விஸ்மா புத்ரா (Wisma Putra), நாட்டில் வசிக்கும் அல்லது அந்த நாட்டின் வழியாகப் பயணம் செய்யும் குடிமக்கள், e-Konsular இணையதளம் மூலம் தங்களது தொடர்பு விவரங்களைப் பதிவு செய்து, அவற்றைத் தொடர்ந்து புதுப்பித்து வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறது. நேபாளத்தின் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோசி(Bhote Koshi) ஆற்றுப்…
பால் லவ், வேதமூர்த்திபோல் பதவி விலக மாட்டார்
பிரதமர்துறை அமைச்சர் பால் லவ், ஊழலை எதிர்ப்பதில் வெற்றிபெற முடியாததால் பதவி விலகுவார் என்று கூறும் வதந்திகளை மறுக்கிறார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம்மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார் என்பதால் பதவி விலகும் எண்ணமெல்லாம் கிடையாது என்றவர் கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது. திங்கள்கிழமை, பி. வேதமூர்த்தி …
அன்வார்: மசீச அம்னோவின் அடிமைபோல் நடந்துகொள்ளக்கூடாது
மசீச, சீனர் சமூகத்துக்காக துணிச்சலாகக் குரல் கொடுக்க வேண்டும், அம்னோவொன் அடிமைபோல் நடந்துகொள்ளக்கூடாது என பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் வலியுறுத்தினார். மசீச தலைவர் லியோங் தியோங் லாய் 1987-இல், ஒப்ஸ் லாலாங் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு அன்வார்தான் காரணம் என்று கூறி இருப்பதற்குப் பதிலடியாக அன்வார் இவ்வாறு கூறினார்.…
பிப்.19-இல் குட்டி இந்தியா கலவரம்மீது பொது விசாரணை
சிங்கப்பூர் குட்டி இந்தியா பகுதியில் நிகழ்ந்த கலவரம் மீதான பொது விசாரணை பிப்ரவரி 19-இல் தொடங்கும். விசாரணைக்கான ஆயத்த வேலைகளை பொது விசாரணைக் குழு(சிஓஐ)ச் செயலகம் செய்து வருகிறது. கலவரத்தை ஆராய நியமனம் செய்யப்பட்ட மத்திய போதைப்பொருள் பிரிவு அதிகாரிகள் கிட்ட 300 பேரைச் சந்தித்து வாக்குமூலம் பதிவு …
காஜாங் இடைத் தேர்தலில் ஜைட் இப்ராகிம்?
முன்னாள் பிரதமர்துறை அமைச்சர் ஜைட் இப்ராகிம் எதிர்வரும் காஜாங் இடைத் தேர்தலில் களமிறங்கும் நோக்கம் இருப்பதாக இன்று அறிவித்தார். அங்கு போட்டியிடுவது மக்களைச் சந்திக்கவும் நாடு இப்போது எதிர்நோக்கும் பல்வேறு அரசியல், பொருளாதார விவகாரங்கள் பற்றி அவர்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்பாக அமையும் என்றவர் தம் வலைப்பதிவில் கூறி இருந்தார்.…
லியோ: ஒப்ஸ் லாலாங் நடவடிக்கைக்கு அன்வார்தான் காரணம்
1987-இல், ஒப்ஸ் லாலாங் நடவடிக்கையில் பலர் கைது செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் என மசீச தலைவர் லியோ தியோங் லாய் காஜாங் சீனர் சமூகத்துக்கு நினைவுபடுத்தினார். அன்வார் மெண்டரின் தெரியாத ஆசிரியர்களைச் சீனப் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தார் என்றாரவர். 1980-களில், கல்வி …
அன்வாரின் வாழ்க்கை வரலாற்று நூல் பெரிய புத்தகக் கடைகள் பலவற்றில்…
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூலான "The Evolution of a Muslim Democract: The Life of Malaysia's Anwar Ibrahim" கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனல், இந்நூல் சைட் மொக்தார் அல்-புஹாரிக்குச் சொந்தமான எம்பிஎச் புத்தகக் கடைகளில் விற்கப்படுவதில்லை. அந்த …
அன்வார் காஜாங்கில் கூட்டம் நடத்துவதை நிறுத்தப்போவதில்லை
காஜாங் இடைத் தேர்தல் வேட்பாளரான அன்வார் இப்ராகிம், தாம் தேர்தல் சட்டவிதிகளை மீறவில்லை என்பதால் காஜாங்கில் தம் செராமாக்களை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்கிறார். செராமாக்களில் நடப்பு விவகாரங்கள் பற்றித்தான் பேசுவதாகவும் அவை ‘தேர்தல் பரப்புரைகள்’ அல்ல என்றும் அவர் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது. “போலீஸ் விசாரணை …
பாஸ் இளைஞர்கள்: தாயிப்மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதலில் தீர்வுகாண வேண்டும்
அப்துல் தாயிப் மஹ்முட் சரவாக் ஆளுநராக நியமிக்கப்படுமுன்னர் அவர்மீதுள்ள ஊழல், அதிகாரமீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபட வேண்டும் என பாஸ் இளைஞர் பகுதி பேரரசரிடம் மகஜர் கொடுத்திருக்கிறது. அந்த மகஜரை அரண்மனையின் தலைமை நிர்வாக உதவியாளர் சைனல் டின் முகம்மட் நோர் பெற்றுக்கொண்டதாக பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்சான் கயாட் …
சரவாக்கின் புதிய சிஎம் சுயமாக செயல்படுவாரா?
