ஜாலான் அபாஸ், கம்போங் பத்து 4 இல் நேற்று ஒரு திருமண விருந்துக்குப் பிறகு உணவு விஷம் காரணமாக ஒரு பெண்ணும் அவரது மகனும் இறந்ததாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை உறுதிப்படுத்தியது. இறந்த பெண்ணின் 24 வயது மருமகள் காலை 10.30 மணிக்குப் புகார் அளித்ததாகத் தவாவ் துணை…
இசி: மீட்டுக் கொள்வது அனுமதிக்கப்பட மாட்டாது- பெயர்கள் வாக்குச் சீட்டுக்களில்…
வேட்பாளர் நியமனங்கள் இறுதி முடிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொள்ள முடியாது. போட்டியிலிருந்து விலகிக் கொள்வதற்கு அனுமதித்த சட்ட விதி ரத்துச் செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையத் (இசி) வான் அகமட் வான் ஒமார் இன்று கூறினார். "1980ம் ஆண்டுக்கான தேர்தல் விதிமுறைகளில்…
அம்னோவிலிருந்து கட்சி நீக்கம் செய்யப்பட்ட கமிலியாவுக்கு பிகேஆர் அழைப்பு
கோலா கங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கும் அம்னோவிலிருந்து கட்சி நீக்கம் செய்யப்பட்ட அதன் மகளிர் துணைத் தலைவர் கமிலியா இப்ராகிமுக்கு தன்னுடன் சேர்ந்துகொள்ளுமாறு பிகேஆர் அழைப்பு விடுத்துள்ளது. கமிலியாவுக்கு அந்த அழைப்பை விடுத்த பிகேஆர் துணைத் தலைவர் ரோட்சியா இஸ்மாயில் அந்த முன்னாள் அம்னோ தலைவி…
சே ஜோஹானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என இப்ராஹிம்…
கடந்த சனிக்கிழமையன்று தமது வேட்பாளர் மனுவைச் சமர்பிக்காத பாசிர் மாஸ் அம்னோ தொகுதித் துணைத் தலைவர் சே ஜோஹான் சே பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என இப்ராஹிம் அலி அம்னோ ஒழுங்கு நடவடிக்கைக் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளார். சே ஜோஹான் செய்தது உண்மையில் பாரிசான் நேசனலுக்கு…
பாஸ் மட்டுமே மலேசியாவை இஸ்லாத்துக்குக் கொண்டு செல்லும் என்கிறார் மாட்…
பாஸ் கட்சி மட்டுமே மலேசியாவை இஸ்லாத்தை நோக்கி வழி நடத்திச் செல்ல முடியும் என இப்போது அந்தக் கட்சியில் இணைந்துள்ள முன்னாள் அம்னோ உதவித் தலைவர் முகமட் முகமட் தாயிப் கூறுகிறார். "பாஸ் மட்டுமே வெளிச்சத்தைக் கொண்டு வர இயலும்," என அவர் இன்று காலை கோலாலம்பூரில் உள்ள…
‘ஒளிவுமறைவு வேண்டாம், இண்ட்ராப்-பிஎன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முழுமையாக வெளியிடுவீர்’
உங்கள் கருத்து : ‘கணேசன் அவர்களே, இந்தப் எம்ஓயு-வால் (புரிந்துணர்வு ஒப்பந்தம்) நன்மையா, இல்லையா என்ற விவாதத்துக்கு முடிவு கட்டுவோம். எம்ஓயுவை முழுமையாக வெளியிடுங்கள். நாங்களே படித்துத் தெரிந்துகொள்கிறோம்’ கேள்வி-பதில்: இண்ட்ராபின் அண்மைய நிலவரங்கள் குட்டிஜாம்பவான்: தனது செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்வதற்காக பக்காத்தானுடன் 24 சந்திப்புகளை நடத்தியதாக இண்ட்ர்பாப்…
பிஎன் அரசாங்கம் சபாவுக்கு எண்ணெய் உரிமப் பணத்தில் 20 விழுக்காட்டுக்கு…
