‘பாடாங் கோத்தாவில் களமிறங்குவோம், வாரீர்’: தெங்குக்கு குவான் எங்-கின் மறுமொழி

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பாடாங்  கோத்தாவில் பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயோவை எதிர்த்துப் போட்டியிட தமக்கு சம்மதமே என்று கூறியுள்ளார்.  பாடாங் கோத்தா மூன்று தவணைக்காலம் தெங் வசமிருந்த ஒரு தொகுதியாகும். ஆனால், 2008-இல் அங்கு அவர் தோற்றுப்போனார். “தெங்-கை எதிர்த்து கோத்தா…

நெகிரி செம்பிலான் சட்டமன்றம் இயல்பாக (automatically) கலைந்துள்ளது

நெகிரி செம்பிலான் சட்டமன்றம் இன்று இயல்பாக (automatically) கலைந்துள்ளது. அந்த மாநில  வரலாற்றிலும் இந்த நாட்டு வரலாற்றிலும் முதன் முறையாக இயல்பாகவே கலைந்து  விட்ட முதல் சட்டமன்றம்  அதுவாகும். நெகிரி செம்பிலான் மாநில அரசமைப்பு இணங்க சட்டமன்றம் இயல்பாக கலைந்துள்ளது. 36 உறுப்பினர்களைக் கொண்ட அந்த மாநிலச் சட்டமன்றம் 2008…

பாஸ்: தேர்தல் தாமதம் ஒரு ‘ஜனநாயகக் குற்றம்’

மார்ச் 8-இல் நாடாளுமன்றத்துக்கான அதிகாரம் காலாவதியான பின்னரும் பிரதமர் 13வது பொதுத் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டிருப்பது ஒரு “ஜனநாயகக் குற்றம்” என பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் கூறுகிறார். அதிகாரம் முடிந்த பிறகு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசாங்கம்…

நஜிப் முழுத் தவணைக்குப் பணியாற்ற விரும்பியிருந்தால் அதனைச் சொல்லியிருக்க வேண்டும்

'நஜிப் அந்த நோக்கத்தை மட்டும் தெளிவுபடுத்தியிருந்தால் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டை தேர்தல்  விழிப்பு நிலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது' முழுத் தவணைக் காலத்துக்கு பணியாற்றிய நஜிப்பை கிர் தோயோ பாராட்டுகிறார் கிருஸ்: எப்போது தேர்தல் என்ற ஊகம் நீண்ட காலமாகத் தொடருகின்றது. ஒரே நேரத்தில் கூட்டரசு,…

தண்டா புத்ரா : ஷுஹாய்மி பாபாவின் ஆணவம்

'பொது மக்களுக்குக் காட்டப்படுவதற்கு அந்தத் திரைப்படம் அங்கீகாரம் பெறாததால் அதன் உள்ளடக்கம் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட முடியாது என அவர் விளக்கமளிக்கிறார்' 'நான் தனிப்பட்ட முறையில் தண்டா புத்ராவைத் திரையிடுவேன்' டெலிஸ்டாய்: ஷுஹாய்மி பாபா, சிறுபான்மை சீன சமூகத்துக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் களங்கத்தை கற்பித்து  இன வெறுப்பைத் தூண்டும்…

குடியேற்றக்காரர்கள் மீது வெறுப்பும் சந்தேகமும் வளரக் கூடும் என பெர்சே…

ஆவி வாக்காளர்கள், தேர்தல் மோசடி பற்றிய அச்சம், குடிநுழைவுக்காரர்கள் மீது காழ்ப்புணர்ச்சியாகி மாறி இனவாதத் தாக்குதல்களுக்கு வழி வகுத்துள்ளதாக பெர்சே எச்சரித்துள்ளது. அரசியல் செராமாக்களிலும் இணைய வீடியோக்களிலும் துண்டுப் பிரசுரங்களிலும் குடியேற்றக்காரர்களை இழிவு படுத்தும் பிரச்சாரம் நிகழ்வதாக புகார்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் போராடும் அந்த இயக்கம் கூறியது.…

