீபாக் ஜக்கிஷான் விடுத்திருந்த குற்றச்சாட்டுகளுக்கு இன்று பதில் அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்த தற்காப்பு அமைச்சரும் அம்னோ உதவித் தலைவருமான அஹமட் ஸாகிட் ஹமிடி அவ்வாறு எதுவும் செய்யவில்லை. மாறாக, அம்னோ பொதுக்கூட்டத்தை முடித்து வைக்கும் அவரது 20 நிமிட…

ஷாரிஸாட்டின் ‘மே 13’ உரையைக் கண்டித்து காவல்துறையில் புகார்

அரசாங்கத்திலிருந்து அம்னோ அகற்றப்பட்டால் அது இனப் பதற்ற நிலைக்கு வழி வகுத்து 1969 மே 13 துயரச் சம்பவம் மீண்டும் நிகழக் கூடும் என அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறிய கருத்தை கண்டித்து கிள்ளான் காவல்துறையில் அரசு சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து புகார்…

‘பிகேஆர் ஏன் இப்போது முன்னாள் ஐஜிபி-உடன் கை கோர்க்கிறது ?’

பிகேஆர் தனது முன்னாள் எதிரியான முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானுடன் 'கை கோர்ப்பதாக' குற்றம் சாட்டி அதனை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் ரோபர்ட் பாங் சாடியிருக்கிறார். MyWatch என்ற குற்றச் செயல் கண்காணிப்பு அமைப்பு…

‘குதத்தைக் காட்டும் ஆட்டக்காரர்கள்’ அன்வாரைக் குறி வைக்கின்றனர்

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் வீட்டுக்கு முன்பு 'குதத்தைக் காட்டும் ஆட்டத்தை' நடத்தப் போவதாக அரசாங்க சார்பு அரசு சாரா அமைப்புக்களின் கூட்டமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது. "அன்வார் தமது குதத்தைக் காட்டினால் நாங்கள் எங்களுடையதை அவரது வீட்டுக்கு முன்னால் காட்டுவோம், சரியா இல்லையா ?" என மலேசிய…

சாட்சி: டி9 அதிகாரிகள் குகனுக்குக் காயங்களை ஏற்படுத்தினர்

2009ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி தைப்பான் -யூஎஸ்ஜே போலீஸ் நிலையத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்ட ஏ குகனின் உடலில் இருந்த காயங்களை டி9 (கடும் குற்றங்கள்) பிரிவைச் சார்ந்தவர்கள் ஏற்படுத்தினர் என்பதை இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார். என்றாலும்…

பாகாங் மந்திரி புசார்: நான் நேரடியான அர்த்தத்தில் சொல்லவில்லை

பெந்தோங்கில் பாரிசான் நேசனல் தோல்வி கண்டால் தமது காதுகளை வெட்டிக் கொள்ளும் அர்த்தத்தில் தாம் அதனைச் சொல்லவில்லை என பாகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கோப் இன்று தெளிவுபடுத்தியுள்ளார். உண்மையில் அது மறைபொருள் சொற்றொடர் எனக் குறிப்பிட்ட அவர் தம்மைக் குறை கூறுகின்றவர்கள் முதலில் ஆங்கில மொழியைக் கற்க…

சுவாராம் விசாரணையில் மேலும் மூவருக்கு அழைப்பாணை

மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம் மீதான விசாரணைக்கு வருமாறு சங்கப் பதிவகம் மேலும் மூவருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. வழக்குரைஞர்கள் ஃபாதியா நத்வா பிக்ரி, அமீர் ஹம்சா, சுவாராம் செயல்முறை இயக்குனர் நளினி ஏழுமலை ஆகியோரே அம்மூவருமாவர். அவர்கள் 1966ஆம் ஆண்டு சங்கச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படுவர். அச்சட்டம், பதிவுபெற்ற…

