ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
மலேசியப் பொருளாதாரம் இவ்வாண்டு மூன்றாவது கால் பகுதியில் 5.8% வளர்ச்சியைப்…
மலேசியப் பொருளாதாரம் இவ்வாண்டு மூன்றாவது கால் பகுதியில் 5.8% வளர்ச்சியை அனுபவித்தது. இது கடந்த ஒராண்டில் மிகவும் அதிகமான வளர்ச்சியாகும். உள்நாட்டுச் செலவுகள் அதிகரித்ததால் தேவைகள் வலுவடைந்தது அதற்குக் காரணம் ஆகும். இவ்வாறு மத்தியப் வங்கியான பாங்க் நெகாரா கூறுகிறது. சூழ்நிலகள் சவால் நிறைந்ததாக இருந்தாலும் மலேசியப் பொருளாதாரம்…
“மாணவர் உதவித்தொகை மூலம் அரசியல் ஆதாயம் தேட முனைகிறது பிஎன்”
பள்ளி மாணவர்களுக்கு ரிம100 உதவித்தொகை வழங்கும் நிகழ்வின்வழி அரசாங்கம் அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ளப் பார்க்கிறது என மாற்றரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அந்நிகழ்வுகளில் பிஎன் பிரதிநிதிகள் அல்லது தலைவர்கள் உடன் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் பணித்திருப்பதே இதற்குச் சான்று. இது, அரசாங்கம் நேர்மையற்றது என்பதைக் காண்பிக்கிறது. பொதுமக்களின்…
“நான் நொடித்துப் போயிருந்தேன் ஆனால் பணத்துக்காக பிகேஆர் -லிருந்து விலகவில்லை”
பணத்துக்காக தாம் பிகேஆர் -லிருந்து விலகியதாக அந்தக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் சையட் ஹுசேன் அலி கூறியிருப்பதை அதன் முன்னாள் இளைஞர் தலைவர் எஸாம் முகமட் நூர் மறுத்துள்ளார். சையட் ஹுசேன் வெளியிட்டுள்ள "ஒர் அரசியல் போராளியின் நினைவுகள்" என்னும் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களுக்கு எஸாம் பதில்…
டாக்டர் மகாதீர்: கோ, கெரக்கான் தலைவர் பதவியைக் கைவிட வேண்டும்
கெரக்கான் கட்சியை நல்ல முறையில் வழி நடத்தத் தவறியதற்காக அதன் தலைவர் டாக்டர் கோ சூ கூன் தலைமைத்துவப் பதவியிலிருந்து விலக வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். கோலாலம்பூரில் நிகழ்ச்சி ஒன்றுக்குப் பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார். 2008ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப்…
ம.இ.கா இழந்த பலத்தை மீட்க – நாய் சாப் கின்னஸ்…
கந்தசாமி : கோமாளி, சாமிவேலுக்கு பின் வந்த பழனிவேலால், ம.இ.கா-வின் தனது இழந்த பலத்தை மீட்க Read More
என்எப்சிக்கு (NFC) கொடுத்தது கடனா அல்லது மானியமா?
அரசாங்கம் வழங்கிய மில்லியன் கணக்கான கடன் குறித்து சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் தேசிய விலங்குக்கூட நிறுவனம் (NFC) அளித்த விளக்கம் வழங்கப்பட்ட ரிம250 மில்லியன் கடன் அல்ல, அது மானியம் என்று வாதிக்கும் பிகேஆரின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாகத் தெரிகிறது. பிகேஆரின் வியூகப் பிரிவு தலைவர் ரபிஸி ரமலியின் கூற்றுப்படி இது மானியம்…
திங்கட்கிழமை தொடக்கம் காற்று வேகமாக வீசும்; கடல் கொந்தளிப்பாக இருக்கும்
நாட்டின் பல பகுதிகளில் திங்கட்கிழமை தொடக்கம் காற்று வேகமாக வீசுவதுடன் கடலும் கொந்தளிப்பாக இருக்கும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரையில் இருக்கும் என்றும் 3.5 மீட்டர் உயரத்துக்கு அலைகள்…
