மலேசிய ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் (UNFPA Malaysia) உதவிப் பிரதிநிதி தெங்கு ஐரா தெங்கு ரசிஃப் (Tengku Aira Tengku Razif), ஒரு பிரச்சினைக்கு 'பெயரிடப்படாவிட்டால்' (அடையாளம் காணப்படாவிட்டால்) அதற்குத் தீர்வு காண முடியாது என்று கூறுகிறார். சமீபத்தில் பெண்களுக்கு, குறிப்பாக இளம் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை…
விமர்சனத்துக்கு இடமளிப்பீர்: அம்னோவுக்கு காடிர் வலியுறுத்து
அம்னோ உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைக் கூறவும் தேவையானால் கட்சியை விமர்சிக்கவும் இடமளிக்க வேண்டும் என்கிறார் அம்னோ உச்சமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் அப்துல் காடிர் ஷேக் பாட்சிர். ஆனால், 60ஆம் 70ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த முன்னாள் தலைவர்கள் 10 விழுக்காட்டு அளவுக்குக்கூட அம்னோவை விமர்சிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று அப்துல் காடிர்,…
ஷரிசாட் கும்பல் வெறுமனே மறுப்புத் தெரிவித்துத் தப்பித்துக்கொள்ள முடியாது
“இத்தனை ஆடம்பர கொண்டோ-கள் வாங்கி இருக்கிறீர்கள். என்எப்சி-க்கு எளிய நிபந்தனைகளில் கொடுக்கப்பட்ட கடனைக்கொண்டு வாங்கவில்லை என்றால் இதற்குப் பணம் எங்கிருந்து வந்தது என்று காண்பியுங்கள், உங்களை விட்டு விடுகிறோம்.” என்எப்சிமீது வஞ்சகமான தாக்குதல் என்று பொறுமுகிறார் இஸ்ரான் எக்காளம்: நெருப்பில்லாமல் புகையில்லை என்ற பழமொழி நாம் அறிந்ததுதானே. குற்றச்சாட்டுகளைப்…
கிளந்தான் காதலர் தினத்தை ஜோடிகள் (தம்பதிகள்) தினமாக மாற்றுகிறது
பிப்ரவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்தை ஜோடிகள் (தம்பதிகள்) தினமாக கிளந்தான் பாஸ் அரசாங்கம் மாற்றியுள்ளது. அந்த மாற்றம், இஸ்லாமியப் போதனைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளதாலும் குடும்ப அமைப்பை அது வலுப்படுத்தும் என்பதாலும் மிகவும் பொருத்தமானது என கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக்…
உங்கள் கருத்து: ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டம்: கூடுதல் வரி
"நாம் ஏன் ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டத்துக்கு சந்தா செலுத்த வேண்டும்? நான் ஏற்கனவே வரிகளைச் செலுத்திக் கொண்டிருக்கும் போது மற்றவர்களுடைய சுகாதாரக் கவனிப்புக்காக நான் ஏன் சந்தா செலுத்த வேண்டும்?" ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டம் எல்லா மலேசியர்களுக்கும் கட்டாயமாக்கப்படும் கோமாளி: கட்டாயாமா? அந்த ஒரே பராமரிப்பு…
மசீச சொய் லெக், டிஎபி குவான் எங் சொற்போர்
மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் மற்றும் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோருக்கிடையிலான சொற்போர் திட்டமிட்டவாறு நடைபெறும். அச்சொற்போர் அடுத்த பொதுத் தேர்தலும் சீனர்களின் அரசியல் எதிர்காலமும் குறித்ததாக இருக்கும். அந்த ஒரு மணி நேர சொற்போர் பெப்ரவரி 18 ஆம் தேதி…
போலீஸ்காரர்கள் தாக்கியதாக தைப்பூச பக்தர் ஒருவர் போலீசில் புகார் செய்தார்
பினாங்கில் நேற்றிரவு தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்ட ஒரு நபரை ஜாலான் பினாங்கில் 20 போலீஸ்காரர்கள் தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. பேராக்கைச் சேர்ந்த 30 வயதான எஸ் முரளி என்ற அந்த நபர் டிக்கன்ஸ் ஸ்டீரிட்டில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்தார். அவரது தந்தை கே சண்முகமும் இளைய…
