விஸ்மா புத்ரா (Wisma Putra), நாட்டில் வசிக்கும் அல்லது அந்த நாட்டின் வழியாகப் பயணம் செய்யும் குடிமக்கள், e-Konsular இணையதளம் மூலம் தங்களது தொடர்பு விவரங்களைப் பதிவு செய்து, அவற்றைத் தொடர்ந்து புதுப்பித்து வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறது. நேபாளத்தின் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோசி(Bhote Koshi) ஆற்றுப்…
வேதா: ஒரு விவகாரத்துக்குத் தீர்வுகண்டு விட்டால் போதுமா?
டிங்கில், தாமான் பெர்மாத்தா அடுக்குமாடி வீடுகளுக்கு ரிம35 மில்லியன் ஒதுக்கப்பட்டது “புதிய செய்தி” என்றும் பிரதமருடன் பேசியபோது அது குறிப்பிடப்படவில்லை என்றும் முன்னாள் துணை அமைச்சர் பி.வேதமூர்த்தி கூறினார். என்றாலும் அதை அவர் வரவேற்றார். ஆனால், இண்ட்ராப் முன்வைத்த பல விவகாரங்களில் ஒன்றுதான் அது. “டிங்கில் மட்டும்தான் நம்முடைய …
பிகேஆர்: கர்பால் அரச நிந்தனை புரிந்தார் என்ற குற்றத்தீர்ப்பு ‘வக்கிரமானது’
டிஏபி தலைவர் கர்பால் சிங், அரச நிந்தனை குற்றம் புரிந்திருக்கிறார் என்ற தீர்ப்பு “வக்கிரமானது, நீதித் துறைமீதிருந்த நம்பிக்கையையே அரித்தெடுத்து விட்டது” என பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கூறினார். “அந்தத் தீர்ப்பு நாட்டை அதிர வைத்துள்ளது; மலேசியாவில் நீதியும் சட்ட ஆளுமையும் அடியோடு தோல்வியுற்றிருப்பதை அது காட்டுகிறது.…
தேவாலயத்துக்கு அன்வார் ஒரு சகோதரர்; அரசியல்வாதி அல்ல
சமயங்களுக்கிடையில் இணக்கநிலைக்கு உதவும் என்ற நோக்கத்தில்தான் காஜாங் இடைத் தேர்தல் வேட்பாளர் அன்வார் இப்ராகிம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலய நிகழ்வு ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் மற்றபடி அவருக்கு வாக்குகள் தேடிக்கொடுக்கும் நோக்கம் இல்லை என்றும் காஜாங் ஹோலி பேமிலி தேவாலயம்(எச்எப்சி) கூறியுள்ளது. தேவாலயம் அரசியலில் மூக்கை நுழைப்பதாகக் கூறப்படுவதை அது …
ரபிஸி: என்மீது வழக்கு தொடுப்பதற்குப் பதில் பிரச்னைக்குத் தீர்வு காணுங்கள்
பிகேஆர் பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி, தம்மீது வழக்குத் தொடுக்க செலவிடும் பணத்தைக் கொண்டு ஷரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர் (ஷபாஸ்), நீர்விநியோகத்துக்குத் தடையாக உள்ள பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்யலாம் என்று கூறியுள்ளார். செராஸ் பத்து 11-இலும் புக்கிட் தம்போயிலும் உள்ள நீர் சுத்திகரிப்பு ஆலைகள் …
அன்வாருக்கு எதிராக சியு மெய் பன் போட்டியிடுவார்
காஜாங் இடைத் தேர்தலில், அன்வார் இப்ராகிமுக்கு எதிராக போட்டியிடும் பிஎன் வேட்பாளராக மசீச உதவித் தலைவர் சியு மெய் பன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். துணைப் பிரதமர் முகைதின் யாசின், இன்று, அம்னோ தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் இதை அறிவித்தார். சியு, முன்னாள் துணை அமைச்சராவார். அத்துடன் பெட்டாலிங் ஜெயா உத்தாரா …
இந்தியர்களை இழிவுபடுத்துவதை நிறுத்துவீர்
அம்னோ அமைச்சர்களும் அவர்களின் ‘தலையாட்டி பொம்மைகளான’ மஇகா-வினரும் இண்ட்ராபுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்(எம்ஓயு) அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்கு “மிக அபத்தமான சாக்குபோக்குகள்” சொல்லி இந்தியர்களின் அறிவுத்திறத்தை இழிவுபடுத்துவதை நிறுத்த வேண்டும். அம்னோ அமைச்சர்களும் மஇகாவினரும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தற்காப்பதற்காக இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தியை சரமாரியாக …
எல்எப்எல்: அரசியல் பழிவாங்கும் போக்கு திரும்பி வந்திருக்கிறது
டிஏபி தலைவர் கர்பால் சிங் அரச நிந்தனைக் குற்றம் புரிந்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது, யதேச்சாதிகாரமும் அரசியல் பழிவாங்கும் போக்கும் மீண்டும் தலைதூக்கி இருப்பதை உறுதிப்படுத்துகிறது என உரிமைகளுக்காக போராடும் வழக்குரைஞர்கள் (எல்எப்எல்) அமைப்பு கூறியுள்ளது. “எல்எப்எல் கோலாலும்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறது. கர்பாலுக்கு ஐந்தாண்டுவரை …
