ஷபாஸை சிலாங்கூர் எடுத்துக்கொள்வதை ஆதரித்து பிகேஆர் பேரணி

சிலாங்கூர் பிகேஆர் இளைஞர்கள், மாநிலத்துக்குக் குடிநீர் வழங்க குத்தகை பெற்றுள்ள ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரின்(ஷபாஸ்) நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளும்படி மந்திரி புசாரை வலியுறுத்த திங்கள்கிழமை பேரணி ஒன்றை நடத்துவர். “ஷபாஸ், நல்ல முறையில்(நீர் ஆதாரங்களை)நிர்வகிக்கவில்லை, சிலாங்கூர் மக்களுக்கும் நல்ல சேவையை வழங்கவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். “இதன் தொடர்பில்…

குற்ற விகிதத்தை அரசியலாக்காதீர்: சிலாங்கூர் போலீஸ் தலைவர்

செர்டாங் எம்பி குற்றப் புள்ளிவிவரங்களை அரசியலாக்கக் கூடாது என்று வலியுறுத்திய சிலாங்கூர் போலீஸ் தலைவர் துன் ஹிசான் துன் ஹம்சா,அவர் குற்றச்செயல்களைக் குறைக்க போலீசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  “புள்ளிவிவரங்களைப் பற்றி ஏன் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.வாருங்கள், குற்றச்செயல்களைக் குறைக்க சேர்ந்து பாடுபடுவோம்”. இன்று காலை ஷா…

மே 13ஐ முஹைடின் உண்மையிலேயே தவிர்க்க விரும்புகிறாரா? லிம் கிட்…

எம்பி பேசுகிறார்: அடுத்த பொதுத் தேர்தலில் என்ன விலை கொடுத்தாவது அம்னோ/பாரிசான் நேசனல் ஆட்சியை நிலைத்திருக்க செய்வதற்கு அச்சத்தையும் இனத்தையும் பயன்படுத்தும் தரம் குறைந்த, பொறுப்பற்ற ஈவிரக்கமற்ற அவமதிப்பைத் தரக் கூடிய இரட்டை அரசியலில் ஈடுபடவில்லை என்பதையும் மே 13 மீண்டும் நிகழாமல் தடுக்க விரும்புவதாக கூறியுள்ளதையும் நிரூபித்து…

போலீஸ் சிறப்புப் பிரிவு நமது விவேகத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது

"வழக்கம் போல பழைய பாணியில் ஒர் அச்சுறுத்தல்: உங்கள் படுக்கைக்கு கீழே சிவப்புச் சட்டைக்காரர்கள். இப்போது வேடிக்கைக்காக ஜிஹாட் போராட்டக்காரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்." போலீஸ் சிறப்புப் பிரிவு:  கம்யூனிஸ்ட்களும் ஜெம்மா இஸ்லாமியா உறுப்பினர்களும் எதிர்க்கட்சிகளுக்குள் ஊடுருருவுகின்றனர் உங்கள் அடிச்சுவட்டில்: கம்யூனிஸ்ட்களும் ஜெம்மா இஸ்லாமியா உறுப்பினர்களும் என்றாவது ஒரு நாள்ஆட்சியைக் கைப்பற்றும்…

பாஸ் இஸ்லாமிய சித்தாந்தத்தை கைவிட தயாரா?, ஹிண்ட்ராப் சவால்

மலேசியாகினி மின்னூடக செய்தி அகப்பக்கத்தில் பாஸ் கட்சியின் கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் சித்தி மரியா, ஹிண்ட்ராப் இயக்கத்தை இனவாரி அமைப்பு என பொருள் படும் வகையில் கருத்து வெளியிட்டிருப்பதை நாங்கள் வன்மையாக எதிர்த்து கண்டிக்கிறோம். இந்திய வாக்காளர்களை சாமானியர்களாக கருதும் போக்கை பாஸ் மற்றும் பக்காத்தான்…

மே 13 ஒரு காலத்தில் பேசக் கூடாத விஷயமாக இருந்தது…

"இனப் பதற்றம் என்றும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள வேளையில் அந்த நிகழ்வின் ஒரு பக்கக் கதையை மட்டுமே சித்தரிக்கும் திரைப்படத்தை ஒளிபரப்புவது சரியா?" புதிய மே 13 திரைப்படம் சர்ச்சையை மூட்டியுள்ளது ஏஜிஎம்: 1990ம் ஆண்டுகளின் மத்தியில் காலஞ்சென்ற யாஸ்மின் அகமட் இயக்கிய பெட்ரோனாஸ் ஹரிராயாவி ளம்பரக் குறும்படத்துக்கு…

