‘அந்த நிலம் கிளானா ஜெயா அம்னோவிடம் ஒப்படைக்கப்பட்டது என சுபாங்…

"சமூக நோக்கங்களுக்காக" முந்திய சிலாங்கூர் அரசாங்கத்திடமிருந்து மலிவாக பெறப்பட்ட நிலத்தில் ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதி கட்டப்பட்டுள்ளது மீது எழுந்துள்ள பிரச்னைக்குப் பதில் அளிப்பதை  சுபாங் அம்னோ இப்போது கிளானா ஜெயா அம்னோ இடைக்காலத் தலைவர் யாஹ்யா பூஜாங்-கிடம் தள்ளி விட்டுள்ளது. சுபாங் அம்னோ தொகுதியின் தலைமையகத்தைக் கட்டுவதற்காக…

‘10,000 தொழிலாளர்களுக்கு நீதிமன்றத்துக்கு செல்லும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது’

2001ம் ஆண்டுக்கும் 2011ம் ஆண்டுக்கும் இடையில் 'தவறாக நீக்கப்பட்ட' 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் வழக்குகளை தொழிலியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று நியாயம் பெறுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் தொழிலாளர் தலைவர்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். முதலாளிகளுடன் நடத்தப்பட்ட சமரசப் பேச்சுக்கள் தோல்வி கண்ட பின்னர் அந்த…

‘நஜிப்பும் ரோஸ்மாவும் தீபக்கின் கூற்றை ஏன் மறுக்கவில்லை?’

கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் சுமத்திய குற்றச்சாட்டுகளைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரின் துணைவி ரோஸ்மா மன்சூரும் மறுக்காதது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். தீபக் சுமத்திய குற்றச்சாட்டுகளுகு நஜிப்பும் அம்னோவும் பதில்கூற வேண்டும் என்று குறிப்பிட்ட சுரேந்திரன், “அவ்விவகாரத்தில் எங்களுக்குத்…

ஊழலைத் தவிர்ப்பது மீது எம்ஏசிசி-யும் ஏஜி அலுவலகமும் எம்பி-க்களுக்குப் பயிற்சி…

ஊழலைத் தவிர்ப்பது மீதான பயிற்சியை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த ஆண்டு  எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அலுவலகமும் நடத்தவிருக்கின்றன. அந்தத் தகவலை பெமாண்டு இயக்குநர் டி ரவீந்திரன் வெளியிட்டார். "அரசாங்க உருமாற்றத் திட்டம் 2.0க்கு (ஜிடிபி 2.0) உண்மையில் எம்ஏசிசி…

மரணம் விளைவித்த குற்றச்சாட்டிலிருந்து கார்ப்பரல் ஜெனாய்ன் விடுதலை

ஷா ஆலம் உயர் நீதிமன்றம், கார்ப்பரல் ஜெனாய்ன் சுபியை ஈராண்டுகளுக்கு முன் 15-வயது அமினுல் ரஷிட் அம்சாவுக்கு மரணம் விளைவித்த குற்றச்சாட்டிலிருந்து இன்று விடுவித்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு விதித்த ஐந்தாண்டுச் சிறைத் தண்டனைக்கு எதிராக ஜெனாய்ன் செய்திருந்த மேல்முறையீட்டை விசாரித்த…

அமைச்சர் ராஜா நொங் சிக் : மக்கள் மரபுவழி ஊடகங்களைத்தான்…

மக்கள் எந்தச் செய்தியை நம்புவது என்பதை நன்கு தெரிந்தவர்களாக மாறி வருவதால் மாற்றரசுக் கட்சியின் பொய்யுரைகளை அவர்கள் புறந்தள்ளி விடுகிறார்கள் என்கிறார் கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக் சைனல் அபிடின். மாற்றரசுக் கட்சிகள் கட்டும் கதைகளில் மக்கள் ஏமாந்து போவதில்லை என்றாரவர். “மரபுவழி…

ஒரு மருத்துவமனைக்காக ஷா ஆலம் இன்னும் எவ்வளவு காலம்தான் காத்திருக்க…

உங்கள் கருத்து: “இதில் நம்பமுடியாத விசயம் என்னவென்றால், முன்னாள் குத்தகையாளர் ‘முக்கியமான புள்ளி’ என்பதற்காக அவருக்கு முன்பணம் கூடுதலாகவே அள்ளிக் கொடுக்கப்பட்டிருப்பதுதான்”. ஷா ஆலம் மருத்துவமனை ‘அடுத்த ஆண்டில் தயாராகி விடும்’ பெயரிலி_4154: 2009-இல், பொதுப்பணி அமைச்சர் சொன்னார்  2010-இல் கட்டி முடிக்கப்படும் என்று. பிறகு 2010-இல், அவரே…

சிலாங்கூர் AES கேமிராக்களை வெள்ளிக் கிழமை அகற்றும்

சிலாங்கூரில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு AES என்ற தானியங்கி அமலாக்க முறை கேமிராக்களைச் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்கள் வெள்ளிக் கிழமை அகற்றும். "அது அகற்றப்படும் நேரத்தை நான் ஊடகங்களுக்குத் தெரிவிப்பேன்," என ஊராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ கூறினார். SKVE என்ற தெற்குக் கிள்ளான்…

