சமீபத்தில் கங்காரில் இடிக்கப்பட்ட இந்து கோவில் தொடர்பான சிவில் வழக்கை எதிர்கொள்ளத் தயார் என பெர்லிஸ் மந்திரி பெசார் அபூ பக்கர் ஹம்சா தெரிவித்துள்ளார். 1965-ஆம் ஆண்டு தேசிய நிலச் சட்டத்தின் கீழ், அந்தக் கோவிலை இடிப்பதற்கு மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று அவர் கூறியதாக வட்டாரங்கள்…
சட்டவிரோத கூட்டம் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
2008-இல், கோலாலும்பூர் மாநாட்டு மையத்தில் (கேஎல்சிசி) சட்டவிரோத கூட்டம் நடத்தியதாக 43 சமூக ஆர்வலர்கள்மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஆவணங்கள் முறையாக இல்லை என்பதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. ஐந்தாண்டுகளாக இந்த வழக்கு நடக்கிறது. முதலில், பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, பத்து எம்பி சுவா தியான் சாங், மலேசிய…
நெல்சன் மண்டேலா காலமானார்
தென்ஆப்ரிக்காவின் இனவாத வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போரடி தமது வாழ்க்கையின் 27 ஆண்டுகளை சிறையில் கழித்து, இறுதியில் அந்த வெள்ளையர்களைத் தோற்கடித்து தென்ஆப்ரிக்காவின் அதிபரான நெல்சன் மண்டேலா நேற்று தமது 95 ஆவது வயதில் அவரது ஜோகானெஸ்பர்க் இல்லத்தில் காலமானார். நீண்டகாலமாக உடல்நலமற்று பலவீனமாக இருந்த போதிலும் அவரது…
பூஜாங் பள்ளத்தாக்கு சண்டிகளை கெஜட் செய்தால் அம்னோ ஒரு தொகுதியை…
சண்டி காணப்படும் அனைத்து இடங்களும் அரசாங்க கெஜட்டில் பதிவு செய்யப்பட்டால், கெடாவில் அம்னோ ஒரு தொகுதியை இழக்கும் என்று அம்னோ ஆண்டு பொதுக்கூட்டத்தில் நேற்று கூறப்பட்டது. இதற்கான காரணம், இந்த சின்னங்கள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன, மக்களின் வீடுகளுக்கு கீழும் அவை இருக்கின்றன என்று கெடா மாநில…
ஜாஹிட்: வெள்ளம் தொடர்பில் அவசரகாலம் பிரகடனம் செய்ய வேண்டியதில்லை
குவாந்தானில் வெள்ள நிலவரம் மோசமாக இருந்தாலும் அவசரகாலம் பிரகடனம் செய்ய வேண்டிய அவசியமில்லை என உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். முந்திய ஆண்டுகளைவிட இவ்வாண்டு அங்கு வெள்ள நிலவரம் மோசமாகத்தான் உள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். “வெள்ள நிலை மோசமாகத்தான் உள்ளது. ஆனாலும், அவசரகாலம் பிரகடனம்…
செர்டாங் மருத்துவமனையில் உள்கூரை மீண்டும் இடிந்து விழுந்தது
செர்டாங் மருத்துவமனையில் உள்கூரை மீண்டும் இடிந்து விழுந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 தொடங்கி ஐந்தாவது தடவையாக அங்கு கூரை இடிந்து விழுந்திருக்கிறது. நேற்று பிற்பகல், மருத்துவமனையில் ஆபத்து அவசர சிகிச்சை பிரிவில் தாதியர் முகப்புப் பகுதியில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக மலாய்மொழி நாளேடான உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டிருந்தது. அப்பகுதியில் நோயாளிகள் இருப்பதாக…
என்ஜிஓ: ஆஸ்ட்ரோவின் ஏகபோக உரிமைக்கு முடிவு கட்டுவீர்