வேதா கூறுவது பொய் என்பதற்கு அமைச்சர் காண்பிக்கும் ‘சான்றாதாரங்கள்’
அரசாங்கம் இந்திய சமூகத்துக்கு உதவவில்லை என்று இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி தப்பும் தவறுமான தகவல்களைப் பரப்பி வருவதாக வீடமைப்பு, உராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் முகநூலில் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு தடவை வேதமூர்த்தி, சிலாங்கூர், டிங்கில், தாமான் பெர்மாத்தாவில் இந்தியர்களின் வீட்டுப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் எனப் …
கர்பால் அரச நிந்தனை குற்றம் புரிந்திருக்கிறார்: நீதிமன்றம் தீர்ப்பு
ஐந்தாண்டுகளுக்குமுன், பேராக் மந்திரி புசார் பதவியிலிருந்து முகம்மட் நிஜார் ஜமாலுடின் அகற்றப்பட்ட விவகாரத்தில் சுல்தான் அஸ்லான் ஷாவுக்கு எதிராக டிஏபி தலைவர் கர்பால் சிங் தெரிவித்த கருத்து அரச நிந்தனைக்குரியதுதான் என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இக்குற்றத்துக்காக கர்பாலுக்கு ஐந்தாண்டுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது ரிம5,000-க்கு மேற்போகாத …
உயரும் வாழ்க்கைச் செலவினத்தின் தாக்கத்தை காஜாங் தேர்தலில் காணலாம்
யுனிவர்சிடி மலாயாவின் ஜனநாயகம், தேர்தல் மீதான மையம் (யுஎம்சிடெல்) நடத்திய ஆய்வு ஒன்று, காஜாங் இடைத் தேர்தல் உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினம் மீதான ஒரு கருத்துக்கணிப்பாக அமையலாம் என்பதைக் காண்பிக்கிறது. ஆய்வில் கலந்துகொண்ட 576 வாக்காளர்களில் 69 விழுக்காட்டினர், வாழ்க்கைச் செலவின உயர்வைக் கருத்தில்கொண்டு பிகேஆருக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாகக் …
அமைச்சர்: ஜிஎஸ்டி உலகிலேயே மிகக் குறைந்த வரியாகும்
பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) ஒரு சுமையாக விளங்கும் எனப் பொதுமக்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார் இரண்டாவது நிதி அமைச்சர் அஹ்மட் ஹுஸ்னி முகம்மட் ஹனட்ஸ்லா. 6 விழுக்காடு என்பது உலகின் மிகக் குறைந்த வரி விகிதங்களில் ஒன்று என்றாரவர். ரிம2,000 வருமானம் பெறும் ஒரு பயனீட்டாளர், வரியாக …
அரிசி விலையை அப்படியே வைத்திருப்பது சைட் மொக்தாருக்கு மட்டுமே நன்மையாக…
அரசாங்கம் உலகச் சந்தை நிலவரத்தைப் பின்பற்றி அரிசி விலையைக் குறைக்க வேண்டும். விலையைக் குறைக்காவிட்டால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். தனி ஒருவர் மட்டுமே பயனடைவார். இம்மாத இறுதியில் தாய்லாந்தில் அரிசி உதவித்தொகை நிறுத்தப்படுவதைத் தொடர்ந்து சந்தையில் அரிசி நிறைய வந்துசேரும் என்பதால் விலையில் வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என …
இஜிஎம்-முக்கு எதிராக மசீச உறுப்பினர்கள் உள்ளமர்வுப் போராட்டம்
மசீச-வின் அவசரப் பொதுக்கூட்டம் இன்னும் மூன்று நாள்களில், பிப்ரவரி 23-இல், நடைபெறவுள்ள வேளையில் அக்கட்சி உறுப்பினர் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்ளமர்வுப் போராட்டம் ஒன்றைத் தொடக்கியுள்ளனர். ‘மசீச அடிநிலை உற்ப்பினர் மனச்சாட்சி நடவடிக்கைக் குழு’ என்று தங்களுக்குப் பெயர் வைத்துக் கொண்டிருக்கும் அவர்கள், இன்று காலை மணி …
கொக்மீதான மிரட்டல்கள் அதிகரிப்பதற்கு ஐஜிபி-தான் காரணம்
சர்ச்சைக்குரிய சீனப் புத்தாண்டு காணொளி தொடர்பில் சிபூத்தே எம்பி தெரேசா கொக்-க்கு எதிராக மிரட்டல் விடப்படுவது நிற்க வேண்டுமானால் போலீஸ் படைத் தலைவர் நியாயமாக நடந்துகொள்ளத் தொடங்க வேண்டும் என்கிறார் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங். கொக்கின் சீனப் புத்தாண்டு 2014 காணொளி தொடர்பில் விசாரணைகளை …
வாக்காளர்கள் அன்வாருக்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளனர்: பிகேஆர்