‘சிலாங்கூர் நில அபகரிப்பு, விரைவாக பணக்காரராகும் பிஎன் திட்டம்’

'இது சட்டப்பூர்வமான பகற்கொள்ளை. ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது. இன்னும் 23 காத்திருக்கின்றன. பக்காத்தான் நல்ல பணி செய்துள்ளது' 'அம்னோவின் மலிவான நிலத்தில் இப்போது ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதி அமைந்துள்ளது' குழப்பமில்லாதவன்: இன்னும் பிஎன் -னை நம்புகின்றவர்களுக்கும் 'உங்களுக்குத் தெரிந்த பிசாசை'நம்புகின்றவர்களுக்கும் என் அறைகூவல் இது தான்: 'இந்தச்…

ஸ்கார்ப்பின் விசாரணை மீது பத்து எம்பி-யும் சுவாராமும் பொய் சொல்வதாக…

பிரான்ஸில் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கி விவகாரம் மீது சுவாராமும் பத்து எம்பி தியான் சுவா-வும் பொது மக்களிடம் பொய் சொல்வதாக அரசாங்க ஆதரவு  Jaringan Melayu Malaysia (JMM) பழி சுமத்தியுள்ளது. அந்த விவகாரம் மீது பிரஞ்சு அதிகாரிகள் விசாரணையை மட்டுமே மேற்கொள்வதாக தியான் சுவா இரண்டு முறை நாடாளுமன்றத்தில்…

கோம்பாக்கில் அன்வார் செராமாவின் போது பிகேஆர் ஆதரவாளருக்கு ‘கத்திக் குத்து’

கோம்பாக்கில் நேற்றிரவு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்ட செராமா நிகழ்வின் போது பக்கத்தான் ஆதரவாளர் ஒருவர் 'அம்னோ ஆதரவாளர்களின்' கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்கானதாக சொல்லப்படுகின்றது. அந்த பக்காத்தான் ஆதரவாளர் ‘kerambit' எனப்படும் வளைந்த சிறிய கத்தி ஒன்றினால் இடது தோள்பட்டையில் காயம் ஏற்படுத்தப்பட்டதாக…

பிகேஆர்: டிஎன்பி மீட்டர் திட்டத்தில் பாக் லா-வின் உறவினருக்கு தொடர்பு…

டிஎன்பி எனப்படும் தெனாகா நேசனல் பெர்ஹாட்டுக்கு புதிய மீட்டர்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களில் ஒன்றுடன் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாக பிகேஆர் முதலீட்டு, வாணிகப் பிரிவுத் தலைவர் வோங் சென் கூறிக் கொண்டுள்ளார். அப்துல்லாவின் நெருங்கிய உறவினரான அவர் ஒரு…

அழியாத மை போடப்படுவது மீதான விளக்கக் காட்சியை அரசியல் தலைவர்கள்…

தேர்தலில் அழியாத மையைப் பயன்படுத்துவது மீதான விளக்கக் காட்சியை தேர்தல் ஆணையம் இன்று சிலாங்கூரைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்காக இன்று நடத்தியது. அடுத்த பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அழியாத மை போடப்படுவது தொடர்பான உண்மை நிலையை விளக்குவதே அந்த நடவடிக்கையின் நோக்கம் என சிலாங்கூர் தேர்தல் ஆணைய இயக்குநர்…

மஇகா ஆண்டுப் பொதுக் கூட்டம் பொதுத் தேர்தலுக்கான இறுதி ஆயத்தங்களைச்…

வரும் ஞாயிற்றுக் கிழமை மஇகா-வின் 66வது பொதுப் பேரவை தொடங்குகின்றது. பாரிசான் நேசனலுக்கு ஆதரவாக இந்தியர்களை கவருவதற்கான கடுமையான இயக்கத்துக்கு பேராளர்களையும் கீழ் நிலைத் தலைவர்களையும் அந்தப் பேரவை ஆயத்தம் செய்யும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நன்கு ஒருங்கிணைக்கப்பட்டு தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்திய சமூகத்தை மஇகா-வுக்கு…

மாற்றம் வேண்டி ஜெரிட் மேற்கொள்ளும் சைக்கிளோட்ட இயக்கம்

நான்காண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விழிப்புணர்வு இயக்கத்துடன் வந்துள்ளது ஜாரிங்கான் ரக்யாட் தெர்திண்டாஸ் (ஜெரிட்).  மாற்றத்துக்கான சைக்கிளோட்டம் 2.0 என்னும் அந்த இயக்கம் இன்று கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ப்ளி மண்டபத்தில் தொடக்கி வைக்கப்பட்டது. கட்டுப்படியான வீடுகள், தண்ணீர், உணவு, கல்வி முதலிய அடிப்படை வசதிகளைத் தனியார் மயப்படுத்தல், சுற்றுச்சூழலுக்குக்…

பிகேஆர் பலவீனமாக இருப்பதால் டிஏபி-க்கு மலாய் ஆதரவு கூடுகின்றதா ?

