பிரதமருடைய சகோதரர் பாலாவுக்கான ரொக்கத்தைக் கொடுத்தார்

முன்னாள் தனிப்பட்ட துப்பறிவாளரான பி பாலசுப்ரமணியம் சர்ச்சையை ஏற்படுத்திய தமது இரண்டாவது சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திடுவதற்கு ஈடாக அவருக்கு பணம் கொடுத்த மனிதர் பிரதமருடைய இளைய சகோதரர் முகமட் நசிம் அப்துல் ரசாக் என கம்பள வணிகர் தீபக் ஜெய்கிஷன் பெயர் குறிப்பிட்டுள்ளார். "என்ன செய்ய வேண்டுமே அதனை…

வருகிறது: ரோஸ்மாவை பற்றி அனைத்தையும் கூறும் தீபாக் நூல்

சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் வணிகர் தீபாக் ஜைக்கிஷன் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மாவை மங்கோலிய மாது அல்தான்துயாவின் கொலை  சம்பந்தப்பட்ட  கதையுடன் தொடர்பு படுத்தி ஓர் 26 பக்க புத்தகம் எழுதப் போகிறார். ரோஸ்மா தமது சொந்த வரலாறு குறித்து எழுதத் திட்டமிட்டுள்ளார். அதில் அவருக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கத்…

நாடற்ற நிலை : தேசியப் பதிவுத் துறை தலைமையகம் நூற்றுக்கணக்கான…

நாடற்றவர்களாக உள்ள மலேசியர் விவகாரத்துக்குத் உடனடியாக தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை புத்ராஜெயாவில் அமைந்துள்ள தேசியப் பதிவுத் துறை தலைமையத்தின் முன்னால் பிகேஆர் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. [VIDEO | 05:46mins] காலை மணி 10 வாக்கில் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் புத்ராஜெயா நீதித்…

தனித்துவாழும் 3,011 தாய்மார்கள் ரிம16 மில்லியன் கோரி சிலாங்கூர் அரசுமீது…

3,011 தனித்துவாழும் தாய்மார்கள், 2008 பொதுத் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையில் பக்காத்தான் ரக்யாட் வாக்குறுதி அளித்தபடி ரிம16 மில்லியன் அலவன்சைத் தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்துள்ளனர். சிலாங்கூர் தனித்துவாழும் தாய்மார்கள் சங்கத் தலைவி முர்தினி கஸ்மான் தலைமையில் அவர்கள் ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில்…

அட்னான் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரிய பின்னர் Aunty…

கடந்த மாதம் நடைபெற்ற லைனாஸ் எதிர்ப்பு 'பசுமை ஊர்வலம்' மீது தாம் தெரிவித்த கருத்துக்களுக்காக பாகாங் மந்திரி புசார் அட்னான் யாகோப் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கோரிய பின்னர் ஒரு மூத்த குடிமகளும் அவரது இரண்டு நண்பர்களும் கைது செய்யப்பட்டார்கள். குவாந்தானிலிருந்து கோலாலம்பூருக்கு ஹிம்புனான் ஹிஜாவ் ஏற்பாடு…

கர்பால்: கிளந்தான் ஆண்-பெண் பிரிவினை விஷயத்தை பாஸ் தெளிவுபடுத்த வேண்டும்

கிளந்தான் ஆண்-பெண் பிரிவினை விஷயம் தொடர்பான துணைச் சட்டம் மீது பாஸ் கட்சி நிலையை அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பகிரங்கமாக தெளிவுபடுத்த வேண்டும் என டிஏபி தலைவர் கர்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். கோத்தா பாருவில் முஸ்லிம் அல்லாத பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆண்களுடைய முடியைத்…

எங்கள் வீடமைப்புத் திட்டத்தைக் காப்பாற்ற வாருங்கள் என மலாய்க்காரர்கள் பிஎன்…

பினாங்கு மாநில அரசாங்கத்துக்கும் மாநில பிஎன் -னுக்கும் இடையிலான தாமான் மாங்கிஸ் நில விவகாரம் மீதான சர்ச்சை நின்று விட்ட நிலையில் தெலுக் கும்பாரில் மலாய் சமூகத்துக்கான குறைந்த விலை வீடமைப்புத் திட்டத்துக்காக போராடுமாறு பிஎன் -னை அரசு சாரா மலாய் அமைப்பு ஒன்று கேட்டுக் கொண்டுள்ளது. 2005ம்…

கியூபெக்ஸ்: 50,000 ஒப்பந்த ஊழியர்களின் ஒப்பந்தத்தை நீட்டிப்பீர்

அரசாங்க ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான கியூபெக்ஸ், ஆண்டு இறுதியில் முடிவடையும் 50,000 அரசாங்க ஊழியர்களின் ஒப்பந்தத்தை நீட்டிக்குமாறு அரசுதுறைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. தங்கள் சார்பில் குரல் கொடுக்குமாறு ஒப்பந்த ஊழியர்கள் கியூபெக்சை வேண்டிக்கொண்டிருப்பதாக அதன் தலைவர் ஒமார் ஒஸ்மான் கூறினார். “அவர்களில் பெரும்பாலோர் 10 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியவர்கள் என்பதால் நாங்கள்…

