மசீச-வும் கெரக்கானும் சந்தர்ப்பவாதிகள் எனக் குலசேகரன் சாடுகிறார்

கிளந்தானில் அண்மையில் எழுந்துள்ள ஆண்-பெண் பிரிவினை, கல்வாத் பிரச்னைகளுக்கு டிஏபி  மீது கண்டனங்களைத் தொடுத்துள்ள மசீச-வும் கெரக்கானும்  'எங்கள் கொல்லைகள் மீது குப்பைகளை எறிவதற்கு முன்னர் தங்கள் கொல்லைப் புறத்தைக் கவனிக்க வேண்டும்' என டிஏபி உதவித் தலைவர் எம் குலசேகரன் சாடியுள்ளார். 2003ம் ஆண்டு ஈப்போவில் இஸ்லாமியச்…

மாணவர்கள் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் செய்யலாம் என்கிறார் ஒர் அமைச்சர்

பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வெளியில் அரசியல் நடவடிக்கைகளில் சேர்ந்து கொள்ளலாம். பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பதும் அவற்றுள் அடங்கும். அந்தத் தகவலை உயர் கல்வி அமைச்சர் முகமட் காலித் நோர்டின் நேற்றிரவு வெளியிட்டார். 1971ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லுரிச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் மாணவர்கள் அரசியல் கட்சிகளில்…

‘தீபக் வெளியிட்ட தகவல்கள் மீது ஏன் ஆழ்ந்த மௌனம் ?’

"இது பிஎன் அரசாங்கத்தையே கேலிக் கூத்தாக்குகிறது. மற்ற நாடுகளில் இது போன்ற தகவல்கள் வெளியானால் விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டிருக்கும்" பாலாவுக்கான ரொக்கத்தை பிரதமரது சகோதரர் கொடுத்தார் என தீபக் கூறிக் கொள்கிறார் மஹாஷித்லா: அந்த மங்கோலிய மாது அல்தான்துயா ஷாரிபு ஸ்கார்ப்பின் ஊழலில் தமக்குச் சேர வேண்டிய நியாயமான…

டிஏபி: ‘லைனாஸைக் காட்டிலும் அமைச்சரவை பொய் சொல்லும் சாத்தியமே நிறைய…

லைனாஸ் அரிய மண் சுத்திகரிப்புக் கூடத்திலிருந்து கழிவுப் பொருளை லைனாஸ் நாட்டுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என்ற தேவை மீது அமைச்சரவையும் லைனாஸும் விடுத்துள்ள முரண்பாடான அறிக்கைகள் தொடர்பில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கும் கருத்துத் தெரிவித்துள்ளார். அமைச்சரவையே பொய் சொல்லியிருக்க வேண்டும் என்றும்…

லைனாஸ் மீதான முரண்பாடான அறிக்கைகளுக்கு லியாவ் விளக்கம் தரவில்லை

லைனாஸ் அரிய மண் சுத்திகரிப்பு  கூடத்திலிருந்து வெளியாகும் கழிவுகள் நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். என்றாலும் தற்காலிக நடவடிக்கை அனுமதியில் கழிவுகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது ஒரு நிபந்தனை அல்ல என அந்த ஆஸ்திரேலிய…

வீ: ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட விவகாரம் மாநில…

கடந்த அக்டோபர் மாதம் துவா சொல்லாததற்காக கன்னத்தில் அறையப்பட்ட மூன்று ஒராங் அஸ்லி பிள்ளைகள் விவகாரம் கிளந்தான் மாநிலக் கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் இன்று தெரிவித்திருக்கிறார். அக்டோபர் மாதம் 23ம் தேதி நிகழ்ந்த அந்தச் சம்பவம் மீது ஏற்பட்டுள்ள முன்னேற்றம்…

டிஏபி பேராளர்கள் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களை அழியாத மையுடன்…

பினாங்கில் நாளை தொடங்கும் டிஏபி தேசியப் பேரவையில் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் வாக்களிப்பில் கலந்து கொள்ளும் பேராளர்கள் அழியாத மை பற்றி நேரடி அனுபவத்தைப் பெறுவார்கள். அடுத்த ஆண்டு ஜுன் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டிய 13வது பொதுத் தேர்தலுக்கு கட்சி உறுப்பினர்களை தயார்…

அனைத்து ஊடகங்களும் டிஏபி பேரவைக்கு வரவேற்கப்படுகின்றன

பினாங்கில் இந்த வார இறுதியில் நிகழும் 16வது மூவாண்டு டிஏபி பேரவையில் செய்திகளைச் சேகரிக்க எல்லா ஊடகங்களும் -நாளேடுகள் மாற்று ஊடகங்கள்- அனுமதிக்கப்படும். கட்சியின் புதிய மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் உட்பட அனைத்து நிகழ்வுகள் பற்றி எந்த ஊடகமும் செய்திகளை சேகரிக்கலாம் என அதன் தலைமைச்…