பொதுத் தேர்தல் முடிவுகள் பலவீனமாக இருந்தால் பொருளாதாரத்திற்கு ஆபத்து என்கிறார்…

தற்போது நிலை பெற்று வருகின்ற சீர்திருத்தங்களை 'ஒரே நாளில்' செய்ய முடியாது என பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார். அடுத்த சில வாரங்களில் தாம் நடத்த வேண்டிய தேர்தலில் தமக்கு வலுவான பெரும்பான்மை கிடைக்கா விட்டால் மலேசியப் பொருளாதாரம் பின்னோக்கிச் செல்லக் கூடிய அபாயம் இருப்பதாகவும் அவர்…

எம்பிகளுக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்துவீர்: போலீசுக்கு சிவராசா கோரிக்கை

போலீசார்  “எம்பிகளுக்குத் தொல்லை கொடுப்பதை” நிறுத்த வேண்டும் என்று சுபாங் எம்பி ஆர்.சிவராசா  இன்று வலியுறுத்தினார்.  ஜனவரியில், போலீஸ் காவலில் நிகழ்ந்த மரணம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக தம்மீதும் பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ மீதும் சுபாங் ஒசிபிடி யாஹ்யா ரம்லி போலீஸ் புகார் செய்திருப்பதை அவர்…

முறையீட்டில் புவா வெற்றி, 200,000 ரிங்கிட்டைத் திருப்பிக் கொடுக்குமாறு சபாஷ்-க்கு…

அவதூறு கூறியதற்காக சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor-க்கு 200,000 ரிங்கிட் கொடுக்குமாறு  உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து செய்து கொண்ட முறையீட்டில் பெட்டாலிங் ஜெயா உத்தாரா  எம்பி டோனி புவா வெற்றி பெற்றுள்ளார். புவா அவதூறு கூறியிருப்பதாக தீர்ப்பளித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் சபாஷ்…

பக்காத்தான் ஏழு மாநிலங்களில் வெற்றி காணும் என லிம் கிட்…

13வது பொதுத் தேர்தலில் பெர்லிஸையும் நெகிரி செம்பிலானையும் கைப்பற்றக் கூடிய நிலையை பக்காத்தான்  ராக்யாட் எட்டியுள்ளதாக டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் ஆரூடம் கூறியிருக்கிறார். அதனால் 2008ல் ஐந்து மாநிலங்களைப் பிடித்த பக்காத்தான் 2013ல் ஏழு மாநிலங்களைக் கைப்பற்றும் என அவர் சொன்னார். சிலாங்கூர், பினாங்கு,…

நெகிரி செம்பிலானில் சட்டமன்றம் கலைவதை அடுத்து போட்டி வலுக்கிறது

தேர்தல் கண்ணோட்டம் நெகிரி செம்பிலான் சட்டமன்றம் இன்று நள்ளிரவில் தானே கலைந்துவிடும். அதன்பின் 60 நாள்களில் அங்கு தேர்தல் நடக்க வேண்டும். அந்தத் தேர்தலில் வென்று சட்டமன்றத்தைக் கைப்பற்றப்போவது யார் என்றறிவதில் அனைவரும் ஆவலாக உள்ளனர். பிஎன், பக்காத்தான் ரக்யாட் இரண்டுமே மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றன. எனவே, அங்கு…

‘பிஎன் வரும் தேர்தலில் மோசமான அடைவு நிலையை பெற்றால் நஜிப்…

வரும் தேர்தல்களில் பிஎன் நல்ல அடைவு நிலையைப் பெறா விட்டால் தமக்கு முந்திய அப்துல்லா அகமட்  படாவியைப் போன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் விலக வேண்டியிருக்கும் என முன்னாள் பிரதமர்  டாக்டர் மகாதீர் முகமட் மீண்டும் கூறியிருக்கிறார். "நான் யூக அடிப்படையில் சொல்கிறேன், அவர் நன்றாக செயல்படா…