நாடற்ற நிலைக்கு எதிரான பிகேஆர் பேரணிக்காக புத்ராஜெயாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்

தனிப்பட்ட அடையாள ஆவணங்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ள நாடற்ற நிலையை எடுத்துக் காட்டும் பொருட்டு தேசியப் பதிவுத் துறைக்கு ஊர்வலமாகச் செல்வதற்காக புத்ராஜெயாவில் 600-க்கும் மேற்பட்டவர்கள் கூடியுள்ளனர். காலை மணி தொடக்கம் அங்கு சென்றடையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அருகில் உள்ள நீதித் துறை வளாகத்துக்கும் தேசியப் பதிவுத் துறைக்கும் ஊர்வலமாகச் சென்றனர்.…

உள்துறை அமைச்சர் போலீஸ் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்கிறார் சிஐடி தலைவர்

உள்துறை அமைச்சர் போலீஸ் விவகாரங்களில் தலையிடுவதுண்டு என்று முன்னாள் போலீஸ் படைத் தலைவர் கூறியிருப்பதை கூட்டரசு போலீஸ் சிஐடி இயக்குனர் முகம்மட் பக்ரி ஜினின் மறுத்துள்ளார். போலீஸ் மேற்கொள்ளும் ஒவ்வொரு விசாரணையும் சட்டப்படிதான் செய்யப்படுகிறது, அதில் எந்தத் தரப்பும் தலையிடுவதில்லை என்று பக்ரி (இடம்) தெரிவித்ததாக மலாய்மொழி நாளேடான…

தற்காலிக நடவடிக்கை அனுமதி, கழிவை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனக்…

குவாந்தான் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவுகள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என தற்காலிக நடவடிக்கை அனுமதியில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என லைனாஸ் தொழில் கழகத் தலைவர் நிக்கோலஸ் கேர்ட்டிஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நிபந்தனையைப் பூர்த்தி செய்வதற்கு லைனாஸ் 'கழிவுகளை ஏற்றுமதி…

‘என்இபி-ஆல் மலேசியப் பொருளாதாரம் மிக உயர்ந்த வளர்ச்சியைக் கண்டது’

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், புதிய பொருளாதாரக் கொள்கை (என்இபி)-யால் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி குன்றியதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். “என்இபி முழுவீச்சில் செயல்பட்டபோது மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி பதிவு செய்யப்பட்டது”, என்று புத்ரா ஜெயாவில் கருத்தரங்கம் ஒன்றைத் தொடக்கிவைத்து உரையாற்றியபோது அவர் கூறினார்.  பெர்டானா தலைமைத்துவம்…

நாடற்ற நிலைக்கு எதிரான பிகேஆர் பேரணிக்காக புத்ராஜெயாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடுகின்றனர்

தனிப்பட்ட அடையாள ஆவணங்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ள நாடற்ற நிலையை எடுத்துக் காட்டும் பொருட்டு தேசியப் பதிவுத் துறைக்கு ஊர்வலமாகச் செல்வதற்காக புத்ராஜெயாவில் 300க்கும் மேற்பட்டவர்கள் கூடியுள்ளனர்.   காலை மணி தொடக்கம் அங்கு சென்றடையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அருகில் உள்ள நீதித் துறை வளாகத்துக்கும் தேசியப் பதிவுத் துறைக்கும் ஊர்வலமாகச்…

மகாதீர்: உதவித் தொகை முறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்

உதவித் தொகைகள் உண்மையில் அதிகத் தேவையுள்ள மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக உதவித் தொகை முறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். நடப்பு உதவித் தொகை விநியோக முறை குறிப்பாக பெட்ரோலிய உதவித் தொகை முறை பலவீனமாக இருப்பதால்…

கெராக்கான் குழு கோத்தா பாரு சலூனில் முடி திருத்திக் கொண்டது

இரு பாலர் முடி திருத்தும் நிலையங்கள் மீது (சலூன்) கிளந்தான் அரசாங்கம் விதித்துள்ள சர்ச்சைக்குரிய விதிமுறைக்கு சவால் விடுக்கும் வகையில் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த ஆறு கெராக்கன் உறுப்பினர்கள் கோத்தா பாருவில் சலூன் ஒன்றில் தங்கள் முடியை திருத்தம் செய்து கொண்டனர். நெகிரி செம்பிலான் கெராக்கான் துணைச் செயலாளர்…

தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருக்கலாம்!

அரசியலில் பங்கேற்பதற்கான ஜனநாயக உரிமை தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு உண்டு. ஆனால், அவர்கள் தங்களுடைய கடமையில் பாரபட்சமின்றி இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யுசுப் வலியுறுத்தியதாக மலேசியன் இன்சைடர்  நேற்று வெளியிட்ட செய்தி கூறுகிறது. "தேர்தல் ஆணையத்தின் எந்த ஓர் அதிகாரியும்…

“பக்குவப்படுத்தப்பட்ட லைனாஸ் தொழில் கூடக் கழிவுகள் மலேசியாவில் விற்கப்படலாம் ஆனால்….”

