பாரிசானுடன் ஹிண்ட்ராப் பேச்சுவார்த்தை நடத்துமா ?

-கி.தமிழ்ச்செல்வம், இரண்டாம் துணைத் தலைவர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜனவரி 3, 2013. வஞ்சிக்கப்பட்ட மலேசிய ஏழை இந்தியர்களின் விடியலுக்கான  செயல் திட்ட வரைவு குறித்து, பாரிசான் நேசனல் அரசியல் கூட்டணியிடம் ஹிண்ட்ராப் பேச்சு வார்த்தை நடத்துமா? இந்த கேள்வி இப்போது அரசியல் ஆய்வளார்கள்  மத்தியில்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி வருகிறது.…

ஜனவரி 12 பேரணி மிகவும் அமைதியாக இருக்கும் என பக்காத்தான்…

எதிர்வரும் மக்கள் எழுச்சிப் பேரணி ( Himpunan Kebangkitan Rakyat ) இது வரை நடந்திராத அளவுக்கு மிகவும் அமைதியான பேரணியாக இருக்கும் என பக்காத்தான் ராக்யாட் வாக்குறுதி அளித்துள்ளது. "நாங்கள் அதனை மிகவும் அமைதியான பேரணியாக திகழச் செய்வோம். அது மிகவும் அமைதியாக நிகழும்  போது கோலாலம்பூரில்…

காலித் : புக்கிட் ராஜா நிலத்தில் எந்த மேம்பாடும் அனுமதிக்கப்பட…

சிலாங்கூர் மாநில அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா ராஜா அப்துல்லாவுக்குச் சொந்தமான நிறுவனத்திடமிருந்து பவுஸ்டெட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் வாங்கிய புக்கிட் ராஜா தொழில் பேட்டை நிலத்தில் எந்த மேம்பாட்டையும் எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சிலாங்கூர் அரசாங்கம் அனுமதிக்காது. "அந்த நிலத்தின் மீது எந்த மேம்பாடு அல்லது வர்த்தகம்…

தமக்கு எதிராக வழக்குப் போடுமாறு போராளி ஹாரிஸ் இப்ராஹிம், அப்ராஹாமுக்குச்…

வழக்குரைஞரான சிசில் அப்ரஹாம், அவரது பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு தமக்கு எதிராக வழக்குப் போடுமாறு  மனித உரிமைப் போராளியான ஹாரிஸ் இப்ராஹிம் சவால் விடுத்துள்ளார். தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை தயாரித்ததின் மூலம் தொழில் ரீதியில் தவறாக நடந்து கொண்டதற்காக சிசிலை விசாரிக்குமாறு ஹாரிஸ்…

எதிர்மறையான தாக்கம் இருந்தாலும் உண்மையே முக்கியம் என்கிறார் லிம்

டிஏபி மீது தவறான எண்ணங்கள் ஏற்படக் கூடும் என அறிந்திருந்தும் அண்மைய கட்சித் தேர்தல்களில் கண்டு பிடிக்கப்பட்ட தவறு தொடர்பான உண்மையை வெளியிடுவது என அதன் தலைமைத்துவம் ஒருமனதாக ஒப்புக் கொண்டதாக அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார். "கட்சி மீது எதிர்மறையான தாக்கத்தை…

பிகேஆர்: ‘நஜிப் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்’

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தற்காப்பு அமைச்சராக இருந்த போது 100 மில்லியன் ரிங்கிட் தேசிய தற்காப்பு ஆய்வு மய்யத் திட்டத்தை தகுதி இல்லாத நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியதின் மூலம் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளது. சிலாங்கூர் அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா…

டிஏபி தேர்தலில் ‘தவறு’ நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளதை கெரக்கான் சாடுகிறது

டிஏபி மத்திய நிர்வாகக் குழுத் தேர்தலில் தவறு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளதை கெரக்கான் சாடியுள்ளது. பொது மக்கள் குறை கூறியதைத் தொடர்ந்து மலாய் உறுப்பினர் ஒருவர் மத்திய நிர்வாகக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ஒரு தந்திரம் அது என அது கூறிக் கொண்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற டிஏபி கட்சித்…

நிலச் சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதை நோங் சிக்…

நிலச் சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து புஞ்சாக் செத்தியாவாங்சாவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள வீடுகள் பாதுகாப்பற்றவை என அறிவிக்கப்பட்ட பின்னர் அவற்றின் குடியிருப்பாளர்களுக்கு இழப்பீடு கொடுப்பதில் அரசாங்கம் சம்பந்தப்படவில்லை என கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் கூறியிருக்கிறார். இடிக்கப்படும்…

