கடந்த ஆண்டில், அந்த நிதியம் முதலாளிகளுக்கு எதிராக 3,530 சிவில் வழக்குகளைத் தாக்கல் செய்ததுடன், 6,011 வழக்குகளில் குற்றவியல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. "ஊழியர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மொத்தம் 21,029 புகார்களில், 2025-ஆம் ஆண்டில் 8,868 நிலுவைப்பணிக் கூடுதல் (contribution arrears) வழக்குகள் தீர்க்கப்பட்டதாக ஊழியர் சேமநிதி வாரியத்தின் (EPF) தலைமைச்…
சுகாதார அமைச்சர்: பினாங்கு மருத்துவர்கள் இனவாதிகள் அல்ல
பினாங்கில் மலாய் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இனவாத மருத்துவர்கள் 'மறுத்துள்ளதாக' கூறப்படும் புகார்களை சுகாதார அமைச்சு விசாரித்துள்ளது. அந்த விஷயத்தில் இனவாத அம்சம் ஏதுமில்லை என சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் கூறியுள்ளார். "அது இனவாதமாகத் தெரியவில்லை. என்றாலும் தொடர்புகள் மோசமாக இருந்ததற்கான அம்சங்கள் காணப்படுகின்றன. மருத்துவர்கள்…
தந்தை: அவர்கள் சஞ்சீவனைக் கொல்ல முயலுவர் என நான் எதிர்பார்க்கவில்லை
மை வாட்ச் தலைவர் ஆர் ஸ்ரீ சஞ்சீவன் கொலை முயற்சிக்குப் பின்னர் செர்டாங் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் வேளையில் அவரது நண்பர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளனர். சஞ்சீவனுடைய சக தோழரும் அந்த குற்றச் செயல் கண்காணிப்பு அமைப்பின் ஆலோசகருமான எஸ் கோபி கிருஷ்ணன், மருத்துவமனைக்குச்…
அமைச்சர், துணை அமைச்சர்கள் நியமனம் சட்டப்படிச் செல்லுமா? நாளை விசாரணை
கடந்த மே மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக (செனட்டர்களாக) இல்லாத ஐவர் அமைச்சர்களாகவும், துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டது சட்டப்படிச் செல்லாது என்று டிஎபி பாரட் ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். அமைச்சர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அப்துல் வாஹிட் ஒமார் மற்றும் பால் லோ…
உதயாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லையா? மறுக்கிறது சிறைத்துறை
பி. உதயகுமாருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என ஒரு நாளேட்டிலும் வலைப்பதிவிலும் வெளிவந்த தகவலை சிறைத்துறை மறுத்துள்ளது. உதயகுமார் நீதிமன்றத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி என்று சிறைத்துறை கொள்கைப்பிரிவு துணை இயக்குனர் சுப்ரி ஹஷிம் கூறினார். மற்ற கைதிகள் போலத்தான் அவரும். “சிறை மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக்கு…
எச்எம் மாணவர்களை நோக்கி ‘பாலேக் இந்தியா, பாலேக் சீனா’ என்றாராம்
குளியலறை சிற்றுண்டி நிலையமாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரம் ஓயவில்லை. அதற்குள் ஷா ஆலம் இடைநிலைப் பள்ளி ஒன்றில் கடந்த திங்கள்கிழமை ஒரு தலைமையாசிரியர் மாணவர்களை இன ரீதியாக இழிவுபடுத்தியுள்ளார். “தாம் உரையாற்றிக்கொண்டிருந்தபோது மாணவர்கள் அதிகம் சத்தமிட்டதால் தலைமையாசிரியர் சினமடைந்தார். “எல்லா மாணவர்களையும் திட்டிய அவர் இந்திய, சீன மாணவர்களை…
சாப்ரி: முன்னோட்டத்தை மட்டும் பார்த்து விட்டு ‘புதுக் கிராமம்’ படத்தை…
முன்னோட்டத்தின் அடிப்படையில் 'புதுக் கிராமம்' திரைப்படம் பற்றி தீர்ப்புக் கூறுவது நியாயமாகாது என தொடர்பு, பல்லூடக அமைச்சர் அகமட் சாப்ரி சிக் கூறுகிறார். அதன் தலைவிதி குறித்து 'நியாயமான' முடிவு எடுக்கப்படுவது முக்கியம் என அவர் சொன்னார். 'தண்டா புத்ரா' திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த பின்னர் டிஏபி மூத்த…
செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் சஞ்சீவன்
துப்பாக்கியால் சுடப்பட்டு சிரம்பான் துவாங்கு ஜாப்பார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த மைவாட்ச் தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவன், செர்டாங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மூன்று போலீஸ் வாகனங்களின் பாதுகாப்புடன் அம்புலன்ஸ் வண்டி ஒன்றில் மாலை மணி 4.30க்கு அவர் செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். உடனடியாக அவசரச் சிசிச்சை பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு அவருக்கு…