அஸ்ரி: சூரிய சக்தியில் இயங்கும் பேசும் பைபிள்கள் இருப்பதாக கூறுவது…
முஸ்லிம்கள் "சூரிய சக்தியில் இயங்கும் கையடக்க பேசும் பைபிள்கள்" என்னும் கருவி மூலம் மதம் மாற்றம் செய்யப்படுவதாக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி கூறிக் கொள்வது ஒர் அவமானம் என முன்னாள் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் கூறுகிறார். "பைபிளை வாசிக்கும் அந்தக்…
அமானா, பராமரிப்பு அரசாங்க முறைக்கு யோசனை தெரிவிக்கிறது
தேர்தலின் போது அரசுத் துறைகள் நடு நிலையாக இருப்பதை உறுதி செய்ய பராமரிப்பு அரசாங்கத்தைத் தோற்றுவிக்கலாம் என பிஎன் கூட்டணிக்குள் அமைக்கப்பட்டுள்ள அமானா என்ற புதிய நெருக்குதல் அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது. இப்போதைய நடைமுறை, பிஎன், அரசாங்க நிர்வாக எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கிறது என அமானா அமைப்பின்…
ஹசான் அலி சூரியனையும் தடை செய்ய வேண்டும்
இணையத்தைப் பயன்படுத்துவதையும் ஐ-போன்கள் போன்ற நவீன தொடர்பு சாதனங்களையும் முஸ்லிம்கள் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கு சட்டமியற்றப்பட வேண்டும் என ஜயிஸ் கேட்டுக் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது 'சூரிய சக்தியில் இயங்கும் பேசும் பைபிள்கள்' பயன்படுத்தப்படுகின்றன. மனிதன்: கிறிஸ்துவர்கள் கல்விச் சாதனமாக பயன்படுத்தும் அந்தப் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டு…
என்எப்சி மீது போலீஸ் விசாரணை
நேசனல் ஃபீட்லோட் கார்பரேஷன்(என்எப்சி) நம்பிக்கை மோசடிச் செயலில்(சிபிடி) அல்லது ஏமாற்றும் செயலில் ஈடுபட்டதா என்று போலீஸ் விசாரணை செய்து வருவதை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் இன்று உறுதிப்படுத்தினார். வணிகக் குற்ற, புலன்விசாரணைத்துறை அவ்விசாரணையை மேற்கொண்டிருப்பதாக த ஸ்டார் ஆன் லைன் செய்தித்தளம் கூறுகிறது. “சம்பந்தப்பட்ட அனைவரையும்…
என்எப்சி: அது விலகிச் சென்றவர்கள் செய்த சதி
நேசனல் ஃபீட்லோட் கார்பரேஷன்(என்எப்சி) தலைமச் செயல் அதிகாரி முகம்மட் சாலே இஸ்மாயில், தம் நிறுவனத்தின் நிதி விவகாரங்கள் தொடர்பில் சர்ச்சை உண்டானதற்கு நிறுவனத்தைவிட்டு விலகிச் சென்றவர்கள்தான் காரணம் என்கிறார். சினார் ஹரியான் இதனைத் தெரிவித்துள்ளது. “என்எப்சி-யை விட்டு விலகிச் சென்றவர்கள் நிறுவனத்தின்மீது ஆத்திரம் கொண்டு அதைக் கீழறுக்கும் முயற்சியில்…
எம்னெஸ்டி: இசா கைதுகள் நஜிப்பின் “சீரமைப்பை”க் கேலி செய்கின்றன
என்மெஸ்டி இண்டர்நேசனல், சாபா, தாவாவில் 13 பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (இசா) கைது செய்யப்பட்டது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அந்தக் கோடூரச் சட்டத்தையே அகற்றப்போவதாக அளித்த வாக்குறுதியையே கேலி செய்வதுபோல் இருக்கிறது என்று கூறியுள்ளது. “மக்களைத் தடுத்துவைக்க அச்சட்டம் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது மலேசிய அரசாங்கம்…
யார் ஐயா ரிம70,000 வாடகை கொடுக்கும் புண்ணியவான்?
