ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
‘மக்கள் வாங்கப்படுவதற்காக ஏழைகளாக வைத்திருக்கப்படுகின்றனர்’
அரசியல் பிரச்சாரத்துக்கு நிதியளிப்பது தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்படாத வரையில் மக்கள் வாங்கப்படுவதற்காக அரசியல்வாதிகள் அவர்களை ஏழைகளாக வைத்திருக்கும் நிலை தொடரும் என கல்வியாளரான பிரிட்கெட் வெல்ஷ் கூறுகிறார். "அதில் சிலவற்றை நாம் இப்போது காண்கிறோம் என நான் எண்ணுகிறேன். வறுமை நிலை அடிப்படையில் கிழக்கு மலேசியாவில் நிகழ்கின்ற விஷயங்களைப்…
சாப்ரி: எம்பி-க்கள் காலணிகளை எறிந்தால் அதனையும் நாம் பார்க்க முடியும்
தேசிய செய்தி அலைவரிசை மேலும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு ஆர்டிஎம் ஒளிபரப்பும் நாடாளுமன்ற நேரத்தை நீட்டிக்க தாம் விரும்புவதாக தொடர்பு, பல்லூடக அமைச்சர் அகமட் சாப்ரி சிக் சொல்கிறார். "இதற்கு முன்பு ஆர்டிஎம் அரசாங்கத் தலைவர்களுடைய முகங்களை மட்டுமே ஒளியேற்றுகின்றது…
கோலா பெசுட் வேட்பாளரை பாஸ் செவ்வாய்க்கிழமை அறிவிக்கும்
கோலா பெசுட் இடைத் தேர்தலுக்கான தனது வேட்பாளர் பெயரை பாஸ் வரும் செவ்வாய்க் கிழமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே நாளன்று பிஎன் -னும் தனது வேட்பாளரைக் குறிப்பிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செவ்வாய்க் கிழமை இரவு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வேட்பாளரை அறிவிப்பார் என…
போலீசார் அவசர காலச் சட்டத்திற்கு மாற்று யோசனைகளை தெரிவித்துள்ளனர்
2011ம் ஆண்டு ரத்துச் செய்யப்பட்ட 1969ம் ஆண்டு அவசர காலச் சட்டத்திற்கு மாற்றாக அமையக் கூடிய சட்ட வரைவுகளை போலீஸ் பரிந்துரை செய்துள்ளது. "நாங்கள் உள்துறை அமைச்சுக்கு ஒரிரு மாற்று யோசனைகளை வழங்கியுள்ளோம். ஆனால் அவற்றின் விவரங்களை இப்போது வெளியிட முடியாது," என தேசியப் போலீஸ் படைத் தலைவர்…
ஸாஹிட் பதவிக்கு வந்ததும் குற்றச்செயல் விகிதம் கூடி விட்டதா ?
'அண்மையில் விளையாட்டு அமைச்சர் வீடு கொள்ளையடிக்கப்படும் வரையில் குற்றச் செயல் விகிதம் குறைவாக இருந்தது. கேபிஐ என்ற அடைவுநிலைக் குறியீடும் நன்றாக இருந்தது. இப்போது எதுவும் சரியில்லை' தேச நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்ய முடியாது. அது இன்னும் தேவை என்கிறார் ஸாஹிட் வெர்சே: உள்துறை அமைச்சர் அகமட்…
கோலா பெசுட் பிஎன் வேட்பாளர் பெயர் ஜுலை 9ல் அறிவிக்கப்படும்
கோலா பெசுட் இடைத் தேர்தல் இயக்குநர் என்ற முறையில் துணைப் பிரதமர் முஹைடின் யாசின் அந்த சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் நிறுத்தப்படும் பிஎன் வேட்பாளர் பெயரை ஜுலை 9ம் தேதி அறிவிப்பார். "பிஎன் தகுதியுள்ள வேட்பாளர் பெயர்களை தேர்வு செய்துள்ளது. வேட்பாளர் பெயரை துணைப் பிரதமர் ஜுலை…
வழக்குரைஞர்: தார்மீக வெற்றி ஆனால் மதம் மாற்ற சர்ச்சை இன்னும்…
2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய சட்ட நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) திருத்த மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது தார்மீக வெற்றி என்றாலும் அது போன்ற மாநிலச் சட்டங்கள் இன்னும் இருப்பதாக மனித உரிமைகள் வழக்குரைஞர் மாலிக் இம்தியாஸ் சர்வார் கூறுகிறார். "அந்த மசோதா சர்ச்சைக்குரியதாக மாறியது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.…
கிட் சியாங்: குற்றச் செயல் புள்ளிவிவரமும் அவசரகாலச் சட்டமும்
குற்றச் செயல்கள் குறைந்து விட்டதாக அரசாங்கம் தம்பட்டம் அடித்துக் கொண்டு அதே வேளையில் வன்முறை குற்றச் செயல்கள் கூடியுள்ளதற்கு அவசர காலச் சட்டம் (EO) ரத்துச் செய்யப்பட்டது காரணம் என சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். "தேசிய போலீஸ்…