கூடுதல் கட்டணம் வசூலித்துக் கொண்டு மட்டரகமான நிகழ்ச்சிகளை ஒளியேற்றும் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியின் ஏகபோக உரிமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சொலிடேரிடி அனாக் மூடா (எஸ்ஏஎம்எம்) வலியுறுத்தியுள்ளது. அந்த என்ஜிஓ-வின் ஐந்து உறுப்பினர்கள் சேர்ந்து 'Bantah Astro' அணி ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் இன்று தொடர்பு, பல்லூடக அமைச்சிடம் …
முக்ரிஸ்: நான் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்தான்
கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர், தாம் மாநில தொடர்புக்குழுத் தலைவர் என்பதால் கட்சியின் முடிவுகளைச் செய்யும் சக்திவாய்ந்த உச்சமன்றத்திலும் இடம்பெற்றிருப்பதாகக் கூறினார். “கட்சித் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுப்போன மாநில தொடர்புக்குழுத் தலைவர்கள் எல்லாருமே உச்சமன்றத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள்”, என்றாரவர். முக்ரிஸ் உச்சமன்றத்தில் இல்லை என்று கூறி கெடா பேராளர்கள்…
கேஎல் சொத்து மதிப்பீட்டு வரிக்கு எதிராக மக்கள் பேரணி: பக்காத்தான்…
கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) நியாயமற்ற முறையில் சொத்து மதிப்பீட்டு வரியை உயர்த்தியிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க டிசம்பர் 16-இல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பேரணிக்கு மக்கள் திரண்டு வர வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தலைநகர் பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் அந்த வேண்டுகோளை விடுத்தனர். கண்டனக் கூட்டம் நடப்பதை…
பினாங்கில் ‘குட்டி நெப்போலியன்கள்’ கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்
பினாங்கு முனிசிபல் மன்ற(எம்பிபிபி)த்தில் “குட்டி நெப்போலியன்கள்” இருந்துகொண்டு மன்றத்தின் சேவைகளைத் தாமதப்படுத்துகிறார்கள் என்று கூறப்படுவதை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோ மறுக்கவில்லை. ஆனால், அவ்விவகாரம் கட்டுக்குள் உள்ளதாக அவர் கூறினார். “அவர்கள் கட்டுபாட்டுக்குள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்”, என மாநில டிஏபி தலைவருமான செள செய்தியாளர் கூட்டத்தில்…
‘அம்னோ உறுப்பினர்கள் பணக்காரர்கள் என்கிறார்களா? கவலையே வேண்டாம்’
அம்னோ உறுப்பினர்கள் செல்வச் செழிப்பில் திளைப்பது பற்றி சங்கடப்படக்கூடாது. அது, அவர்களின் வெற்றிக்கும் திறமைக்கும் ஓர் அடையாளம். அம்னோ இளைஞர் பேரவையில் ஜோகூர் பேராளர் கைருல் அன்வார் ரஹ்மாட் இவ்வாறு கூறினார். “பணக்காரர்கள்” என மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அம்னோ உறுப்பினர்கள் “வருத்தப்படவே” கூடாது என்றாரவர். “இளைஞர் தலைவர்…
கணேசன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
மலேசிய இண்ட்ராப் இயக்க ஆலோசகர் என்.கணேசன், பினாங்கில் என்ஜிஓ-களின் கூட்டத்தில் கூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டர்கள் புகுந்து கலகம் செய்ததாக திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தாரானால் அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை விடுத்திருப்பவர் ஒரு சாப்பாட்டுக் கடை உரிமையாளரான இரேகேந்திரன் சிவசாமி,58. கூட்டத்தில் கலகம்…
