மலேசியாவின் பொருளாதாரம், மூலோபாய முதலீடு, வலுவான நிதி மேலாண்மை மற்றும் பொருளாதார பின்னடைவு ஆகியவற்றின் ஆதரவுடன் 2025 ஆம் ஆண்டில் ஐந்து சதவீதத்திற்கும் மேலான நிலையான வளர்ச்சியைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் அமீர் ஹம்சா அஜிசான், மலேசியாவின் மொத்த உள்நாட்டு…
பாஸ்: ‘பிசாசுகள் கட்சி’ பற்றி டாக்டர் மகாதீரே விளக்க முடியும்
பாஸ் கட்சியின் இன்றைய ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வருணிக்கப்பட்ட 'பிசாசுக் கட்சி' பற்றிய விளக்கத்தை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மட்டுமே தர முடியும் என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறியுள்ளார். "மகாதீரைப் போய்க் கேளுங்கள். அதனைச் சொன்னது மகாதீர், அந்த சொல்லை உருவாகியவர்…
அம்னோ சேவை மையத்தில் சாயம் வீசியடிக்கப்பட்டது
புக்கிட் அந்தாராபங்சாவில் உள்ள அம்னோ சேவை மையம்,காலிகளின் அட்டகாச செயல்களுக்கு இலக்காகியுள்ளது. அதன்மீது Read More
சிஎம்: டிஏபி தலைவரின் முடிவை வைத்தே வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்
முதலமைச்சர் லிம் குவான் எங், பெங்காலான் கோட்டா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் லாவ் கெங் ஈ-ஐ மீண்டும் வேட்பாளராக நிறுத்துவதா, இல்லையா என்பதை முடிவு செய்யுமுன்னர் லாவின் அடைவுநிலை குறித்து மாநில டிஏபி தலைவர் சொள கொன் இயோ-வின் கருத்தை அறிந்துகொள்ள விரும்புகிறார். எனவே, லாவ் மீண்டும் போட்டியிட விரும்பினால்,…
கைரி கட்சிப் பதவியைத் தற்காக்கப் போட்டியிடுவார் ஆனால் தேர்தலில் போட்டியிடுவது…
அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் கைரி ஜமாலுடின் அபு பக்கார், கட்சிப் பதவியைத் தற்காக்க போட்டியிடுவார் ஆனால் பொதுத் தேர்தலில் களமிறங்குவதில் அவருக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. தம் விருப்பத்தை கைரி அல்லது கேஜே என்று சுருக்கமாக அழைக்கப்படும் அவர், பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக்கிடம்…
பிஎன் உண்மையான அரசியல் மாற்றத்துக்கு தயாராக இல்லை என்கிறார் ஒர்…
2008 பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்ததற்கு அம்னோ வழி நடத்தும் பிஎன் உண்மையான அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரும் ஆற்றலைக் கொண்டிராததே காரணம் என புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. "மலேசியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை" என்னும் தலைப்பைக் கொண்ட அந்தப்…
பக்காத்தானுடன் இணைந்து மலேசியாவை ஆட்சி செய்ய பாஸ் தயார் என…
பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து கூட்டரசு அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதற்கு பாஸ் கட்சி தயாராக இருக்கிறது. இவ்வாறு அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பிரகடனம் செய்துள்ளார். அவர் இன்று அந்தக் கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் (முக்தாமார்) பேசினார். அடுத்த பொதுத் தேர்தலுக்கு முந்திய, கட்சியின்…
உங்கள் கருத்து: “போலீஸ் படை இப்போது சமயக் காவலனா ?”