மதம் மாற்ற மசோதாவை முற்றாக கைவிடுங்கள் என்கிறார் பினாங்கு பிஎன்…
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மதம் மாற்ற மசோதாவை மீட்டுக் கொள்வது மட்டும் போதாது என பினாங்கு மாநில கெரக்கான் சட்ட, மனித உரிமைகள் பிரிவின் தலைவர் பல்ஜித் சிங் கூறுகிறார். அதனை இப்போது முழுமையாக ரத்துச் செய்யாவிட்டால் அது மீண்டும் தோன்றும் என அவர் கருதுகிறார். அத்துடன் பிரச்னைக்கான…
‘கூட்டரசு அரசாங்கம் நியமித்த கிராமக் குழுக்கள் சட்டவிரோதமானவை’
பினாங்கு மாநிலத்திற்கு கூட்டரசு அரசாங்கம் நியமித்துள்ள 142 கிராம மேம்பாட்டு பாதுகாப்புக் குழு (JKKP) உறுப்பினர்கள் தேவை இல்லை என முதலாவது துணை முதலமைச்சர் ரஷீட் ஹான்சோன் கூறுகிறார். அந்தக் குழு உறுப்பினர்கள் செயல்படுவது சட்ட விரோதமானது என்பதோடு தொந்தரவாகவும் இருக்கிறது என அவர் சொன்னார். காரணம் அவர்களை மாநில…
என்ஜிஓ: குறுக்கு வழியில் குற்றச்செயல்களைத் தடுக்க இயலாது
அரசாங்கம் போலீஸ் படையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், அவசரகாலச் சட்டம் (இஓ) போன்ற அடக்குமுறைச் சட்டங்களை (இஓ) மீண்டும் கொண்டுவருவதன் மூலமாக “குறுக்கு வழியில்” குற்றச்செயல்களைத் தடுக்கப் பார்க்கிறது என வழக்குரைஞர் அமைப்பு ஒன்று சாடியுள்ளது. நாட்டின் குற்றச்செயல் பிரச்னைக்குத் தீர்வு “இஓ போன்ற அடக்குமுறை தடுப்புச் சட்டங்களை…
ஜஹிட்: தேச நிந்தனைச் சட்டத்துக்குத் தேவை இருக்கிறது
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்படுவதை எதிர்க்கிறார். அதை அகற்றிவிட்டால் தேச நிந்தனைக் கருத்துகளைக் கட்டுப்படுத்த எந்தவொரு சட்டமும் இல்லாது போய்விடும் என்பது அவருடைய கருத்து. “அதை அகற்றுவது அவதூறு கூறுவதை, அபாண்டமாக குற்றம் சாட்டுவதை ஊக்குவிப்பதாக அமையும். அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல”.…
சில்லறை வணிகர்கள்: தொடர் மினி மார்க்கெட்-கடைகள் ‘எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கின்றன’
பேரங்காடி ஒன்று நடத்தும் தொடர் மினி மார்க்கெட்-கடைகளுக்கு எதிராக ஆட்சேபம் தெரிவிப்பதற்காக வணிகர் சங்க உறுப்பினர்கள் நேற்று ஷா அலாமில் இரண்டு தொடர் மினி மார்க்கெட் கடைகளுக்கு வெளியில் கூடினர். மலேசிய முஸ்லிம் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வணிகர்கள் சங்கத்தைச் சேர்ந்த 30 பேர், நேற்று பிற்பகல் 99…
மாயாவி தட்டப்பயறு இராணுவத்தை தேடுகின்றனர்
'அம்னோ இணைய எழுத்தர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதால் பக்காத்தான் ராக்யாட்டை ஆதரிக்கின்றவர்கள் அனைவருக்கும் பணம் கொடுக்கப்படுகின்றது என எண்ணக் கூடாது' 'தட்டப்பயறு இராணுவத்தை அரசாங்கம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை' சியாங் மாலாம்: தட்டப்பயறு இராணுவம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை என்றால் அந்த மாயாவியான தட்டப்பயறு இராணுவத்துடன் மோதுவதற்கு ஏன் 350…
சர்ச்சையை ஏற்படுத்திய மதம் மாற்ற மசோதாவை அமைச்சரவை மீட்டுக் கொள்கிறது
அமைச்சரவை, சர்ச்சையை ஏற்படுத்திய 2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய சட்ட நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) மசோதாவை மீட்டுக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்கு சமர்பிக்கப்பட்ட அந்த மசோதாவை மீட்டுக் கொள்வது என அதன் இன்றையக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. குழந்தையை மதம் மாற்றுவதற்கு பெற்றோர்களில் ஒருவருடைய ஒப்புதல் மட்டும் போதுமானது…
அம்னோவுக்கு ‘எடுபிடி’ பையனாக தாம் இருப்பதை இப்ராஹிம் இப்போது உணர்ந்துள்ளார்
