அன்வார்: இனிமேல் ‘505 கறுப்பு தின’ பேரணி இல்லை

தேர்தல் மோசடிக்கு எதிராக அண்மைய எதிர்காலத்தில் மேலும் '505 கறுப்பு தின'  பேரணியை நடத்தும் திட்டம் எதுவும் பக்காத்தான் ராக்யாட்டிடம் இல்லை. இவ்வாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். அரசு சாரா அமைப்புக்கள் அத்தகைய பேரணிகளை நடத்தக் கூடும் என அவர்  சொன்னார். "நான் அரசு…

டிஏபி: அரசாங்கம் புகை மூட்ட நெருக்கடியைக் காட்டிலும் பண்டா கரடிகளுக்கு…

இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சர் ஜி பழனிவேல், புகை மூட்ட  நெருக்கடிக்குப் பதில் சீனாவிலிருந்து இங்கு கொண்டு வரப்படவிருக்கும் பண்டா  கரடிகளுக்கு முதலிடம் கொடுப்பதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் சாடியுள்ளார். "அவர் இன்று பத்திரிக்கைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை புகை மூட்டம்  பற்றியதல்ல. மாறாக அந்த பண்டா…

ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு தீ தேர்வு செய்யப்பட்டார்

ஜோகூர் சுல்தானுக்குத் தாம் பரிந்துரை செய்த பல வேட்பாளர்களில் தீ சியூ  கியோங்-கும் ஒருவர் என அந்த மாநில மந்திரி புசார் காலித் நோர்டின்  கூறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங் விடுத்த  அறிக்கைக்குப் பதில் அளித்த காலித், ஆட்சி…

அன்வார்: நமது போராட்டத்தில் தளர்வு ஏற்படக் கூடாது

கடந்த மாதம் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும்  மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தில் தளர்வு ஏற்படக் கூடாது என பிகேஆர்  மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். சில பக்காத்தான் ராக்யாட் தலைவர்களிடையே அத்தகைய அரசியல் தளர்வு  ஏற்பட்டு வருவதாக அவர் சொன்னார். பாஸ் உதவித் தலைவர் ஹுசாம்…

இரண்டுநாள் தடுப்புக் காவலில் ஹுசாம்

விசாரணைக்காக பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசாவை இரண்டு நாள் தடுத்துவைக்க போலீசார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். திங்கள்கிழமை, கட்சி செய்தித்தாளான ஹராகாவில் வெளிவந்திருந்த கட்டுரையில் ஹுசாம் தேச நிந்தனைக் கருத்துகளைத் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்,  நேற்று பிற்பகல் கோலாலும்பூரில்  கைது செய்யப்பட்டு கிளந்தான் கொண்டு செல்லப்பட்டார்.

மூவாரிலும் லெடாங்கிலும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது

இன்று காலை காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (ஏபிஐ) 750 என்னும் அபாய எல்லையைத் தாண்டியதை அடுத்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மூவாரிலும் லெடாங்கிலும் அவசரநிலை பிரகடனம் செய்திருக்கிறார். இயற்கைவள சுற்றுச்சூழல் அமைச்சர் ஜி.பழனிவேல் அவரது முகநூல் பக்கத்தில் இதை அறிவித்துள்ளார். மக்கள் வீடுகளிலேயே தங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்படும்…

புகைமூட்டம்: ‘மூவாரில் அவசரநிலை பிரகடனம் செய்க’

ஜோகூரின் அரச நகரான மூவாரில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (ஏபிஐ) 750 என அபாய எல்லையைத் தொட்டிருப்பதால் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் துறை தலைமை இயக்குனர் ஹலிமா ஹசான் தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் அவசரநிலையை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் என இயற்கைவள சுற்றுச்சூழல்…

கண்ணயர்ந்தது பெரிய விசயமல்ல: காலிட்

சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், கடந்த வெள்ளிக்கிழமை சட்டமன்றத்திலும் பின்னர் செய்தியாளர் கூட்டத்திலும் சற்றுக் கண் அயர்ந்துவிட்டார். விடுவார்களா தொலைக்காட்சியினர். படம் பிடித்துக் காட்டி விட்டார்கள். உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால் காலிட் அரைத்தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார் என அவரின் உதவியாளர்கள் கூறினர். அதை காலிட்டும் தம்…

புகைமூட்டம்: 8 மலேசிய நிறுவனங்களிடம் ஜாகார்த்தா விசாரணை

மலேசியாவையும் சிங்கப்பூரையும் சூழ்ந்துகொண்டிருக்கும் புகை மூட்டத்துக்குக் காரணமான நிறுவனங்களை இந்தோனேசிய சுற்றுச்சூழல் அமைச்சு அடையாளம் கண்டுள்ளது. அவ்ற்றில் எட்டு மலேசிய தொடர்புடையவை. அவற்றுக்குச் சொந்தமான தோட்டங்களில் நெறுப்பு எறிய காணப்பட்டது. “போதுமான ஆதாரங்கள் இருக்குமானால் அவைமீது வழக்கு தொடரப்படும்”, என்று இந்தோனேசிய சுற்றுச்சுழல் அமைச்சர் பால்தாசர் கம்புவாயா கூறியதாக…

