வாக்களிப்பு நாளில் செய்யத்தக்கன, செய்யத்தகாதன

கோலா பெசுட் இடைத் தேர்தல் வாக்காளர்கள் வாக்களிக்கும் இடத்தில் மட்டுமே கைவிரல்களில் அழியா மை பூசிக்கொள்ள வேண்டும்.  அதற்குமுன் யாரும் அவர்களின் விரல்களில் மை தடவ முனைந்தால் அதற்கு இடமளிக்கக்கூடாது. தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் இவ்வாறு கூறியுள்ளார். அவர், இன்று வாக்களிப்பு…

“தீவிரவாதிகள்” எனக் கூறிக் கொண்டதற்காக கோமாஸ் உத்துசான் மீது வழக்குப்…

கோமாஸ் உறுப்பினர்கள் மூவரை 'தீவிரவாதிகள் என முத்திரை குத்தியதற்காக'  உத்துசான் மலேசியாவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அந்த அமைப்பு  அனுப்பவிருக்கிறது என அதன் இயக்குநர் தான் ஜோ ஹான் கூறியுள்ளார். கோமாஸ் ஏற்பாட்டில் 'No Fire Zone' என்னும் திரைப்படம் ஜுலை 8ம் தேதி  திரையிடப்பட்ட போது மூன்று…

இனங்களுக்கிடையில் ஆத்திரத்தைத் தூண்டும் செயல்களைத் தடுக்க ஆலோசனை மன்றம்

அரசாங்கம் தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றம் ஒன்றை அமைக்கும். அம்மன்றம்  எல்லா இனங்களின் கருத்துகளையும் சேகரித்து  பல்வேறு இனங்களிடையில்  ஆத்திரத்தைத் தூண்டும்  செயல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்குத் திட்டமிடும்.. இது, மிதவாதத்தை ஊக்குவித்து இன இணக்கத்தை வலுப்படுத்தி அதன்வழி தேசிய ஒருமைப்பாட்டை அடையும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று பிரதமர்துறை…

அன்வார்: கோலா பெசுட் இடைத் தேர்தல் சிறிய விஷயமல்ல

கோலா பெசுட் இடைத் தேர்தல் இந்த நாட்டு வரலாற்றில் புதுமையானது  என்பதால் உலகம் அதனைக் கவனித்துக் கொண்டிருப்பதாக பிகேஆர் மூத்த  தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். அந்த இடைத் தேர்தல் முடிவுகள் திரங்கானு அரசியல் வடிவமைப்பையே மாற்றி  விடும் என்றும் அவர் சொன்னார். ஜுன் 24 தேர்தலில் 16:16…

ஆயர்: இரட்டைத் தரம் தார்மீகத்துக்கு புறம்பானது

இஸ்லாத்தை அவமானப்படுத்தியதற்காக இரண்டு வலைப்பதிவாளர்கள் மீது  நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன் ஒப்பிடுகையில் மற்ற சமயங்கள்  சிறுமைப்படுத்தப்பட்ட போது அத்தகைய நடவடிக்கை ஏதுமில்லை என ஆயர் பால் தான்  வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய இரட்டைத் தரம், நீதிக்கு முரணானது என்பதால் தார்மீகத்துக்குப்  புறம்பானது என அவர் சொன்னார். பெர்க்காசா தலைவர்களான…

பிகேஆர் மூவர் பாஸ் தலைவர் மீது அவதூறு வழக்குப் போடுவர்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மீது அவதூறு வழக்குப் போடப்  போவதாக புக்கிட் பெசி பிகேஆர் வேட்பாளர் முகமட் சம்சுல் மாட் அமின்,  கோத்தா புத்ரா பிகேஆர் வேட்பாளர் முகமட் அப்துல் கனி இப்ராஹிம், செபராங்  தாக்கிர் பிகேஆர் வேட்பாளர் அகமட் நஸ்ரி முகமட் யூசோப் ஆகியோர்…

‘பல்கலைக்கழக மாணவர்களை சிறுவர்களைப் போல நடத்துவதை நிறுத்துங்கள்’

கட்டாயப் பாடங்களைத் திணிப்பதின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களை  சிறுபிள்ளைகளைப்  போல அரசாங்கம் தொடர்ந்து நடத்த முடியாது என New Era  கல்லூரியின் முன்னாள் முதல்வரான குவா கியா சூங் கூறுகிறார். "பொதுப் பல்கலைக்கழகங்களில் அந்தப் பாடம் பல ஆண்டுகளாகக் கட்டாயப்  பாடமாக இருப்பதாகச் சொல்வது பொருத்தமானதாக தெரியவில்லை. ஏனெனில்…

“இனவாத மருத்துவர்கள் எனக் கூறிக் கொண்டதற்காக மன்னிப்புக் கேளுங்கள்”

பினாங்கு மாநிலத்தில் உள்ள இரண்டு பொது மருத்துவமனைகளில் மூன்று  மருத்துவர்கள் மலாய் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மறுப்பதாக தாம் கூறிக்  கொண்டது மீது அம்னோ பினாங்கு துங்கால் சட்டமன்ற உறுப்பினர் ரோஸ்லான்  சைடின் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என  சுகாதாரத்துக்குப் பொறுப்பான மாநில ஆட்சி மன்ற…

