விஸ்மா புத்ரா (Wisma Putra), நாட்டில் வசிக்கும் அல்லது அந்த நாட்டின் வழியாகப் பயணம் செய்யும் குடிமக்கள், e-Konsular இணையதளம் மூலம் தங்களது தொடர்பு விவரங்களைப் பதிவு செய்து, அவற்றைத் தொடர்ந்து புதுப்பித்து வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறது. நேபாளத்தின் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோசி(Bhote Koshi) ஆற்றுப்…
தெரேசா கொக் அலுவலகத்தில் சிவப்புச் சாயம், செத்துப்போன கோழி
டிஏபி-இன் சிபூத்தே எம்பி தெரேசா கொக்கின் அலுவலகம் செல்லும் படிக்கட்டுகளில் சிவப்புச் சாயம் வீசியடிக்கப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு அலுவலகம் வந்த பணியாளர் ஒருவர் இதைக் கண்டு தகவல் தெரிவித்தார். இறந்த கோழி ஒன்றும் கூடவே கொக்கின் உருவப்படம் அங்குக் கண்டெடுக்கப்பட்டன. கொக்கைத் தொடர்பு கொண்டபோது, “இது திட்டவட்டமாக …
‘ஒழுக்கம்கெட்ட’ அன்வார் எம்பி ஆவதை எண்ணி மகாதிர் கவலை
தம் பரம வைரி சிலாங்கூர் மந்திரி புசார்(எம்பி) ஆவார் என்பதை நினைத்து கவலை கொண்டிருக்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். அன்வார் இப்ராகிம் “ஒழுக்கங்கெட்ட நடத்தையுடைவர்” என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார். “என்னைப் பொறுத்தவரை, அன்வார் எம்பி ஆவதற்கோ பிரதமர் …
தியான் சுவா மற்றும் இருவரின் மேல்முறையீடு தள்ளுபடி
பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவும் மேலும் இரு சமூக ஆர்வலர்களும் அவர்கள்மீதான அரச நிந்தனை வழக்கை எதிர்த்து செய்துகொண்ட மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. தியான் சுவா, ஹிஷாமுடின் ரயிஸ், ஆதம் அட்லி ஆகியோர் மனுச் செய்துள்ளபடி அவர்கள்மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய “தகுந்த காரணமில்லை” என்றும் அதை …
இந்தியர்களுக்கு துரோகம் இழைத்த நஜிப்பை பதவி துறக்கச் சொல்கிறார் வேதமூர்த்தி
இந்திய சமூகத்திற்கு அப்பட்டமான நம்பிக்கை துரோகம் இழைத்ததற்காக பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நஜிப்பிடம் மலேசிய இண்ட்ராப் மன்றத்தின் (பிஎச்எசம்) பி.வேதமூர்த்தி கூறினார். சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு தமது செனட்டர் மற்றும் துணை அமைச்சர் பதவியை விட்டு விலகிய வேதமூர்த்தி இன்று சுமார் 20 நிமிடங்களுக்கு நடந்த…
உங்கள் தோல்விக்குப் பிரதமர்மீது பழி போடுவதா: வேதாவைச் சாடுகிறார் கைரி
மாற்றங்களைக் கொண்டுவர முடியாத முன்னாள் செனட்டரும் துணை அமைச்சருமான பி.வேதமூர்த்தி அதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கே காரணம் என்று குறை சொல்வது நியாயமல்ல என்கிறார் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின். “அவர் குழுவாக இணைந்து செயலாற்ற முடியாதவர், தம் போராட்டத்தையும் செவ்வனே முன்னெடுத்துச் செல்லும் வழிவகை …
மார்ச் 8-க்குள் பக்காத்தான் பதிவை ஏற்றுக்கொள்வீர்
பக்காத்தான் ரக்யாட் விண்ணப்பத்தை ஏற்று மார்ச் 8-ஆம் நாள் அதன் மாநாடு நடப்பதற்குமுன் அதனைப் பதிவுசெய்ய வேண்டும் என டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக், உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியையும் சங்கப் பதிவாளரையும் (ஆர்ஓஎஸ்) கேட்டுக்கொண்டிருக்கிறார். பக்காத்தான் இதுவரை ஐந்து மாநாடுகளை நடத்தியுள்ளது. முன்று தடவை …
நீதிபதி உத்தரவு இருந்தும்கூட குடும்பத்தாரைச் சந்திக்க உதயா அனுமதிக்கப்படவில்லை
இன்ட்ராப் தலைவர் பி. உதயகுமார், உயர் நிதிமன்றத்துக்கு வெளியில் குடும்பத்தாரையும் ஆதரவாளர்களையும் சந்திக்க நீதிபதி அஸ்மான் உசேனிடம் அனுமதி பெற்றிருந்தும்கூட அவர்களை சந்திக்க முடியவில்லை. 30-மாத சிறைத்தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து குடும்பத்தாரையும் ஆதரவாளர்களையும் அரை மணி நேரம் சந்தித்து அவர்களுடன் பகலுணவு அருந்த அனுமதி …
வேதா: இந்தியர்களுக்கு இரண்டகம் செய்த பிரதமர் பதவி விலக வேண்டும்