‘பினாங்கை மீண்டும் கைப்பற்ற பிஎன்-னுக்கு உயர்ந்த தார்மீக வலிமையும் ஒற்றுமையும்…

வரும் பொதுத் தேர்தலில் பினாங்கைக் கைப்பற்றுவது மிகவும் கடுமையான பணியாக இருக்கும் என்பதை  பினாங்கு பிஎன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது. காரணம் பிஎன் கூட்டணி மீது அந்த மாநிலத்தில் நிலவும் உணர்வுகளை அது புரிந்து கொண்டுள்ளதாகும். "அந்தப் பணி கடுமையானது. மக்கள் உணர்வுகளையும் சூழ்நிலைகளையும் நாங்கள் அறிந்துள்ளோம். என்றாலும்…

பெர்க்காசா ஏப்ரல் 6ம் தேதி ‘சிலாங்கூரைக் காப்பாற்றுங்கள்’ கூட்டத்தை நடத்தும்

பெர்க்காசா என்ற Pertubuhan Pribumi Perkasa Malaysia அமைப்பு 'சிலாங்கூரைக் காப்பாற்றுங்கள்' என்னும்  இயக்கம் தொடர்பான தனது நிகழ்வுகளை நிறைவு செய்யும் வகையில் ஏப்ரல் 6ம் தேதி கூட்டம் ஒன்றை நடத்த எண்ணியுள்ளது. அன்றைய தினம் ஷா அலாம் செக்சன் 2ல் பிற்பகல் மூன்று மணிக்கு அந்தக் கூட்டம் தொடங்கும்…

பினாங்கு பிஎன் இளைஞர் பிரிவு: ‘பினாங்கு சாலை-சுரங்கப் பாதை திட்ட…

பினாங்குத் தீவுக்கும் தலை நிலத்துக்கும் இடையிலான சுரங்கப் பாதை உட்பட ஒருங்கிணைந்த சாலைத்  திட்டத்துக்கான செலவுகள் 2.22 பில்லியன் ரிங்கிட் 'அதிகரித்துள்ளது' குறித்து பினாங்கு பிஎன் இளைஞர் பிரிவு  அதிர்ச்சி அடைந்துள்ளது. அந்தத் திட்டத்துக்கு மொத்தம் 6.3 பில்லியன் ரிங்கிட் செலவாகும் எனக் கூறியுள்ள முதலமைச்சர் லிம் குவான்…

PSM வழங்கும் ‘மக்கள் படும் பாடு’ இரண்டாம் பதிப்பு குறுந்தட்டாக…

மலேசிய சோசலிசக் கட்சி (PSM) வழங்கும் 'மக்கள் படும் பாடு' உரிமை கானங்களின் இரண்டாம் பதிப்பு (காணொளி) குறுந்தட்டாக நாளை வெளியீடு காணவுள்ளது. ‘மக்கள் படும் பாடு 2.0’ குறுந்தட்டு வெளியீடும் நிகழ்ச்சி (28.03.2013-வியாழக்கிழமை) நாளை மாலை மணி 8-க்கு, (Chinese Assembly Hall, 1 Jalan Maharajalela,…

மலேசிய வாக்காளர்களை எதிர்கொள்ள நஜிப் மிகவும் அஞ்சுகிறார்

"பிரதமர்  பொதுத் தேர்தல் ஒன்றில் அதிகாரத்தைப் பெற்றதில்லை. அதனால் அதனை எதிர்கொள்ள மிகவும்  அஞ்சுகிறார். அது தான் உண்மை. அதில் கதை விடுவதற்கு ஒன்றுமில்லை" 'நாடாளுமன்றத்தைக் கலைக்க பிஎன் பயப்படவில்லை' கதை வேண்டாம்: வழக்கமாக ஆளும் கட்சி தனக்கு சாதகமான தேதியை (எடுத்துக்காட்டுக்கு பொருளாதாரம் நன்றாக இருக்கும் போது)…