IPCMC மகஜர் பினாங்கு டிஏபி இளைஞர்களுக்கு பிரச்னையைக் கொண்டு வந்துள்ளது

போலீஸ் புகார்கள், நன்னடைத்தை மீது சுயேச்சை ஆணையத்தை அமைக்குமாறு கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை சமர்பித்ததற்காக டிஏபி சோஷலிச இளைஞர் பிரிவு மீது போலீஸ் அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து நேற்று அந்தப் பிரிவு  புகார் செய்துள்ளது. அடையாளம் தெரிவிக்கப்படாத போலீஸ் அதிகாரி ஒருவர் அந்தப் புகாரைச் சமர்பித்த பின்னர்…

அம்னோ பேராளர்களே, உங்கள் முதலைக் கண்ணீரை நிறுத்திக் கொள்ளுங்கள்

"கட்சி அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு பாடப்படும் பாடலே அதுவாகும். கூடின பட்சம் இனவாதத்தை பயன்படுத்தி மலேசியர்களுடைய அனுதாபத்தைப் பெறுவதற்கு அவர்கள் முயலுகின்றனர்." மலாய்க்காரர்களுடைய தலைவிதி பற்றிய கவிதை வாசிக்கப்பட்ட போது பேராளர்கள் கண்ணீர் விட்டனர் உங்கள் அடிச்சுவட்டில்: அம்னோ பேரவை தொடங்குவதற்கு முன்பு உணர்ச்சிகளைத் தூண்டக் கூடிய விஷயங்களைப்…

அம்னோவுக்கு பலம்; மற்ற இனங்களுக்குப் பலவீனம்!

கோபி: அம்னோ பேரவை பற்றி கோமாளியின் கருத்து என்ன? கோமாளி: அம்னோ மிகவும் பலமானது. மலாய்க்காரர்களின் அரசியல் ஆணிவேர் அது. மிகவும் ஆழமாக வேரூண்றியுள்ள அதை மாற்றுவது இயலாத செயல். அம்னோ மாறும் என்றும் அல்லது மாறிவிட்டது என்பதெல்லாம் குதிரைக்கு கொம்பு முளைத்துவிட்டது என்று புலம்புவதற்கு ஒப்பாகும். அம்னோ…

மலாய்க்காரர்கள் ‘சொந்த மண்ணில் அகதிகளாவதற்கு’ பிஎன் தான் காரணம் என்கிறது…

பிஎன் -னின் ஊழல் ஆட்சியே மலாய்க்காரர்களை அவர்களது சொந்த மண்ணில் அகதிகளாக்கி விடும், மலாய் அதிகாரத்தை இழப்பதால் அல்ல என பிகேஆர் கூறுகிறது. "மலாய்க்காரர்கள் அரசியல் அதிகாரத்தை இழந்தால் அவர்கள் ஏன் ஒதுக்கப்பட வேண்டும் ? அம்னோ 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரத்தில் இருந்துள்ளது, மலாய்க்காரர்களுடைய வாழ்க்கை நிலையை…

சிலாங்கூர் சாதனைகளை வெளியிடுமாறு பக்காத்தானுக்கு சாமிவேலு சவால்

சிலாங்கூரில் கடந்த கால பாரிசான் நேசனல் வெற்றிகளில் சவாரி செய்யாமல் கடந்த நான்கு ஆண்டுகளில் தான் ஏற்படுத்தியுள்ள சாதனைகளை வெளியிடுமாறு பக்காத்தான் ராக்யாட் வழி நடத்தும் மாநில அரசாங்கத்துக்கு முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு சவால் விடுத்துள்ளார். [காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்] "கடந்த நான்கு ஆண்டுகளாக…

சட்டவிரோதமாகக் கூட்டம் கூடியதற்காக சுவாரம் மீது போலீஸ் விசாரணை

ஏற்கனவே சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்), மலேசிய நிறுவன ஆணையம் (சிஎம்எம்) ஆகியவற்றின் விசாரணைக்கு உட்பட்டிருக்கும்  மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம்மீது சட்டவிரோத கூட்டம் நடத்தியதாக போலீசும் விசாரணை ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. சிசிஎம் செய்துள்ள புகாரின் பேரில் அவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. செப்டம்பர் மாதம் சுவாராம் இயக்குனர்களை விசாரணைக்கு அழைத்திருந்தபோது…