நஜிப் ரசாக்கிற்கு மன்னிப்பு வழங்கியது மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சரின் சட்டப் பிரிவின் ஒரு துணைப் பிரிவை "மறைக்க" அசலினா சதி செய்ததாகக் கூறியதற்கு, முன்னாள் அம்னோ தலைவர் கைரி ஜமாலுதீன் மீது, அசலினாவின் அரசியல் செயலாளர் சுரயா யாக்கோப் செந்தூல் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். கைரியின் அறிக்கை…
வலைப்பதிவுகள்: முஸ்லிம்கள் சமயத்தை விட்டு வெளியேறலாம் என பாக் லா…
இஸ்லாத்தை விட்டு வெளியேற விரும்புகின்றவர்கள் அவ்வாறு செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி சொன்னதாக கூறும் செய்தி நறுக்குகள் இப்போது பல பக்காத்தான் ஆதரவு வலைப்பதிவுகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கட்டுரையை 2007ம் ஆண்டு ஜுலை மாதம் 10ம் தேதி சானல்…
தீபாவளி தினத்தில் இடியுடன் மழை பெய்யும்
நாளை தீபாவளியன்று பரவலாக இடியுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. பினாங்கு, கிளந்தான், திரங்கானு ஆகியவற்றில் மழை பெய்யும் என ஆரூடம் கூறப்பட்டுள்ளது. கெடா, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், சபா ஆகியவற்றின் கடலோரப்பகுதிகளில் காலையில் மழை பெய்யும். மற்ற மாநிலங்களில் காலையில் வெயில்…
சிலாங்கூரில் ஏஇஎஸ் கேமிராக்களை அகற்ற 14 நாள் காலக் கெடு
சிலாங்கூர் மாநிலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு தானியங்கி அமலாக்க முறை (ஏஇஎஸ்) கேமிராக்களை அகற்றுவதற்கு மாநில அரசாங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு இன்று தொடக்கம் 14 நால் காலக் கெடுவை மாநில அரசாங்கம் வழங்கியுள்ளது. அமைச்சு அதனைச் செய்யத் தவறினால் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தின் 'துணையுடன்' அந்த கேமிராக்கள் அகற்றப்படும் என…
நுருலை பொது மக்கள் மதிப்பீடு செய்யட்டும் என்கிறார் பாஸ் உலாமா…
'சமயத்தில் கட்டாயம் இல்லை' என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கூறியுள்ள கருத்துக்கள் மீது அவரைப் பொது மக்கள் மதிப்பீடு செய்ய விட்டு விடுவதாக பாஸ் கட்சியின் உலாமாப் பிரிவுத் தலைவர் ஹருண் தாயிப் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய அந்தக் கருத்துக்காக நுருலை ஏற்கனவே கண்டித்துள்ள அவர்,…
போலீஸ் நுருல் மீதான விசாரணையில் ‘உதவி மட்டுமே’ செய்கின்றது
பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்துள்ள 'சமயத்தில் கட்டாயம் இல்லை' என்னும் கருத்து குறித்து ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை நடத்தும் விசாரணையில் போலீசார் 'உதவி மட்டுமே' செய்து வருகின்றனர். "அது எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல. ஏனெனில் அது சமயம் சம்பந்தப்பட்ட விஷயமாகும்,"…
வேதமூர்த்தி வந்தபிறகுதான் இண்ட்ராப் சரியான பாதைக்குத் திரும்பியுள்ளது
உங்கள் கருத்து: “பக்காத்தான் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.இண்ட்ராபால் மட்டுமே இந்தியர் வாக்குகளை பக்காத்தானுக்குக் கொண்டுவர முடியும்”. இந்தியர்களின் ஏழ்மையை ஒழிக்க இண்ட்ராபின் ஐந்தாண்டு செயல்திட்டம் மகிழும் மலேசியன்: விடாதீர்கள். இண்ட்ராபுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கச் சொல்லுங்கள். நாடற்றவர்களாகவுள்ள 350,000 இந்தியர்களுக்குக் குடியுரிமை கொடுக்கச் சொல்லுங்கள்.…
தேர்தலுக்குமுன் சொத்து அறிவிப்பா? அம்னோ இன்னும் முடிவு செய்யவில்லை
புதிய தேர்தல் வேட்பாளர்களின் சொத்துகளை அறிவிக்கச் செய்வது பற்றி அம்னோ இன்னும் முடிவு செய்யவில்லை என அதன் தகவல் தலைவர் அஹ்மட் மஸ்லான் கூறினார். “அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் அவர்களின் சொத்துகளை அறிவிக்கும் பாரங்களைப் பூர்த்திசெய்து பிரதமர்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் அப்படியே செய்துள்ளனர்.”, என்றாரவர். “ஆனால்,…