ஷாரிசாட் பதவிவிலக வேண்டும், கெராக்கான் துணைத் தலைவர்
சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கும் ஷாரிசாட் அப்துல் ஜலிலுக்கு மேன்மேலும் நெருக்குதல் அதிகரித்து வருகிறது. நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) குளறுபடியில் அவரது குடும்பத்தினர் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துவோர் வரிசையில் கெராக்கான் துணைத் தலைவர் சாங் க்கோ யோனும் சேர்ந்துகொண்டிருக்கிறார். சாங் இன்று வெளியிட்ட அறிக்கையில், “அநியாயமாகவும்…
பத்தாமில் பிடிபட்டவர் ஹில்மி மாலெக்:போலீஸ் உறுதிப்படுத்தியது
இந்தோனேசியாவின் பத்தாமில் குடிநுழைவுக் குற்றத்துக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர் ஹில்மி ஹசிமின் மாலெக் என்பதை கோலாலம்பூர் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஹில்மி மலேசிய போலீசாரால் தேடப்பட்டு வரும் ஒரு நபராவார். 2009-இல் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரின் அந்தரங்கப் படங்களை இணையத்தளத்தில் வெளியிட்ட அவர் அதன்பின்னர் தலைமறைவானார். அந்நபர் ஹில்மிதான் என்று…
“ஒரே பராமரிப்புத் திட்டம்” எல்லா மலேசியர்களுக்கும் கட்டாயமாக்கப்படும்
உத்தேச "ஒரே மலேசியா ஒரே பராமரிப்பு" (1Care for 1Malaysia) சுகாதார கவனிப்புத் திட்டத்தில் எல்லா மலேசியர்களும் சேருவது கட்டாயமாக்கப்படும். என்றாலும் அந்தத் திட்டத்தை அமலாக்குவதற்கான வழி முறைகளை அரசாங்கம் இன்னும் தயாரிக்கவில்லை. இவ்வாறு சுகாதார அமைச்சில் உள்ள தேசிய சுகாதார நிதி அளிப்புப் பிரிவின் துணை இயக்குநர்…
காலித்: சிலங்கூர் மந்திரி புசாராவதற்கு நான் ஆதரவு தர மறுத்த…
முன்னாள் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினரும் முன்னாள் மாநில பாஸ் ஆணையருமான ஹசான் அலி, மந்திரி புசாராவதற்கு தாம் ஆதரவு தர மறுத்த பின்னர் பெரிதும் மாறி விட்டதாக ஷா அலாம் எம்பி காலித் சாமாட் கூறுகிறார். பாஸ் கட்சித் தலைவர்கள் மீதும் பக்காத்தான் ராக்யாட் மீதும் விஷத்தைக் கக்கிய…
கேஎல்ஐஏ2 செலவுகள் கூடியது பற்றி அமைச்சரைச் சந்திக்க டிஏபி விருப்பம்
கேஎல்ஐஏ2 என அழைக்கப்படும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2ன் கட்டுமானச் செலவுகள் 2.2 பில்லியன் ரிங்கிட் அதிகரித்ததற்கான காரணத்தை போக்குவரத்து அமைச்சர் கொங் சொங் ஹா வெளிப்படையாக தெரிவிக்க தவறி விட்டதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா சாடியிருக்கிறார். அதனால் தாம் அவரை அடுத்த…
பாஸ் டிஏபி, பிகேஆர்-உடன் ஒத்துழைப்பதாக ஹசான் அலி சாடுகிறார்
பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக தாம் முறையீடு செய்து கொள்ளப் போவதில்லை என்பதற்கு ஐந்து காரணங்களை முன்னாள் பாஸ் உதவித் தலைவர் டாக்டர் ஹசான் முகமட் அலி முன் வைத்துள்ளார். பெர்னாமாவுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் அவர் அதனைத் தெரிவித்துள்ளார். 1) பாஸ் இஸ்லாமிய நாட்டை அமைப்பதற்கான தனது…
ஒங்: அமானாவை அரசியல்கட்சியாக்க அவசரம் காட்ட வேண்டியதில்லை
அரசுசார்பற்ற அமைப்பான அமானா-வை அரசியல் கட்சியாக்க “அவசரம் காட்டவேண்டியதில்லை” என்கிறார் அதன் துணைத் தலைவர் ஒங் தி கியாட். மசீச முன்னாள் தலைவரான ஒங் தி கியாட், மலாய்மொழி நாளேடான சினார் ஹராபானுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறினார். அரசியலில் நீடித்த அனுபவமுடையவர்களைக் கொண்டமைந்த அந்த…
மலேசியர்களின் நம்பிக்கைக்குரியவரா பிரதமர் நஜிப்?
