கோலா பெசுட் இடைத் தேர்தல்: வாக்களிப்பு சுறுசுறுப்பாக நடைபெறுகிறது

இன்று கோலா பெசுட் இடைத் தேர்தலின் வாக்களிப்பு நாள். அத்தொகுதியில் பிஎன் வேட்பாளராக தெங்கு ஸைஹான் சே கு அப்துல் ரஹ்மானும் பாஸ் வேட்பாளராக அஸ்லான் யூசுப்பும் களம் இறக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரைத் தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுப்பதில் அத்தொகுதியின் 17,713 வாக்காளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். காலை 10. மணிவரை…

குளியலறை ‘கேண்டீன்’ ரமதான் உணர்வை காட்டவில்லை

"நீங்கள் கட்டாயம் என்றால் நோன்பு இருங்கள். ஆனால் முஸ்லிம் அல்லாத  மாணவர்கள் உணவு உட்கொள்வதற்கு கேண்டீனைப் பயன்படுத்துவதை ஏன்  தடுக்கின்றீர்கள் ?" குளியலறையில் சாப்பிடுமாறு மாணவர்களை பள்ளிக்கூடம் 'கட்டாயப்படுத்தியது' அடையாளம் இல்லாதவன்#708871335: முஸ்லிம் அல்லாத மாணவர்கள்  சாப்பிடுவதற்கு பொருத்தமான இடத்தை பள்ளிக்கூடம் வழங்கியிருக்க வேண்டும்.  கழிப்பறைக்கு அடுத்து உள்ள…

‘ஈவிரக்கமற்ற கொடூரமான’ அந்தத் தலைமை ஆசிரியரை இடைநீக்கம் செய்யுங்கள் என்கிறார்…

முஸ்லிம் அல்லாத மாணவர்களைப் பள்ளிக்கூட குளியலறையில் தங்கள் உணவை  சாப்பிடுமாறு செய்த ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளியின் தலைமை ஆசிரியர்  உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என மஇகா தலைமைப்  பொருளாளர் ஜாஸ்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த விவகாரம் மீது கல்வி அமைச்சின் விசாரணை முடிவுகளுக்கு காத்திருப்பதாக…

திரெங்கானு எம்பி: வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை அளிப்பது தப்பல்ல

திரெங்கானு மந்திரி புசார் அஹமட் சைட், வேண்டப்பட்டவர்களுக்குக் குத்தகைகள் வழங்கும் பழக்கத்தைத் தற்காத்துப் பேசியுள்ளார். அரசியலில் நிலைத்திருக்க அவ்வாறு செய்வது அவசியம் என்றாரவர். “ஒரு வேலை இருக்கிறது. அதை பாஸ் குத்தகையாளருக்குக் கொடுத்தேன் என்றால் நான் முட்டாள்.அதிகாரத்தைப் பெறுவது, அதில் நிலைத்திருப்பது.... இதுதான் அரசியல்”, என்றார். கோலா பெசுட்…

பொதுப் பல்கலைக்கழகப் பட்டத்துக்கு அங்கீகாரம் இல்லை

சிறு வயது முதல் வழக்குரைஞர் ஆக விரும்பிய மாணவனுக்கு பொதுப் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டம் பயில வாய்ப்பு கிடைத்ததும் அகமகிழ்ந்து போனான். ஆனால், மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பிறகுதான் தெரிய வந்தது யுனிவர்சிடி சுல்தான் சைனல் அபிடின்(UniSZA) வழங்கும் சட்டக்கல்வி மலேசியாவில் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது. அதிர்ந்து போனான். “பொதுப் பல்கலைக்கழகம்…

குளியலறை மார்ச் தொடக்கம் ‘சிற்றுண்டிச் சாலையாக’ பயன்படுத்தப்படுகின்றது.