பக்காத்தான்: குற்றச்சாட்டுகள் தொடர்பில் நஜிப் தொடர்ந்து மெளனமாக இருக்கக்கூடாது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், வணிகரான தீபக் ஜெய்கிஷன் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்குத் தக்க பதில் அளித்து தம் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர், மலிவான அரசியல் விளம்பரம் தேடும் முயற்சிகளைக் கைவிட்டு பொதுமக்களின் கேள்விகளுக்குப் பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டும் என்று…

கர்பாலுக்கு ரிம50 ஆயிரம் கொடுக்குமாறு உத்துசானுக்கு நீதிமன்றம் உத்தரவு

அம்னோவுக்குச் சொந்தமான நாளேடான உத்துசான் மலேசியா, அவதூறு வழக்கு ஒன்றில் குற்றவாளியென தீர்மானிக்கப்பட்டு டிஏபி தலைவர் கர்பால் சிங்குக்கு இழப்பீடாகவும் செலவுத்தொகையாகவும் ரிம70,000 கொடுக்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. நான்கு ஆண்டுகளுக்குமுன், பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலுக்கு முந்திய நாள், கர்பால் அங்கு செல்லவில்லை…

நாடற்ற இந்தியர்கள்: அதிகார வர்க்கம் காட்டிய இனவாதத்தின் விளைவாகும்

உங்கள் கருத்து : 'இந்தோனிசியர்களும் வங்காள தேசிகளும் மூன்று மாதத்திற்குள் மை கார்டுகளைப் பெற முடியும். ஆனால் இந்தியர்கள் அல்ல. இருந்தும் மஇகா தேர்தலில் பிஎன் வெற்றி பெறுவதற்கு உதவ விரும்புகிறது' நாடற்ற மக்களுடைய முடிவில்லாத சொல்ல முடியாத துயரங்கள் [VIDEO 7:28 mins] ஸ்விபெண்டர்: அந்த நாடற்ற…

இண்ட்ராப்புடன் முறைப்படியான ஒப்பந்தம் எதுவும் இல்லை : தியான் சுவா

பக்காத்தான் ரக்யாட், இந்தியர்களில் வறிய நிலையில் உள்ளவர்களைக் கைதூக்கிவிடுவதன் தொடர்பில் இண்ட்ராப்புடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தியை பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மறுத்துள்ளார். “இண்ட்ராப்பின் செயல்திட்டத்தை ஏற்றுகொண்டு பக்காத்தான் ரக்யாட் ஜனவரி முதல் வாரத்தில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் என இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூறியதாக மலேசியாகினியில்…

அந்த வீடியோவை முழுமையாகக் காட்டுங்கள் என தீபக் அம்னோ வலைப்பதிவாளர்களுக்குச்…

கம்பள வணிகரும் சொத்து மேம்பாட்டாளருமான தீபக் ஜெய்கிஷன், தாம் பிகேஆர் கைப்பாவை என ஒப்புக் கொள்வதாக காட்டிக் கொள்ளும் கத்தரிக்கப்பட்ட (எடிட் செய்யப்பட்ட)வீடியோவை இணையத்தில் சேர்த்த அம்னோ வலைப்பதிவாளர்கள் அந்த வீடியோவை முழுமையாக வெளியிட வேண்டும் என சவால் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் இருப்பது தாம் தான் என்பதை…

தீபாக்: பாலாவின் சத்தியப் பிரமாண விவகாரத்தில் பிரதமருக்கு பெரும் பங்கு…

தனிப்பட்ட துப்பறிவாளர் பி. பாலசுப்ரமணியத்தின் முதல் சத்தியப் பிரமாணம் 2008 ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டதில் பிரதமர் நஜிப் ரசாக் மிகப் பெரும் பங்காற்றினார் என்று வணிகர் தீபாக் ஜைகிஷன் கூறுகிறார். நஜிப் அவ்வாறு செய்தது ஏனென்றால் அம்னோவிலிருந்த அவரது விரோதிகள் அவரின் பிரதமராகும் இலட்சியத்தை தடுக்க மேற்கொள்ளக்கூடிய…

20 டிஏபி மத்திய நிர்வாகக் குழு இடங்களுக்கு 68 பேர்…

டிஏபி கட்சியின் 16வது மூவாண்டு தேசியப் பேரவை இந்த வார இறுதியில் பினாங்கில் நடைபெறுகின்றது. அங்கு நிகழும் கட்சித் தேர்தல்களில் 20 டிஏபி மத்திய நிர்வாகக் குழு இடங்களுக்கு 68 பேர் போட்டியிடுகின்றனர். டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், அவரது புதல்வர்களான கோபிந்த் சிங் டியோ (…

அம்னோவிலிருந்து விலகி விட்டேன் என்கிறார் முது நிலை இசி அதிகாரி

இசி என்னும் தேர்தல் ஆணையத்தில் சேருவதற்கு முன்னரே தமது அம்னோ பதவியிலிருந்து விலகி விட்டதாக சபா தேர்தல் ஆணைய துணை இயக்குநர் (நடவடிக்கை) அக்ஸா நஸ்ரா கூறுகிறார். "இசி-யில் சேருவதற்கு முன்பே நான் அம்னோ இளைஞர் பதவியைக் கை விட்டு விட்டேன்," என அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட…