பக்காத்தானில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பது பற்றி ஹிஷாமுக்கு “உறுதியாகத் தெரியவில்லை”

பக்காத்தான் ராக்யாட்டுக்குள் கம்யூனிஸ்ட்களும் பயங்கரவாதிகளும் ஊடுருவியிருப்பதாக கூறப்படுவது மீது தமக்கு 'உறுதியாகத் தெரியாது' என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியிருக்கிறார். "என்னிடம் அந்த விவகாரம் தொடர்பில் இப்போதைக்கு எந்தத் தகவலும் இல்லை. ஆகவே அது உண்மையா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியாது," என ஹிஷாமுடின் சொன்னதாக…

தண்ணீர் தட்டுப்பாடா, சபாஷ் ஆதாரங்கள் காண்பிக்க வேண்டும்

சிலாங்கூரிலும் கோலாலம்பூரிலும் மிகப் பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாட்டு நேரலாம் என்று கூறும் சபாஷ் அவ்வாறு கூறுவதற்கு அடிப்படையாகவுள்ள தகவல்களை வெளியிட வேண்டும் என்கிறார் கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு. அந்த வகையில் 2012 ஜனவரியிலிருந்து 2012 ஜூலை 15வரை அணைக்கட்டுகளிலிருந்தும் ஆறுகளிலிருந்தும் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அனுப்பப்பட்ட சுத்திகரிக்கப்படாத…

உலகத் தரங்களைப் பின்பற்றுங்கள் என தேர்தல் ஆணையத்துக்கு அறிவுரை

தேர்தல் நடைமுறைகள் குறிப்பாக அங்கீகாரம் பெற்ற பார்வையாளர்கள் தேர்வும் மற்றும் அவர்கள் மீது விதிக்கப்படும் விதிமுறைகளும் அனைத்துலகத் தரங்களுக்கு இணையாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவு செய்துள்ள நான்கு அமைப்புக்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. "கட்சி சார்பற்ற…

‘பக்காத்தான் ஆட்சிக்கு வந்தாலும் எந்த அநீதியையும் எதிர்த்துப் போராடுங்கள்’

எதிர்வரும் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் புதிய அரசாங்கத்தை அமைத்தாலும் மக்கள் நேர்மையற்ற ஆளுமைக்கு எதிராக போராடுவதற்கு தொடர்ந்து துணிச்சலைப் பெற்றிருக்க வேண்டும் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கேட்டுக் கொண்டுள்ளார். "மக்களுக்கு அதிகாரம் கிடைக்கும் போது அதனை அகற்றுவது மிகவும் கடினம். அதனால்தான் யார் ஆட்சிக்கு…

“நீர் வள அமைச்சருக்கு ‘முதுகெலும்பு இல்லை’ எனக் குறை கூறப்பட்டுள்ளது

சிலாங்கூரில் தண்ணீர் தொழிலை மறுசீரமைப்புச் செய்வதற்கு மாநில அரசாங்கம் தெரிவித்த யோசனைகளை அங்கீகரிப்பதற்கு எரிசக்தி, பசுமைத் தொழில் நுட்ப அமைச்சர் பீட்டர் சின் -னுக்கு 'அரசியல் முதுகெலும்பு இல்லல' என குறை கூறப்பட்டுள்ளது. "2008ம் ஆண்டு தொடக்கம் சிலாங்கூர் மாநில அரசாங்கம் சிலாங்கூரில் முழுமையாக தண்ணீர் தொழிலை மறுசீரமைப்பு…

டாக்டர் மகாதீர் அவர்களே, நீங்கள் ஆதாரம் கேட்டீர்கள்- இதோ ஆதாரம்

"இந்த சாதாரணக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல முடியுமா- நான் உட்பட மில்லியன் கணக்கான மலேசியர்கள் உங்களைக் கைவிட்டு விட்டார்கள் அது ஏன்?" மகாதீர்: நான் ஏன் சர்வாதிகாரி என்பதைச் சொல்லுங்கள் ராக்யாட் மலேசியா: நண்பர்களே அந்த மனிதரைக் கொடூரமாகக் காட்டுவதற்கு முடிந்ததைச் செய்யுங்கள். சர்வாதிகாரிகள் தங்கள் ஆட்சியை…