சுங்கை பூலோவில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றின் குளியலறை, முறையான  சிற்றுண்டிச் சாலையில் நிலவும் 'இடத்தட்டுப்பாடு' காரணமாக இவ்வாண்டு மார்ச்  மாதம் தொடக்கம் 'சிற்றுண்டிச் சாலையாக' பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மாணவர்கள் அனைவரையும் தாங்கும் அளவுக்கு அந்த சிற்றுண்டிச்சாலை  போதுமானதாக இல்லை என ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளியின் தலைமை…

கோலா பெசுட்டில் நாளை இடைத்தேர்தல்- வானிலை நன்றாக இருக்கும்

கோலா பெசுட் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு நாளை  நடைபெறுகின்றது. அங்கு வானிலை பொதுவாக நன்றாக இருக்கும் என வானிலை  ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. காலையில் மேக மூட்டமாகவும் பிற்பகலில் வெயில் அடிக்கும் என்றும் அதன்  தலைமைச் செயலாளர் சே காயா இஸ்மாயில் சொன்னார். அந்த இடைத்…

மூன்று இடங்களில் இன்று காலை காற்றுத் தரம் ஆரோக்கியமற்றதாக இருந்தது

மூவார், புக்கிட் ரம்பாய், போர்ட் கிளாங் ஆகிய மூன்று இடங்களில் மட்டும் இன்று  காலை காற்றுத் தரம் ஆரோக்கியமற்றதாகப் பதிவு செய்யப்பட்டது. நேற்று ஐந்து இடங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்றதாக இருந்தது. மூவாரில் (113), புக்கிட் ரம்பாய் (115), போர்ட் கிளாங் (104) ஆக காற்றுத் தூய்மைக் கேட்டுக்…

சித்தியாவங்சாவை பிஎன்னே தக்க வைத்துக்கொண்டது

 சித்தியாவங்சா நாடாளுமன்ற தொகுதிக்கு எதிராக பிகேஆர் பதிவுசெய்திருந்த தேர்தல் முறையீட்டுக்கு ஆளும் கூட்டணி மறுப்புத்  தெரிவித்ததை  கோலாலும்பூர் தேர்தல்  நீதிமன்றம் அனுமதித்ததை அடுத்து  அத்தொகுதியை பிஎன்னே தக்க வைத்துக்கொண்டது. அத்தொகுதி  பிகேஆர்  வேட்பாளர்  இப்ராகிம் யாக்கூப் பதிவுசெய்த தேர்தல் முறையீடு  குறைபாடுடையது என நீதிபதி முகம்மட் யூசுப் கூறினார்.…

‘Titas நல்லிணக்கத்தையும் தேசியவாதத்தையும் வளர்க்கும்’

"மாணவர்களிடைய நாட்டுப்பற்று, நல்லிணக்கம், தேசியவாதம் ஆகிய உணர்வுகளை  வளர்ப்பதே இஸ்லாமிய ஆசிய நாகரீக ஆய்வியலைத் தனியார் உயர் கல்விக்  கூடங்களில் கட்டாயப் பாடமாக்குவதின் நோக்கமாகும்." அது நாட்டு வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என கல்வி அமைச்சு ஒர்  அறிக்கையில் கூறியுள்ளது. "நமது அடையாளங்களுக்கும் பண்புகளுக்கும் பங்காற்றியுள்ள பல்வேறு நாகரீகங்களை…

ஷரிசாட் தலைவியாக இருப்பது அம்னோ மகளிர் சிலருக்குப் பிடிக்கவில்லை

அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில், கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை எதிர்நோக்குவதுபோல் தெரிகிறது. சிலர், நேசனல் ஃபீட்லோட்கார்ப்பரேசன் (என்எப்சி)  விவகாரம் விடாமல் அவரைத் துரத்துகிறது எனக் கருதுகிறார்கள். முன்பு ஷரிசாட்டின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் இப்போது அவர் பதவி இறங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என பத்து பாஹாட் அம்னோ…

குளியலறையில் சாப்பிடுமாறு மாணவர்களை பள்ளிக்கூடம் ‘கட்டாயப்படுத்தியது’

தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றின் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் நோன்பு  மாதத்தின் போது குளியலறையில் சாப்பிடுமாறு செய்யப்பட்டதைக் காட்டுவதாக  கூறப்படும் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் படங்கள் இணையப் பயனாளிகளிடையே ஆத்திரத்தை மூட்டி விட்டுள்ளது. முகநூலில் பெற்றோர் ஒருவர் சேர்த்துள்ளதாக கருதப்படும் அந்தப் படங்கள்-  சுங்கை பூலோவுக்கு அருகில் உள்ளது…

ராபிஸி: இசி நேர்மையைக் காட்ட வேண்டிய நேரம் இது

இசி என்ற தேர்தல் ஆணையம் அழியா மை குத்தகை தொடர்பில் தூய்மையாக இருந்து  தனது நேர்மையை இப்போது நிரூபிக்க வேண்டும் என  பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறியிருக்கிறார். அந்தக் குத்தகை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டை நாடாளுமன்றத்திற்கு வெளியில்  திரும்பச் சுமத்துமாறு இசி விடுத்த சவாலை தாம் நிறைவேற்றி…

புவா: இந்தோனிசிய வங்கி பேரத்தில் ஏற்பட்ட இழப்பை மே பாங்க்…

BII என அழைக்கப்படும் இந்தோனிசியாவின் Bank Internasional Indonesia- வங்கி  பேரத்தை மே பாங்க் பெர்ஹாட் தெளிவாக விளக்க வேண்டும் என டிஏபி எம்பி  டோனி புவா கேட்டுக் கொண்டுள்ளார். அந்த பேரத்தில் கிட்டத்தட்ட 1.74 பில்லியன் ரிங்கிட் வரையில் இழப்பு ஏற்படலாம் என்றும் அது மலேசிய வங்கி…

ராபிஸி: இசி-யின் தொப்பிக் குத்தகைகள் கொள்முதல் விதிமுறைகளை மீறியுள்ளன

இசி என்ற தேர்தல் ஆணையம் தொப்பிகளை விநியோகம் செய்வதற்கான  குத்தகைகளை வழங்குவதற்கு நேரடிப் பேச்சுக்களில் ஈடுபட்ட போது கொள்முதல்  விதிமுறைகளை மீறியுள்ளதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில்  கூறியுள்ளார். எல்லா மூன்று தொப்பிக் குத்தகைகளும் ஒரே நபர் சம்பந்தப்பட்ட மூன்று  நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது மிகவும் கடுமையான விஷயம்…

மூசா அமான்: ‘Project IC’யில் எனக்குச் சம்பந்தமில்லை

Project IC என அழைக்கப்படும் அடையாளக் கார்டு திட்டத்தில் தாம் சம்பந்தப்படவில்லை என சபா மாநில முதலமைச்சர் மூசா அமான் கள்ளக் குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் (ஆர்சிஐ) கூறியுள்ளார். அந்தத் திட்டத்தில் மூசா அமானுக்கும் தொடர்பு இருந்ததாக கடந்த வாரம் ஆர்சிஐ-யிடம் ஒரு சாட்சி கூறியதை…

டிட்டாஸ் சீனர்களுக்கு நன்மையாக இருக்கும்: விரிவுரையாளர்

சீனத் தலைவர்கள் பலர், தனியார் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய மற்றும் ஆசிய நாகரிகம் பற்றிய கல்வி கற்பிக்கப்படுவதை (டிட்டாஸ்) எதிர்ப்பது ஏமாற்றமளிப்பதாக யுனிவர்சிடி கெபாங்சான் மலேசியா (யுகேஎம்) பேராசிரியர் தியோ கொக் சியோங் கூறுகிறார். அக்கல்வியால் சீனச் சமூகத்தினர் நன்மை அடைவர் என்பதால் அவர்கள் அதை ஆதரிக்க வேண்டும் என்றாரவர்.…

எம்பி: வாக்காளர் பட்டியலில் ‘பிரச்னைக்குரிய’ அடையாளக் கார்டுகளை வைத்திருக்கும் 49,159…

