அம்பிகா சொன்னதை ‘அபத்தம்’ என இசி நிராகரித்தது

விரைவில் எந்த தேர்தல் சீர்திருத்தமும் நிகழாது என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் அண்மையில் சொன்னதை இசி என்ற தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் நிராகரித்துள்ளார். அம்பிகா அபத்தமாகப் பேசுகிறார் என்றும் வேறுபடுத்துகிறார் என்றும் வான் அகமட் கூறியதாக சைனா பிரஸ்…

20 ஆயிரம் ரிங்கிட் கொடுக்குமாறு குவாந்தான் குடியிருப்பாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

லைனாஸ் அரிய மண் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தற்காலிக நடவடிக்கை அனுமதியை வழங்குவது என அரசாங்கம் செய்த முடிவை நிறுத்தி வைப்பதற்கு மூன்று குவாந்தான் குடியிருப்பாளர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. "உண்மை நிலையிலும் சட்டத்தின் நிலையிலும் சரியானது" என செப்டம்பர் 8ம் தேதி குவாந்தான் உயர் நீதிமன்றம் அறிவித்த…

ஜனவரி 12 பேரணியை மெர்டேகா ஸ்டேடியத்தில் நடத்த பக்காத்தான் ஆலோசனை

Himpunan Kebangkitan Rakyat (மக்கள் எழுச்சி) என்ற பெயரில் நாடு முழுக்க பேரணிகள் நடத்திவரும் பக்காத்தான் ரக்யாட் அதன் இறுதிக்கட்ட பேரணியை ஜனவரி 12-இல் மெர்டேகா அரங்கில் நடத்த முடிவு செய்துள்ளது. பக்காத்தான் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் “ஆலோசனையின்படி” பேரணியை மெர்டேகா அரங்கில் நடத்தும் என பாஸ்…

கிறிஸ்துவர்கள் இஸ்ரேலுக்குச் செல்வதற்கான கட்டுப்பாடுகளை மலேசியா அகற்றுகிறது

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மலேசியாவிலிருந்து கிறிஸ்துவர்கள் ஜெருசலத்திற்கு யாத்ரை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த எண்ணிக்கை அளவையும் மற்ற கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் அகற்றியுள்ளது. மலேசிய அரசாங்க அதிகாரிகளும் தேவாலய அதிகாரிகளும் அந்தத் தகவலை உறுதிப்படுத்தினர். அண்மைய ஆண்டுகளில் அரசாங்கத்துக்கும் சிறுபான்மை கிறிஸ்துவர்களுக்கும் இடையில் பல சர்ச்சைகள் மூண்ட பின்னர் அந்த நடவடிக்கை…

போலீஸ் காவலில் இறந்தவருக்கு நீதி கேட்டு அவரின் குடும்பத்தார் மகஜர்…

போலீஸ் காவலில் இருந்தபோது இறந்துபோன ஒருவரின் குடும்பத்தார் இன்று கோலாலும்பூர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் சென்று தங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்டு அழுது புலம்பினர். கிருஷ்ணன் சுப்ரமணியம், நவம்பர் 8-இல் கோத்தா டமன்சாராவில் கைது செய்யப்பட்டதாக அவர்கள் சொன்னார்கள். நவம்பர் 20-இல் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அவரைக்…

கள்ளப்பண வெளியேற்றத்தில் மலேசியாவின் இரண்டாவது இடம் ‘வெட்கத்தை’ தருகிறது

நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வெளியேறும் மூலதன மதிப்பு உலக அளவில் மலேசியாவுக்கு இரண்டாவது இடத்தை அளித்திருப்பது மிகவும் வெட்கக் கேடானது என கெரக்கான் உதவித் தலைவர் மா சியூ கியோங் கூறியுள்ளார். "இத்தகைய அறிக்கைகளில் மலேசியா ஏணிப்படியில் கீழ் நிலையில் இருக்க வேண்டும். நாம் சிறிய நாடு என்பதைக் கருத்தில்…