பவுஸ்டெட்: தீபக் நிறுவனத்துடன் பேச்சுக்கள் அண்மையில் தொடங்கவில்லை

கம்பள வணிகரான தீபக் ஜெய்கிஷன் பங்கு வைத்துள்ள Astacanggih Sdn Bhdன் பங்குதாரர்கள் கடந்த ஆண்டு ஜுன் மாதத்திலேயே தங்கள் பங்குகளை பவுஸ்டெட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டிடம் விற்பதற்கு முன் வந்தனர். புர்சா மலேசியா பங்குச் சந்தைக்கு நேற்று சமர்பித்த ஒர் அறிக்கையில் பவுஸ்டெட் ஹோல்டிங்ஸ் அதனைத் தெரிவித்துள்ளது. Astacanggih-யில்…

தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் : அரிமாவளவன் பேச்சு [காணொளி இணைப்பு]

நமக்கென்று ஓர் அமைப்பும் நமக்கென்று ஒரு நாடும் உருவாகினால்தான் இவ்வுலகில் தமிழர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழமுடியும் என்கிறார் தமிழகத்தில் இயங்கும் தமிழர் களம் என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் அரிமாவளவன். செம்பருத்திக்கு இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்தார். தமிழகத்திலும் சரி உலகமெங்கிலும் சரி…

‘தீபக், எது சரியோ அதைச் செய்யுங்கள், அரசியல்வாதிகளை புறக்கணியுங்கள்’

"நேர்மை குறித்து சந்தேகம் எழாத இன்னொரு நபராக இருந்தால் அபாயத்தை எதிர்கொள்வதற்கு காரணம் உள்ளது. ஆனால் அது நீங்கள் தீபக்; அது தான் பிரச்னையே." 'வைர ஆவணங்களை' ராபிஸியிடம் கொடுத்ததாகக் கூறப்படுவதை தீபக் மறுக்கிறார் மஹாஷித்லா: அந்த 'வைர ஆவணங்களை' பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலிடம் தாம்கொடுத்ததாகக்…

சிலாங்கூர் ஏழை மாணவர்களுக்கு இலவச தொழிற்கல்வி பெற வாய்ப்பு

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், ஜனவரி4, 2013. சிலாங்கூர் மாநில அரசின் உதவியில் 2013 ஆம் கல்வி ஆண்டில் தொழிற்கல்வி கற்க விரும்பும் ஏழை மாணவர்கள் இப்பொழுதே பதிந்து கொள்ளலாம். இப்பொழுது பதிவு நடந்து கொண்டிருப்பதால் மாணவர்கள் இவ்வாய்ப்பை நன்கு பயன் படுத்திக் கொள்ள…

மூலதன வெளியேற்றம் பற்றி விளக்க ஜிஎப்ஐ மலேசியாவுக்கு வருகிறது

நிதிக் கண்காணிப்பு அமைப்பான ஜிஎப்ஐ எனப்படும் அனைத்துலக நிதிக் கழகம், மலேசியாவிலிருந்து மூலதன வெளியேற்றம் தொடர்பான தனது ஆய்வை எடுத்துக் கூறுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. சிலாங்கூர் அரசாங்கம் ஏற்பாடு செய்யும் கருத்தரங்கு ஒன்றில் அந்த விளக்கம் அளிக்கப்படும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் தெரிவித்தார். அந்தக்…

ராபிஸி: நான் இனிமேல் தீபக்கைச் சந்திப்பேன்

வர்த்தகரான தீபக் ஜெய்கிஷன், தமக்கு அரசியல் ஆதரவு இல்லை என நேற்று வருத்தத்துடன் நிருபர்களிடம் கூறியிருப்பதைத் தொடர்ந்து தாம் இன்று அவரை சந்திக்கப் போவதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் அறிவித்துள்ளார். "பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்குப் பாதகமான ஆதாரங்கள்" பல தீபக்-கிடம் இருப்பதாகத் தாம் நம்பினாலும் …

அன்வார்: FGV பங்கு விலையை உயர்வாக வைத்திருக்க இபிஎப் நிதி…

FGV என்ற  Felda Global Ventures Holdings-ன் பங்கு விலைகள் இபிஎப் என்ற ஊழியர் சேம நிதி வாரியம் போன்ற பல அமைப்புக்களுடைய தலையீடு இல்லா விட்டால் இன்னும் குறைவாக இருக்கும் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறிக் கொண்டுள்ளார். FGV பங்கு விலைகள் செயற்கையாக…

ஹாடிக்கு ஒளிபரப்பு நேரம் கிடையாது என்கிறார் ராயிஸ்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், தமது ‘Amanat Haji Hadi' ( ஹாஜி ஹாடி செய்தியை) விளக்குவதற்குத் தேசியத் தொலைக்காட்சியில் நேரம் ஒதுக்க ஒரு வாரத்துக்கு முன்பு முன் வந்த தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் இப்போது அந்தத் திட்டத்தை முடக்கி வைத்துள்ளார். அவ்வாறு…