‘இஓ பற்றிக் கருத்துரைக்க முன்னாள் ஐஜிபி ரஹிமுக்குத் தகுதியில்லை’

தடுப்புச் சட்டம் தேவை என்று கூறிய முன்னாள் ஐஜிபி அப்துல் ரஹிம் நூரை டிஏபி  எம்பி  டோனி புவா சாடினார். மிங்குவான் மலேசியா  நேர்காணலில்  குண்டர்தனத்தை  எதிர்க்க போலீசாருக்க  அவசரகாலச் சட்டம் தேவை என்று அப்துல் ரஹிம் (இடம்)  கூறியிருப்பது போலீசார் ஆதாரங்களைச் சேகரி்ப்பதில்  அக்கறை காட்டுவதில்லை  என்பதை  ஒப்புக்கொள்வதாக…

சரவாக் டிஏபி கிராமப்பகுதிகளை நோக்கிப் பயணிக்கிறது

சரவாக் டிஏபி அம்மாநிலத்தின் 20 சட்டமன்றத் தொகுதிகளில் தன் கிளைகளை அமைக்கும்.  கிராமப்புறங்களில் பிஎன்னுக்குள்ள செல்வாக்கை உடைத்தெறியும் நோக்கில் அவ்வாறு செய்யப்படும் என்று கூறிய அதன் தலைவர் சொங் சியெங் ஜென், அதற்காக சுமார் ரிம 600,000 ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். “அடுத்த பொதுத் தேர்தலில்  தேசிய சீரமைப்பு  அல்லது…

அன்வார் மீதான மேல்முறையீடு ஒத்திவைப்பு

முறையீட்டு நீதிமன்றம், இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் விடுவிக்கப்பட்டதை அடுத்து அரசுத் தரப்பு செய்துகொண்ட மேல்முறையீடு மீதான விசாரணையை ஒத்திவைத்தது. அன்வாரின் தலைமை வழக்குரைஞர் கர்பால் சிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதால் விசாரணையைத் தள்ளிவைக்க மூவரடங்கிய நீதிபதிகள் குழு தீர்மானித்தது. இனி, ஆகஸ்ட் முதல் நாள் மேல்முறையீடுமீது முடிவெடுக்கப்படும்.

‘அம்னோ பதவிகளுக்குப் போட்டி வேண்டாம்’

கடந்த திங்கட்கிழமை தொடக்கம் ஆகஸ்ட் 30 வரை நிகழும் அம்னோ கிளைத்  தேர்தல்களில் ஆரோக்கியமற்ற போட்டியைத் தவிர்ப்பதற்கு கலந்துரையாடல் வழி  உயர் பதவிகளை முடிவு செய்யுமாறு கட்சி உறுப்பினர்களை அம்னோ தலைமைச்  செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கேட்டுக் கொண்டுள்ளார். அம்னோ இஸ்லாத்தை நிலை நிறுத்தி, தற்காத்து,…

அம்னோ உதவித் தலைவர்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளக் களமிறங்குவர்

மூன்று நடப்பு அம்னோ உதவித் தலைவர்களும் எதிர்வரும் கட்சித் தேர்தலில்  தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்ளப் போட்டியிடுவர் என உள்துறை  அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார். "என் நிலை தெளிவானது. நான் பதவியை நிலை நிறுத்திக் கொள்ள களமிறங்குவேன்," என மூன்று உதவித் தலைவர்களில் ஒருவரான…

மதமாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாநாடு: தீர்மானங்கள்

-மலேசிய இந்து சங்கம், ஜூலை 21, 2013. சிலாங்கூர் பத்துமலையில், 2013 ஜூலை 21ஆம் திகதியன்று நடந்தேறிய, மதமாற்றத்துக்கு எதிரான விழிப்புணர்வு மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பரிசீலிக்கும்படி பிரதமரையும் கூட்டரசு அரசாங்கத்தையும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களாகிய நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.   1.   கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 153ன்…

இந்து மக்களிடையே புற்றுநோய் போல் பரவிக் கொண்டிருப்பது மத மாற்ற…

-மோகன் ஷான், தலைவர், மலேசிய இந்து சங்கம், ஜூலை 21, 2013.  மத மாற்றத்திற்கு எதிரான விழுப்புனர்வு மாநாடு, தலைமையுரை. திருச்சிற்றம்பலம். உங்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதுடன், மலேசிய இந்து சங்கத்தின், மதமாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாநாட்டிற்கு சிரமம் பாராது வருகை தந்துள்ள உங்கள்…

குவான் எங்: உதயாவின் மருத்துவத் தேவைகளை அரசாங்கம் உடனடியாகக் கவனிக்க…

காஜாங் சிறைச்சாலையில் உள்ள மனித உரிமைக் கட்சித் தலைவர் பி  உதயகுமாருடைய மருத்துவத் தேவைகளை அரசாங்கம் உடனடியாகக் கவனிக்க  வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக்  கொண்டுள்ளார். உதயகுமார் பாதுகாப்பாக இருக்கிறார் என அவரது குடும்பத்துக்கு உத்தரவாதம்  அளிக்கும் பொருட்டு அதிகாரிகள் அவருக்கு…