‘லைனாஸ், கழிவை மாற்றும் திட்டத்தை எங்களுக்குக் காட்டுங்கள்’

கெபெங்கில் அமைந்துள்ள தனது அரிய மண் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவை மாற்றும் தனது திட்டத்தை ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனமான லைனாஸ் வெளியிட வேண்டும் என 80 அரசு சாரா அமைப்புக்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு கோரியுள்ளது. மூன்று இதர ஆவணங்களுடன் லைனாஸ் அந்தத் திட்டத்தை வெளியிட மறுத்தால்…

தற்காலிக நடவடிக்கை அனுமதியை பொது மக்களுக்கு வெளியிடுவது பற்றி அரசாங்கம்…

லைனாஸுக்கு வழங்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை அனுமதியை பொது மக்களுக்கு வெளியிடுவது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என அறிவியல், தொழில் நுட்ப, புத்தாக்க அமைச்சர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி கூறியிருக்கிறார். "அது எங்கள் கவனத்துக்கு இன்னும் கொண்டு வரப்படவில்லை," அவர் சொன்னார். லைனாஸ் அரிய மண் தொழில் கூடம் (LAMP) என…

என்ஜிஓ: டிஏபி மத்திய செயலவையில் கூடுதல் மலாய்க்காரர்கள் இடம்பெற வேண்டும்

தன்னை ஒரு பல்லினக் கட்சி என்று கூறிக்கொள்ளும் டிஏபி, அதை நிரூபிக்க, வார இறுதியில் நடக்கும் கட்சித் தேர்தலில் மத்திய செயலவைக்குப் போட்டியிடும் எட்டு மலாய்க்காரர்களில் ஐவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருகிறது. “அது அலங்காரத்துக்காக சொல்லப்படுவதல்ல என்று நினைக்கிறோம்.அதை நிரூபியுங்கள்”, என்று பினாங்கு மலாய் காங்கிரஸ் தலைவர்…

‘கழிவை மறுபதனீடு செய்ய முடியும் என லைனாஸ் சொல்வதை சோதனை…

குவாந்தான் கெபெங்கில் உள்ள தனது அரிய மண் தொழில் கூடத்திருந்து வெளியாகும் கழிவை அணுக்கதிரியக்கம் இல்லாத பொருளாக மறு பதனீடு செய்யப்பட முடியும் என லைனாஸ் சொல்வதை சோதனை செய்து பார்க்க வேண்டும் என மசீச தலைவர் சுவா சொய் லெக் கூறுகிறார். "எங்கள் நிலை ஒரே மாதிரியானது.…

பிகேஆர்: நாடற்றவர் பேரணியில் நடந்தது பற்றி ஹிஷாமுடின் கூறியிருப்பது அப்பட்டமான…

நேற்றைய பேரணியில் நாட்டற்ற இந்தியர்கள் நிரந்தர வசிப்பிடத் தகுதிக்குத்தான் விண்ணப்பம் செய்தார்கள் என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறியிருப்பது ஓர் “அப்பட்டமான பொய்” என்கிறது பிகேஆர். “புத்ரா ஜெயா தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) (நேற்று) 308 விண்ணப்பங்களைப் பெற்றதாகவும் அவற்றில் 280 நிரந்தர வசிப்பிடத் தகுதி கேட்டு செய்யப்பட்டவை…

நாடற்ற மக்களுடைய முடிவில்லாத சொல்ல முடியாத துயரங்கள்

எம் ஞானப்பிரகாசம் 1946ம் ஆண்டு தைப்பிங்கில் பிறந்தார். பல வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மலேசிய நிகழ்வுகளை அவர் கண்டுள்ளார். அவற்றுள் 1946 முதல் 1960 வரை நீடித்த கம்யூனிஸ்ட் அவசர காலம், 1957ம் ஆண்டு நாடு சுதந்தரமடைவதற்கு வழி கோலிய மலாயா சுதந்திரப் போராட்டங்கள் ஆகியவையும் அடங்கும். ஆனால்…

நஜிப் திருந்தினாலும் மஇகா திருந்தாது போல் உள்ளது!

நாடற்றவர்கள் பிரச்னையை 55 ஆண்டுகளாக தீர்க்க இயலாத மஇகா, புதிதாக எழுந்த அரசியல் விழிப்புணர்ச்சியால் நிகழ்ந்த  மாற்றத்தின் தாக்கத்தைத் தனது சாதனை என்று  கூறுவது ஏமாற்றத்தை அளிப்பதாக சுவராம் மனித உரிமை கழகத்தலைவர் கா. ஆறுமுகம் கூறுகிறார். [VIDEO | 05:46mins] நாடு விடுதலை அடைவதற்கு 3 ஆண்டுகளுக்கு…