'இப்ராஹிம், பெட்ரோல் நிலைய உதவியாளராக அல்லது உபசரிப்பாளராக வேலை செய்யத் தகுதி இருப்பதாக நீங்கள் ஏன் எண்ணுகின்றீர்கள் ? அந்த இரு தொழில்களிலும் வேலை செய்கின்றவர்களை அவமானப்படுத்த வேண்டாம்' 'பெர்க்காசாவுக்கு செவி சாய்க்காத' அம்னோ/பிஎன் -னை இப்ராஹிம் சாடுகிறார் கோமாளி: பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, நீங்கள் சொல்வது…
EAIC 2009ம் ஆண்டிலிருந்து 31 விவகாரங்களைத் தீர்த்துள்ளது
EAIC எனப்படும் அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம் 2009ம் ஆண்டு அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்ட பின்னர் அரச மலேசியப் போலீஸ் படையினர் சம்பந்தப்பட்ட 31 விவகாரங்களைத் தீர்த்துள்ளது. "அந்த எண்ணிக்கை சிறியது என சில தரப்புக்கள் எண்ணலாம். 2009ல் அந்த ஆணையம் அமைக்கப்பட்ட போதிலும் அது 2012ல்…
தாயிப் மீது வழக்குப் போட ஏன் நீண்ட காலம் பிடிக்கிறது…
சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்-டின் உறவினர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நில ஊழல் விவகாரம் மீது விசாரணை நடத்துவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஏன் நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறது என ஒர் அனைத்துலக அரசு சாரா அமைப்பு வினவியுள்ளது. 2011ம் ஆண்டு ஜுன் மாதம்…
கூலாய் எம்பி: குழந்தைகள் மதம் மாற்றம் ஐநா ஒப்பந்தத்திற்கு எதிரானது
குழந்தையைத் தன்மூப்பாக மதம் மாற்றுவதற்கு அனுமதிக்கும் மசோதா, மலேசியா கையெழுத்திட்டுள்ள குழந்தை உரிமைகள் மீதான ஐநா ஒப்பந்தத்திற்கு முரணானது. ஆகவே அது மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என கூலாய் எம்பி தியோ நீ சிங் கூறுகிறார். இஸ்லாத்துக்கு குழந்தைகளை தன்மூப்பாக மதம் மாற்றுவது சம்பந்தப்பட்ட 2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய…
‘இனவாத மருத்துவர்கள் நீக்கப்பட வேண்டும் ஆனால் ஆதாரத்தைக் காட்டுங்கள்’
'இனவாதப் போக்குடைய மருத்துவர்கள் நீக்கப்பட வேண்டும். காரணம் அவர்கள் மருத்துவராக சேவை செய்வதற்கு எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறுகின்றனர் என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சொல்கிறார். அந்த விவகாரம் மீது விசாரித்து பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்கு, இனவாதிகள் எனத் தாம் கூறிக் கொள்ளும் மருத்துவர்களுடைய பெயர்களை…
குழந்தைகள் மத மாற்றம்: மலேசிய இந்து தர்ம மாமன்றம் எதிர்க்கிறது
கடந்த ஜூன் மாதம் 26 இல் முதல் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இஸ்லாமியச் சட்ட நிருவாக (கூட்டரசுப் பிரதேசம்) திருத்த மசோதாவிற்கு மலேசிய இந்து தர்ம மாமன்றம் அதன் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. "இச்சட்டத்தால் இந்நாட்டிலுள்ள இந்துக்கள் பாதிப்புக்குள்ளாவது நிச்சயமாகும்", என்று மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின்…
இடைத் தேர்தல்: அழியா மை புதிய விநியோகிப்பாளரிடமிருந்து பெறப்படும்
கோலா பெசுட் இடைத் தேர்தலில் பயன்படுத்தப்படும் அழியா மையை ஒரு புதிய விநியோகிப்பாளரிடமிருந்து வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துவருவதாக தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் தெரிவித்துள்ளார். “இம்முறை மேம்பட்ட மையை வாங்குவோம்.....அது அழியாமல் இருக்க அதில் போதுமான அளவு சில்வர் நைட்ரேட் இருப்பதையும் உறுதிப்படுத்துவோம்”,…
‘பெயர் இல்லை’ என்பதே ஒருவரின் பெயரான விந்தை
சாபா, தாவாவில் பிறந்த ஒருவர் 40 ஆண்டுகளாக ‘பெயர் இல்லை’ என்ற பெயருடன் வாழ்ந்து வந்ததாக சாபா குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் இன்று கூறினார். மஹாட் இஸ்மாயில், 65, பிறந்தபோது அவரின் தந்தை மற்ற விசயங்களில் மும்முரமாக இருந்ததால் பெயரைப் பதிவு செய்யவில்லை உடனே,“மருத்துவ மனை…