6பி திட்டத்தில் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டார்களா? சுஹாகாம் ஆராயும்

அந்நிய தொழிலாளர்களின் உரிமைக்காக போராடும் என்ஜிஓ-வான தெனாகானிதா, 6பி திட்டத்தின்கீழ் வேலை அனுமதிக்கு விண்ணப்பித்த அந்நிய தொழிலாளர்களின் புகார்களை ஆராயுமாறு மனித உரிமை ஆணைய (சுஹாகாம்) த்தைக் கேட்டுக்கொண்டு மகஜர் ஒன்றைக் கொடுத்துள்ளது. அம்மகஜரில் அந்நிய தொழிலாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதையும் தங்கள் உரிமைகள் மீறப்பட்டதையும் விவரித்துள்ளனர். 6பி திட்டம்…

பெகிரின் முன்னாள் மனைவி குழந்தை பராமரிப்புக்கு ரிம121மில்லியன் கேட்டு வழக்கு

ஷானாஸ் ஏ.மஜிட், தம் முன்னாள் கணவரும் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்மூடின் மகனுமான முகம்மட் அபு பெகிர் தாயிப்மீது ரிம121 மில்லியன் கேட்டு மேலும் ஒரு வழக்கு தொடுத்துள்ளார். அவ்வழக்கு கோலாலும்பூர் ஷாரியா உயர் நீதிமன்றத்தில் ஜனவரி 10-இல் விசாரணைக்கு வருகிறது. நவம்பர் 30-இல் கோலாலும்பூர் ஷாரியா…

இந்து சாமி மேடை சர்ச்சை: சகிப்புத்தன்மை எங்கே போனது ?

"மலாய் சமூகம் இந்த முடிவுக்கு வந்தால் மலாய்க்காரர் அல்லதார் தங்கள் சமயத்தை பின்பற்றப் போராட வேண்டியது தான்." "சிப்பாங்கில் இந்து பூஜை மேடை மீண்டும் அமைக்கப்படுவதற்கு குடியிருப்பளர்கள் எதிர்ப்பு" பி தேவ் ஆனந்த் பிள்ளை: தாமான் செரோஜா குடியிருப்பாளர் சங்கத் தலைவர் கமாருல்ஸாமான் மாட் ஜெயின் அபத்தமாகப் பேசுகிறார்.…

சுங்கைப்பட்டாணியில் கலவரங்கள் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்

முகநூல், டிவிட்டர், வலைப்பதிவுகள் ஆகியவற்றில் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வரும் தவறான தகவல்களையும் வதந்திகளையும் நம்ப வேண்டாம் என போலீசார் பொது மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர். பொறுப்பற்ற சில தரப்புக்கள் கூறிக் கொள்வதைப் போல சுங்கைப்பட்டாணியில் மோதல்களே, கலவரங்களோ, நிகழவில்லை. யாரும் மரணமடையவில்லை. பள்ளிவாசல்களுக்கும் எரியூட்டப்படவில்லை என கெடா மாநிலத்…

உங்கள் கருத்து: கள்ளப் பணம்: தனிநபர் அடிப்படையில் நாம் உலகில்…

"28 மில்லியன் மக்களைக் கொண்ட மலேசியா கள்ளத்தனமாக வெளியே கொண்டு செல்லப்படும் பண மதிப்பில்  மற்ற நாடுகளைக் காட்டிலும் வெகு தொலைவு முன்னேறியுள்ளது." சட்ட விரோதமாக  மூலதனம் வெளியேறுவதில் மலேசியா உலகில் இரண்டாவது இடம் வகிக்கிறது அப்சலோம்: எந்தப் பணமும் முதலில் கள்ளப்பணம் அல்ல என்பதை நாம்  புரிந்து…