மூவாரில் புகை மூட்ட அளவு அவசர கால நிலையை எட்டியது

மூவாரில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 746ஐ எட்டியது. இது அச்சமூட்டூம்  அளவாகும். சுற்றுச்சூழல் துறை 'அபாயகரமானது' என அறிவித்துள்ள அளவைக்  காட்டிலும் இது இரண்டு மடங்கு கூடுதலாகும். இதனிடையே மலாக்காவிலும் இரண்டு நிலையங்களில் அந்தக் குறியீடு அபாய  அளவைத் தாண்டியுள்ளது. பண்டாராயா மலாக்காவில் 357ஆகவும் புக்கிட்  ரம்பாயில்…

கோலாலம்பூர் தலைமைப் போலீஸ் அதிகாரி அவர்களே தூண்டி விடுகின்றவர்கள் எங்கே…

கலவரம் ஏற்படும் என்ற எண்ணத்துடன் அத்தகைய தவறான அறிக்கையை  முகமட் சாலே விடுத்தது ஏமாற்றமளிக்கிறது. அது பொறுப்பற்றதாகும். போலீசார்: எங்களைத் தூண்டி விடுமாறு பேரணி பங்கேற்பாளர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது பன்மடங்கு: மகாதீர் தத்துவம் திரும்புவதற்கான அறிகுறி அது. 1990களில் நிகழ்ந்த  முதலாவது reformasi பேரணிகள் நினைவிருக்கிறதா ? தூண்டி விடுகின்றவர்களைப்…

மஇகா தலைமையகம் முன் இன்று மாணவர்கள் மறியல்!

நாள்: 23 ஜூன் 2013  ஞாயிறுக்கிழமை:நேரம்: காலை 10.00  இடம்: ம இ கா தலைமையகம் மெட்ரிகுலேசன் கல்விக்கு விண்ணப்பம் செய்துள்ள மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர். இதுவரை 600 மாணவர்களுக்கு மட்டுமே இடம். 1,500 என்று கூறிவிட்டு ஏன் உண்மையான தகவல் தர மறுக்கிறார்கள்? மெட்ரிகுலேசன் துறையினர் கேட்கும் அடிப்படைக் கல்வித்…

505 கறுப்பு தினப் பேரணி நடப்புகள்

பாடாங் மெர்போக் பேரணி இரவு மணி 7 வாக்கில் முடிவுக்கு வரும் என்று கூறப்பட்டிருந்தாலும் ஐந்து மணிக்கே சிலர் கலைந்து செல்ல முற்பட்டனர். புகைமூட்டம், வெப்பம், களைப்பு போன்ற காரணங்களை அவர்கள் கூறினர். Anything But Umno அமைப்பின் பேச்சாளர் ஹரிஸ் இப்ராகிம்,  இசி தலைவர்கள் பதவி விலகும்வரை…

முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்களை வாதாட அனுமதியுங்கள்!

முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்களை ஷரியா நீதிமன்றத்தில வாதாட அனுமதிக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்கிறார் கா. ஆறுமுகம். கூட்டரசுப் பிரதேசத்தில் ஷாரியா நீதிமன்றங்களில் முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்கள் வாதாட அனுமதிக்கும் முறையீட்டு நீதிமன்ற முடிவு இஸ்லாமிய  அமைப்புக்களில் உள்ள பதவிகள் தொடர்பாக பல பிரச்னைகளை ஏற்படுத்தும்…

505 கறுப்பு தினப் பேரணி சில தகவல்கள்

பாஸ் கட்சியின் உதவித் தலைவர் ஹுசாம் மூசா கைது செய்யப்பட்டு அம்பாங் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்தத் தகவலை அவரது  உதவியாளர்களில் ஒருவர் உறுதி செய்துள்ளார். அவர் 1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்தின் பிரிவு 4(1)(பி) யின் கீழ்  தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அவர் எங்கு…

காட்டுத் தீயை அணைக்க இந்தோனிசியா செயற்கை மழையை ஏற்படுத்தியது

இந்தோனிசியாவின் சுமத்ரா தீவில் பரவியுள்ள காட்டுத் தீயை அணைக்கும்  பொருட்டு செயற்கை மழை பெய்யச் செய்வதற்கு விமானங்கள்  பயன்படுத்தப்பட்டன. அதே வேளையில் ஹெலிகாப்டர்கள் தண்ணீரை கொட்டின. அந்தக் காட்டுத் தீ கடந்த சில நாட்களாக எரிவதால் எழுந்த புகை மூட்டம் இந்தோனிசியாவின் ரியாவ் மாநிலத்திலும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் காற்றுத்…

”முஸ்லிம் அல்லாத ஷாரியா வழக்குரைஞர் பிரச்னைகளை அதிகரிக்கும்’

கூட்டரசுப் பிரதேசத்தில் ஷாரியா நீதிமன்றங்களில் முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்கள் வாதாட அனுமதிக்கும் முறையீட்டு நீதிமன்ற முடிவு இஸ்லாமிய  அமைப்புக்களில் உள்ள பதவிகள் தொடர்பாக பல பிரச்னைகளை ஏற்படுத்தும்  என மலேசிய முஸ்லிம் வழக்குரைஞர் மன்றம் கூறுகின்றது. விக்டோரியா ஜெயசிலி மார்ட்டின் தொடுத்த வழக்கில் அந்த நீதிமன்றம்  வழங்கியுள்ள தீர்ப்பு…

பேரணிக் கூட்டம் நூறு, ஆயிரம், பல்லாயிரம் எனப் பெருகியது

பிற்பகல் மணி மூன்று: பாடாங் மெர்போக் நோக்கி சுமார் 20,000 பேரடங்கிய பேரணி சென்று கொண்டிருக்கிறது. பாடாங் மெர்போக்கில் 505 கறுப்புப் பேரணி இயக்குனரும் சுங்கை பட்டாணி எம்பியுமான ஜொஹாரி அப்துல் கூட்டத்தாரிடையே பேசினார்.  போலீசும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்றமும் பேரணி ஏற்பாட்டாளர்களுடன் ஒத்துழைப்பதாக அவர் சொன்னார். அது…

அணி அணியாக பாடாங் மெர்போக்கை நோக்கி படையெடுப்பு

கோலாலும்பூர் 505 கறுப்புப் பேரணியில் 300,000 பேர் திரள்வார்கள் என பிகேஆர் எதிர்பார்த்தாலும் பிற்பகல் மணி 2 முடிய சுமார் 10,000 பேர்தான் பல்வேறு ஒன்றுகூடுமிடங்களில் சேர்ந்துள்ளனர். பேரணி இடத்தைச் சுற்றிலும் புகை மூட்டம் கவிந்திருந்தாலும் பேரணியில் கலந்துகொள்வோரின் உற்சாகத்துக்குக் குறைவில்லை. ஜாலான் ராஜா லாவிட்டில் கூடியுள்ளவர்களிடையே பேசிய…

‘கறுப்பு தினப் பேரணி’ கோலாலம்பூரில் கூட்டம் ஆயிரக்கணக்கில் பெருகுகிறது

பக்காத்தான் ராக்யாட் நாடு முழுவதும் 505 கறுப்பு தினப் பேரணிகளை நடத்திய  பின்னர் இன்று கோலாலம்பூரில் 15வது பேரணியை நடத்தின்றது. சர்ச்சைக்குரிய மே 5 தேர்தலுக்கு ஒன்றரை மாதம் கழித்து கோலாலம்பூர் பேரணி  நிகழ்கின்றது. தேர்தல் ஆணையத்தின் நடப்புத் தலைவர்களும் ஆணையர்களும் பதவி துறந்து  புதிய இசி தலைமைத்துவம்…

இந்து மனைவி: அதிகாரிகள் நானும் மதம் மாற வேண்டும் என…

தங்களது இரண்டு சிறு பிள்ளைகளை தமது கணவர் இஸ்லாத்துக்கு மதம் மாற்றிய  சர்ச்சைக்குரிய நடவடிக்கை தொடர்பில் இந்து மனைவி  ஒருவர் சமய அதிகாரிகள் தம்மையும் மதம் மாற்ற முயன்றதாக கூறிக்  கொண்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் செனட்டர் பி வேதமூர்த்தியுடன் நிகழ்ந்த சமயங்களுக்கு  இடையிலான விவாதத்தின் போது அந்தச் சம்பவத்தை…

‘தேர்தல் ஆணையம் அரசியல் சகதிக்குள் குதிக்கிறது’

உங்கள் கருத்து : 'அன்புள்ள வான் அகமட் அவர்களே, நீங்கள் என்ன பேசுகின்றீர்கள் ? உங்கள் வார்த்தைகள் இசி மீதான நம்பிக்கையை மேலும் தளரச் செய்து விடும். நீங்கள்  சகதியில் விழுந்து புரளப் போகின்றீர்கள்.' இசி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்வது  பக்காத்தான் இரட்டை…

“இசி தலைவரை பதவி விலகுமாறு கேட்டுக் கொள்வது பற்றி அரசாங்கம்…

இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப்புக்கு  எதிராக பொது மக்கள் குறை கூறுவது அதிகரித்து வருவதால் அவரை பதவி  விலகுமாறு கேட்டுக் கொள்வது பற்றி அரசாங்கம் பரிசீலிப்பதாக டிஏபி குளுவாங்  எம்பி லியூ சின் தொங் கூறிக் கொண்டுள்ளார். அஜிஸ் ராஜினாமா செய்ய…