ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
அல்டான்துயா கொலையில் நஜிப்புக்குத் தொடர்பில்லை
அல்டான்துயா கொலை வழக்கை நடத்தும் அரசுதரப்பு அந்த மங்கோலிய பெண்ணின் கொலையுடன் அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப்பைத் தொடர்புப்படுத்த எந்தக் காரணமுமில்லை என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியது. வழக்கின் முதல் குற்றவாளி தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா ஹட்ரி “தம்முடைய செயலுக்குத் தாமே பொறுப்பு”என்று ஒப்புக்கொண்டிருப்பதை துணை சொலிடிடர்-ஜெனரல்…
புகை மூட்டம் போர்ட் கிளாங்கில் அபாயகரமான அளவில் சிலாங்கூரில் ‘மிகவும்…
போர்ட் கிளாங்கில் இன்று காலை காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு அபாயகரமான அளவை எட்டியது. அங்கு அந்தக் குறியீடு 487 ஆகப் பதிவானது. அதே வேளையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் 'மிகவும் ஆரோக்கியமற்ற நிலை' பதிவாகியுள்ளது. சுற்றுசூழல் துறை இன்று காலை 7.00 மணிக்கு வெளியிட்ட விவரம்: பந்திங் (292),…
ஜகார்த்தா, நெருப்பு இல்லாமல் புகையாது
"அந்த மலேசிய நிறுவனங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள், அபராதம் விதியுங்கள். அவற்றை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புங்கள். அந்த நிறுவனங்கள் எங்கிருந்து வந்தன, யாருக்குச் சொந்தம் என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை." ஜகார்த்தா: மலேசியாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமான நிலத்தில் நெருப்பு அடையாளம் இல்லாதவன்#19098644: சட்டத்தை மீறுகின்றவர்கள்…
‘ஜோங்கர் சாலை இரவுச்சந்தை மூடப்பட்டதற்கு அரசியல்தான் காரணம்’
மலாக்கா மாநகரில் ஜோங்கர் சாலையில் நடைபெற்று வந்த வாரஇறுதி இரவுச் சந்தை மூடப்பட்டது பொதுத் தேர்தலில் “மாற்றரசுக் கட்சியை ஆதரித்த சீன வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட அரசியல் பதிலடி” என வருணிக்கப்பட்டுள்ளது. “ இந்நடவடிக்கை மக்களை மேலும் அந்நியப்படுத்தும்”, என டிஏபி-இன் கெசிடாங் சட்டமன்ற உறுப்பினர் சின் சூங் சியோங்…
சுமத்ரா காட்டுத் தீ தொடர்பில் இருவர் கைது
சுமத்ராவில் நிலத்தை துப்புரவு செய்யும் பொருட்டு சட்டவிரோதமாக தீயை மூட்டியதற்காக இரண்டு குடியானவர்களை இந்தோனிசியப் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த பல நாட்களாக அண்டை நாடுகளான சிங்கப்பூரையும் மலேசியாவையும் புகை மூட்டம் சூழ்ந்துள்ள வேளையில் கைது செய்யப்பட்டுள்ள முதல் நபர்கள் அவர்கள் ஆவர். காற்றுத் தூய்மைக் கேட்டுக்கு பொறுப்பானவை…
போலீஸ்காரர்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதினார்கள்
நாடாளுமன்றத்தைக் காத்துநின்ற போலீஸ்காரர்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதினார்கள் என்றும் அதில் பல போலீஸ்காரர்கள் காயமடைந்தனர் என்றும் முகநூலில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கோலாலும்பூர் போலீஸ் தலைவர் முகம்மட் சாலே கூறினார். போலீஸ்காரர்களைத் தாக்குவதற்குமுன் அவர்கள் போத்தல்கள், முட்டைகள், சாயம் முதலியவற்றை வீசி எறிந்து போலீசாருக்கு சின மூட்டினர். “ஆனாலும், மேலும்…
போர்ட் கிளாங்கில் புகை மூட்டம் மிகவும் அபாயகரமான அளவை எட்டியது
போர்ட் கிளாங்கில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு அபாய அளவை எட்டியுள்ளதாக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் இயான் யோங் ஹியான் வா கூறினார். "போர் ட் கிளாங்கில் உள்ள உணர்வுக் கருவிகளில் (Sensors) பிற்பகல் மூன்று மணி அளவில் அந்தக் குறியீடு 314ஐ தாண்டியது. மற்ற கண்காணிப்பு நிலையங்களில்…
வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற உத்தரவை தொழிலாளர்களுக்கும் நீட்டிக்கவும்
புகை மூட்ட நெருக்கடியால் மூவாரிலும் மலாக்காவிலும் ஊரடங்கை விதிக்கும் போது தொழிலாளர்களையும் அதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தேசிய வங்கி ஊழியர் சங்கம் கூறுகிறது. காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 'மிகவும் அபாயகரமான' அளவை எட்டிய பகுதிகளில் பள்ளிக் கூடங்களை…