உங்கள் கருத்து:“நஜிப், 23 வயதில் துணை அமைச்சர் ஆனார்.இப்போதுதான் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்கள் தம்மை நம்ப வேண்டும் என்கிறார்” ‘நம்பிக்கை’ வேண்டும்;இந்தியர்களுக்கு நஜிப் அறிவுறுத்தல் கீழைதேய மலேசியர்: முருகனுக்கு மாலைசூடி மகிழ வேண்டிய நாளில் மிகப் பெரிய மாலை பிரதமர் நஜிப் ரசாக்குக்கும் ரோஸ்மா மன்சூருக்கும் அணிவிக்கப்பட்டதைப்…
அம்னோ தொகுதித் தலைவர்: அந்த ஊழலுக்கு முடிவு காணுங்கள் இல்லை…
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் விவகாரத்தில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை எதிர்த்தரப்பு அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து 13வது பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் அந்த சர்ச்சை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என வெளிப்படையாகப் பேசும் அம்னோ தொகுதித் தலைவரான சையட் அலி அல்ஹாபாஷி…
ஷாரிஸாட் தொடுத்த வழக்கில் தங்களுக்கு வாதாட பிகேஆர் இருவர் வழக்குரைஞர்களை…
பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவி சுராய்டா கமாருதினும் அதன் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலும் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் தங்கள் மீது தொடுத்துள்ள 100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கில் தங்களைப் பிரதிநிதிப்பதற்கு நான்கு வழக்குரைஞர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளனர். அந்த…
பாஸ் இளைஞர் பிரிவு: “Yayasan Taqwa என்ற அறநிறுவனத்தின் 800,000…
2010ம் ஆண்டில் Yayasan Taqwa என்ற அறநிறுவனத்தின் கீழ் திரட்டப்பட்ட, 800,000 ரிங்கிட் ஸக்காட் நிதி குறித்து கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய மன்ற (MAIWP) ஆண்டறிக்கையில் ஏன் கணக்குக் காட்டப்படவில்லை என்பதற்குப் பிரதமர் துறை அமைச்சர் ஜமில் கிர் பாஹாரோம் விளக்கமளிக்க வேண்டும் என பாஸ் இளைஞர்…
“புரோட்டோனின் 3.4 பில்லியன் ரிங்கிட் இழப்பை ஆராய ஆர்சிஐ-யை அமையுங்கள்”
தேசியக் கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோனுக்கு "தவறான நிர்வாகம்" காரணமாக ரொக்கக் கையிருப்பில் 3.4 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தகவல் வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அதனை ஆய்வு செய்ய ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என…
ஷாரிஸாட்டை எம்ஏசிசி அழைத்துள்ளது
மூன்று வார விடுமுறைக்குப் பின்னர் இன்று வேலைக்குத் திரும்பிய மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். மாலை மணி 4.00 வாக்கில் அம்னோ மகளிர் தலைவியுமான ஷாரிஸாட் எம்ஏசிசி கட்டிடத்துக்குள்…
குவான் எங்,அம்பிகா ஆகியோரை வெறுக்கத் தூண்டும் சுவரொட்டிகள் அகற்றப்பட்டன
தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் ஒட்டப்பட்டிருந்த (டிடிடிஐ) பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பொதுப் பிரமுகர்களான அம்பிகா ஸ்ரீநிவாசன், ஏ.சமட் சைட் ஆகியோர்மீது வெறுப்பைத் தூண்டும் சுவரொட்டிகள் நேற்று அகற்றப்பட்டன. ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளை அகற்றுவதில் பக்காத்தான் கட்சிகளின் உறுப்பினர்கள், செகாம்புட் குடியிருப்பாளர்கள் கோலாலம்பூர் மாநகராண்மைக் கழக ஊழியர்கள்…
ஜோகூர் நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு செம்பனை எண்ணெய் விற்கின்றன
மலேசியா, பாலஸ்தீன-ஆதரவு இயக்கத்தை நடத்திவரும்வேளையில் ஜோகூர் நிறுவனங்கள் இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு செம்பனை எண்ணெய் விற்பனை செய்வதாக இளைஞர் தரப்பு ஒன்று குறைகூறியுள்ளது. சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா(எஸ்ஏஎம்எம்) தலைவர் பத்ருல் ஹிஷாம் சஹாரின், ஜோகூரில் உள்ள இரண்டு நிறுவனங்கள், தஞ்சோங் பெலாபாஸ் மற்றும் பாசிர் கூடாங் வழியாக இஸ்ரேலுக்கு…
பொதுத் தேர்தல் மே மாதம் நடக்கலாம், EC தலைவர்
தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி) ஏப்ரல் மாதம்தான் அதன் இறுதிப் பரிந்துரைகளை நாடாளுமன்றத்திடம் முன்வைக்கும் என்பதால் பொதுத் தேர்தல் மே மாதத்தில் நடக்கலாம் என்கிறார் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜீஸ் முகம்மட் யூசுப். பெரித்தா ஹரியனில் இடம்பெற்ற செய்தியில், நாடாளுமன்றம் மே மாதம் கலைக்கப்பட்டால்,அதிலிருந்து 60…
தேர்தல் கொள்கை அறிக்கை தயாரிப்பில் பாஸ் மும்முரம்
13வது பொதுத் தேர்தல் “தேர்தல்களுக்கெல்லாம் பெரிய தேர்தல்” என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் குறிப்பிட்டபோது பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா, பாரிசான் நேசனல் மிகப் பெரிய தோல்வியைத் தழுவப்போகும் மிகப் பெரிய தேர்தல்தான் அது என்று குத்தலாகக் கூறினார். கூறியது மட்டுமல்ல,பிஎன்னை மண்ணைக் கவ்வ வைத்து…