ஐஜிபி: ‘சஞ்சீவன் சுடப்பட்டதற்கு அவசரப்பட்டு போலீஸ்மீது பழிபோடாதீர்’
ஆர்.ஸ்ரீசஞ்சீவன்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சிக்குப் போலீசைக் குறை சொல்ல வேண்டாம் என தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கேட்டுக்கொண்டிருக்கிறார். “மைவாட்ச் தலைவர் சுடப்பட்டதற்கு போலீஸ்தான் காரணம் என்று அவசரப்பட்டு குற்றம் சாட்டாதீர்கள்”. இன்று காலை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் காலிட் செய்தியாளர்களிடம் பேசினார். அதில்…
போலீஸ் குறிப்பை அம்பலப்படுத்தவிருந்தாராம் சஞ்சீவன்
கடந்த வாரம் நெகிரி செம்பிலானில் சுடப்பட்ட குற்றத் தடுப்பு ஆர்வலர் ஆர். ஸ்ரீசஞ்சீவன், போதைப் பொருள் கும்பல்களுடன் தொடர்புள்ள போலீஸ் அதிகாரிகள் பற்றி விவரங்கள் அடங்கிய குறிப்பு ஒன்றை இவ்வாரம் அம்பலப்படுத்த விருந்தார். இதனைத் தெரிவித்த பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, “அது போலீசிலிருந்து பெறப்பட்ட இரகசிய…
‘தாம் மாட்டி விடப்படுவதாக தலைமறைவாக இருந்த போலீஸ்காரர் சொல்வது விசாரிக்கப்படும்’
தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த என் தர்மேந்திரன் கொலையில் தாம் மாட்டிவிடப்படுவதாக இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் கூறிக் கொண்டுள்ளது பற்றி விசாரிக்கப்படும் என தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் கூறுகிறார். "நாங்கள் அதனை புலனாய்வு செய்வோம். நான் ஏற்கனவே சொன்னது போல நாங்கள்…
ஹரி கிருஷ்ணன் தப்பியோடவில்லை என்கிறார் அவரின் மனைவி
தடுப்புக்காவலில் இறந்துபோன என். தர்மேந்திரன் வழக்கில் சம்பந்தமுள்ளவர் எனச் சந்தேகிக்கப்படும் நாலாவது நபரான இன்ஸ்பெக்டர் எஸ். ஹரிகிருஷ்ணன் எங்கும் தப்பியோடவில்லை என அவரின் துணைவியார் இன்று கூறினார். இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டதால், விடுப்பில் இருந்த ஹரிகிருஷ்ணன் விடுப்பு முடிந்ததும் வேலைக்குத் திரும்பவில்லை என்று ஷார்மினி பாலகிருஷ்ணன்(படத்தில் வலம் இருப்பவர்) மலேசியாகினியிடம்…
பொதுத் தேர்தல் மனுதாரர்களுக்கு விதிக்கப்படும் செலவுத் தொகைத் தண்டனை ‘ஒடுக்குமுறையானது’
13வது பொதுத் தேர்தல் மனுக்களை நிராகரிக்கும் தேர்தல் நீதிமன்றங்கள் மனுதாரர்கள் கொடுக்க வேண்டும் என ஆணையிடும் செலவுத் தொகை தண்டனை மிகவும் அதிகமாக இருப்பதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சொல்கிறார். 'ஒடுக்குமுறையான' அந்த செலவுத் தொகை தண்டனை மனுக்கள் கொடுக்கப்படுவதை தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.…
லிம்: ‘கம்யூனிஸ்ட்களுடன் கைரிக்கு உள்ள பிணைப்பை அம்னோ இளைஞர் பிரிவு…
கம்யூனிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் அம்னோ இளைஞர் பிரிவு, அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா ஆகியவற்றின் உண்மையான நிலை குறித்து டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.. பாரிசான் நேசனல் இளைஞர் பிரிவுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் அணிக்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்த…
வலிய கூட்டத்துக்கு எதிராக தன்னந் தனியராக பழனிவேல்
ஜி. பழனிவேலும் டாக்டர் எஸ். சுப்ரமணியமும் மோதத் தயாராகும் மஇகா தேர்தல் பேரார்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இப்போதைக்குத் தேர்தல் களத்தில் பழினிவேல் தன்னந்தனியாக நிற்பதுபோல் தெரிகிறது. அவருக்கு எதிராக சுப்ரமணியம், வி. சரவணன் தலைமையில் வலுவான அணி ஒன்று திரண்டுள்ளது. சரவணன், பழனிவேலைக் கவிழ்க்கும் பரப்புரையில் முழுமூச்சாக இறங்கியுள்ளார்.…
தப்பியோடிய போலீஸ் அதிகாரி சரண், நாளை குற்றம்சாட்டப்படுவார்
போலீஸ் காவலில் இறந்துபோன என். தர்மேந்திரன் வழக்கில் சம்பந்தமுள்ளவர் எனச் சந்தேகிக்கப்படும் நாலாவது நபர் சரணடைந்துள்ளார். ஹரி கிருஷ்ணன், இன்று காலை மணி 10.30க்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் சரணடைந்தார். நாளை அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.…