ஒரு வாரத்துக்குமுன் செனட்டர், துணை அமைச்சர் பதவிகளைத் துறந்த பின்னர் இன்று முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு பொய்யர் என்றும் இந்தியர்களுக்கு இரண்டகம் செய்துவிட்டார் என்றும் குறிப்பிட்டார். அதற்காக, நஜிப் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றவர் …
போலீஸ் நடவடிக்கை இல்லை என்பதால் பதற்றநிலை மோசமடைகிறது
அண்மைய மாதங்களில் இன, சமய விவகாரங்கள் மீதான வாத பிரதிவாதங்கள் மிகுந்து வருகின்றன. அரசியல்வாதிகளே அதற்குக் காரணம் எனப் பார்வையாளர்கள் குறைகூறுகின்றனர். இதில் முக்கிய குற்றவாளி அம்னோ என்றும் அது மலாய்/முஸ்லிம் ஆதரவைப் பிடித்துவைத்துக்கொள்ள அவ்விவகாரங்களைத் தொடர்ந்து கிண்டிக் கிளறி விடுவதாகவும் அவர்களில் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இவ்விவகாரங்களைக் …
வெள்ளிக்கிழமை தொழுகை உரைக்கு பினாங்கு தடை விதிக்கும் என்பது பொய்
பினாங்கு பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகை உரைக்குத் தடை விதிக்கப்படும் என டிவிட்டரில் கூறப்பட்டிருப்பதற்கு எதிராக புக்கிட் பெண்டாரா டிஏபி சோசலிச இளைஞர் தலைவர், ஹரிஸ் ஞுவான் ஜஹாருடின் ஜாலான் பட்டாணியில் உள்ள வடகிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த டிவிட்டர் பக்கத்துக்குச் சொந்தக்காரர் கோலா நூருஸ் திரெங்கானு …
உதயகுமாரின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது
தேசநிந்தனை குற்றச்சாட்டின் மீது 30 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஹிண்டார்ப் தலைவர் பி. உதயகுமார் அத்த தண்டனைக்கு எதிராக செய்திருந்த முறையீட்டை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது. செசன்ஸ் நீதிமன்றம் அளித்திருந்த அத்தீர்ப்பில் தவறு ஏதும் இல்லை என்று நீதி அஸ்மான் ஹிசின் அவரது…
அன்வார் தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாம் முன்னிடம் பெற்றுள்ளது
தாம் காஜாங் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றால் சிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாத்தின் நிலையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்போவதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கூறினார். "எனக்கு, சிலாங்கூரில் இதுதான் முன்னுரிமையாகும். நான் ஒரு முஸ்லிம் என்று எப்போதும் கூறி வந்துள்ளேன். நேற்று இதனை நான்…
ஹுஸாம் மூசாவை அவமதித்த குற்றத்துக்காக இழப்பீடு கொடுக்குமாறு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸுக்கு…
நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி), பாஸ் உதவித் தலைவர் ஹுஸாம் மூசாவுக்கு ரிம350,000 இழப்பீடு கொடுக்க வேண்டும் என கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. சில மாதங்களுக்குமுன், மூசாவு ஹுஸாமுக்கு அவதூறு ஏற்படுத்தும் செய்திகளை வெளியிட்டதற்காக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் அந்தத் தொகையை இழப்பீடாகக் கொடுக்க வேண்டுமென …
கண்டனக் கூட்டத்தில் கோழிகள் பலி கொடுக்கப்பட்டதற்கு என்ஜிஓ-களின் விளக்கம்
மலாய் சமூகத்துக்கு சினமூட்டும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததைத் தடுத்துவதற்காகவே டிஏபி உதவித் தலைவர் தெரேசா கொக்-க்குக் கண்டனம் தெரிவிக்கும் கூட்டத்தில் கோழிகள் பலி கொடுக்கப்பட்டனவாம். அது சினமூட்டும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என மலேசிய இஸ்லாமிய பயனீட்டாளர் சங்க (பிபிஐஎம்) தலைவர் நட்ஸிம் ஜொஹான் கூறினார். “அரசாங்கம் …
தீமை பயக்கும் கட்டுரை வெளியிட்ட உத்துசானுக்கு எதிராக நடவடிக்கை தேவை
அதன் வார இறுதிப் பதிப்பின் முதல் பக்கத்தில் “பொய்யான ஒரு கட்டுரையை” வெளியிட்டிருந்ததற்காக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதது என் என்று டிஏபி நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங் வினவியுள்ளார். ‘Melayu, Islam dihina di Tanah Melayu’ (தானா மலாயுவில் மலாய்க்காரர்களையும் …