நோங் சிக்: வாக்குகளை கவருவதே நுருல் அறிக்கையின் நோக்கம்
"சுபாங் ஜெயாவில் நிகழ்ந்த கருத்தரங்கு ஒன்றில் சமயச் சுதந்திரத்தை ஆதரித்து நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்துள்ள அறிக்கை வாக்குகளைக் கவரும் நோக்கத்தைக் கொண்டது. மக்களுக்கு அவர் உண்மையாகச் சேவை செய்யவில்லை என்பதை அது காட்டுகின்றது." இவ்வாறு கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராஜா நோங் சிக்…
துணை அமைச்சர்: பிரதமரைச் சந்திக்கும் போது பிரச்னைகளைச் சொல்லுங்கள்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்திப்பதற்கு ஒப்புக் கொள்ளும் முன்னர் ஹிண்டராப் 'முன் நிபந்தனைகளை விதிக்கக் கூடாது'. ஏனெனில் அதன் எந்தக் கோரிக்கையும் பேச்சுக்களின் போது எழுப்பப்பட முடியும் எனப் பிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மஸ்லான் கூறினார். "உண்மையில் நிபந்தனைகளை விதிக்க வேண்டிய அவசியமே இல்லை.…
‘சமயத்தில் கட்டாயம் இல்லை’ என்பது சமய நம்பிக்கையற்றவர்களுக்கு மட்டும் தானா…
"திருக்குர் -ஆனில் 'சமயத்தில் கட்டாயம் இல்லை' எனத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நசாருதின் அவர்களே அது 'முஸ்லிம் அல்லாதாருக்கு மட்டுமே பொருந்தும்' என எந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதை எனக்குச் சொல்லுங்கள்." நசாருதின்: நுருல் சொல்வது தவறு முஸ்லிம்களுக்குத் தேர்வு இல்லை முகமூடி: முன்னாள் பாஸ் துணைத் தலைவர்…
தீபாவளி திருநாளன்று யார் முக்கியம்: போய் ஃபிரண்டா அல்லது நஜிப்பா?
தீபாவளி ஒரு சமயத் திருநாள். இந்துக்கள் தங்களுடைய உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் இருளை அகற்றி அனைவரும் நல்வாழ்வு வாழ தீப ஒளி ஏற்றும் நாள். அதனை முறையாக, நெறி தவறாமல் செய்வதற்கு மரபுகளையும் வழிமுறைகளையும் வகுத்து பின்பற்றி வருகின்றனர். தீபாவளி திருநாளன்று அதிகாலையில் எழுந்து முறைப்படி குளித்த பின்னர் குடும்பத்தோடு…
நசாருதின்: நுருல் சொல்வது தவறு, முஸ்லிம்களுக்குத் தேர்வு இல்லை
'சமயத்தில் கட்டாயம் இல்லை' என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்துள்ள அறிக்கை மலாய் முஸ்லிம்களுக்கு சமயச் சுதந்தரத்தை வழங்குவதற்கு ஒப்பாகும் என முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா கூறுகிறார். அந்த வாசகம் முஸ்லிம் அல்லாதவருக்கு மட்டுமே பொருந்தும் என அவர்…
தேசியக் கல்விப் பெருந்திட்டக் குறைபாடுகளை விளக்கி டோங் ஜொங் கையேடு…
தேசியக் கல்விப் பெருந்திட்டத்தில் உள்ள (2013-2025) குறைபாடுகளை விளக்கி டோங் ஜொங் எனப்படும் மலேசிய ஐக்கிய சீனப் பள்ளிக்கூட குழுக்கள் சங்கம் கையேடு ஒன்றை விநியோகம் செய்துள்ளது. அந்த பெருந்திட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அந்தச் சீனக் கல்விப் போராட்ட அமைப்பு நவம்பர் 25ம் ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு…
13வது பொதுத் தேர்தல் எந்த வழியிலும் போகலாம் என்கிறார் லிம்…
அடுத்த பொதுத் தேர்தல் முடிவுகள் எந்த வழியிலும் போகலாம் என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியிருக்கிறார். பிஎன் சிலாங்கூரை மீண்டும் கைப்பற்றுமோ என்றோ நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் என்றோ அம்னோ தலைவர்கள் உட்பட யாரும் நம்பவில்லை என்றும் அவர்…
சுவா சொய் லெக்: மிதவாத பிஎன் மற்றவர்கள் மீது நம்பிக்கைகளை…
பிஎன் மற்றவர்களுடைய உரிமைகளைப் பாதிக்கின்ற நம்பிக்கைகளை திணிக்காத மிதவாத சக்தி என மசீச தலைவர் சுவா சொய் லெக் கூறுகிறார். "சமயம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றில் தனி நபர்களுடைய உரிமைகளை மதிக்கின்ற இணக்கமான, மிதவாத அணுகுமுறையைப் பின்பற்றுகின்றது. இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் மலேசியா பல இனங்களை கொண்டதாகும்."…