“ஒன் மெனுரோங் ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் வாடகைக்கு விடப்படுவது பற்றிய விளம்பரங்கள் சிலவற்றைப் பார்த்தேன்.8,000சொச்சம் சதுர அடி கொண்ட ஒரு வீட்டுக்குக் கூறப்பட்ட அதிகப்பட்ச வாடகையே ரிம25,000-தான்.” ஆடம்பர ‘கொண்டோ’ வாங்கியதை என்எப்சி தற்காக்கிறது விழிப்பானவன்: நேசனல் ஃபீட்லோட் கார்பரேஷன் (என்எப்சி) தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில்…
கத்தோலிக்க ஆயர் “பேசும் பைபிள்கள்” மீது ஹசானை சாடுகிறார்
முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதற்கு கிறிஸ்துவர்கள் எட்டு வழிகளைப் பயன்படுத்துவதாக கூறிக் கொள்வதைக் காட்டிலும் மதம் மாறியதாக சொல்லப்படும் எட்டு முஸ்லிம்கள் இருப்பதற்கான ஆதாரங்களைக் காட்டுவது நல்லது என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான சிலாங்கூர் மாநில ஆட்சி மன்ற…
சட்டத்தை மீறும் மத்திய அரசாங்கத்தைத் தண்டிப்பது யார்?, சார்ல்ஸ் சந்தியாகோ
அண்மையில், 2012 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தில் முன்மொழிந்திருந்தவாறு, சிலாங்கூரில் உள்ள எல்லா பள்ளி மாணவர்களுக்கும் கடந்த ஓரிரு நாட்களாக ரிம100 உதவி தொகை வழங்கப் பட்டு வருவதை அறிந்து தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார் "பள்ளி மாணவர்களுக்கு உதவித்…
“சூரிய சக்தியில் இயங்கும் பேசும் பைபிள்கள்” முஸ்லிம்கள் மீது பயன்படுத்தப்படுகின்றன
கிறிஸ்துவ சமய போதகர்கள் "நற்செய்தியை" பரப்புவதற்கு எட்டு வழிகளைப் பயன்படுத்துவதை ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை கண்டு பிடித்துள்ளது. அவற்றுள் ஒன்று "சூரிய சக்தியில் இயங்கும் கையடக்க பேசும் பைபிள்கள்" ஆகும். அந்தத் தகவலை இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான்…
இசாவின் கீழ் புதிய கைதுகள், முகைதின் மௌனம்
சபாவில் பயங்கரவாதிகள் எனக் கூறப்படும் சிலர் சமீபத்தில் இசா சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது குறித்து கருத்துக்கூற இன்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் மறுத்து விட்டார். "போலீஸ் படைத் தலைவர் இதனைக் கையாள விடுங்கள்", என்று அவர் எஸ்கே செரி செந்துல்1 க்கு வருகை அளித்தபோது கூறினார்.…
என்எப்சி சிலருக்கு மட்டும் “கௌகேட்” மீதான மௌனத்தை கலைக்கிறது
அரசாங்கம் வழங்கிய எளிய நிபந்தனைகளைக் கொண்ட 181 மில்லியன் ரிங்கிட் கடன் தொடர்பான சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் தனது மௌனத்தைக் கலைத்து பிரச்னையைத் தெளிவுபடுத்த முன் வந்துள்ளது. என்றாலும் இன்று காலை நெகிரி செம்பிலான் கெமாஸில் உள்ள என்எப்சி தலைமையகத்துச்…
தெங் சாங் இயோ பினாங்கின் அடுத்த பிஎன் தலைவர்
பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக், பினாங்கின் அடுத்த பிஎன் தலைவர் யார் என்பதை செவ்வாய்க்கிழமையே முடிவு செய்துவிட்டார் என்று பிஎன் வட்டாரமொன்று கூறியது. கெராக்கான் தலைவர் கோ சூ கூனை அடுத்து பினாங்கின் கெராக்கான் உதவித் தலைவர் ஒங் தியான் லை மாநில பிஎன் தலைவராவதை…
புவா அமைச்சரைக் கேட்கிறார்: “நீங்கள் ஏழை மலாய்க்காரர்களுக்கு என்ன கொடுக்கீன்றீர்கள்?”
பூமிபுத்ரா சமூகத்துக்கு தரம் குறைந்த பொருட்களை விற்பதின் மூலம் பாதகத்தைச் செய்வது உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரியே என டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா திருப்பிச் சாடியிருக்கிறார். எல்லாவற்றையும் விட கொடுமையானது தமது சமூகத்தைச் சார்ந்த ஏழை மக்களுக்கு அவர்…
கோ தேர்தலில் போட்டியிட மாட்டார் (விரிவான செய்தி)
கெராக்கான் தலைவர் கோ சூ கூன் அடுத்த பொதுத்தேர்தலில், நாடாளுமன்றத்துக்கோ சட்டமன்றத்துக்கோ போட்டியிட மாட்டார். இன்று கோலாலும்பூரில், கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கோ, கட்சியின் “இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு” வாய்ப்பளிக்க அவ்வாறு முடிவெடுத்ததாகக் கூறினார். மேலும்,அது ‘மக்களுடன் ஒத்துப்போகும்’ கெராக்கானின் உருமாற்ற வியூகத்தின் ஒரு பகுதியுமாகும். “புதுப்பிக்கும்…
கோ-வின் முடிவுக்கு அம்னோதான் காரணம் என்கிறார் குவான் எங்
கெராக்கான் தலைவர் கோ சூ கூன் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுக்கக் காரணம் அம்னோதான் என்கிறார் பினாங்கு முதலமைசார் லிம் குவான் எங்.கோ அப்படி முடிவு செய்ததற்கு அவர் வருத்தமும் தெரிவித்துக்கொண்டார். “அது கோவின் விருப்பமாக இருக்காது என்றே நினைக்கிறேன்....அப்படி இருந்தால் அவர்(2008 பொதுத் தேர்தலில் தோற்றபின்னர்)…