சரவாக்கில், அப்துல் தாயிப் மஹ்முட்டிடமிருந்து மார்ச் மாதம் முதலமைச்சர் பதவியை ஏற்கும் அடினான் சாதேம் முதலமைச்சரான பின்னர் சுயமாக செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனென்றால் அவர் பதவியேற்ற சில நாள்களிலேயே தாயிப் சரவாக் ஆளுநராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தாயிப்பின் முன்னாள் மனைவி அடினானின் சகோதரி. அந்த …
அரசியலா? சமூகமா?
-குலசேகரன், து. காமாட்சி, அ. சிவநேசன், டிஎபி, பெப்ரவரி 14, 2014. சமீபத்தில் நான், சபாய் சட்ட மன்ற உறுப்பினர் து.காமாட்சி, சுங்கை சட்ட மன்ற உறுப்பினர் அ.சிவநேசன் ஆகியோர் “நாம்” என்ற இயக்க தொடக்க விழாவில் கலந்து கொண்டதை ஆட்சேபித்து பலரிடமிருந்து கண்டனக் குரல்கள் வரத் தொடங்கியுள்ளன.…
எங்கே இருக்கிறது ஊடகச் சுதந்திரம்? சுரேந்திரன் சாடல்
ஊடகங்கள் “முன் எப்போதையும்விட சுதந்திரமாக உள்ளன” என்பது இணையத்தளங்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்றபடி வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் ஆகியவற்றை அரசாங்கம் இறுக்கமாக தனது பிடிக்குள் வைத்திருக்கும்போது அவ்வாறு அறிக்கை விடுப்பது “அபத்தமாகும்” என பிகேஆர் எம்பி என்.சுரேந்திரன் கூறினார். செய்திதாள்களின் உரிமங்கள் எந்த நேரத்திலும் மீட்டுக்கொள்ளப்படும் அபாயம் இருக்கவே …
மகாதிர்: அன்வார் பயந்து போயிருக்கிறார், அதனால்தான் வழக்கை இழுத்தடிக்கிறார்
அன்வார் இப்ராகிமுக்கு “தவறு செய்துவிட்டோம் என்பது நல்லாவே தெரியும்” அதனால்தான் குதப்புணர்ச்சி II மேல்முறையீடு மீதான விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்தப் பார்க்கிறார் என டாக்டர் மகாதிர் முகம்மட் குற்றம் சாட்டியுள்ளார். முகம்மட் ஷாபி அப்துல்லா அரசுதரப்பு வழக்குரைஞர்களுக்குத் தலைமையேற்பதைத் தடுக்க மனு செய்துகொள்ளப்பட்டது பற்றியும் முன்னாள் போலீஸ் அதிகாரி …
வெப்பநிலை தொடர்ந்தால் கிள்ளான் பள்ளத்தாக்கில் குடிநீர் நெருக்கடி ஏற்படலாம்
இப்பொதுள்ள வெப்பநிலை மேலும் மூன்று வாரங்களுக்குத் தொடருமானால் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் புத்ரா ஜெயாவில் வசிக்கும் இரண்டு மில்லியன் பேர் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவர். சுங்கை சிலாங்கூரிலும் கிளாங் கேட்சிலும் நீரின் அளவு 60 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ளது என்றும் வெப்பநிலை தொடர்ந்தால் அது மேலும் குறையலாம் என்றும் எரிபொருள்,…
ஊடகங்கள் இதற்குமுன் இவ்வளவு சுதந்திரமாக இருந்ததில்லை
மலேசியாவில் ஊடகங்கள், நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகத்தில்தான் “முன் எப்போதையும்விட சுதந்திரமாக செயல்படுகின்றன” எனப் பிரதமர்துறை அலுவலகம் கூறுகிறது. நேற்று வெளியிடப்பட்ட எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பின் பத்திரிகைச் சுதந்திரம் மீதான தரப்பட்டியலில் மலேசியா மேலும் இரண்டிடங்கள் குறைந்து மிகவும் தாழ்ந்த நிலைக்குச் சென்றிருக்கும் நிலையில் அது இவ்வாறு கூறியது. …
‘செய்திதாள்களுக்குத் தடை ஆனால் இனவாதப் பேச்சுக்கு அனுமதி’
அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராகக் கடுமையாக நடந்துகொள்கிறதே தவிர, “இனவாதப் பேச்சுகளை”க் கண்டுகொள்வதில்லை, “வன்முறை பற்றிய மிரட்டல்களை”த் தடுப்பதில்லை என பிகேஆர் ஸ்ரீசித்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் குறைகூறியுள்ளார். இம்முரண்பாடுகள், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் “உருமாற்ற:”த் திட்டம் என்பது “வெறும் வெற்று வேட்டு” என்பதைக் …
மிரட்டலைக் கண்டு அஞ்சவில்லை தெரேசா கொக்