அன்வார் இப்ராகிம் போன்ற “மாபெரும் தலைவர்” காஜாங் இடைத் தேர்தலில் போட்டியிடுவதை காஜாங் வாக்காளர்கள் “நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்”. முதலில் பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலி இதைச் சொன்னார். இப்போது ஹுலு லங்காட் எம்பி அப்துல்லா சானியும் அதை அப்படியே எடுத்துரைத்துள்ளார். அன்வாரைப்போல் வேறு எந்த…
அமைச்சர்: டிங்கி நோயாளிகளை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பீர்
டிங்கி நோயைக் கண்டுபிடிக்கும் வசதிகளைப் பெற்றிராத தனியார் மருத்துவ நிலையங்கள் நோயாளிகளை அருகில் உள்ள அரசு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனச் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். டிங்கி நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 50 விழுக்காட்டினரை நோய் தொடக்கக் கட்டத்தில் இருக்கும்போதே அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் …
குழாயில் நீர் வராததால் ஆத்திரமடைந்துள்ளனர் பலாக்கோங் மக்கள்
பத்து நாள்களாகக் குழாயில் நீர் வரும் வருமென்று எதிர்பார்த்து ஏமாந்துபோன சிலாங்கூர், பலாக்கோங் குடியிறுப்பாளர்கள், நேற்று தங்கள் ஆத்திரத்தை ஒரு கண்டனக் கூட்டம் நடத்தி வெளிப்படுத்திக் கொண்டனர். தங்கள் பகுதிக்குக் குழாய்நீர் வந்து சேரும் வரையில் ஒவ்வொரு மாலையும் கண்டனக் கூட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் சூளுரைத்தனர். நேற்றைய கண்டனக் …
பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க அனுமதி இல்லை
பினாங்கில் ஒரு தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க அம்மாநில அரசுமுடிவெடுத்து அதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கோரியிருந்தது. அப்பள்ளி அமைப்பதற்காக நிலமும் அடையாளம் காணப்பட்டது. கல்வி மத்திய அரசின் அதிகார்த்திற்கு உட்பட்டதால், பினாங்கில் ஓர் இடைநிலை தமிழ்ப்பள்ளி அமைக்க அனுமதி கோரி மார்ச் 20, 2013 இல் பினாங்கு…
வேதாவை வறுத்தெடுப்பதில் ஹிஷாமும் சேர்ந்துகொண்டார்
இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடினுக்குப் பிறகு இன்னொரு அமைச்சரும் முன்னாள் துணை அமைச்சர் வேதமூர்த்தியை சாடியுள்ளார். டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின், வேதமூர்த்தியை “சுயநலமி” என்றும் “சொந்த தோல்விகளை மூடிமறைக்கவே” பதவி துறந்தார் என்றும் கூறினார். “அரசாங்கத்தின்மீதும் (பிரதமர்) நஜிப் அப்துல் ரசாக்மீதும் பழிபோடுவது அவரது …
பெர்காசா பினாங்கு அரசுடன் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளது
வியப்பளிக்கும் ஒரு செய்தி. மலாய்க்காரர் மற்றும் இஸ்லாம் தொடர்பான விவகாரங்களில் பினாங்கு அரசுடன் சேர்ந்து பணியாற்றத் தயார் என பெர்காசா அறிவித்துள்ளது. இன்று, பெர்காசா உறுப்பினர்கள் அறுவர், மாநிலத் தலைவர் முகம்மட் ரிட்சுவாட் முகம்மட் அஸுடின் தலைமையில் கொம்டார் சென்று இஸ்லாமிய விவகாரங்களுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் …
பணம் இல்லாமல் வேலை செய்த அனுபவம் உண்டா? கெஜே-க்கு வேதா…
முன்னாள் செனட்டரும் துணை அமைச்சருமான பி.வேதமூர்த்தி, மலேசிய இண்ட்ராப் சங்கத்தின் ஆதங்கம் புரியாமல் பிரதமருக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கிறார் கைரி ஜமாலுடின் எனச் சாடியுள்ளார். தாம் செம்மையாக பணி புரியவில்லை என்றும் பணமே குறியாக இருந்ததாகவும் கைரி கூறியதற்கு எதிர்வினையாற்றிய வேதமூர்த்தி, கைரியின் அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை …
இப்போது உண்மையச் சொல்வது யார், நஜிப்பா, வேதமூர்த்தியா?
- மு. குலசேகரன், பெப்ரவரி 19, 2014. 13 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு பாரிசான் நேசனலுடன் செய்து கொண்ட புரிந்துணர்வில் கூறப்பட்டுள்ள இந்தியர்களுக்கான சமூக-பொருளாதார செயல்திட்டங்களை செயல்படுத்த இயலாமல் போனதற்காக மலேசிய ஹிண்ட்ராப் மன்றத்தின் தலைவர் வேதமூர்த்தி நேற்று இந்திய சமூகத்தினரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். கடந்த…