'சட்டத்தின் காவலன் என அழைக்கப்படும் ஒர் அமைப்பு இப்போது சட்டத்தின் காவலனாக இப்போது இல்லை. அது பல்வேறு சமயங்களின் காவலனாகத் திகழ்கின்றது' கடிதம் தொடர்பாகப் போலீசார் கருத்தரங்கு கூட்டு ஏற்பாட்டாளரை விசாரித்தனர் சீ ஹோ சியூ: சமயத்தில் கட்டாயம் இல்லை என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா…
பினாங்கு துணை முதலமைச்சர் மான்சோர் நிபோங் தெபாலில் போட்டி
பினாங்கு மாநில முதலாவது துணை முதலமைச்சர் மான்சோர் ஒஸ்மான் பிகேஆர் வேட்பாளராக நிபோங் தெபால் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். அந்த இடத்தை 2008 தேர்தலில் தான் தீ பெங் வென்றார். ஆனால் அவர் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக…
எம்பிஎஸ் தலைவர் மாற்றம் சட்டவிரோதமானது
ஓர் ஊராட்சிமன்ற தலைவரை மாற்றும் அதிகாரம் பொதுச்சேவை இலாகாவுக்கு (பிஎஸ்டி) இல்லை என்று செலயாங் முனிசிபல் கவுன்சில் கூறுகிறது. அந்த இலாகா நேற்று செலயாங் முனிசிபல் கவுன்சில் தலைவர் ஸைனால் அபிடின் அலலாவை இந்தான் என்று அழைக்கப்படும் தேசிய பொதுநிர்வாக கழகத்திற்கு மாற்றியது ஊராட்சி சட்டம் 1976 ஐ…
பினாங்கில் வீடு ஒன்று இடிக்கப்பட்டது தொடர்பில் அன்வார் நகராட்சி மன்றத்தைச்…
பினாங்கு மாநில அரசாங்கத்தின் உத்தரவு ஏதுமில்லாமல் ஜார்ஜ் டவுன் லெங்கோக் சுங்கை குளுகோரில் 72 வயதான ஒருவர் தங்கியிருந்த வீட்டை இடித்ததற்காக பினாங்கு நகராட்சி மன்றம் கடுமையாக சாடப்பட்டுள்ளது. நகராட்சி மன்றத்தின் தன்மூப்பான நடவடிக்கையைக் கண்டித்த எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், பெரிய வீடுகள் உடைக்கப்படுவதிலிருந்து தப்பி விடுகின்றன…
இன்னொரு இந்தோனிசிய வீட்டுப் பணிப் பெண் துன்புறுத்தப்பட்ட சம்பவத்தைப் போலீஸ்…
மலேசியப் போலீசார், ஆடவர் ஒருவர் தம்மிடம் வேலை செய்த இந்தோனிசிய வீட்டுப் பணிப் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே இந்தோனிசிய வீட்டுப் பணிப் பெண் ஒருவர் மூன்று போலீஸ்காரர்கள் தம்மை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். அந்த சம்பவங்கள்…
பிரான்ஸ் செம்பனை எண்ணெய் மீதான வரியை நான்கு மடங்கு உயர்த்த…
பிரஞ்சு மேலவை செம்பனை எண்ணெய் மீதான வரியை நான்கு மடங்கு உயர்த்துவதற்கு வகை செய்யும் நட்டெல்லா திருத்தம் என அழைக்கப்படும் சட்டத் திருத்தத்தை அங்கீகரித்துள்ளது. அதிகக் கொழுப்புச் சத்து நிறைந்த அந்த எண்ணெய் பயனீட்டைக் குறைப்பதே அந்த நடவடிக்கையின் நோக்கம் எனக் கூறப்பட்டது. சொக்கலட் பொருட்களில் செம்பனை எண்ணெய்…
மலேசியாவின் நீண்டகால பொருளாதார வியூகத்துக்கு ஐஎம்எப் பாராட்டு
பன்னாட்டுப் பண நிறுவன (ஐஎம்எப்) நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட், மலேசியாவை உயர்-வருமானம் பெறும் நாடாக்கும் நீண்டகால பொருளாதார வியூகங்களைப் பாராட்டியுள்ளார். “பொருளாதாரத்தைத் திறம்படவும் நடைமுறைக்கு உகந்த வகையிலும் நிர்வகித்து வரும் பிரதமர் நஜிப்(அப்துல் ரசாக்)பையும் அவர்தம் சகாக்களையும் பாராட்டுகிறேன்”, என்று மலேசிய தலைநகருக்கு மேற்கொண்ட வருகையின் முடிவில்…
பாஸ் இளைஞர் கூட்டத்தில் ஹாராகாவைக் கண்டிக்கும் தீர்மானம்
கோத்தா பாருவில் நடைபெறும் தேசிய பாஸ் இளைஞர் மாநாட்டில் இன்று பின்னேரம் கட்சியின் கொள்கை ஏடான ஹராகாவைக் கண்டிக்கும் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டரசு பிரதேச பாஸ் இளைஞர்கள் கொண்டுவரும் அத்தீர்மானம், ஹராகாவின் செய்தி வெளியிடும் தரம் தாழ்ந்து அது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறது.…
ஜெலாபாங் தொகுதியை ஹீ-யிடம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுவதை மசீச மறுக்கின்றது
பேராக், ஜெலாபாங் தொகுதியை அதன் நடப்பு சுயேச்சை பிரதிநிதியான ஹீ யிட் போங் ஆளும் கட்சிக் கொடியின் கீழ் போட்டியிடுவதற்கு உதவியாக அவரிடம் வழங்குவதற்கு பிஎன் இணக்கம் கண்டுள்ளதாக கூறப்படுவதை மசீச தலைவர் சுவா சொய் லெக் மறுத்துள்ளார். "பேராக் ஜெலாபாங் சட்டமன்றத் தொகுதியை விட்டுக் கொடுப்பது மீது…