பினாங்கில் குறிப்பாக கெப்பாளா பாத்தாஸ் போன்ற தலைநிலப் பகுதிகளில் டிஏபி செல்வாக்கு கூடி வருவதாக பினாங்கு டிஏபி மாநாட்டில் பேசிய பேராளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 1978ம் ஆண்டு தொடக்கம் கெப்பாளா பாத்தாஸ் தொகுதி எம்பி-யாக முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட்  படாவி இருந்து வருகின்றார். அந்தத் தொகுதியில் டிஏபி…

ஷா ஆலம் மருத்துவ மனை ‘அடுத்த அக்டோபரில் தயாராகிவிடும்’

2010-இல் பிரச்னைகளால் அலைக்கழிக்கப்பட்டு கைவிடப்பட்ட  ஷா ஆலம் மருத்துவ மனையை அடுத்த அக்டோபருக்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. பொதுப்பணி அமைச்சர் ஷசிமான் அபு மன்சூர்,300-படுக்கைகள் கொண்ட அம்மருத்துவ  மனையைக் கட்டும் வேலை 98 விழுக்காடு முடிந்து விட்டதாகவும் இயந்திரக் கருவிகள் பொருத்தும் பணி மின் இணைப்பு வேலைகள் ஆகியவை…

நாடற்ற இந்தியர்களுக்கான டிசம்பர் பேரணியைத் தடுக்க அதிகாரிகள் தீவிரம்

பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரன், போலீசார் இன்று தம்மை அழைத்து விசாரணை செய்தது, நாடற்றவர்களாக உள்ள மலேசியர் விவகாரத்துக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதை வலியுறுத்த அடுத்த வாரம் புத்ரா ஜெயாவில் தேசிய பதிவுத் துறை தலைமையகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் குந்தியிருப்புப் பேரணியைத் தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கையில்…

‘அம்னோவின் மலிவான நிலத்தில் இப்போது ஆடம்பர அடுக்குமாடித் தொகுதி அமைந்துள்ளது’

சிலாங்கூரில் மக்களுக்காக தான் மலிவான நிலங்களைப் பெற்றதாக பிஎன் கூறிக் கொள்வதை நிராகரிப்பதற்கு பக்காத்தான் ராக்யாட் இன்று நடவடிக்கை எடுத்துள்ளது. கிளானாஜெயாவில் அவ்வாறு மலிவாக பெற்ற நிலங்களில் ஒன்றில் ஆடம்பர அடுக்குமாடித் தொகுதி ஒன்று அமைந்துள்ளதை அது சுட்டிக் காட்டியது. இன்று அந்த இடத்துக்கு பெட்டாலிங் ஜெயா உத்தாரா…

மாதம் ஒரு கோவில் உடைபட்ட போது மஇகா என்ன செய்தது?

தேசிய முன்னணி ஆட்சியின் கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கில் மாதம் ஒரு கோவில் என்ற வகையில் 16 கோவில்கள் உடைபட்ட போது மஇகா இளைஞர் பிரிவினர் என்ன செய்தனர் என்ற வினா எழுந்துள்ளது. 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் 2007-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி வரையில்…

சுஜாதாவின் திடீர் மரணம் தொடர்பில் தெரிவித்த குற்றச்சாட்டை மீட்டுக்கொண்டார் காப்பார்…

காப்பார் எம்பி எஸ்.மாணிக்கவாசகம் மாடல் அழகி கே.சுஜாதாவின் திடீர் மரணம் தொடர்பில் செந்தூல் ஓசிபிடி கே.குமரன்மீது சுமத்திய குற்றச்சாட்டை இன்று மீட்டுக்கொண்டார். அக்கூற்றச்சாட்டுக்கு எதிராக குமரன் தொடுத்திருந்த அவதூறு வழக்கிற்கு நீதிமன்றத்துக்கு வெளியில் ஒரு தீர்வு காணப்பட்டதைத் தொடர்ந்து மாணிக்கவாசகம் தம் குற்றச்சாட்டை இன்று மீட்டுக்கொண்டார். தீர்வின் ஒரு…

ராயிஸ்: அரசாங்கத்தை மாற்றுவதை மறந்து விடுங்கள்

வரும் பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை மாற்றும் நோக்கத்தை மறந்து விடுமாறு மக்களுக்கு தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் அறிவுரை கூறியிருக்கிறார். மக்கள் அதற்குப் பதில் அரசாங்கத்தின் உருமாற்றத் திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு உதவ வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். "பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்…

“நஜிப் டாக்டர் மகாதீரைச் சாந்தப்படுத்த வேண்டும் என எண்ணுகிறார்”

"பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக்கிற்கு தமது சொந்தக் கருத்துக்களை அமலாக்குவதற்கான 'வலிமை இல்லாததால்' அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் டாக்டர் மகாதீர் முகமட்டின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார்." இவ்வாறு கூறும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அந்த முன்னாள் பிரதமர் மகாதீர் "இன்னும் கட்சித் தலைவர்களை அழைத்து…