அம்னோ பேரவையில் வங்காள தேசிகள் வாக்களித்ததாக அன்வார் கூறியதைக் காண்பிக்கும்…
அம்னோ பேரவையில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் காட்சி அளித்தார்- காணொளி உருவில். 13வது பொதுத் தேர்தலில் வங்காள தேசிகள் வாக்களித்தனர் என்று அன்வார் கூறுவதைக் காண்பிக்கும் காணொளி ஒன்றை அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் பேராளர்களுக்குத் திரையிட்டுக் காண்பித்தார். இணைய செய்தித்தளங்களிலிருந்தும் இதர மூலங்களிலிருந்தும் திரட்டப்பட்ட…
பிகேஆர்: மாணவர்களின் தரம் உயர சீரமைப்பு தேவை
அனைத்துலக மாணவர் தர மதிப்பீட்டுச் சோதனையில் மலேசியா பெற்றுள்ள இடவரிசை குறித்து அதிர்ச்சி அடைந்துள்ள பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார், நாட்டின் கல்விமுறையைச் சீரமைக்க இரு-கட்சி அணுகுமுறை தேவை என்று வலியுறுத்தியுள்ளார். இரு-கட்சி உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றத் தேர்வுக்குழு அமைத்து அதனிடம் மலேசியக் கல்விமுறையைச் சீர்படுத்தும்…
சொய் லெக் மசீச தேர்தலில் போட்டியிட மாட்டார்
மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், தாம் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிப்படி கட்சித் தேர்தலில் போட்டிடப்போவதில்லை என்பதை இன்று உறுதிப்படுத்தினார். 13வது பொதுத் தேர்தலில் மசீசவின் தோல்விக்குப் பொறுப்பேற்கும் வகையில் மே 6-இல் சுவா அவ்வாறு வாக்குறுதி அளித்திருந்தார். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும். அதே நேரத்தில்…
மலேசிய மாணவர் தரம் தாழ்ந்து போயுள்ளது
கணிதம், அறிவியல், வாசிப்பு ஆகிய பாடங்களில் மாணவர்களின் தரம் குறித்து 65 நாடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் மலேசியா பெற்ற இடம் பெருமைப்படத்தக்கதாக இல்லை. 2012 அனைத்துலக மாணவர் மதிப்பீட்டுப் பட்டியலில் மலேசியாவால் 52வது இடத்தைத்தான் பெற முடிந்தது. தாய்லாந்துக்கு 50 வது இடம். சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது.…
மின்கட்டண உயர்வு மிக அதிகம்: அம்னோ இளைஞர்கள் சாடல்
மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவு தெனாகா நேசனல் பெர்ஹாட்டின் (டிஎன்பி) ஆதாயத்தைப் பெருக்கும் ஒரு திட்டம் என இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் சாடினார். எரிபொருளுக்காகும் செலவுக்கும் மின்கட்டண உயர்வுக்கும் பொருத்தமில்லை என கைரி குறிப்பிட்டார். “நான் அமைச்சரவை முடிவுக்குக் கட்டுப்பட்டவன்தான். ஆனாலும் (அம்னோ) இளைஞர் தலைவர் என்ற…
அரசியல் தொடர்புடைய குண்டர்கள் என்ஜிஓ கூட்டத்தைக் கலைத்தனர்
கூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டர்கள் தங்கள் கூட்டத்தில் புகுந்து கலகம் செய்ததாக மலேசிய இண்ட்ராப் சங்கம் போலீசில் புகார் செய்துள்ளது. அவர்களுக்கு பினாங்கின் உயர் அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் எனவும் அது கூறியது. நவம்பர் 30-இல், ஜாலான் உத்தாமாவில் உள்ள கேரிங் சொசைடியில் சில என்ஜிஓகள் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது …
ஐபிபி-களுக்கு உதவித் தொகை கொடுக்கப்படுவதில்லை
பெரும்பாலோர் நினைப்பதுபோல் சுயேச்சை மின் உற்பத்தியாளர்களுக்கு (ஐபிபி) எரிபொருள் உதவித் தொகை வழங்கப்படுவதில்லை. எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், நீர்வள அமைச்சின் மூத்த இயக்குனர் அஸ்ஹார் ஒமார் இதனைத் தெரிவித்தார். ஐபிபிகளுக்கு எரிபொருள் வழங்கும் தெனாகா நேசனலே (டிஎன்பி) எரிபொருளுக்கான செலவையும் ஏற்றுக்கொள்கிறது. இதனால் பயனீட்டாளர்களுக்கு மலிவு விலையில் மின்சாரம்…
ஜிஎல்சிகளில் கூடுதல் இடம் தேவை-அம்னோ மகளிர்
அரசாங்கத்திலும், அரசுசார்பு நிறுவனங்களிலும்(ஜிஎல்சி), மாநில அம்னோ தொடர்புக் குழுக்களிலும் மகளிருக்குக் கூடுதல் இடங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலில் விரும்புகிறார். .“மாநில தொடர்புக்குழுக்களில் செயலாளர்களாக, பொருளாளர்களாக இருக்கும் தகுதி எங்களுக்கு இல்லையா? “ஜிஎல்சி-களில் இயக்குனர்களாக, தலைவர்களாக இருக்கும் தகுதி பெண்களுக்கு இல்லாமல்…
கைரி: ‘ஹிடுப் மலாயு’ முழக்கம் மட்டும் போதாது
மலாய் சமூகத்தை முன்னுக்குக் கொண்டு செல்லாமல் ‘ஹிடுப் மலாயு(வாழ்க மலாய் இனம்) என்று முழக்கமிடுவதால் எந்தப் பயனும் இல்லை என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் எச்சரித்துள்ளார். “மலாய்க்காரர்கள் எப்படிப்பட்ட வாழ்கை வாழ வேண்டும் என நினைக்கிறீர்கள்? “அவர்கள் வறுமையில் வாடுவதைவிட கெளரவத்துடன் வாழ்வதுதானே மேலானது. எனவே,…
அரசாங்கம் நேரடிப் பேச்சு வழி பொருள் கொள்முதல் செய்வதைக் குறைத்துக்…
அரசாங்கம், ஊழலைத் தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக நேரடிப் பேச்சு நடத்திப் பொருள் வாங்கும் பழக்கத்தை குறைத்துக் கொண்டு டெண்டர் முறையைப் பின்பற்றும். “இனி, பொருள் வாங்குவதற்கு, தவிர்க்க முடியாத நிலை இருந்தாலொழிய, நேரடிப் பேச்சு நடத்துவதில்லை என அமைச்சரவை கடந்த வாரக் கூட்டத்தில் முடிவு செய்தது”, என அமைச்சர்…
மேம்பாட்டாளருக்கு 1,000ஆண்டு பழைமையான சண்டி இருப்பது தெரியாதாம்
பூஜாங் பள்ளத்தாக்கில் ஆயிரமாண்டு பழமைவாய்ந்த சண்டி ஒன்றைத் தரைமட்டமாக்கிய பண்டார் செளஜானா சென். பெர்ஹாட்டுக்கு அங்கு அப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னம் இருப்பது தெரியாதாம். “செப்டம்பரில் நிலத்தைத் துப்புரவுபடுத்துமுன்னர் அந்த இடத்தைப் பார்வையிட சென்றிருந்தோம். ஒரு கல் கட்டுமானத்தைப் (சண்டி) பார்த்தோம். அது என்ன என்பது எங்களுக்குத்…
நிதி முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்படாதது ஏன்? சிலாங்கூர் விளக்க வேண்டும்
சிலாங்கூர் மாநிலத்தில் சாலைப் பராமரிப்புக்குக் கூட்டரசு அரசாங்கம் கொடுத்த நிதி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. அரைகுறையாகவே பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது. “சாலைப் பராமரிப்புக்காக மத்திய அரசு வழங்கிய நிதி ஏன் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்பதை சிலாங்கூர் அரசு விளக்க வேண்டும்”, என டிஏபி பூச்சோங் எம்பி கோபிந்த் சிங்…


