மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ள நிக் அஜிஸ் உடல் நிலை சீராக உள்ளது

இருதயத்தில் பிரச்னைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை கோத்தா பாரு குபாங் கெரியானில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவனையில் சேர்க்கப்பட்ட கிளந்தான் மந்திரி புசார் நிக் அஜிஸ் நிக் மாட் உடல் நிலை சீராக இருந்து வருகிறது. அந்தத் தகவலை அவரது உறவினரும் புக்கிட் துகு சட்டமன்ற…

அறிவியல் கணிதத்தை ஆங்கிலத்தில் போதிக்க தலைமையாசிரியர் வேண்டுகோள்

இன்று (08.04.2012) மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளி மாநாட்டில் கருத்து தெரிவித்த கின்மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மனோகரன் அறிவியல் கணிதப் பாடங்கள் மீண்டும் ஆங்கில மொழிக்கே செல்லவேண்டும் என்றார். தனது கணிப்பில் சுமார் 90 சதவிகிதப் பெற்றோர்கள் ஆங்கிலத்தில் இந்தப் பாடங்கள் போதிக்கப்படுவதையே விரும்புவதாகவும்; அப்படி செய்தால்தான்…

சபா வெட்டுமர ஊழல் மீது எம்ஏசிசி நடத்திய விசாரணையில் அனீபா…

"'வெளியுறவு அமைச்சர் அனீபா அமின், சபாவில் வெளியிடப்படும் அதிக ஆதாயத்தைக் கொண்ட வெட்டுமர அனுமதிகள் மூலம் ரகசியமாக நன்மை அடைந்தவர் எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. "               அதற்கு அவர் தமது மூத்த சகோதரரும் முதலமைச்சருமான மூசா அமானுக்கு நன்றி சொல்ல வேண்டும் என சரவாக் ரிப்போர்ட்  இணையத் தளம் தகவல்…

ஹிம்புனான், மஞ்சள் கடலில் “பசுமை சுனாமியை” நடத்த வாக்குறுதி

ஏப்ரல் 28ம் தேதி ஹிம்புனான் ஹிஜாவ் 3.0 (Himpunan Hijau 3.0) சாலைகளில் ஊர்வலமாகச் சென்று  பெர்சே 3.0 பேரணியுடன் இணைந்து கொள்ளும். KLCC என்ற கோலாலம்பூர் மாநகர மய்யத்தில் அன்றைய தினம் நண்பகல் வாக்கில் ஒன்று கூடும் ஐந்து பசுமைக் குழுவினர் அங்கிருந்து  மூன்று கிலோ மீட்டர்…

நஜிப் பத்து பகாட் சந்தையில் மக்களுடன் நடந்து சென்றார்

பத்து பகாட் ஜாலான் இப்ராஹிமுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று காலை வருகை அளித்தார். அவரது வருகை அந்த வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. காலை மணி 9.15 வாக்கில் அங்கு சென்றடைந்த நஜிப், Chop Tong Ah கோப்பிக் கடையில்  "kopi o", nasi…

ஹிண்ட்ராப் அழைப்பை அன்வார் ஏற்க வேண்டுமா ?

உங்கள் கருத்து: "மக்கள் சக்தி பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஹிண்ட்ராப் துணிச்சலாக ஏதோ ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் பக்காத்தான் காலம் காலத்துக்கு ஹிண்ட்ராப்புக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது என எண்ணக் கூடாது." ஹிண்ட்ராப்-பை சந்திப்பது பற்றி அன்வார் இன்னும் முடிவு செய்யவில்லை. ஜிம்னி ரிக்கெட்: ஒரு காலத்தில்…

நஸ்ரி புதல்வரின் தகராறு சம்பந்தப்பட்ட கேமிரா ஒளிப்பதிவு போலீசாருக்குக் கிடைத்துள்ளது

கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி ஒன்றில் கடந்த மாதம் நிகழ்ந்த ஒர் அமைச்சருடைய புதல்வர், அவரது மெய்க்காவலர், பாதுகாவல் மேற்பார்வையாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட "தகராற்றின்" கேமிரா ஒளிப்பதிவுகள் பிரிக்பீல்ட்ஸ் போலீசாருக்கு கிடைத்துள்ளன. பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸின் புதல்வரான முகமட் நெடிம்,…