உத்துசான் கட்டுரைக்காக ஜைனுடினைச் சாடினார் இந்தோனேசிய அதிபர்

இந்தோனேசியாவின் மூன்றாவது அதிபர் பிஜே ஹபிபி குறித்து மலேசியாவின் முன்னாள் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின்(ஜாம்) எழுதிய கட்டுரை முறையற்றது அடாவடித்தனமானது என்று சாடியுள்ளார் இந்தோனேசிய அதிபர் சுசிலோ பம்பாங். அக்கட்டுரை இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்குமிடையில் நிலவும் நல்லுறவைக் கெடுத்துவிடலாம் என்றவர் சொன்னதாக பெர்னாமா அறிவித்துள்ளது. இந்தோனோசிய அதிபர், பரஸ்பர…

அந்த முன்னாள் உயர்நிலை போலீஸ்காரருக்கு எப்படி நான்கு குறைந்த விலை…

முன்னாள் உயர்நிலை போலீஸ் அதிகாரி ஒருவர் கோலாலம்பூர் மாநகர மத்தியில் உள்ள மிஹார்ஜாவில் குறைந்தது நான்கு குறைந்த விலை அடுக்கு மாடி வீடுகளை வாங்க முடிந்தது என்பதை கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்)விளக்கம் வேண்டும் என பிகேஆர் இன்று கோரியுள்ளது. டிபிகேஎல் சொத்துச் சோதனை மூலம் அந்தத் தகவல்…

கேமரன் மலையை தரைமட்டமாக்குகிறது பகாங் மாநில அரசு

-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், டிசம்பர் 18, 2012. நம் நாட்டில் குளிர்ச்சியான ஜனரஞ்சக சூழல் அமைந்துள்ள ஆகப் பெரிய (72,000 ஹெக்டர்) ஒரே இடம் கேமரன் மலைதான் என்றால் அது மிகையில்லை. கேமரன் மலையின் இந்த குளிர்ச்சிக்கு எப்படியாவது சாவு மணி அடிக்க வேண்டும்…

சிப்பாங்கில் சாமிமேடையை மறுபடியும் கட்டுவதற்கு குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு

சிப்பாங் முனிசிபல் மன்ற(எம்பிஎஸ்) த்தால் உடைக்கப்பட்ட சாமிமேடையை மீண்டும் கட்டுவதற்கு பிஎன் கட்சிகள் அமோக ஆதரவு தெரிவித்துள்ள போதிலும் உள்ளூர் மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். சாமிமேடையை மீண்டும் கட்டுவது அங்குள்ள 95 விழுக்காடு மலாய்க்காரர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிடிக்கவில்லை என்று தாமன் சரோஜா குடியிருப்பாளர் சங்கத் தலைவர் கமருல்சமான்…

புவாட்: அந்த மூன்று நாள் பள்ளிக்கூடம் பற்றி அமைச்சிடம் புகார்…

வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கற்பிக்கப்படுவதாக கூறியுள்ள குவா மூசாங் பிஹாய் தேசியப் பள்ளிப் பிள்ளைகளின் பெற்றோர்கள் அது பற்றி கல்வி அமைச்சிடம் புகார் செய்ய வேண்டும் என கல்வித் துணை அமைச்சர் முகமட் புவாட் ஸார்க்காஷி விரும்புகிறார். "பெற்றோர்கள் அமைச்சிடம் புகார் செய்ய வேண்டும். பின்னர் அந்தக்…

ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட பள்ளிக்கூடத்தில் மூன்று நாட்களுக்கு…

கிளந்தான் குவா மூசாங்கில் உள்ள பிஹாய் தேசியப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி என்பது விலை உயர்ந்த ஆடம்பரமாகி விட்டது. தீவகற்ப மலேசியாவில் மற்ற ஒதுக்குப் புறமான இடங்களில் உள்ள கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை படிப்பதற்கு அனுப்ப வெகு தொலைவு செல்ல வேண்டியுள்ளது. ஆனால் போஸ் பிஹாய்…

பஸ் தாக்குதல் மீது போலீஸ் இழுத்தடிப்பதாக பிகேஆர் புகார்

பேராக் தாப்பாவுக்குச் செல்லும் வழியில் பிகேஆர் பிரச்சாரப் பஸ்ஸின் கண்ணாடி நொறுக்கப்பட்டது மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக பிகேஆர் குறை கூறியுள்ளது. அதனால் அது ஏமாற்றம் அடைந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் கட்சி ஊழியர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்ததாகவும் போலீஸ்காரர்கள் யாரும் வரவில்லை என்றும்…

ஏஇஎஸ் சம்மன்களை அரசாங்கம் மீட்டுக்கொள்கிறதா?

