சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) நாடு முழுவதும் உள்ள 37 புஸ்பகம் வாகனத் தணிக்கை மையங்களில் சோதனைகளை நடத்தியது, இதன் விளைவாகச் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 ஐ மீறிய வணிக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. RTD இயக்குநர் ஜெனரல் ஏடி ஃபேட்லி ரம்லி கூறுகையில், Ops Khas…
தேர்தலுக்கு உதவி கோரி அன்வார் விடுத்த வேண்டுகோளை ஆஸ்திரேலியா நிராகரித்தது
மலேசிய எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தேர்தல் உதவி கோரி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்த போதிலும் மலேசியத் தேர்தல்கள் எப்படி நடத்தப்பட வேண்டுமென ஆஸ்திரேலியா சொல்லாது, சொல்லவும் முடியாது என ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் செனட்டர் பாப் கார் கூறியிருக்கிறார். பெரும்பாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்படும்…
செரண்டா தமிழ்ப்பள்ளி: இழுத்தடிப்பது முறையாகாது, தலைவர்களே!
செரண்டாவில் ஒரு தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கு அளிக்கப்படிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி விடுத்து நேற்று இரவு தொடங்கி உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ள பள்ளி வாரியத் தலைவர் இராம ராவ் மற்றும் அவரது குழுவினரின் அர்ப்பணிப்பு உணர்வை மதிக்கிறோம் என்று உண்ணாவிரதப் போராளிகளைச் சந்தித்த சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர்…
செரண்டா தமிழ்ப்பள்ளி: வாரிய உறுப்பினர்களின் உண்ணாவிரதம் முடிவுற்றது
செரண்டாவில் ஒரு தமிழ்ப்பள்ளியைக் கட்டுவதற்கு பிரதமர் நஜிப் ரிம1 மில்லியன் அளிப்பதாக உலுசிலாங்கூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலின் போது ஏப்ரல் 10, 2010 இல் வாக்குறுதி அளித்தார். இரண்டு ஆண்டு ஏழு மாதங்களாகியும் பிரதமர் நஜிப் அவரது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. "நம்புங்கள்" என்ற கூறிய நஜிப்பை நம்பி இவ்வளவு…
‘அடுத்த சிலாங்கூர் மந்திரி புசாராவது பற்றி அதிகம் கனவு காண…
பிகேஎன்எஸ் என்ற சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் மீது விருப்பம் போல் குற்றச்சாட்டுக்களை வெளியிடும் அளவுக்கு அடுத்த சிலாங்கூர் மந்திரி புசாராவது குறித்து விவசாய அமைச்சர் நோ ஒமார் 'அதிகம் கனவு காணக் கூடாது," என புக்கிட் அந்தாராபாங்சா சட்டமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி கூறுகிறார். பிகேஎன்எஸ் துணை…
சிறைச்சாலையின் ‘கவனக்குறைவை’ விசாரிக்க வேண்டும் என்கிறார் ஒரு தாய்
கடந்த அக்டோபர் மாதம் காஜாங் சிறையில் நிகழ்ந்த ஆர். குமாரராஜாவின் இறப்புக்குச் சிறை அதிகாரிகளின் கவனக்குறைவுதான் காரணம் என்று கூறி அதை போலீசார் விசாரிக்க வேண்டும் என்று அவரின் தாயார் வலியுறுத்தியுள்ளார். அதன் தொடர்பில், இன்று டாங் வாங்கி போலீஸ் மாவட்டத் தலைமையகத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்த…
ஹாடி பிரதமர் என்பது மீதான வாக்குவாதத்திற்கு முடிவு கட்ட பாஸ்…
பக்காத்தான் ராக்யாட்டின் எதிர்காலப் பிரதமர் குறித்த பிரச்னை தொடர்பில் சில நாட்களாக பிஎன் ஆதரவு ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்த பின்னர் அந்த வாக்குவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த விஷயம் மீது கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறிய கருத்துக்களுக்கு அந்த ஊடகங்கள்…
பெங்கேராங் குடியிருப்பாளர்கள் நாடாளுமன்றத்தின் செய்தியாளர் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்
தங்கள் முன்னோர்களின் புதைகுழிகளை இடமாற்றும் நடவடிக்கையைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் கையெழுத்து சேகரிக்கும் இயக்கம் பற்றி பெங்கேராங் குடியிருப்பாளர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் (பிசி) ஊடகங்களிடம் பேச முயன்றபோது அங்கிருந்து அகற்றப்பட்டனர். அங்கிருந்து நகர மறுத்த என்ஜிஓ-தலைவர் சிம் செங் சானை நாடாளுமன்ற காவலர்கள் வலுக்கட்டாயமாக…
அமைச்சர் பதிலளிக்க மறுத்ததால் பாடுங்கான் பிரதிநிதி ஆத்திரம்
