முடி திருத்துவோர் சர்ச்சை பக்காத்தானிலிருந்து டிஏபி விலக வேண்டும் என்ற…

சீனர் மற்றும் முஸ்லிம் அல்லாதவருடைய 'கௌரவத்தைக் காப்பாற்றும் பொருட்டு' பாஸ் 'திரும்பத் திரும்ப அத்துமீறல்களில்' ஈடுபடுவதால் டிஏபி பக்காத்தான் ராக்யாட்டிலிருந்து விலக வேண்டும் என மசீச கேட்டுக் கொண்டுள்ளது. "சீனர் மற்றும் முஸ்லிம் அல்லாதவருடைய கௌரவத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் பாஸ் தொடர்ந்து அத்துமீறல்களிலும் ஒடுக்குமுறையிலும் ஈடுபடுவதை தடுக்கும்…

வோங்: டெம்ப்ளர் பங்களா உரிமையாளர்களில் அம்னோ தலைவர்களும் அடங்குவர்

சிலாங்கூர் மாநிலச் சட்ட மன்றக் கூட்டத்தில் அம்னோ உறுப்பினர்கள் நேற்று எழுப்பிய டெம்ப்ளர் பார்க் என்ற சர்ச்சைக்குரிய திட்டத்தில் உள்ள பங்களா உரிமையாளர்களில் பல அம்னோ தலைவர்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்தப் பங்களா உரிமையாளர்களில் முன்னாள் அமைச்சர் ஒருவர், எம்பி ஒருவர், பல முன்னாள் மாநிலச் சட்ட மன்ற…

கல்வி அமைச்சு எழுத்துப்பூர்வமான பதிலை திருத்தியது

"இப்போது நீங்கள் பார்க்கின்றீர்கள், ஆனால் இப்போது நீங்கள் பார்க்க முடியாது" என்ற கதை நேற்று நாடாளுமன்றத்தில் நடந்தது. எழுத்துப்பூர்மாக வழங்கப்பட்ட கல்வி அமைச்சு பதில் மீட்டுக் கொள்ளப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது தான் அந்தக் கதை. சீன வாக்காளர்களுடைய எதிர்ப்பைத் தவிர்க்கும் பொருட்டு அவ்வாறு செய்யப்பட்டதாக கருதப்படுகின்றது. தனியார் பள்ளிகள்,…

‘கிறிஸ்துவர்களை முஸ்லிம்கள் என விருப்பம் போல சபா NRD பட்டியலிடுகிறது’

தேசியப் பதிவுத் துறை சபாவில் பின் அல்லது பிந்தி என்ற சொற்களைத் தங்களது பெயர்களில் கொண்டுள்ள கிறிஸ்துவர்களை முஸ்லிம்கள் என அவர்களுடைய அடையாளக் கார்டுகளில் விருப்பம் போல் குறிப்பது கடுமையாகக் குறை கூறப்பட்டுள்ளது. தேசியப் பதிவுத் துறை அதனைச் செய்யக் கூடாது என MCCBCHST என்ற மலேசிய பௌத்த,…

ராஜபக்சேவை மலேசியாவுக்குள் அனுமதிக்க கூடாது; அனுமதித்தால் முற்றுகைப் போராட்டம்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைப் போரை நடத்திய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, தமிழர்கள் வாழும் மலேசியாவில் கால் பதிக்க மலேசிய அரசு அனுமதிக்க கூடாது என்று சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைமையில் இன்று கிள்ளானில் ஒன்று கூடிய அரசு சார்பற்ற இயக்கங்கள் வலியுறுத்தின. ஒருவேளை, போர்க்குற்றவாளி…

அரசு சாரா அமைப்புக்களின் ஒரே மலேசியா நிகழ்வுக்கும் ‘அம்னோவுக்கும் தொடர்பு…

அரசு சாரா அமைப்புக்கள் வரும் சனிக்கிழமை ஏற்பாடு செய்துள்ள ஹிம்புனான் பாரிசான் சத்து மலேசியா நிகழ்வுக்கு அம்னோவுடனோ அல்லது எதிர்வரும் அம்னோ பொதுப் பேரவைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என அந்த நிகழ்வின் செயலகத் தலைவர் அகமட் மஸ்லான் இன்று கூறியிருக்கிறார். அந்த பேரணிக்கான தேதி தற்செயலானது என்றும்…

ஆண்டுக்கு 4,000 மலேசியர்கள் குடியுரிமையைக் கைவிடுகின்றனர்

1992க்கும் 2012 ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையில் மொத்தம் 81,950 பேர் தங்கள் மலேசியக் குடியுரிமையை கைவிட்டுள்ளதாக இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரி 4,097 பேர் குடியுரிமையை கைவிடுவதைக் குறிக்கிறது. அந்தத் தகவலை உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், புக்கிட் குளுகோர் எம்பி கர்பால் சிங்…