நேற்று தொடக்கம் குறைந்தது இரண்டு நீதிமன்றங்களில் போக்குவரத்து குற்றங்கள் மீதான வழக்குகள் மீட்டுக்கொள்ளப்பட்டிருப்பதைப் பார்க்கையில்,  தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்)-இன்கீழ் வெளியிடப்பட்ட போக்குவரத்து சம்மன்கள் பெருமளவில் மீட்டுக்கொள்ளப்படலாம் என்று என்று எண்ணத் தோன்றுகிறது. “நேற்றிலிருந்து இப்படி நடக்கிறது. ஆனால், நேற்றைய வழக்குகளுக்கு எங்கள் வழக்குரைஞர்களால் செல்ல இயலவில்லை. “ஆனால்,…

இந்தோனேசியப் பணிப்பெண்களுக்கான செலவுத் தொகை கூடுகிறது

இந்தோனேசிய பணிப்பெண்களை வேலைக்கு வைத்துக்கொள்ள 2011-இல் மலேசிய இந்தோனேசிய அரசாங்கங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதைவிட கூடுதல் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட தொகை வேலைக்கு வைத்துக்கொள்வோருக்கும் பணிப்பெண்களுக்கும் ஆகும் செலவை மட்டுமே உள்ளடக்கியது என்றும் அதை அமல்படுத்த இயலாது என்றும் மலேசிய வேலைவாய்ப்பு முகவர்களின் தேசிய சங்க (பிகாப்)த்…

பெர்சே, 4.0 பேரணிக்கான வாய்ப்புக்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்

'பெர்சே ஆதரவாளர்கள் 2013ம் ஆண்டுக்கான  Himpunan Kebangkitan Rakyatஐ (மக்கள் எழுச்சிப் பேரணி) பயன்படுத்திக் கொள்வது நல்லது' தேர்தல் சீரமைப்புக்கான நம்பிக்கை இல்லை. என்றாலும் எதிர்ப்புப் பேரணிக்கான திட்டம் இல்லை முஷிரோ: தேர்தல் ஆணையம், போலீஸ் போன்ற பல அமைப்புக்கள் அம்னோ கட்டுக்குள் இருப்பதால் தேர்தல் சீர்திருத்தங்கள் எளிதாக…

சட்ட விரோதமாக மூலதனம் வெளியேறுவதில் மலேசியா உலகில் இரண்டாவது இடம்…

2010ம் ஆண்டு மலேசியாவிலிருந்து கிட்டத்தட்ட 200 பில்லியன் ரிங்கிட் கள்ளப் பணம் வெளியேறியிருக்கிறது. ஆசியாவின் பொருளாதார வல்லரசு எனக் கருதப்படும் சீனா, உலக மூலதன வெளியேற்றத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் அதாவது இரண்டாவது இடத்தில் மலேசியா இருப்பதாக வாஷிங்டனை தளமாகக் கொண்ட ஜிஎப்ஐ என்ற Global…

வாக்காளர்களின் தொகுதிகளை மாற்றும் சதிவேலையில் தேசிய முன்னணி!

அண்மையில் தங்களை வாக்காளர்களாக பதிவுசெய்துகொண்ட காராக்கில் உள்ள புதிய வாக்காளர்கள் பலர் வேறு தொகுதிகளில் வாக்களிக்கப் பதியப்பட்டுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இங்கு தாமான் முஹிபா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சோங் மற்றும் அவரது இரு மகன்கள் இவ்வாண்டு ஆரம்பத்தில் தங்களை வாக்காளர்களாக அஞ்சல் நிலையத்தில் பதிவு…