பிஎன் கூட்டரசு அரசாங்கம் சபாவுக்குக் கொடுத்துள்ள சிறப்பு நிதிகள் புத்ராஜெயாவைக் கைப்பற்றினால் அந்த மாநிலத்துக்கு கொடுப்பதாக பக்காத்தான் ராக்யாட் வாக்குறுதி அளித்துள்ள 20 விழுக்காடு எண்ணெய் உரிமப் பணத்தை விட கூடுதலானவை. இவ்வாறு அந்த மாநில பிஎன் தலைவர் மூசா அமான் கூறுகிறார். சபாவில் பிஎன் வெற்றி பெற்றால்…
பெர்க்காசா தலைவர்களுடைய வேட்பாளர் நியமனத்தில் மகாதீருக்கும் பங்கு உண்டு
பிஎன், ஷா அலாமில் பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டினை நிறுத்தியிருப்பதும் பாசிர் மாஸில் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலிக்காக அது தேர்வு செய்த வேட்பாளர் விலகிக் கொண்டதும் முன்னாள் அம்னோ தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் "முழுமையான அதிகாரத்தை" வைத்துள்ளார் என்பதற்கான அறிகுறிகள் ஆகும். "அவர் ஒரு…
‘கனி- மலாய் கனவான் தீவிரவாதியானார்’
ஜோகூர் கேலாங் பாத்தாவில் தம்மை எதிர்த்துப் போட்டியிடும் நடப்பு ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மான் குறித்த தமது மதிப்பீட்டை டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் குறைத்துக் கொண்டுள்ளார். "மிதமான, நியாயமான கருத்துக்களைக் கொண்ட சிறந்த மலாய் கனவான்," எனத் தாம் தொடக்கத்தில் வருணித்த…
சிம் பின் வாங்க மாட்டார் டிஏபி-யிலிருந்து நீக்கப்படுவதற்கும் தயாராக இருக்கிறார்
மலாக்கா கோத்தா லக்ஸ்மணா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவதால் நெருக்குதலுக்கு இலக்காகி இருக்கும் டிஏபி மூத்த உறுப்பினர் சிம் தொங் ஹிம், நேற்று கட்சி வெளியிட்ட காலக் கெடுவைத் தொடர்ந்து நீக்கப்படுவதை எதிர்நோக்கவும் ஆயத்தமாக இருக்கிறார். டிஏபி சின்னத்தில் கோத்தா மலாக்கா நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ளவும் போட்டியிடும்…
உதயா: வேதா புதிய சாமிவேலு-வாக விரும்புகிறார்
கோத்தா ராஜா தொகுதியில் பி உதயமுமார் இப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது அலுவலகத்துக்கு வெளியில் ஹிண்ட்ராப்பின் பாரம்பரிய கருஞ்சிவப்பு நிற கருபொருளுடன் அவரது முகமும் 'பி உதயகுமார் 1990 முதல் ஒரு நபர் காட்சி' என பொறிக்கப்பட்டுள்ளன. ஹிண்ட்ராப் பெருந்திட்டம் மீது பக்காத்தான் ராக்யாட், பிஎன் ஆகியவற்றுடன் தமது…
இசி: சிம் சுயேச்சையாகவும் போட்டியிடுவது சரியானதே
கோத்தா மலாக்கா டிஏபி எம்பி சிம் தொங் ஹிம் -மீது கட்சித் தலைவர்களுடைய நெருக்குதல் அதிகரித்து வரும் வேளையில் அந்த மூத்த அரசியல்வாதி சட்டமன்றத் தொகுதி ஒன்றுக்கு சுயேச்சையாகப் போட்டியிடுவதும் சட்டப்பூர்வமாக சரியானதே என்று தேர்தல் ஆணையம் (இசி) கூறியிருக்கிறது. வேட்பாளர் ஒருவர் இந்தத் தேர்தலில் கட்சி சின்னத்தில்…
டிஏபி: பிகேஆர்-பாஸ் சுங்கை ஆச்சே போட்டி துரதிர்ஷ்டமானது