13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் 49,159  பேருடைய அடையாளக் கார்டுகள் 'பிரச்னைக்குரியவை' என  வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்திடம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 16ம் தேதி கள்ளக் குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்தில்  சாட்சியமளித்த தேசியப் பதிவுத் துறை அதிகாரி ஆதாரமாக வழங்கிய…

அனைத்துலகக் குழு தேர்தல்கால உரிமைமீறல்களைக் கண்டறியும்

அண்மைய பொதுத் தேர்தலின்போது பேச்சுரிமை, ஒன்றுகூடும் உரிமை போன்றவை எப்படி இருந்தன என்பதைக் கண்டறிய அனைத்துலக பார்வையாளர் குழு ஒன்று மலேசியா வந்துள்ளது. மனித உரிமை மற்றும் மேம்பாடு மீதான ஆசிய அரங்கம் (போரம் ஆசியா) அமைத்துள்ள குழு ஞாயிற்றுக்கிழமை வந்தது.அது, பெர்சே, போலீஸ் உயர் அதிகாரிகள், பிரதமர்துறை…

நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் கள்ளக் குடியேறிகள் மீது விரிவான நடவடிக்கை

நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் கள்ளக் குடியேறிகளைக் கண்டு பிடிப்பதற்கான  விரிவான நடவடிக்கையை போலீஸ், குடிநுழைவுத் துறை, ரேலா ஆகியவை  மேற்கொள்ளும். அந்தத் தகவலை உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி வெளியிட்டுள்ளார். குற்றச் செயல்களும் இதர சட்டவிரோத நடவடிக்கைகளும் அதிகரிப்பதற்கு கள்ளக்  குடியேறிகள் காரணமாக இருப்பதால் அரசாங்கம் அவர்கள்…

மசீச, கெராக்கான் ஆகியவற்றுடன் இணைவதை எஸ்யுபிபி நிராகரிக்கிறது

மசீச, கெராக்கன் ஆகியவற்றுடன்  இணையும்  நடவாத காரியம்  என்கிறது  சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி (எஸ்யுபிபி).  அவற்றுக்கிடையில் பிரச்னைகளும் வேறுபாடுகளும் நிறைய இருப்பதாக அது கூறிற்று. ஆனால், பிரச்னைகள் என்னவென்பதை அது விவரிக்கவில்லை. “அவை சீனர்களை க் கொண்ட கட்சிகள். நாங்கள் பல-இனங்களைக் கொண்ட கட்சி”, என்று மட்டும்…

இப்போது அவையில் பொய் சொல்வதற்கு ‘தவறான புரிந்துணர்வு’ எனப் பெயர்

"இன்றைய பிஎன் அரசியல்வாதிகளிடம் உள்ள பிரச்னையே இது தான்.  எதையாவது -அது சரியோ தவறோ- சொல்லிவிட்டு தப்பித்துக் கொள்ள முடியும்  என எண்ணுவதாகும்" 'இனவாத மருத்துவர்கள்' எனச் சொன்னதற்காக மன்னிப்புக் கேளுங்கள் என  பேராளருக்கு அறிவுரை' சென்யூம் உந்தா: மூன்று மலேசியச் சீன மருத்துவர்கள் இனவாதிகள் என மாநிலச்…

சரவாக் டிஏபி கிராமப்பகுதிகளை நோக்கிப் பயணிக்கிறது

  சரவாக் டிஏபி அம்மாநிலத்தின் 20 சட்டமன்றத் தொகுதிகளில் அதன் கிளைகளை அமைக்கும்.  கிராமப்புறங்களில் பிஎன்னுக்குள்ள செல்வாக்கை உடைத்தெறியும் நோக்கில் அவ்வாறு செய்யப்படும் என்று கூறிய அதன் தலைவர் சொங் சியெங் ஜென், அதற்காக சுமார் ரிம 600,000 ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். “அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய சீரமைப்பு…