உள்துறை அமைச்சு ஸ்பீட் கேமிராக்களுக்கு 10 மடங்கு கூடுதலாக விலை…

அமெரிக்காவில் உள்ள மூன்று மாநிலங்களின் அரசாங்கங்களுக்கு விநியோகிப்பாளர்கள் வழங்கிய லேசர் கேமிராக்களுக்கான மதிப்பீட்டு விலைப் பட்டியலுடன் ( Quotations ) ஒப்பிட்டால் உள்துறை அமைச்சு அந்த கேமிராக்களுக்கு 10 மடங்கு கூடுதலாக விலை கொடுத்திருக்க வேண்டும் என பாஸ் பொக்கோக் செனா உறுப்பினர் மாஹ்புஸ் ஒமார் இன்று மக்களவையில்…

சுவாராம்: அனுமதி உண்டோ இல்லையோ பிரெஞ்ச் வழக்குரைஞர்கள் வருவது உறுதி

ஆளும் கட்சித் தலைவர்கள் அனுமதி அளிக்கத் தயங்கினாலும் சுவாராமைப் பிரதிநிதிக்கும் இரு வழக்குரைஞர்கள் மலேசியா வர முயல்வார்கள். அவர்களின் விளக்கமளிப்பு “நிச்சயம் உண்டு” என்று கூறிய சுவாராம் இயக்குனர் சிந்தியா கேப்ரியல், நவம்பர் 29-இல், நாடாளுமன்றக் கூட்டம் முடிவடைவதற்குள் அவர்கள் வந்து சேர்வார்கள் என்றார். ஆனால், என்று வருவார்கள்…

நாடாளுமன்றக் கூட்டம் நவம்பர் 29வரை நீட்டிப்பு

நவம்பர் 27-இல் முடிவடைய வேண்டிய 12வது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணையின் மூன்றாவது கூட்டம் மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சில சட்டவரைவுகளையும் அரசாங்க விவகாரங்களையும் இறுதி செய்வதற்கு வசதியாக அக்கூட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலை ஆணை 11(2)-இன்கீழ் மக்களவைக் கூட்டம் நீட்டிக்கப்படுவதாக அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா அறிவித்தார்.…

பினாங்கில் டிஏபி பேராளர் கூட்டம்

அடுத்த மாதம் டிஏபி பேராளர் கூட்டம் பினாங்கில் நடைபெறுவது பார்வையாளர்களுக்கு வியப்பளிக்கலாம். அது, 13வது பொதுத் தேர்தலில் கடும் போட்டியை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்பதால் அதற்காக கட்சியை பலப்படுத்தும் ஒர் உத்தி என்றவர்கள் கருதுகின்றனர். இது டிஏபி கட்சித் தேர்தல்கள் நடைபெறும் ஆண்டாகும்.அந்த வகையில் புக்கிட் குளுகோர்…

‘கன்னத்தில் அறையப்பட்ட விஷயத்தை இழுத்துக் கொண்டே போக வேண்டாம்’

"தன்னிச்சையாக முழு அளவில் விசாரணையைத் தொடங்கத் தயங்குவது அந்த விஷயத்தை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் தொடருகின்றன என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது." பணம் கொடுக்க முன் வந்தது பற்றி புகார் செய்யுங்கள் என ஒராங் அஸ்லி பெற்றோர்களுக்கு அறிவுரை ஸ்விபெண்டர்: அந்த மாணவர்களை அறைந்த ஆசிரியர் இன்னும் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்படவே…

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நஜிப்பா? முக்ரிஸ் மகாதீரா?

-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், நவம்பர் 22, 2012. மக்கள் கூட்டணி எதிர்வரும் பொதுத்தேர்தலில் மத்திய அரசை கைப்பற்றிவிடும் என முழு மனதோடு நம்பிக்கை வைத்து ஜ.செ.க-த் தலைவர் கர்ப்பால் சிங் பிரதமராக வர வாய்ப்புத் தர வேண்டும் என்கிறார் முன்னாள் அம்னோ தலைவரும் முன்னாள்…

டோங் ஜோங் பேரணிக்கு ஆதரவு பெருகுகிறது

டோங் ஜோங் எனப்படும் மலேசிய ஐக்கிய சீனப் பள்ளிக் குழுக்கள் சங்கம் 2013-2025 தேசியக் கல்விப் பெருந்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு வரும் ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு சமூகத்தின் ஆதரவு பெருகி வருகிறது. பெட்டாலிங் ஜெயாவில் நிகழும் அந்தப் பேரணிக்கு தங்கள் பேராளர்களை அனுப்புவதாக 580க்கும்…

போலீசார்: டாத்தாரான் கூட்டம் பற்றி ஹிம்புனான் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்

லினாஸ் எதிர்ப்பு இயக்கமான ஹிம்புனான் ஹிஜாவ் டாத்தாரான் மெர்தேக்காவில் கூடுவதற்குத் திட்டமிட்டிருந்தால் அதனை போலீசுக்குத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த அமைப்பு இது வரை அவ்வாறு செய்யவில்லை. "2012 அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் பிரிவு 9(1)ன் கீழ் அது (ஹிம்புனான் ஹிஜாவ்) அறிவிப்புக் கொடுக்க வேண்டும்…

தற்காப்பு அமைச்சு: சுவாராமின் வழக்குரைஞர்களை அழைப்பது “நமக்கு கௌரவக் குறைவு”