‘இடைத் தேர்தலுக்காக கோலா பெசுட்டில் மொத்தம் 377 மில்லியன் திட்டங்கள்…

கோலா பெசுட் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி 9 நாட்களாகி  விட்டன. பிஎன் அரசாங்கப் பெரும்புள்ளிகள் அந்த இடைத் தேர்தலை ஒட்டி  மொத்தம் பல மில்லியன் ரிங்கிட் பெறும் பல திட்டங்களை அறிவித்துள்ளனர். மொத்தம் 18,000 வாக்காளர்களை மட்டுமே கொண்ட அந்த சட்டமன்றத் தொகுதிக்கு நேற்று வரையில் மொத்தம்…

பயனீட்டாளர் அமைப்பு: ‘சிகரட்டுக்களையும் ஹராம் என அறிவியுங்கள்

ஷிஷா-வை ஹராம் (தடை செய்யப்பட்டுள்ளது) எனப் பிரகடனம் செய்யும்  ஆணையை தேசிய இஸ்லாமிய விவகார மன்றம் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து  சிகரட்டுக்களை முஸ்லிம்கள் புகைப்பதற்கும் தடை விதிக்குமாறு முஸ்லிம்  பயனீட்டாளர் சங்கம் (PPIM) அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. 4,000 இரசாயனப் பொருட்கள் கலந்துள்ளதால் சிகரட்டுக்கள் அபாயகரமானவை  (அதில் 40 புற்று…

மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை லியாவ் உறுதிப்படுத்துகிறார்

வரும் மசீச தேர்தலில் கட்சித் தலைவர் பதவிக்குத் தாம் போட்டியிடப் போவதாக  நடப்பு துணைத் தலைவர் லியாவ் தியோங் லாய் அறிவித்துள்ளார். மசீச உருமாற்றப் பணிக்குழுவுக்குத் தலைவர் என்ற முறையில் தாம் நாடு  முழுவதும் பயணம் செய்து மசீச அடித்தட்டு உறுப்பினர்களுடைய கருத்துக்களைச்  செவிமடுத்துள்ளதாக அவர் சொன்னார். "மசீச…

மகாதிர்: பிஎன்-னின் பலவீனம் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் துணிச்சலைக் கொடுத்துள்ளது

பிஎன் பலவீனமாக இருப்பதால்  இனங்களுக்கிடையிலான  இடைவெளி விரிவடைந்து அதன் விளைவாக  இஸ்லாத்தை  இழிவுபடுத்துவதாகக் கருதப்படும் நிகழ்வுகளும் நடக்கின்றன என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். பிஎன் வலிமையுடன் இருந்தபோது இப்படியெல்லாம் நடந்ததில்லை. “உரிமை கொடுத்து விட்டோம். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்(ஐஎஸ்ஏ) இல்லை . அதனால் துணிச்சல் வந்துவிட்டது.முஸ்லிம்களையும்…

முஸ்லிம் பெண்கள் அழகிப் போட்டியில் கலந்துகொள்ளத் தடை

2013 மிஸ் மலேசியா உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தேர்வுபெற்ற நான்கு முஸ்லிம் பெண்கள், அவர்கள் அப்போட்டியில் பங்கேற்பது “பாவமான செயல், ஹராமான செயல்” என்று முப்தி ஒருவர் குறைகூறியதை அடுத்து போட்டியினின்றும் நீக்கப்பட்டனர். முஸ்லிம் பெண்கள் அழகிப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு எதிராக 1996ஆம் ஆண்டு பாத்வா…

வேள்பாரி மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டது மீது அரசு சாரா இந்திய…

மஇகா-வில் வலிமை வாய்ந்த மத்திய செயற்குழுவிலிருந்து எஸ் வேள்பாரியை  கட்சித் தலைவர் ஜி பழனிவேல் நீக்கியிருப்பது குறித்து அரசு சாரா இந்திய  அமைப்புக்கள் கூட்டணி ஒன்று வருத்தம் தெரிவித்துள்ளது. துணிச்சலுடன் பேசிய சில மஇகா தலைவர்களில் வேள்பாரியும் ஒருவர் என வர்கா  அமான் தலைமைச் செயலாளர் எஸ் பாரதிதாசன்…

குதப்புணர்ச்சி வழக்கு இரண்டு விவகாரம்: அரசாங்க முறையீடு நாளை விசாரிக்கப்படும்

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் குதப்புணர்ச்சி வழக்கு இரண்டில்  எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து  அரசாங்கம் செய்து கொண்ட முறையீடு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது. புத்ராஜெயாவில் உள்ள முறையீட்டு நீதிமன்றத்தில் அரசாங்க முறையீடு  விசாரிக்கப்படும். 2008ம் ஆண்டு ஜுன் 26ம் தேதி பிற்பகல் மணி 3.10க்கும்…