சுங்கை ஆச்சேயில் பாஸ் கட்சியும் பிகேஆர் கட்சியும் போட்டியில் இறங்கியுள்ளது 'துரதிர்ஷ்டமானது' என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறுகிறார். விரைவில் அந்த விவகாரம் தீர்க்கப்படும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க பொதுத் தேர்தலுக்குப் பின்னர் டிஏபி, பாஸ்,…
கனி: ஹாடி பிரதமரானால் ஜோகூருக்கு பேரழிவு ஏற்படும்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை அடுத்த பிரதமராக்குவதற்கு டிஏபி ஒப்புக் கொண்டால் ஜோகூருக்குப் பேரழிவு ஏற்படும் என பிஎன் கேலாங் பாத்தா வேட்பாளரும் நடப்பு ஜோகூர் மந்திரி புசாருமான அப்துல் கனி ஒஸ்மான் எச்சரித்துள்ளார். அதன் தாக்கங்கள் குறித்து தாம் கவலைப்படுவதாக அப்துல் கனி ஸ்கூடாய் தாமான்…
கர்பால்: டிஏபி சுயேச்சைகள் 24 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க…
வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்படாதைத் தொடர்ந்து சுயேச்சைகளாக நிற்கும் டிஏபி உறுப்பினர்களுடைய கட்டொழுங்கற்ற எந்த நடவடிக்கையையும் டிஏபி சகித்துக் கொள்ளாது. நடப்பு தெரத்தாய் சட்ட மன்ற உறுப்பினர் ஜெனிஸ் லீ-க்கும் கோத்தா மலாக்கா எம்பி சிம் தொங் ஹிம்-முக்கும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தங்களது சுயேச்சை…
இத்தனை சுயேச்சைகள் நாட்டுக்குச் சேவை செய்யத்தான் போட்டியிடுகிறார்களா?
உங்கள் கருத்து ‘தங்களால் வெற்றிபெற முடியும் என்பதைத் தத்தம் கட்சிகளுக்குத் காண்பிக்க விரும்புகிறார்கள். அதுதான் போட்டியிடுகிறார்கள். ஆனால், சுயேச்சைகள் வெற்றிபெறுவது அரிதினும் அரிது என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது’ தேர்தலில் நூற்றுக்கணக்கில் சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள் ஜேஎம்சி: 13வது பொதுத் தேர்தல் அமைதியாகவும் நியாயமாகவும் நடந்தேற பிரார்த்தனை செய்வோம். ஏதாவது குழப்படிகள்…
இசா, ஆயிஷாவை அரசியல் எதிரியாகத்தான் பார்க்கிறார், பாடகராக அல்ல
ஜெம்போலில் தம்மை எதிர்க்கும் வேட்பாளர் பெரும் புகழ்பெற்றவராக இருக்கலாம் ஆனால் அதைக்கண்டு அம்னோவின் முகம்மட் இசா சமட் அஞ்சப்போவதில்லை. அங்கு அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் புகழ்பெற்ற பழைய பாடகி ஆயிஷா. அவரது இயற்பெயர் வான் அயிஷா வான் அரிபின். “அவர் (ஆயிஷா) ஒரு பாடகரோ, உஸ்தாஸோ, ஆசிரியரோ, வழக்குரைஞரோ…
தூய்மையாக வைத்துக் கொள்ள கிட் சியாங் விரும்புகிறார்
"கனி தாம் மந்திரி புசாராக இருந்த 18 ஆண்டு காலத்தில் ஜோகூருக்கு பல சாதனைகளைக் கொண்டு வந்துள்ளார்." வேட்பாளர் நியமன நாளன்று தமது அரசியல் எதிரியிடமிருந்து ஒருவர் இது போன்ற அங்கீகாரத்தைக் கொடுப்பார் என யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதனை லிம் கிட் சியாங் வழங்கினார். கேலாங்…