‘ஹுடுட் முக்கியமல்ல எனக் கருதுகின்றவர்கள் குழம்பியுள்ளனர்’
அரசியல் ஒத்துழைப்பு கண்ணோட்டத்தில் ஹுடுட் பிரச்னையை விவாதிக்கக் கூடாது என எண்ணும் பாஸ் கட்சி உறுப்பினர்கள் உண்மையில் குழப்பம் அடைந்துள்ளனர் என அக் கட்சியின் உலாமாப் பிரிவுத் தலைவர் ஹருண் தாயிப் கூறுகிறார். அவர்கள் கட்சியின் போதனைகளையும் புரிந்து கொள்ளத் தவறி விட்டனர் என்றார் அவர். "ஹுடுட் விவகாரத்தில்…
ஹாடி: ‘Negara Berkebajikan’ கோட்பாட்டை ஊடகங்கள் திசை திருப்புகின்றன
பாஸ் கட்சியின் 'Negara Berkebajikan' கோட்பாட்டு திட்டத்தை குறை கூறுகின்றவர்களை அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சாடியுள்ளார். அந்தக் கோட்பாட்டுக்கு ஊடகங்கள் தவறான விளக்கம் கொடுப்பதாகவும் அவர் சொன்னார். அந்தக் கோட்பாடு ஊடகங்கள் சொல்வதைப் போன்று சமூக நல நாடு அல்ல மாறாக அது அரசியல் இஸ்லாம்…
அந்த ‘கொண்டோ’ திட்டத்தை ரத்துச் செய்ய பிரதமர் வாக்குறுதி அளித்துள்ள…
"அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் வெற்றி பெற்றால் அந்த கொண்டோ திட்டத்தை நிறுத்துவதாக நஜிப் வாக்குறுதி அளித்தார். அடுத்து பிஎன் நிர்வாகம் செலாயாங் நகராட்சி மன்றத் தலைவரை இடமாற்றம் செய்கின்றது" கொண்டோ சரச்சை- செலாயாங் நகராட்சி மன்றத் தலைவர் இட மாற்றம் செய்யப்பட்டார் திரு கேஜே ஜான்: சிலாங்கூர்…
கொண்டோ சர்ச்சை: செலாயாங் நகராட்சி மன்றத் தலைவர் இடம் மாற்றப்பட்டார்
செலாயாங் நகராட்சி மன்றத் தலைவர் ஜைனல் அபிடின் ஆலாலா-வை 24 மணி நேர முன்னறிவுப்புடன் புத்ராஜெயா இடம் மாற்றம் செய்துள்ளது. மாநில அரசாங்கத்துக்கு விரக்தியை ஏற்படுத்துவதே அந்த நடவடிக்கையின் நோக்கம் எனக் கருதப்படுகின்றது. பத்துமலை கோவில் வளாகத்துக்கு அருகில் 29 மாடி ஆடம்பர அடுக்குமாடி வீட்டு (கொண்டோ) திட்டத்தை…
பத்துமலை: தீங்கு இழைத்த பாரிசான் நிபந்தனை விதித்து மக்களைத் தூண்டக்கூடாது
-சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர், நவம்பர் 14, 2012. குற்றவாளி திருந்துவதற்கு நிபந்தனை விதிப்பதா? பத்துமலைக்கு தீங்கிழைத்த பாரிசான் மக்களை பக்கதானுக்கு எதிராகத் தூண்டிவிட முயற்சிப்பதா? இதனைச் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளவர் பிரதமர் நஜிப். அவர் பத்துமலையை காப்பாற்ற புதிய நிபந்தனை விதிக்கிறார். நிபந்தனை விதிக்கும் அருகதை…
‘பிரச்னையை ஏற்படுத்திய பிஎன்; இப்போது அதனைத் தீர்க்கப் போவதாக பாசாங்கு…
உங்கள் கருத்து: "நீங்கள் இந்தியர்களிடமிருந்து எதையாவது பிடுங்கிக் கொண்டு பின்னர் அதனை எடுத்துக் கொள்ளப் போவதில்லை என வாக்குறுதி அளிப்பது அடுத்து அதற்காக இந்தியர்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் !" பிரதமர்: சிலாங்கூரை பிஎன் வென்றால் பத்துமலை "கொண்டோ" ரத்துச் செய்யப்படும் சின்ன அரக்கன்: சிலாங்கூர் பிஎன் ஆட்சியில்…
இரண்டு முன்னாள் பிரதமர்களை ஜயிஸ் விசாரிப்பதற்கும் போலீஸ் உதவுமா ?
"அப்துல்லாவின் அறிக்கையை விசாரிப்பதற்கு நமது மிகத் திறமையான போலீஸ் படை எப்போது உதவப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள நான் மிக ஆவலாக இருக்கிறேன்" வலைப்பதிவுகள்: முஸ்லிம்கள் சமயத்தை விட்டு வெளியேறலாம் என பாக் லா சொன்னார் பார்வையாளன்: "முஸ்லிம்கள் சமயத்தை விட்டு விலகலாம். ஆனால் முதலில் அந்த…
நஜிப்: பிஎன் வென்றால், பத்துமலை “கொண்டோ” குப்பையில் எறியப்படும்
பாரிசான் மீண்டும் சிலாங்கூர் மாநில ஆட்சியைக் கைப்பற்றினால், சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பத்துமலை 29 மாடி கொண்டோ திட்டத்தை குப்பையில் எறியும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று உறுதியளித்தார். அதோடு மட்டுமல்ல. பத்துமலை யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளம் என்ற தகுதி பெறுவதற்கு உலக பாரம்பரிய ஆணையத்தில் மலேசியாவின்…