குவாந்தான் கெபெங்கில் லைனாஸ் அரிய மண் தொழில் கூடத்தின் கழிவு,  விதிக்கப்பட்டுள்ள இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே மலேசியாவில் விற்கப்பட முடியும். அந்தக் கழிவு குறைந்த அணுக்கதிரியக்க சக்தியைக் கொண்ட செயற்கைக் கூட்டுப் பொருளாக (synthetic aggregates) மாற்றப்பட வேண்டும் என்பதும் அதனை வாங்குவதற்கான நிறுவனத்தைக் கண்டு…

பெங்கேராங் என்ஜிஓ கருத்துக் கணிப்புகள் நடத்த நீதிமன்ற ஆணையைப் பெற…

ஜோகூர், பெங்கேராங் துணை மாவட்ட மக்களைப் பாதிக்கும் இரண்டு விவகாரங்களில் கருத்துக்கணிப்புகள் நடத்த நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என பெங்கேராங் என்ஜிஓ கூட்டமைப்பு மனு செய்துகொள்ளும். அவ்வட்டார மக்கள், பெட்ரோனாஸ் சுத்திகரிப்பு ஆலையும் பெட்ரோகெமிகல் ஒருங்கிணைப்பு மேம்பாட்டுத் திட்டமும்(ரப்பிட்) அங்கு அமைவதற்கும் சீன இடுகாடுகள் இடமாற்றம் செய்யப்படுவதற்கும் எதிர்ப்புத்…

கிளந்தான்: ஊராட்சி மன்றங்கள் முஸ்லிம் அல்லாதாருக்கும் சம்மன் வழங்கலாம்

அநாகரீகமான நடத்தைக்காக முஸ்லிம் அல்லாதாருக்கும் சம்மன் (குற்றப்பதிவுகள்) வழங்கும் அதிகாரத்தை தனது துணைச் சட்டங்களின் கீழ் கோத்தா பாரு நகராட்சி மன்றம் பெற்றுள்ளது என கிளந்தான் ஆட்சி மன்ற உறுப்பினர் தாக்கியுடின் ஹசான் கூறுகிறார். கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் முஸ்லிம் அல்லாதாருக்கு இது போன்ற சம்மன்களை வழங்கியுள்ளதாக வீடமைப்பு,…

மூசா ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து புகார் செய்ய வேண்டும்

தமக்குப் பின் போலீஸ் படைத் தலைவர் பதவி ஏற்ற இஸ்மாயில் ஒமார் மீதும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) ஆலோசனை வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் ரோபர்ட் பாங்கின்மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் மூசா ஹசன் அக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் போலீசிலும் எம்ஏசிசி-இலும் புகார் பதிவு செய்ய வேண்டும்…

டாக்டர் மகாதீர்: நன்கு செயல்படாத யாருக்கு எதிராகவும் நான் பேசுவேன்

ஐந்தாவது பிரதமர் அப்துல்லா அகமட் படாவிக்கு எதிராக இயங்கிய தாம் இப்போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்குப் பிரச்சாரம் செய்வதின் மூலம் இரட்டை வேடம் போடுவதாக கூறப்படுவதை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மறுத்துள்ளார். "இரட்டை வேடம் ஏதுமில்லை. யாராவது நன்கு செயல்படவில்லை என்றால் நான் யாருக்கு…

பாஸ்: கோத்தா பாருவில் நால்வருக்கு விதிக்கப்பட்ட அபராதம், இஸ்லாமியச் சட்டம்…

கடந்த அக்டோபர் மாதம் கோத்தா பாரு நகராட்சி மன்றம் முஸ்லிம் அல்லாத நால்வருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ஷாரியா சட்டங்கள் தொடர்புடையது அல்ல. அந்தத் தகவலை பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி இன்று வெளியிட்டார். 1990ம் ஆண்டு கிளந்தான் ஆட்சியை பாஸ் எடுத்துக் கொண்டதிலிருந்து இஸ்லாமியச் சட்டங்களுக்கு எந்த…

கிளானா ஜெயாவுக்குக் கூடுதல் போலீஸ் தேவை

கிளானா ஜெயாவில் உள்ள சுமார் 200,000 மக்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்குச் சேவையாற்றவும் 56 போலீசார் இருப்பது போதாது எனக் குறைகூறப்பட்டுள்ளது. மக்கள்தொகைக்கு ஏற்ப போலீசார் எண்ணிக்கை இல்லாததால் தேசா மெந்தாரி, பிஜேஸ் 8,9 போன்ற பகுதிகளிலும் தம் தொகுதியிலும் கடும் குற்றங்கள் “அபாயமளிக்கும் வகையில் பெருகி வருகின்றன” என்று…