டிஏபி வேட்பாளருக்கு முதலில் அதிர்ச்சி ஒரு நாள் காத்திருந்த பின்னர்…
இசி என்ற தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வேட்பாளர் பட்டியலில் தமது பெயர் இடம் பெறாதது குறித்து டிஏபி ஸ்ரீ தஞ்சோங் வேட்பாளர் சான் பூங் ஹின் அதிர்ச்சி அடைந்துள்ளார். நேற்று காலையில் சான் -உடைய வேட்பாளர் நியமனத்தை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்ட போதும் பெயர் விடுபட்டுள்ளது.…
‘அம்னோ, பெர்க்காசா ஆளுமையின் கீழ் இருப்பது உறுதியாகியுள்ளது’
உங்கள் கருத்து : "என் நினைவுக்கு எட்டிய வரை தேர்வு செய்யப்பட்ட பிஎன் வேட்பாளர் ஒருவர் நியமன நாளன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்யாதது இதுவே முதன் முறை" பாசிர் மாஸில் பிஎன் விலகிக் கொண்டது, இப்ராஹிம் அலி நேரடிப் போட்டியில் பெர்ட் தான்: இப்ராஹிம் அலியை முன்னாள்…
வேட்பாளர் நியமன மையத்தில் அன்வார் கேலி செய்யப்பட்டார்
1982ம் ஆண்டு தொடக்கம் தமது சொந்த மாநிலத்தில் போட்டியிடும் பெர்மாத்தாங் பாவ் வேட்பாளர் அன்வார் இப்ராஹிமை வேட்பாளர் நியமன மையத்துக்கு வெளியில் பிஎன் ஆதரவாளர்கள் இன்று அவமானப்படுத்தியுள்ளனர். பெராபிட்டில் உள்ள Institut Kemahiran Belia Negara-வில் தேர்தல் அதிகாரி யூஸ்னி இஸ்மாயில் அன்வார் பெயரையும் அவரது கட்சி பெயரையும்…
தீ கியாட்: என் முன்னாள் உதவியாளருக்கு நான் பிரச்சாரம் செய்ய…
பண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நிற்கும் தமது முன்னாள் உதவியாளட் அலன் தான் -க்குத் தாம் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என நடப்பு பண்டான் எம்பி ஒங் தீ கியாட் கூறுகிறார். "அவர் சுயேச்சை வேட்பாளர். நான் பிஎன்-னில் இருக்கிறேன்," என அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.…
13வது பொதுத் தேர்தலில் பல இடங்களில் பல்முனைப் போட்டி
வரப்போகும் 13வது பொதுத் தேர்தலில் பல்முனை போட்டிக்குப் பஞ்சமிருக்காது எனத் தெரிகிறது. பல இடங்களில் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் போட்டிபோட பல வேட்பாளர்கள் வரிந்துகட்டிக்கொண்டு இறங்கியிருக்கிறார்கள். பல்முனைப் போட்டி நிகழும் சில இடங்களைப் பார்ப்போம்: ஜோகூர் கேலாங் பாத்தா(நாடாளுமன்ற) இருபெரும் அரசியல் ஜாம்பவான்களான ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி…
‘இன ரீதியாக ஒன்று கூடும்’ பக்காத்தான் போக்கை கனி சாடுகிறார்
பிஎன் கேலாங் பாத்தா வேட்பாளர் அப்துல் கனி ஒஸ்மான் அந்தத் தொகுதி மக்களுக்கு விடுத்துள்ள முதல் செய்தியில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளதாக கூறப்படும் 'இன ரீதியாக ஒன்று கூடும்' பக்காத்தான் போக்கை எதிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். "ஜோகூர் பாணியை முறியடிப்பதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமூகத்தை இன ரீதியாக…