அன்வாருக்கு வாக்களிப்பது அமெரிக்காவுக்கு வாக்களிப்பதற்கு ஒப்பாகும்
டாக்டர் மகாதிர் முகம்மட், “அமெரிக்க-ஆதரவு அரசு” வேண்டும் என்போர் அன்வார் இப்ராகிமுக்கு வாக்களிக்கலாம் என்று குறிப்பிட்டார்.. “அமெரிக்க-ஆதரவு அரசு வேண்டுமா, (காஜாங் இடைத் தேர்தலில்) அன்வாருக்கு வாக்களியுங்கள்”, என அரசதந்திர, வெளியுறவு விவகாரங்களுக்கான கழகத்தில் ஒரு நிகழ்வில் பேசியபோது முன்னாள் பிரதமர் கூறினார். ஆட்சியில் மாற்றம்காண விரும்பும் நாடுகளில் …
“இடுகாட்டிலும் நிம்மதி இல்லையே”
இந்த நாட்டில் இலட்சக்கணக்கான ஏக்கர் காட்டை அழித்து நாடாக்கிய இந்தியர்களுக்கு இன்று அவர்களுடைய இறுதி உறைவிடமான இடுகாட்டிலும் நிம்மதி இல்லையே என்று கம்போங் பாரு குண்டாங் வாழ் இந்தியர்கள் குமுறுகின்றனர். லாதார் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் குண்டாங் வழியாக ஒரு சாலையை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால்…
வேதமூர்த்தி: மன்னிக்க வேண்டுகிறேன்
பிரதமர்துறை துணை அமைச்சர் பதவியிலிருந்த விலகிய பி.வேதமூர்த்தி, “இந்திய ஏழைமக்களிடம்” அவர்களுக்கு வாக்குறுதி அளித்த சமூக-பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தம் வாக்குறுதியை நம்பி இந்தியர்கள் பிஎன்னுக்கு வாக்களித்தனர். அது, 13வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற- அது குறுகிய வெற்றிதான் என்ற …
‘நஜிப் சந்தா குலோஸ்போல் நடிப்பதை நிறுத்தாவிட்டால் தூக்கி எறியப்படுவார்’
முன்னாள் பத்திரிகையாளரும் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் நெருங்கிய நண்பருமான ஏ. காடிர் ஜாசின், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “சந்தா குலோஸ்போல் நடிப்பதை” நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். தம் வலைப்பதிவில் இவ்வாறு கோரிக்கை விடுத்த காடிர், நஜிப் நாட்டையும் பொருளாதாரத்தையும் நிர்வகிக்கும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் …
வேதமூர்த்தியின் தோல்விகளுக்கு நஜிப்பே காரணம்
உங்கள் கருத்து: வேதாவின் விலகலுக்கு பிரதமர் வருந்துகிறாராம் டபுல்யுடிஏ: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பி.வேதமூர்த்தியை கெட்டவராக சித்திரித்துக்காட்ட முனைகிறாரே தவிர அவரது பதவி விலகலுக்குப் பொறுப்பேற்க தயாராக இல்லை. மலேசிய இந்தியர்கள் இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும். பிஎன் அரசின் இனிப்பான வாக்குறுதிகளில் மீண்டும் ஏமாந்து விடக்கூடாது. அபாசிர்: …
‘அன்வாரை காஜாங்கில் புதைப்போம்’-மசீச சூளுரை
காஜாங்கில் ஓர் இடைத் தேர்தலை உருவாக்கியுள்ள பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமை அங்கேயே “புதைப்போம்” என மசீச தலைவர் லியோ தியோங் லாய் சூளுரைத்துள்ளார். “அவர் அங்கு குழி தோண்டி இருப்பதால், அவரை அங்கேயே போட்டுப் புதைப்போம்”, என சுங்கை சுவாவில் மசீச தேர்தல் நடவடிக்கை மையத்தில் …
மசீச தனக்குத் தானே குழி தோண்டிக்கொண்டது
முன்னாள் கல்வியாளர் ஒருவர், மசீச-வின் வீழ்ச்சிக்கு மசீச-வே காரணம் என்றார். 1962-இலும் 1973-இலும் அரசமைப்புத் திருத்தங்களுக்கு அது உடன்பட்டது அதன் வலிமை குறையவும் புறநகர் வாக்காளர் வலிமை மேலோங்கவும் வழி வகுத்தது என அரசியல் ஆய்வாளர் லிம் ஹொங் ஹாய் கூறினார். அப்போது மசீச தலைவராக இருந்த டான் …
பிகேஆரின் திட்டத்தைக் கெடுக்கவே ஜைட் காஜாங்கில் போட்டியிடுகிறாராம்
காஜாங் இடைத் தேர்தலில் தாம் வெற்றிபெற்றால் அப்துல் காலிட் இப்ராகிம் மந்திரி புசாராக தொடர்வது உறுதி என முன்னாள் பிரதமர்துறை அமைச்சர் ஜைட் இப்ராகிம் இன்று செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார். அன்வார் சட்டமன்ற உறுப்பினரானால் அவர் காலிட்டை மந்திரி புசார் பதவியிலிருந்து வெளியேற்ற முயல்வார் என்றாரவர். காலிட்டும் …