சஞ்சீவன் மருட்டல் குறித்து ‘போலீசில் புகார் செய்யவில்லை’
சனிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிர் பிழைத்துள்ள மை வாட்ச் அமைப்புத் தலைவர் ஆர் ஸ்ரீ சஞ்சீவன் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது போல தமக்கும் தமது குடும்பத்துக்கும் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மருட்டல் குறித்து போலீசில் புகார் செய்யவில்லை என நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் படைத்…
இசி-யைபோன்று ஆர்ஓஎஸ்ஸும் பிஎன்னின் ஏவலர்போல நடந்துகொள்கிறது
உங்கள் கருத்து ‘டிஏபி உறுப்பினர்கள் பிரிந்து சென்று புதிய கட்சி அமைக்கட்டும், அமைக்காமல் போகட்டும். அரசாங்கப் பணியாளரான ஆர்ஓஎஸ் இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மானுக்கு என்ன வந்துவிட்டது?’. உறுப்பினர்கள் புதிய கட்சியை விரும்புவதை நிரூபியுங்கள்: ஆர்ஓஎஸ்ஸுக்கு டிஏபி சவால் ஆரிஸ்46: சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்) இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மானின்…
அம்னோ மகளிர் தலைவி பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு ஷாரிஸாட்டுக்கு வேண்டுகோள்
ஷாரிஸாட் அப்துல் ஜலில் அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என அந்தப் பிரிவின் முன்னாள் செயலாளர் பாரிடா அபு ஹசான் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்தப் பதவிக்கு முன்னாள் புத்ரி தலைவு அஸாலினா ஒஸ்மான் தொடுத்துள்ள சவாலைத் தடுக்க "தாய்-மகள் உறவுகளில் பிளவு" போன்ற…
‘கூடா’ (Kuda) மய்யங்களை மூடுமாறு ‘உத்தரவு’ பிறப்பிக்கப்பட்டுள்ளது
‘kedai mesin kuda’ என அழைக்கப்படும் சட்ட விரோத சூதாட்ட மய்யங்களை மூடுமாறு நாடு முழுவதும் 'உத்தரவு' பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நன்யாங் சியாங் பாவ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. யார் அந்த உத்தரவைப் பிறப்பித்தது என்பதை அந்தச் செய்தி குறிப்பிடவில்லை என்றாலும் அது அரசியல் நோக்கம் கொண்டது என்றும் நடப்பு…
அம்னோ தேர்தல் நெருங்குகிறது, அதிகமான இனவாதக் ‘கடிகளை’ எதிர்ப்பார்க்கலாம்
"அம்னோ பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களின் கைப்பாவை என்ற உண்மையான வரலாற்றை காட்டும் திரைப்படத்தை யாராவது தயாரிக்க வேண்டும்" சீனர் புதுக் கிராமம் பற்றிய திரைப்படத்தை அம்னோ இளைஞர் பிரிவு சாடுகின்றது சிவிக்: நான் அந்த 'புதுக் கிராமம்' திரைப்படத்தைப் பார்க்கவில்லை. ஆகவே நான் அது குறித்து எதுவும் சொல்லப் போவதில்லை.…
சஞ்சீவனை கொலை செய்ய விரும்புவது யார் ? ஏகே ஆனந்த்
தகவல்களை அம்பலப்படுத்தும் ( whistleblower ) ஆர் ஸ்ரீ சஞ்சீவனைக் கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் உள்துறை அமைச்சும் போலீசும் சம்பந்தப்பட்டுள்ளனரா ? அந்தக் கேள்வியை மலேசிய இந்து இயக்கத் தலைவர் எஸ் சஞ்சய் எழுப்பியுள்ளார். குற்றச் செயல்களைக் கண்காணிக்கும் மை வாட்ச் அமைப்புத் தலைவர் மீது சனிக்கிழமை…
‘புதுக் கிராமம்’ ( ‘The New Village’ ) திரையீடு…
'புதுக் கிராமம்' ( 'The New Village' ) என்னும் திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திரைப்படத் தணிக்கை வாரியம் அந்தப் படத்தை மறு ஆய்வு செய்வதற்கான அதன் திரையீடு ஒத்தி வைக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். அந்தத் திரைப்படத்தின் கரு, செய்தி ஆகியவற்றின்…
சஞ்சீவன் கூறிக் கொண்டுள்ள போக்கிரி போலீஸ்காரர் விஷயத்தை விசாரிப்பதாக ஐஜிபி…
மை வாட்ச் எனப்படும் குற்றத் தடுப்பு அரசு சாரா அமைப்புத் தலைவர் ஆர் சஞ்சீவன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலையும் தம்மை மடக்குவதற்கு போக்கிரி போலீஸ்காரர்கள் முயலுவதாக அவர் கூறிக் கொண்டுள்ளதையும் முழுமையாக விசாரிப்பதாக தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் வாக்குறுதி அளித்துள்ளார்.…