குவாந்தானில் பள்ளிகள் நாளை திறக்கப்படும்
குவாந்தானில் புகை மூட்டம் காரணமாக இன்று மூடப்பட்ட 120 பள்ளிக்கூடங்கள் நாளை திறக்கப்படும் என பாகாங் கல்வித் துறை இயக்குநர் ரோஸ்டி இஸ்மாயில் கூறினார். என்றாலும் வகுப்பறைகளுக்கு வெளியில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அந்தப் பள்ளிக்கூடங்கள் அனுமதிக்கப்பட மாட்டா என அவர் சொன்னார். "எல்லா ஆசிரியர்களும் மாணவர்களும் நாளை பள்ளிக்கூடங்களுக்குத்…
காட்டுத் தீயை அணைக்க இந்தோனிசியாவுக்கு 2 மில்லியன் டாலர் தேவை
இந்தோனிசியா ரியாவ் மாநிலத்தில் மூண்டுள்ள காட்டுத் தீயை அணைக்க அரசாங்கம் 2 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது 20 பில்லியன் ரூப்பியாவையை செல்வு செய்ய வேண்டியிருக்கும் என அந்த நாட்டின் தொழில் நுட்ப மதிப்பீடு பயன்பாட்டு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அந்த காட்டுத் தீயிலிருந்து எழுந்த புகை, ரியாவ் மாநிலத்தையும்…
பதவி விலக முடியாது : இசி மீண்டும் வலியுறுத்து
ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி என்னதான் வாய்கிழிய கோரிக்கை விடுத்தாலும் தேர்தல் மன்ற (இசி) உயர் அதிகாரிகள் பதவிவிலகும் பேச்சுக்கே இடமில்லை என்கிறார் அவ்வாணையத்தின் துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார். தங்களைப் பதவிவிலகக் கோருவது பொறுப்பற்றதாகும் என்பதுடன் அது அரசமைப்புக்கு விரோதமான செயலுமாகும் என்றாரவர். “இசி சட்டப்படி தவறு…
கல்வியில் தகுதிமுறை என்பது சீனர்களுக்குதான் நன்மையாக உள்ளது
மலாய் ஆலோசனை மன்றத் தலைவர் இப்ராகிம் அபு ஷா, கல்வியில் தகுதிக்கு முன்னுரிமை அளிக்கும் தற்போதைய நடைமுறை அகற்றப்பட வேண்டும் என்று கூறியிருப்பதை மலாய்க் கல்வியாளர்கள் பலர் வரவேற்றுள்ளனர். “தகுதிமுறையால் கல்வியில் சீனர்கள் மேலாதிக்கம் செலுத்துகிறார்கள். அது மலாய் மாணவர்களுக்கு நன்மை செய்யவில்லை. உயர்கல்வி நிலையங்களில் மலாய் மாணவர்களின்…
புகைமூட்டம் மோசமானால் வெளிவேலைகளை நிறுத்த வேண்டும்
புகைமூட்டம் வருந்தத்தக்க அளவுக்கு மோசமடையுமானால் வெளிவேலைகளைக் குறைப்பது அல்லது ஒட்டுமொத்தமாக நிறுத்துவது நல்லது என பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை (டோஷ்) தலைமை இயக்குனர் டாக்டர் ஜொஹாரி பஸ்ரி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். “வெளி இடங்களிலும் கட்டுமானப் பகுதிகளிலும் வேலை செய்வோரின் நலங்காக்க முதலாளிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். “பாரம்…
தவறு செய்துள்ள மலேசிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என…
இந்தோனிசியா, மலேசிய நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும் புகை மூட்ட நிலவரத்துக்குப் பொறுப்பானவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் எஸ் சுப்ரமணியம் கூறுகிறார். "புகை மூட்டத்துக்கு மலேசிய நிறுவனங்கள் காரணமாக இருந்தாலும் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நான் இந்தோனிசிய அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன்," என…
ஜாலான் பார்லிமெண்டில் போராளிகள் போராட்டம், 26 பேர் கைது செய்யப்பட்டனர்
கோலாலம்பூர் பாடாங் மெர்போக் திடலில் தங்கள் முகாம்களிலிருந்து அகற்றப்பட்ட 50க்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் போராட்டத்தை ஜாலான் பார்லிமெண்டுக்கு இன்று தொடர்ந்தனர். அவர்களில் மாணவர் போராளி அடாம் அட்லி அப்துல் ஹலிமும் ஒருவர் ஆவார். நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கிச் செல்லும் முக்கியச் சாலையில் காலை பத்து மணி தொடக்கம்…
அல்டான்துயா கொலை: மேல்முறையீடு மீது விசாரணை தொடங்கியது