பாடுங்கான் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் வோங் கிங் வை, டாயாக் இனச் சிறார்களுக்கு வலுக்கட்டாயமாக இஸ்லாமிய கல்வி போதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு மாநில சமூகநலன். மகளிர், குடும்ப மேம்பாட்டு அமைச்சர் பாத்திமா அப்துல்லா பதிலளிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்துள்ளார். “அப்படிக் கூறப்படுவது உண்மையா என்று கேட்டிருந்தேன்”, என்று வோங் செய்தியாளர்களிடம்…
பணம் கொடுக்க முன் வந்தது பற்றிப் புகார் செய்யுங்கள்
நான்கு ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் தொடர்பில் சமர்பிக்கப்பட்ட போலீஸ் புகாரை மீட்டுக் கொள்வதற்கு ஆசிரியர்கள் அந்தப் பிள்ளைகளுடைய குடும்பங்களுக்குப் பணம் கொடுக்க முன் வந்ததாக கூறப்படுவது மீது முறையாகப் புகார் செய்யுமாறு சம்பந்தப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களை கல்வித் துணை அமைச்சர் புவாட் ஸார்க்காஷி கேட்டுக்…
‘மறைக்கப்பட்ட கூட்டரசுக் கடன் பெருகுவதை மதிப்பீட்டு நிறுவனம் மெய்பித்துள்ளது’
கூட்டரசு அரசாங்கம் தனது கடன்களை அதிகாரத்துவ ஐந்தொகைக் கணக்கிலிருந்து ( balance sheet ) மறைப்பதற்கு முயற்சி செய்வதை Fitch Ratings என்ற உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை உறுதி செய்வதாக டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுச் செயலாளர் டோனி புவா கூறுகிறார். கூட்டரசு அரசாங்கம்…
பசுமை ஊர்வலத்தினர் பிரதமருக்காக டாத்தாரான் மெர்தேக்காவில் காத்திருப்பர்
லினாஸ் எதிர்ப்பு பசுமை நடையை ஏற்பாடு செய்துள்ளவர் அதன் திட்டத்தில் சிறிய மாற்றத்தைச் செய்துள்ளார். பசுமை ஊர்வலத்தினர் 300 கிலோமீட்டர் தொலைவை 14 நாட்களில் கடந்த பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க டாத்தாரான் மெர்தேக்காவை ஞாயிற்றுக் கிழமை அடைந்ததும் அங்கு முகாம்களை அமைத்துக் கொள்வர். அடுத்த நாள் காலை தங்களைப்…
‘தமிழ்ப்பள்ளிகளின் UPSR அடைவுநிலை 80 விழுக்காட்டாக இருக்க வேண்டும்’
7A பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு ஒரு தமிழ்ப்பள்ளியின் தரத்தை நிர்ணயிக்கக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 மாணவர்கள் UPSR தேர்வுக்கு அமருகின்றனர். இதில் 1045 மாணவர்கள் 7A பெற்றுள்ளனர். இவ்வாண்டு தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி விவரம் கிடைக்கப்படவில்லையென்றாலும், 50 விழுக்காட்டு மாணவர்கள் மட்டுமே தேர்வுக்கு அமர்ந்த ஏழு…
உங்கள் கருத்து: ‘நீதித் துறை சுதந்திரம், யார் பேசுவது பார்த்தீர்களா…
'தலைமை நீதிபதி இன்னும் நிறைய செய்ய முடியும். அவர் தமது பதவிக்கு இன்னும் எஞ்சியுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசமைப்பைப் பின்பற்றுமாறு பிரதமருக்கு ஊக்கமூட்ட முடியும்' நீதித் துறை சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறு தலைமை நீதிபதி பிரதமருக்கு வேண்டுகோள் அடையாளம் இல்லாதவன்_4031: சட்ட ஆட்சி முறை எப்போதும் நிலை நிறுத்தப்பட வேண்டும்…
மிஞ்ஞாக் செரண்டா தமிழ்ப்பள்ளி: வாரிய உறுப்பினர்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்
மிஞ்ஞாக் செரண்டா தமிழ்ப்பள்ளிக்கு புதிய மூன்று மாடி கட்டடம் கட்டுவதற்கு ரிம5.5 மில்லியன் நிதி வழங்க அளித்திருந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் முன்னதாக அறிவித்திருந்தவாறு அப்பள்ளியின் வாரியக்குழு உறுப்பினர்கள் எழுவர் இன்று நள்ளிரவு மணி சரியாக 12.00 க்கு தங்களுடைய சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். செரண்டாவில் தமிழ்ப்பள்ளி…
எம்பி: பாஸ் வெற்றி பெற்ற மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் வீழ்த்த விரும்புகிறது
அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் (ஜிஎல்சி) தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் முதுநிலை நிர்வாகிகளுக்கு கொடுக்கப்படும் அதிகமான சம்பளம், போனஸ் குறித்து பாஸ் எம்பி-க்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் பாஸ் தாக்க விரும்புவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாபோங் ஹாஜி தலைமை நிர்வாக அதிகாரி இஸ்மி இஸ்மாயில்…