மஇகா பத்து மலையில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை நடத்துவதை…
பத்துமலைக் கோயிலில் மஇகா தனது திறந்த இல்ல உபசரிப்பை நடத்துவதை அதன் தலைவர் ஜி பழனிவேல் தற்காத்துப் பேசியிருக்கிறார். அது அனைத்து இந்தியர்களும் வருகையாளர்களும் கொண்டாடுவதற்கான மகிழ்ச்சிகரமான விழா ஆகும் என்றார் அவர். அரசியல் ஆதாயம் பெற எதிர்க்கட்சிகள் அந்த விஷயத்துக்கு அரசியல் சாயம் பூசுவதாக அவர் குற்றம்…
13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரிசான் 1,000 அரசு சாரா…
'கருத்துக்களை' பெறுவதற்காக இந்த மாதம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புக்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதாக அம்னோ இன்று அறிவித்துள்ளது. ஆனால் அந்தக் கூட்டத்துக்கும் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கும் சம்பந்தம் உண்டு எனச் சொல்லப்படுவதை அது மறுத்தது. நவம்பர் 24ம் தேதி அந்தச் சந்திப்பு நிகழும் என அம்னோ…
பினாங்கு, தாமான் மாங்கிஸ் நிலத்தை விற்க முடியும் என்கிறார் கர்பால்
ஜாலான் ஜைனல் அபிடின் தாமான் மாங்கிஸ் நிலப் பட்டா வேறு எந்தத் தரப்புக்கும் மாற்றி விடப்பட மாட்டாது என்ற நிபந்தனையுடன் பினாங்கு அரசாங்கம் மாநில பிஎன் -னுக்கு விற்க முடியும். அந்த நிலத்துக்கான ஏலத்தில் வெற்றி பெற்ற Kuala Lumpur International Dental Centre (KLIDC) அதற்கு ஆட்சேபம்…
மஇகா: பிரதமரைச் சந்திக்க ஹிண்ட்ராப் நிபந்தனைகளை விதிக்கக் கூடாது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்திப்பதற்கு ஹிண்ட்ராப் முன் நிபந்தனைகளை விதித்துள்ளது குறித்து இந்த நாட்டில் மிகப் பெரிய இந்தியர் அரசியல் கட்சியான மஇகா ஏமாற்றமடைந்துள்ளது. "பிரதமரைச் சந்திப்பதற்கு முன் நிபந்தனை விதிப்பது நியாயமற்றதாகும். ஏனெனில் அவரைச் சந்திக்க விரும்பியது ஹிண்ட்ராப் ஆகும். அது இப்போது முன் நிபந்தனைகளை…
ஏழ்மையில் உள்ள இந்தியர்களுடைய துயரங்களைத் துடைக்க ஐந்து ஆண்டு கால…
ஏழ்மையில் வாடும் இந்தியர்களுடைய இன்னல்களைப் போக்குவதற்கு ஹிண்டராப் ஐந்து ஆண்டு கால பெருந்திட்டத்தை வெளியிடும் என அதன் தலைவர் பி வேதமூர்த்தி அறிவித்துள்ளார். "2007ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மாபெரும் ஹிண்ட்ராப் பேரணியின் ஐந்தாம் ஆண்டு நிறைவை ஒட்டி வரும் நவம்பர் 25ம் தேதி தேசிய மேம்பாட்டு…
அகமட் தினசரி 8 முதல் 9 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்
முகநூல் பதிவு வழி ஜோகூர் சுல்தானை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அகமட் அப்துல் ஜலில் ஜோகூர் பாரு போலீஸ் நிலையத்தில் ஏழு நாட்களுக்கு தனிமையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் இன்று அகமட் தமது தடுப்புக் காவல் அனுபவங்களை விவரித்தார். தாம் வைக்கப்பட்டிருந்த சிறைய அறை மிகவும்…
நுருல் உரையில் எந்தத் தப்பையும் பாஸ் காணவில்லை
"சமயத்தில் கட்டாயம் இல்லை" என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்த அறிக்கையில் தப்பு ஏதனையும் பாஸ் கட்சி காணவில்லை. "இஸ்லாத்தின் காவலன்" என தன்னை அம்னோ கருதிக் கொள்வதாகவும் அது சாடியது. "அந்த விவகாரம் குறித்து சர்ச்சை எழுந்த பின்னர் ஒருவர் இஸ்லாத்தைத் தழுவியதும்…
எம்ஏசிசி: பாலா கூறும் கையூட்டு விவகாரத்துக்குப் போதுமான ஆதாரமில்லை
சுயேச்சை துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம், தமக்குக் கையூட்டு கொடுக்கப்பட்டதாகக் கூறுவதை வைத்து எவர்மீதும் குற்றம்சாட்ட ஆதாரங்கள் போதாது என அரசாங்க வழக்குரைஞர் கருதுகிறார். தம் புகார் என்னவாயிற்றென்று கேட்டிருந்த பாலாவுக்கான பதிலாக அவரின் வழக்குரைஞர் அமெரிக் சித்துவுக்கு அனுப்பிய கடிதத்தில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. எம்ஏசிசி அதன் மறுமொழியில்,…