மங்கோலியப் பெண் அல்டான்துயா ஷரீபு கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா ஹட்ரி, கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமர் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுமீது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கியது. நீதிபதி முகம்மட் அபாண்டி அலி தலைமையில் மூவரடங்கிய நீதிபதிபதிகள் குழு அதை விசாரிக்கிறது.…
கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் 13வது நாடாளுமன்றம் கூடியது
13வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. மக்களவை சபாநாயகர் தேர்வு, உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வது ஆகியவை இன்றைய முக்கிய நிகழ்வுகளாகும். நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு செல்லும் சாலையில் சீருடையணிந்த 50க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். அருகிலுள்ள பாடாங் மெர்போக்கில் இரண்டு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்வதால்…
புகைமூட்டத்துக்குப் பொறுப்பானவர்களைத் தண்டிப்பீர்: குவான் எங்
புகைமூட்டத்துக்குக் காரணமானவை என்று இந்தோனேசியாவால் அடையாளம் காணப்பட்டுள்ள எட்டு மலேசிய நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங். எட்டு மலேசிய நிறுவனங்கள் தோட்டங்களை எரித்து துப்புரவு செய்யும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்று இந்தோனேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் பல்தசார் கம்புவாயா…
மக்களவை சபாநாயகராக பண்டிக்கார் அமீன் மீண்டும் தேர்வு பெற்றார்
பண்டிக்கார் அமீன் முலியா மக்களவை சபாநாயகராக இன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 13வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தின் முதல் நாளான இன்று காலையில் 'வாக்கெடுப்பு' நடந்த பின்னர் அவர் சபாநாயகராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். வாக்கெடுப்பில் பண்டிக்காருக்கு 133 வாக்குகள் கிடைத்தன. அவர் பக்காத்தான் ராக்யாட் முன்மொழிந்த…
புகைமூட்டம் மூவாரில் குறைந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் மோசமானது
காற்றுத்தூய்மைக்கேடு குறியீடு (ஏபிஐ) ஜோகூரின் மூவாரில் ‘அபாய எல்லை’யான 746-இலிருந்து இன்று காலை 7மணிக்கு 148ஆகக் குறைந்தது. ஆனால், நெகிரி செம்பிலான், சிலாங்கூர், திரெங்கானு ஆகியவற்றில் நிலமை மோசமடைந்திருப்பதாக சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. சிலாங்கூரில் கிள்ளானிலும் திரெங்கானுவில் கெமாமானிலும் காற்றின் தரம் முறையே 296 ஆகவும் 249 ஆகவும்…
பாடாங் மெர்போக்கிலிருந்து எதிர்ப்பாளர்கள் அகற்றப்பட்டனர்.
13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் பாடாங் மெர்போக்கில் எதிர்ப்பாளர்கள் அமைத்திருந்த கூடாரங்களை அதிகாரிகள் இன்று காலை மணி 4.30 வாக்கில் அகற்றினர். அந்தத் திடலிலிருந்து கூடாரங்களை அகற்றும் நடவடிக்கையில் கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற (DBKL) அமலாக்க அதிகாரிகளும் ஆயுதமேந்திய போலீஸ்காரர்களும் ஈடுபட்டதாக…
புகைமூட்டத்துக்கு எதிராக விழிப்புநிலையில் பினாங்கு
புகைமூட்டத்தைச் சமாளிக்க தகுந்த நடவடிக்கைகளையும் வழிகாட்டிமுறைகளையும் பின்பற்றுமாறு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மாநிலச் செயலாளருக்கும் ஆட்சிக்குழுவுக்கும் உத்தரவிட்டுள்ளார். போதுமான முகமூடிகள் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள் வேண்டும் என்றாராவர். ஆனால், சிங்கப்பூர் ஒரு மில்லியன் N95வகை முகமூடிகளை முன்கூட்டியே வாங்கிவிட்டதால் அந்த வகை முகமூடிகள் கிடைப்பது சிரமமாக உள்ளது.…
‘பெரிய தொழில்கள் பாதுகாக்கப்படும் வரையில் புகை மூட்டம் தொடரும்’
உங்கள் கருத்து : "சுமத்ராவில் உள்ள தோட்டங்களில் அரசாங்கத்துக்கு பெரிய அளவில் பங்குகள் உள்ளன. ஆகவே புகை மூட்டப் பிரச்னையைத் தீர்ப்பதில் அது உண்மையில் ஆர்வம் காட்டப் போவதில்லை." புகை மூட்டம்: மூவாரிலும் லேடாங்கிலும் பிரதமர் அவசர காலத்தைப் பிரகடனம் செய்தார். பார்வையாளன்: ஒரு நாட்டில் அந்நிய நிறுவனம்…