பெட்ரோலியத் தொகைகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்படும்
தீவகற்ப மலேசியாவில் கிழக்குக் கரை மாநிலங்களுக்கு பெட்ரோலிய வருமானத்திலிருந்து ரொக்கத் தொகையை வழங்குவது மீது நியாயமான, வெளிப்படையான ஆய்வை மேற்கொள்வதற்குச் சிறப்புக் குழு ஒன்றை அமைக்க கூட்டரசு அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. பிரதமர் அலுவலகம் இன்று விடுத்த அறிக்கை அந்தத் தகவலை வெளியிட்டது. அந்தக் குழுவுக்கு முன்னாள் தலைமை…
‘சிலாங்கூரில் 20 மில்லியன் ரிங்கிட் பெறும் நிலங்களை பிஎன் அபகரித்துக்…
சிலாங்கூரில் பாரிசான் நேசனல் நிலங்களை அபகரித்துக் கொண்டது என செக்கிஞ்சாங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இங் ஸ்வீ லிம் குற்றம் சாட்டியுள்ளார். "அது 20 துண்டு நிலங்களை அதன் சந்தை மதிப்பு மொத்தம் 20 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த போதிலும் ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட் என்ற…
கொண்டோ திட்டம்: லியு பதவி விலகத் தயாரா என்று சக…
பத்து மலை இந்து கோயிலுக்கு அருகில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்ச்சைக்குரிய 29-மாடி கொண்டோமினிய திட்டம் இரத்துச் செய்யப்படவில்லை என்றால், டிஏபி சகாவும் ஊராட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினருமான ரோனி லியு பதவி துறப்பாரா என்று ஒரு கேள்வியைப் போட்டு எம். மனோகரன் (டிஏபி- கோத்தா ஆலம் ஷா) மாநிலச்…
அம்னோ: பிஎன் தேர்ந்தெடுக்கப்படவில்லை; அதனால் கிள்ளானுக்குப் பாலம் கிடைக்கவில்லை
பிஎன் மத்திய அரசாங்கத்தால் வாக்குறுதி அளித்தபடி கிள்ளானில் பாலம் கட்டித்தர முடியாமல் போனதற்கு அது சிலாங்கூரில் தேர்ந்தெடுக்கப்படாததுதான் காரணமாகும் என்று சிலாங்கூர் மாற்றரசுக் கட்சித் தலைவர் சதிம் டிமான் இன்று விளக்கினார். மாநில பக்காத்தான் அரசு “வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்று சதிம் (இடம்) திரும்பத் திரும்ப இடித்துரைத்ததைத் தொடர்ந்து…
ரிம45 பில்லியன் கடனை ‘நல்ல முறையில்’ திரும்பப் பெற பிடிபிடிஎன்…
வரவேண்டிய பணத்தில் பாதி வராமல் நிற்கும் வேளையில் அதைத் திரும்பப் பெற தேசிய உயர்கல்வி நிதி(பிடிபிடிஎன்) கடுமையான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்றுதான் எவரும் நினைப்பர். ஆனால், பிடிபிடிஎன்னைப் பொறுத்தவரை அதை “நல்ல முறையில்” திரும்பப் பெறவே விரும்புகிறது என்கிறார் அதன் தலைமை செயல் அதிகாரி அகோஸ் சோலான்.…
மகாதிர்: ‘அன்வாரைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே டிஏபி அவரை ஆதரிக்கிறது’
டிஏபி, மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறது அதனாலேயே அவரை ஆதரிக்கிறது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார். முன்னாள் பேராக் மந்திரி புசாரை ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட மகாதிர், மாநிலச் சட்டமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெற்றிருந்த…
ஜெலபாங் தொகுதி மீது பக்காத்தான்-பிஎஸ்எம் கருத்து வேறுபாடு
பேராக் ஜெலபாங் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது மீது பக்காத்தான் ராக்யாட்டுக்கும் அதன் தோழமைக் கட்சியான பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் பிஎன் -உடன் நேரடிப் போட்டியில் இறங்க பிஎஸ்எம் விரும்பும் வேளையில் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதில்…
‘9/11 தாக்குதல் மீது விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்’
9/11 தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிய ஒர் அனைத்துலக விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என ஒர் அனைத்துலக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று கேட்டுக் கொள்கிறது. நியூயார்க்கின் இரட்டைக் கோபுரக் கட்டிடம் இடிந்து விழுந்த அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மறைக்கப்பட்ட விஷயங்கள் ஏதும் உள்ளதா…