வேதமூர்த்திக்கு கடப்பிதழ் வழங்கக் கோரி மெழுகுவர்த்தி மறியல்

-நா.கணேசன், தேசிய ஆலோசகர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜூலை 20, 2012. ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்திக்கு அனைத்துலக கடப்பிதழை  வழங்க வேண்டும் என்று  ஹிண்ட்ராப் அமைப்பும் ஏனைய அரசு சாரா இயக்கங்களும், தனி மனிதர்களும் விடுத்த கோரிக்கைகளுக்கு மலேசிய அரசு பொறுப்பற்ற வகையில் செவி சாய்க்காமல் இருக்கிறது. இந்த…

போலீஸ்: ஜெம்மா இஸ்லாமியாவும் கம்யூனிஸ்ட்களும் எதிர்க்கட்சிகளுக்குள் ஊடுருவுகின்றனர்

ஜேஐ எனப்படும் ஜெம்மா இஸ்லாமியா பயங்கரவாதிகளும் முன்னாள் கம்யூனிஸ்ட்களும் எதிர்க்கட்சிகளுக்குள் ஊடுருவியிருப்பது போலீஸ் சிறப்புப் பிரிவு விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. வரும் தேர்தலில் தாங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதற்கு அவர்கள் பெரு முயற்சி செய்து வருகின்றனர். அந்தத் தகவலை E2 (M) தேசிய சமூக தீவிரவாத மருட்டல் பிரிவுத் தலைவர்…

ஹிஷாம்:குற்றம் தொடர்பில் மக்களின் உணர்வுக்குத்தான் முன்னுரிமை

குற்றம் மீதான பொதுமக்களின் உணர்வைக் கவனிப்பதாக உறுதி கூறியுள்ள உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், அதுதான் “அதி முக்கியமானது” என்றார்.   “என்னப் பொறுத்தவரை (குற்றக்)குறியீடு அவ்வளவு முக்கியமல்ல.மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே மிகவும் முக்கியமானது.   “நிறைய செய்திருக்கிறோம்.ஆனால் அது மக்களின் அச்ச உணர்வைக் குறைக்கவில்லை என்கிறபோது…

சாட்சிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பது கண்டு ஹனிப் ஏமாற்றம்

ஏப்ரல்28 பெர்சே 3.0 பேரணி குறித்து விசாரணை நடத்தும் சிறப்புக் குழுவிடம் சாட்சியம் அளிக்க வருவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பது அக்குழுவின் தலைவர் ஹனிப் ஒமாருக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது. “வன்செயல்கள் நிகழ்ந்ததாக பலரும் கூறுகிறார்கள்.ஆனால், சாட்சியம் அளிக்க முன்வருவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஏமாற்றம் தருகிறது”, என்று…

போலீஸ் முரட்டுத்தனம் மீது ஹனீப் சாதுவாக இருப்பதாக பெர்சே சாடியுள்ளது

தேர்தல் சீர்திருத்தங்கள் கோரி ஏப்ரல் 28ம் தேதி நடத்தப்பட்ட பேரணியின் போது போலீஸ்காரர்கள் தொழில் ரீதியாக நடந்து கொள்ளவில்லை என ஹனீப் குழு தெரிவித்துள்ள கருத்தை பெர்சே சாடியுள்ளது. அந்த பேரணியின் போது போலீசார் காட்டிய முரட்டுத்தனத்தைக் கருத்தில் கொண்டால் அந்தக் கருத்து "நலிவான பதில்" என அது…

ஒதுங்கியிருங்கள் என இமாம்களுக்கு பிரதமர் நஜிப் ஆலோசனை

பெர்சே கூட்டங்கள் சேதங்களை ஏற்படுத்துவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார். அதனால் அத்தகைய நடவடிக்கைகளில் சம்பந்தப்பட வேண்டாம் என இமாம்களையும் பள்ளிவாசல் குழு உறுப்பினர்களையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இன்று செர்டாங்கில் நாடு முழுவதையும் சேர்ந்த இமாம்களும் பள்ளிவாசல் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ள கூட்டத்தில்…

கோத்தா ராஜாவில் போட்டியிட்டால் உதயகுமார் வைப்புத்தொகை இழப்பார்

இண்ட்ராப், கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்யுமானால்  அங்கு மும்முனைப் போட்டி உருவாகி, பக்காத்தான் ரக்யாட்டுக்குச் சாதகமற்ற நிலை உருவாகும். ஆனால், இண்ட்ராப் அதன் வைப்புத்தொகையையே இழக்கும் என்கிறார் அத்தொகுதியின் நடப்பு எம்பி டாக்டர் சித்தி மரியா மஹ்மூட். இந்தியர்-அல்லாதவர்கள் இண்ட்ராபுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று…