மனித உரிமைகளுக்குப் போராடும் சுவாராமைப் பிரதிநிதிக்கும் பிரஞ்சு வழக்குரைஞர்களை அழைப்பது நாடாளுமன்றத்துக்குக்  'கௌரவக் குறைவு' என தற்காப்புத் துணை அமைச்சர் அப்துல் லத்தீப் அகமட் கூறியிருக்கிறார். "சுவாராமைப் பிரதிநிதிக்கும் அந்த இரண்டு வழக்குரைஞர்களும் ஹீரோக்களாக விரும்புகின்றனர். அவர்களைநமது நாடாளுமன்றத்தில் உயர்ந்த நிலையில் வைப்பது நமக்கு கௌரவக் குறைவாகும். யார்…

தேர்தலுக்கு உதவி கோரி அன்வார் விடுத்த வேண்டுகோளை ஆஸ்திரேலியா நிராகரித்தது

மலேசிய எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தேர்தல் உதவி கோரி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்த போதிலும் மலேசியத் தேர்தல்கள் எப்படி நடத்தப்பட வேண்டுமென ஆஸ்திரேலியா சொல்லாது, சொல்லவும் முடியாது என ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் செனட்டர் பாப் கார் கூறியிருக்கிறார். பெரும்பாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்படும்…

செரண்டா தமிழ்ப்பள்ளி: இழுத்தடிப்பது முறையாகாது, தலைவர்களே!

செரண்டாவில் ஒரு தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கு அளிக்கப்படிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி விடுத்து நேற்று இரவு தொடங்கி உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ள  பள்ளி வாரியத் தலைவர் இராம ராவ் மற்றும் அவரது குழுவினரின் அர்ப்பணிப்பு உணர்வை மதிக்கிறோம் என்று உண்ணாவிரதப் போராளிகளைச் சந்தித்த சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர்…

செரண்டா தமிழ்ப்பள்ளி: வாரிய உறுப்பினர்களின் உண்ணாவிரதம் முடிவுற்றது

செரண்டாவில் ஒரு தமிழ்ப்பள்ளியைக் கட்டுவதற்கு பிரதமர் நஜிப் ரிம1 மில்லியன்  அளிப்பதாக உலுசிலாங்கூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலின் போது ஏப்ரல் 10, 2010 இல் வாக்குறுதி அளித்தார். இரண்டு ஆண்டு ஏழு மாதங்களாகியும் பிரதமர் நஜிப் அவரது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. "நம்புங்கள்" என்ற கூறிய நஜிப்பை நம்பி இவ்வளவு…

‘அடுத்த சிலாங்கூர் மந்திரி புசாராவது பற்றி அதிகம் கனவு காண…

பிகேஎன்எஸ் என்ற சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் மீது விருப்பம் போல் குற்றச்சாட்டுக்களை வெளியிடும் அளவுக்கு அடுத்த சிலாங்கூர் மந்திரி புசாராவது குறித்து விவசாய அமைச்சர் நோ ஒமார் 'அதிகம் கனவு காணக் கூடாது," என புக்கிட் அந்தாராபாங்சா சட்டமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி கூறுகிறார். பிகேஎன்எஸ் துணை…

சிறைச்சாலையின் ‘கவனக்குறைவை’ விசாரிக்க வேண்டும் என்கிறார் ஒரு தாய்

கடந்த அக்டோபர் மாதம் காஜாங் சிறையில் நிகழ்ந்த ஆர். குமாரராஜாவின்  இறப்புக்குச் சிறை அதிகாரிகளின் கவனக்குறைவுதான் காரணம் என்று கூறி அதை போலீசார் விசாரிக்க வேண்டும் என்று அவரின் தாயார் வலியுறுத்தியுள்ளார். அதன் தொடர்பில், இன்று டாங் வாங்கி போலீஸ் மாவட்டத் தலைமையகத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்த…

ஹாடி பிரதமர் என்பது மீதான வாக்குவாதத்திற்கு முடிவு கட்ட பாஸ்…

பக்காத்தான் ராக்யாட்டின் எதிர்காலப் பிரதமர் குறித்த பிரச்னை தொடர்பில்  சில நாட்களாக பிஎன் ஆதரவு ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்த பின்னர் அந்த வாக்குவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த விஷயம் மீது கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறிய கருத்துக்களுக்கு அந்த ஊடகங்கள்…

பெங்கேராங் குடியிருப்பாளர்கள் நாடாளுமன்றத்தின் செய்தியாளர் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்

தங்கள் முன்னோர்களின் புதைகுழிகளை இடமாற்றும் நடவடிக்கையைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் கையெழுத்து சேகரிக்கும் இயக்கம் பற்றி பெங்கேராங் குடியிருப்பாளர்கள்,  நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் (பிசி) ஊடகங்களிடம் பேச முயன்றபோது அங்கிருந்து அகற்றப்பட்டனர். அங்கிருந்து நகர மறுத்த என்ஜிஓ-தலைவர் சிம் செங் சானை நாடாளுமன்ற காவலர்கள் வலுக்கட்டாயமாக…