நோ ஒமார்: தண்ணீர் இல்லாவிட்டால் சிலாங்கூர் பின் தங்கி விடும்

மலேசியாவில் மிகவும் வளர்ச்சி அடைந்த தொழிலியல் மாநிலமான சிலாங்கூர் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கி வந்தால் எதிர்கால பொருளாதார விளைவுகள் மோசமாக இருக்கும் என  சிலாங்கூர் பிஎன் அஞ்சுகிறது. "அந்த விஷயத்தை முறையாக தீர்க்கா விட்டால் சிலாங்கூர் தொடர்ந்து பின்னோக்கிச் செல்லும்," என அதன் துணைத் தலைவரான நோ…

பணம் செலுத்தப்பட்டதை நிரூபியுங்கள் அல்லது பிஎன் விளம்பரத்தை நிறுத்துங்கள் என…

பிஎன் கம்யூட்டர் விளம்பரத்துக்கு பணம் கொடுக்கப்பட்டதை KTMB என்ற மலாயன் ரயில்வே நிறுவனம் மெய்பிக்க வேண்டும் இல்லையென்றால் அந்த இயக்கத்தை அது நிறுத்த வேண்டும் என சிலாங்கூர் டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது. "Sayangi BN விளம்பரத்துக்கு பிஎன் சிலாங்கூர் KTMB-க்கு செலுத்திய மொத்தப் பணத்தையும் விளம்பர காலம், சம்பந்தப்பட்ட…

பிஎன் ஆட்சியைத் தொடருவதற்குக் காரணங்களைத் தேடுகின்றது

"50 ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் பொது மக்கள் பிஎன் -னுக்கு இன்னொரு கட்டளை வழங்க வேண்டும் என்பதற்குத் தகுந்த காரணம் ஏதுமில்லை. மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது." நஜிப் தமது புத்தாண்டுச் செய்தியில் தெளிவான கட்டளையைக் கோருகிறார் சக மலேசியன்: அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் அரசாங்கத்தை…

பிகேஆர்: 49,000 நாடற்ற பிள்ளைகள் இன்று பள்ளிக் கூடம் போகவில்லை

தீபகற்ப மலேசியாவில் இன்று முதன் முறையாக ஆயிரக்கணக்கான பிள்ளைகள்  பள்ளிக்கூடத்துக்குச் சென்ற வேளையில் 49,000 பிள்ளைகள் நாடற்ற நிலைமை காரணமாக பள்ளிக்கூடத்துக்குப் போக முடியவில்லை என பிகேஆர் கூறியுள்ளது. புத்ராஜெயாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வழி அந்த எண்ணிக்கை பெறப்பட்டது என்றும் சபா, சரவாக்கையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்…

நிஜார்: பொது நிதிகளைப் பயன்படுத்தி WWW1 கார் எண் தகடுக்கு…

WWW1 கார் தகடுக்கான ஏலத்துக்கு விண்ணப்பித்த போது ஜோகூர் சுல்தான் பொது நிதிகளைப் பயன்படுத்தினர் என்ற தோற்றத்தைத் தரும் வகையில் தமது டிவிட்டர் செய்தியை வெளியிட்டதின் மூலம் டிவி3 தம்மை அவமானப்படுத்தியுள்ளதாக முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார்.…

தொலைக்காட்சியில் ஹாடி: அது நேரடி ஒளிபரப்பாக இருக்க வேண்டும் இல்லை…

'அமானாட் ஹாடி' பற்றி விளக்குவதற்கு தேசியத் தொலைக்காட்சியில் உரையாற்ற நேரடி ஒளிபரப்பு நேரத்தைத் தான் கோரியதை பாஸ் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அந்தக் கோரிக்கை வியூகமல்ல என அது தெரிவித்தது. "நாங்கள் நேரடி ஒளிபரப்பைக் கோரினோம். எங்களுக்கு அது கிடைக்கா விட்டால் நாங்கள் பங்கு கொள்ளாமல் போகலாம்," என…

ஆர்டிஎம் தமக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்கிறார் நிக் அசீஸ்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், தாம் முன்பு தெரிவித்த கருத்துக்குத் தேசிய தொலைக்காட்சியில்  விளக்கம் அளிக்க அரசாங்கம் பச்சை விளக்குக் காண்பித்திருப்பதை அடுத்து கட்சியின் ஆன்மிக தலைவர் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட், கட்சிப் போராட்டத்தை விளக்க தமக்கும் நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை…