பிரஞ்சு வழக்குரைஞர்களைப் பார்த்து அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது ?

"ஒர் அந்நியரை தொழில் நிபுணத்துவ வழக்குரைஞர் ஒருவரை ‘bodoh' என அழைப்பது, அம்னோ தலைவர்களுடைய கீழ்த்தரமான போக்கைக் காட்டுகின்றது." சுவாராம்: வரவேற்கப்பட்டாலும் வரவேற்கப்படா விட்டாலும் பிரஞ்சு வழக்குரைஞர்கள் வருவர் குழப்பம் இல்லாதவன்: மலேசியாவுக்குள் அந்த பிரஞ்சு வழக்குரைஞர்கள் நுழைவதை மறுப்பதின் மூலமும் அவர்களை அச்சுறுத்துவதின் மூலமும் வாய்மொழியாக அவர்களை…

கிளந்தான் தடை: முஸ்லிம் அல்லாதாருக்கு கருணை காட்டுங்கள் என்கிறார் ஆட்சி…

முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ஆண்களுக்கு முடி திருத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அமலாக்கும் போது கோத்தா பாரு நகராட்சி மன்றம் சம்பந்தப்பட்ட இரு தரப்புக்களும் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தால் கருணை காட்ட வேண்டும் என கிளந்தான் மாநில முதுநிலை ஆட்சி மன்ற உறுப்பினர் அனுவார் தான் அப்துல்லா கூறுகிறார்.…

பிரதமர்: மகளிர் உரிமைகளுக்குத் தொடர்ந்து போராடுங்கள்

மலேசியர்கள் மகளிர் உரிமைகளுக்குத் தொடர்ந்து போராடுவதோடு மகளிருக்கு எதிரான எல்லா வகையான வன்முறைகளையும் துடைத்தொழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனப் பிரதமர் நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார். "நான் அரசியல்வாதி என்ற முறையில் மட்டுமின்றி ஒரு கணவர், ஒரு தந்தை என்ற முறையிலும் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.…

இஸ்ரேல் எதிர்ப்புக் குழு பெல்டாவிடம் மகஜர் கொடுக்க முடியவில்லை

'யூத நிறுவனம்' எனக் கூறப்படும் நிறுவனம் ஒன்றுக்கு செம்பனை எண்ணெயை விற்பதை நிறுத்திக் கொள்ளுமாறு பெல்டாவைக் கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை பாஸ் தலைமையில் சென்ற 700 பேர் கொண்ட குழு அதனிடம் கொடுக்க முடியவில்லை. கோலாலம்பூர் ஜாலான் செமாராக்கில் உள்ள பெல்டா தலைமையகக் கட்டிடத்தின் காவற்காரர்கள் நுழைவாயிலைத்…

லிம் குவான் எங்: மக்களவை பதில் ‘குளறுபடி’ உண்மையான பிஎன்…

சுயேச்சை சீனப் பள்ளிகள் விவகாரம் மீது வழங்கப்பட்ட நாடாளுமன்ற பதிலைத் திருத்துவதற்குக் கல்வி அமைச்சு எடுத்துள்ள அவமானத்தை தரும் நடவடிக்கை பிஎன் கூட்டரசு அரசாங்கத்தின் உண்மையான நிறத்தை அம்பலப்படுத்து விட்டது என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார். "நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் முஹைடின் யாசின்…

பாஸ்: நஜிப் ‘அசைக்க முடியாத’ டாக்டர் மகாதீரைக் கண்டு அஞ்சுகிறார்

அரசியல் எதிரிகளை கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் வேட்டையாடும் 'அசைக்க முடியாத' முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டைக் கண்டு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அஞ்சுவதாக பாஸ் கட்சி கூறிக் கொண்டுள்ளது. "மகாதீர் விரும்புவதை நஜிப் பின்பற்றுகிறார். தமக்கு பாதகமான கோப்புக்கள் வெளியே வரும் என அஞ்சி அந்த…

‘மெக்சிஸ்-ஏர்செல் விசாரணையில் நஸ்ரி இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும்’

அரசாங்கம் வெளிநாடுகளுடன் அணுக்கமாக ஒத்துழைப்பதாகக் கூறிக்கொள்ளும் அப்துல் நஸ்ரி அசீஸ், மெக்சிஸ்-ஏர்செல் விசாரணையில் மலேசியா ஒத்துழைப்புத் தரவில்லை என்று இந்தியா முறையிட்டிருப்பதற்குப் பதில் கூறியாக வேண்டும்.  மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) எல்லைதாண்டிய ஊழல் விவகாரங்களில் வெளிநாடுகளுடன் அணுக்கமாக ஒத்துழைப்பதாக நஸ்ரி கூறிக்கொள்வதால் இந்தக் குறைக்கூறலுக்கு அவர் பதில்…

எம்ஏஎஸ்-இன் ‘பணம் பறிபோகிறது’

வெளிக்குத்தகைக்கு விடுவதால், மலேசிய விமான நிறுவனத்தின் (எம்ஏஎஸ்) “பணமெல்லாம் பறிபோவதாக” ஷா ஆலம் எம்பி காலிட் அப்துல் சமட் கூறுகிறார். “மாஸ் ஊழியர்கள், அவர்கள் செய்த பணிகள் எல்லாம் இப்போது வெளியாருக்குக் குத்தகைக்கு விடப்படுவதாக என்னிடம் புகார் செய்துள்ளனர். “பயணப் பெட்டிகளையும் சரக்குகளையும் ஏற்றி இறக்க வங்காள தேசிகளையும்…

அந்த ‘மலிவான நிலத்தின்’ நடப்பு மதிப்பு 300 மில்லியன் ரிங்கிட்…

பிஎன் -னுக்கு மலிவாக விற்கப்பட்டதாகக் கூறப்படும் சந்தை மதிப்பை 20 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 300 மில்லியன் ரிங்கிட்டாக செக்கிஞ்சாங் சட்ட மன்ற உறுப்பினர் இங் ஸ்வீ லிம் உயர்த்தியுள்ளார். அவர் முதலில் மொத்தம் 33.5 ஏக்கார் பரப்புள்ள நிலம் ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட் என்ற விலையில்…

‘விளம்பர ஆசை’ பிடித்த டிஏபி என பிஎன் சாடல்

எதிர்வரும் தேர்தலில் மீண்டும் வேட்பாளராகும் வாய்பைப் பெருக்கிக்கொள்ள தனது சட்டமன்ற உறுப்பினர்களைத் தயார்படுத்தும் டிஏபி-இன் முயற்சிமீது வெறுப்பைக் கொட்டுகிறது பிஎன். “மக்கள் தங்கள் எதிர்காலத்தை எந்தக் கட்சியிடம் ஒப்படைப்பது என்பதில் விழிப்பாக இருக்க வேண்டும்”, என்று கொம்டார் பிஎன் ஒருக்கிணைப்பாளர் லோ சை தெக் கூறினார். டிஏபி-இன் “உண்மை…

உத்துசானுக்கு எதிராக நுருல் இஸ்ஸா அவதூறு வழக்கு தொடுக்கிறார்

பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார்,  இம்மாதத் தொடக்கத்தில் சுபாங் ஜெயா  Full Gospel Tabernacle தேவாலயத்தில் தாம் பேசியதைத் திரித்துக் கூறியதாகக் குற்றம்சாட்டி அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவுக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். வழக்குப் பதிவு செய்ய தம் வழக்குரைஞரும் பாஸ்…

தமிழ்ப்பள்ளிகளின் சீரமைப்புக்கான குத்தகையாளர்கள் தேர்வு குறித்து IBC அதிருப்தி

இந்திய குத்தகையாளர்களுக்கு தமிழ்ப்பள்ளிகளை சீரமைப்பதற்கு குத்தகைகள் வழங்கியதற்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, குத்தகையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் வருத்தத்திற்குரியது என மலேசிய இந்தியர் கட்டுமானம் மற்றும் குத்தகையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் சு. சிவா கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்தாவது; கடந்த…

முடி திருத்துவோர் சர்ச்சை பக்காத்தானிலிருந்து டிஏபி விலக வேண்டும் என்ற…

சீனர் மற்றும் முஸ்லிம் அல்லாதவருடைய 'கௌரவத்தைக் காப்பாற்றும் பொருட்டு' பாஸ் 'திரும்பத் திரும்ப அத்துமீறல்களில்' ஈடுபடுவதால் டிஏபி பக்காத்தான் ராக்யாட்டிலிருந்து விலக வேண்டும் என மசீச கேட்டுக் கொண்டுள்ளது. "சீனர் மற்றும் முஸ்லிம் அல்லாதவருடைய கௌரவத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் பாஸ் தொடர்ந்து அத்துமீறல்களிலும் ஒடுக்குமுறையிலும் ஈடுபடுவதை தடுக்கும்…

வோங்: டெம்ப்ளர் பங்களா உரிமையாளர்களில் அம்னோ தலைவர்களும் அடங்குவர்

சிலாங்கூர் மாநிலச் சட்ட மன்றக் கூட்டத்தில் அம்னோ உறுப்பினர்கள் நேற்று எழுப்பிய டெம்ப்ளர் பார்க் என்ற சர்ச்சைக்குரிய திட்டத்தில் உள்ள பங்களா உரிமையாளர்களில் பல அம்னோ தலைவர்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்தப் பங்களா உரிமையாளர்களில் முன்னாள் அமைச்சர் ஒருவர், எம்பி ஒருவர், பல முன்னாள் மாநிலச் சட்ட மன்ற…

கல்வி அமைச்சு எழுத்துப்பூர்வமான பதிலை திருத்தியது

"இப்போது நீங்கள் பார்க்கின்றீர்கள், ஆனால் இப்போது நீங்கள் பார்க்க முடியாது" என்ற கதை நேற்று நாடாளுமன்றத்தில் நடந்தது. எழுத்துப்பூர்மாக வழங்கப்பட்ட கல்வி அமைச்சு பதில் மீட்டுக் கொள்ளப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது தான் அந்தக் கதை. சீன வாக்காளர்களுடைய எதிர்ப்பைத் தவிர்க்கும் பொருட்டு அவ்வாறு செய்யப்பட்டதாக கருதப்படுகின்றது. தனியார் பள்ளிகள்,…

‘கிறிஸ்துவர்களை முஸ்லிம்கள் என விருப்பம் போல சபா NRD பட்டியலிடுகிறது’

தேசியப் பதிவுத் துறை சபாவில் பின் அல்லது பிந்தி என்ற சொற்களைத் தங்களது பெயர்களில் கொண்டுள்ள கிறிஸ்துவர்களை முஸ்லிம்கள் என அவர்களுடைய அடையாளக் கார்டுகளில் விருப்பம் போல் குறிப்பது கடுமையாகக் குறை கூறப்பட்டுள்ளது. தேசியப் பதிவுத் துறை அதனைச் செய்யக் கூடாது என MCCBCHST என்ற மலேசிய பௌத்த,…

ராஜபக்சேவை மலேசியாவுக்குள் அனுமதிக்க கூடாது; அனுமதித்தால் முற்றுகைப் போராட்டம்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைப் போரை நடத்திய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, தமிழர்கள் வாழும் மலேசியாவில் கால் பதிக்க மலேசிய அரசு அனுமதிக்க கூடாது என்று சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைமையில் இன்று கிள்ளானில் ஒன்று கூடிய அரசு சார்பற்ற இயக்கங்கள் வலியுறுத்தின. ஒருவேளை, போர்க்குற்றவாளி…

அரசு சாரா அமைப்புக்களின் ஒரே மலேசியா நிகழ்வுக்கும் ‘அம்னோவுக்கும் தொடர்பு…

அரசு சாரா அமைப்புக்கள் வரும் சனிக்கிழமை ஏற்பாடு செய்துள்ள ஹிம்புனான் பாரிசான் சத்து மலேசியா நிகழ்வுக்கு அம்னோவுடனோ அல்லது எதிர்வரும் அம்னோ பொதுப் பேரவைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என அந்த நிகழ்வின் செயலகத் தலைவர் அகமட் மஸ்லான் இன்று கூறியிருக்கிறார். அந்த பேரணிக்கான தேதி தற்செயலானது என்றும்…

ஆண்டுக்கு 4,000 மலேசியர்கள் குடியுரிமையைக் கைவிடுகின்றனர்

1992க்கும் 2012 ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையில் மொத்தம் 81,950 பேர் தங்கள் மலேசியக் குடியுரிமையை கைவிட்டுள்ளதாக இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரி 4,097 பேர் குடியுரிமையை கைவிடுவதைக் குறிக்கிறது. அந்தத் தகவலை உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், புக்கிட் குளுகோர் எம்பி கர்பால் சிங்…

உள்துறை அமைச்சு ஸ்பீட் கேமிராக்களுக்கு 10 மடங்கு கூடுதலாக விலை…

அமெரிக்காவில் உள்ள மூன்று மாநிலங்களின் அரசாங்கங்களுக்கு விநியோகிப்பாளர்கள் வழங்கிய லேசர் கேமிராக்களுக்கான மதிப்பீட்டு விலைப் பட்டியலுடன் ( Quotations ) ஒப்பிட்டால் உள்துறை அமைச்சு அந்த கேமிராக்களுக்கு 10 மடங்கு கூடுதலாக விலை கொடுத்திருக்க வேண்டும் என பாஸ் பொக்கோக் செனா உறுப்பினர் மாஹ்புஸ் ஒமார் இன்று மக்களவையில்…

சுவாராம்: அனுமதி உண்டோ இல்லையோ பிரெஞ்ச் வழக்குரைஞர்கள் வருவது உறுதி

ஆளும் கட்சித் தலைவர்கள் அனுமதி அளிக்கத் தயங்கினாலும் சுவாராமைப் பிரதிநிதிக்கும் இரு வழக்குரைஞர்கள் மலேசியா வர முயல்வார்கள். அவர்களின் விளக்கமளிப்பு “நிச்சயம் உண்டு” என்று கூறிய சுவாராம் இயக்குனர் சிந்தியா கேப்ரியல், நவம்பர் 29-இல், நாடாளுமன்றக் கூட்டம் முடிவடைவதற்குள் அவர்கள் வந்து சேர்வார்கள் என்றார். ஆனால், என்று வருவார்கள்…

நாடாளுமன்றக் கூட்டம் நவம்பர் 29வரை நீட்டிப்பு

நவம்பர் 27-இல் முடிவடைய வேண்டிய 12வது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணையின் மூன்றாவது கூட்டம் மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சில சட்டவரைவுகளையும் அரசாங்க விவகாரங்களையும் இறுதி செய்வதற்கு வசதியாக அக்கூட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலை ஆணை 11(2)-இன்கீழ் மக்களவைக் கூட்டம் நீட்டிக்கப்படுவதாக அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா அறிவித்தார்.…

பினாங்கில் டிஏபி பேராளர் கூட்டம்

அடுத்த மாதம் டிஏபி பேராளர் கூட்டம் பினாங்கில் நடைபெறுவது பார்வையாளர்களுக்கு வியப்பளிக்கலாம். அது, 13வது பொதுத் தேர்தலில் கடும் போட்டியை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்பதால் அதற்காக கட்சியை பலப்படுத்தும் ஒர் உத்தி என்றவர்கள் கருதுகின்றனர். இது டிஏபி கட்சித் தேர்தல்கள் நடைபெறும் ஆண்டாகும்.அந்த வகையில் புக்கிட் குளுகோர்…