அம்னோவில் சிந்தனைகள் வற்றிவிட்டன, அதனால் அதிகமான செக்ஸ் வீடியோக்கள் வெளி…

"அம்னோவைத் தோற்றுவித்தவர்கள் நல்ல தார்மீக சிந்தனைகளைக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று  அந்தக் கட்சியில் தார்மீகம் என்பதே இல்லை. அடாவடித்தனம், இனவாதம், செக்ஸ் வீடியோக்கள்  ஆகியவற்றையே அது நாடுகின்றது" பிகேஆர்: செக்ஸ் வீடியோக்களில் நுருல் இஸ்ஸா, காலித் 'சேர்க்கப்பட்ட' வீடியோக்கள் வெளி வரலாம் புகழேந்தி: அம்னோ மலிவான அரசியல் தந்திரங்களை…

சிலாங்கூர் சட்டமன்றத்தை முன்னதாக கலைக்கப் போவதில்லை, காலிட் இப்ராகிம்

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படும் சாத்தியம் குறித்து சில மாதங்களாக கருத்து தெரிவித்து வந்த சிலாங்கூர் மாநில மந்திரி புசார், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாக சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாது என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால், நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதோ, இல்லையோ சிலாங்கூர் மாநில சட்டமன்றம்…

காப்பி அடித்ததாக ராபிஸி சொல்வது காலம் தாழ்த்தியது என்கிறார் நோ

டாக்ஸி அனுமதிகளை தனி நபர்களுக்கு வழங்கிய பிரதமருக்கு ஆதரவாக அமைச்சரான நோ ஒமார் பேசியுள்ளார். அது அரசியல் மாயாஜாலம் அல்ல என்றும் பக்காத்தான் ராக்யாட் கொள்கைகளை அது 'காப்பி அடிக்கவில்லை' என்றும் அவர் சொன்னார். பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது…

மலேசியா என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் என பிலிப்பினோக்களுக்கு அறிவுரை

"பிலிப்பினோக்கள் சபாவை சபா என்று மட்டுமே அழைக்க வேண்டும், அதனுடன் மலேசியா என்ற  வார்த்தையை இணைக்கக் கூடாது." மலாகானாங் 2008ம் ஆண்டு வெளியிட்ட நினைவுச் சுற்றறிக்கை எண் 162ஐ மேற்கோள் காட்டி பிலிப்பின்ஸ் வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் அவ்வாறு கூறியுள்ளார். அரசாங்க அமைப்புக்கள் சபா-வை சபா என்றும்…

‘தண்டாபுத்ராவை தனிப்பட்ட ரீதியில் நான் தொடர்ந்து திரையிடுவேன்’

பல விருதுகளைப் பெற்றுள்ள இயக்குநர் ஷுஹாய்மி பாபா, சர்ச்சைக்குரிய தமது மே 13 திரைப்படம் பொது  மக்களுக்குக் காட்டப்படுவதைத் தள்ளி வைக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறார். என்றாலும் அந்தத் திரைப்படத்தை காண விரும்புவோருக்கு தனிப்பட்ட முறையில் தாம் தொடர்ந்து திரையிடப்  போவதாக அவர் சொன்னார். "தனிப்பட்ட முறையில்…

சிவில் சமூக அமைப்புக்கள்: லஹாட் டத்து ஆர்சிஐ அமைக்க ஏன்…

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக லஹாட் டத்து ஊடுருவல் மீது ஆர்சிஐ என்ற அரச விசாரணை   ஆணையத்தை அரசாங்கம் ஏன் வெகு வேகமாக அமைக்க முயலுகிறது என சிவில் சமூக அமைப்புக்கள்  கேள்வி எழுப்பியுள்ளன. அத்தகைய ஆர்சிஐ அமைக்கப்படுவதை அவை 'கொள்கை அளவில் வரவேற்றாலும்' ஆர்சிஐ குறித்த திட்டமுன் அதன் பணிகள்,…