சிபூத்தே எம்பி தெரேசா கொக், தம் கன்னத்தில் அறைந்தால் வெகுமதி என்று அறிவிக்கப்பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறார்? “அந்த மிரட்டல் குறித்து போலீஸ் படைத் தலைவருக்கும் உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதுவது பற்றி என் சகாக்களுடன் விவாதித்தேன். “ஆனால், இரண்டு நாள்களுக்குப் பிறகு (அஹமட்) ஜாஹிட் (ஹமிடி) என்…
சாபா தலைவர்கள் தாயிப்பைப் பின்பற்ற வேண்டும்
அம்னோவை மாநிலத்துக்குள் அனுமதிக்கக்கூடாது என சரவாக் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ள பதவி விலகிச் செல்லும் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்முட்டைப்போல் சாபா தலைவர்களும் இருக்க வேண்டும் என்கிறார் சாபா மாநில சீரமைப்புக் கட்சித் தலைவர் ஜெப்ரி கிட்டிங்கான். இனங்களைப் பிரித்துவைக்கும் அம்னோ-அரசியலால் பல இனங்களையும் பல சமயங்களையும் கொண்ட…
பிஎஸ்எம்: காஜாங் இடைத் தேர்தலில் போட்டியும் இல்லை, ஆதரவும் இல்லை
மலேசிய சோசலிச கட்சி (பிஎஸ்எம்) காஜாங் இடைத் தேர்தலில் போட்டி இடாது. அதே வேளை, அக்கட்சி பக்கத்தான் ராக்யாட்டிற்கு ஆதரவு அளிக்காது ஏனென்றால் இடைத் தேர்தலுக்கான காரணத்தை அது ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் இந்த இடைத் தேர்தல் வீணானது என்பதுடன் நியாயமற்றது என்று பிஎஸ்எம் கூறிற்று.…
பினாங்கில் ரெப்பிட் பேருந்து ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது
பினாங்கில், ரெப்பிட் பேருந்து ஓட்டுனர்கள் இன்று காலை 6மணிக்குப் பெரிய அளவில் நடத்தத் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தம் நடக்கவில்லை. வேலைநிறுத்தம் செய்வோர் பதவிநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சம் பரவியதை அடுத்து அது கைவிடப்பட்டதாக தெரிகிறது. மலேசியாகினி, கொம்தார், பெங்காலான் வெல்ட் ஆகிய இடங்களுக்குச் சென்று பார்த்தபோது பேருந்துகள் எப்போதும்போல் ஓடிக் …
அன்வாரின் நேர்காணலை ஒலியேற்ற பிஎப்எம் வானொலிக்குத் தடை
வணிக வானொலி நிலையமான பிஎப்எம், காஜாங் இடைத் தேர்தல் தொடர்பில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றை ஒலியேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நேர்காணலை அந்நிலையம் அதன் மாலை நேர ஒலிபரப்பில் ஒலியேற்றத் திட்டமிட்டிருந்தது. அதனை ஒலியேற்ற வேண்டாம் என மலேசிய தொடர்பு, பல்லூடக …
அடினான் சதேம் சரவாக்கின் புதிய முதலமைச்சர்
அப்துல் தாயிப் மஹ்முட்டுக்குப் பிறகு அடினான் சதேம் சரவாக்கின் புதிய முதலமைச்சராக பொறுபேற்பார். இன்று, சரவாக் ஆளுநர் ஆபாங் முகம்மட் சலாஹுடினிடம் தம் பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்த தாயிப் இதனை அறிவித்தார். தாயிப்பின் பதவி விலகல் பிப்ரவரி 28-இல் நடப்புக்கு வரும். அன்றுதான் சரவாக் ஆளுநரின் பதவிக்காலமும் …
தெரேசாவை மிரட்டியவர்களை போலீஸ் விசாரணை செய்யும்
டிஏபி-இன் சிபூத்தே எம்பி தெரேசா கொக்கை மிரட்டியதாகக் கூறப்படும் இருவரை போலீஸ் அடையாளம் கண்டிருக்கிறது. அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என த சன் நாளேடு அறிவித்துள்ளது. அதன் டிவிட்டர் பக்கத்தில் இதைத் தெரிவித்த அந்நாளேடு, போலீசார் நாளை தெரேசா கொக்கையும் விசாரணைக்கு அழைப்பார்கள் எனக் கூறியது. நேற்று, போலீசார் …
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவு தேசியக் கருத்தரங்கு
மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு திட்டவரைவு குழு தயாரித்துள்ள தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்திற்காகத் திட்டமிடப்பட்ட முன்வரைவு தமிழ்ப்பள்ளிகள் மீது கடப்பாடு கொண்டுள்ளோரின் பங்களிப்புகளைப் பெறுவதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்ட ஒரு தேசிய பிரதிநிதிகள் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும். பத்து ஆண்டு காலத்திற்கான இந்த விரிவான செயல் திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக இக்கூட்டத்தில்…


