அம்பிகா இசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும், பெர்க்காசா

செக்சுவாலட்டி மெர்தேகாவுக்கு எதிராக தேசியப் பள்ளிவாசலில் பெர்க்காசா ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் அம்பிகா ஸ்ரீனிவாசன் எதிர்ப்பு ஊர்வலமாக மாறியது. அம்பிகா உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என ஆர்ப்ப்பாட்டக்காரர்கள் கோரினர். பெர்சே 2.0 தலைவருமான அம்பிகா, நவம்பர் 9ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் செக்சுவாலட்டி மெர்தேகாவில்…

சான் கொங் சாய் வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஏப்ரல்…

போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதித் திட்டம் தொடர்பில் ஏமாற்றியதாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் சான் கொங் சாய் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு மீதான விசாரணை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் தேதி தொடங்கும். அந்த விசாரணையில் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட்…

இலங்கையின் உள்விவகாரங்களில் மலேசியா தலையிடாது: கோகிலன்

மனித உரிமை மீறல் உள்ளிட்ட பிரச்னைகளை இலங்கையின் உள்விவகாரங்களாக மலேசியா கருதுவதால் அந்த விவகாரங்களில் மலேசிய அரசாங்கம் தலையிடாது. அப்பிரச்னையை இலங்கையே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று வெளியுறவுத் துறைத் துணை அமைச்சர் கோகிலன் பிள்ளை தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  விவாதமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கோகிலன் இவ்வாறு குறிப்பிட்டார். அதேவேளை, பொருளாதாரம்,…

யூயூசிஏ தீர்ப்பு மீது அமைச்சு முறையீடு செய்ய அமைச்சரவை அனுமதி

யூயூசிஏ என்ற பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15வது பிரிவு அரசியலமைப்புக்கு முரணானது என அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உயர் கல்வி அமைச்சு முறையீடு செய்து கொள்வதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது. முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு "அதிகாரங்கள் பிரிக்கப்பட்ட உணர்வுகளுக்கு எதிராக இருப்பதால்" அமைச்சரவை அந்த முடிவைச்…

இன்று பிற்பகல் லிம்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

"அதிருப்தி கொண்ட" பல்வேறு தரப்பினர், இன்று பிற்பகல் 2.30க்கு பினாங்கு அரசாங்க அலுவலகங்கள் அமைந்துள்ள கொம்டாரில்  முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிராக பெரிய ஆர்ப்பாட்டம்  நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அந்த உத்தேச ஆர்ப்பாட்டம் லிம்மைக் கடுமையாக எதிர்ப்பவரான சுவாரா அனாக்-அனாக் மலேசியாவின் தலைவர் முகம்மட் கனி அப்துல் ஜிமான்…

எம்டியுசி மறியல் போராட்டம்: பினாங்கில் 1,000 தொழிலாளர்கள் கூடினர்

வேலைச் சட்டம் 1955 க்கு செய்யப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிலாளர்களின் மறியல் போராட்டம் நேற்று பினாங்கு, பட்டர்வொர்த்தில் நடைபெற்றது. கனத்த மழையையும் இடியையும் பொருட்படுத்தாமல் 1,000 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் அப்போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போராட்ட மறியலை மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் (எம்டியுசி) பினாங்கு கிளை முன்னின்று நடத்தியது.…

பிகேஆர் ஆங்கிலத்தில் அறிவியல் கணித பாடங்களைப் போதிப்பதை எதிர்க்கிறது

ஆங்கிலத்தில் அறிவியல் கணித பாடங்களைப் போதிப்பதை பிகேஆர் எதிர்க்கிறது. அத்துடன் அது பக்காத்தான் ராக்யாட் கொள்கையில் ஒரு பகுதி அல்ல என்றும் அது கூறுகிறது. ஆங்கிலத்தில் அறிவியல் கணித பாடங்களைப் போதிப்பதை தேர்வு செய்யும் வாய்ப்பு பெற்றோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அந்தக் கொள்கைக்கு ஆதரவாக பிகேஆர்…

‘கும்பல்களைக் குறி வையுங்கள், செக்சுவாலட்டி மெர்தேகாவை அல்ல

செக்சுவாலட்டி மெர்தேகா விழா நிகழ்வுகளைத் தடை செய்துள்ள போலீசை வழக்குரைஞர் மன்றம் சாடியுள்ளது. போலீஸ் படை தவறான தரப்புக்கள் மீது குறி வைப்பதாகவும் அது குற்றம் சாட்டியது. அந்த விழாவைத் தடை செய்வதற்கு போலீஸ் கொடுத்துள்ள காரணம் பொது ஒழுங்கு என்பதாகும். அந்த விழா நிகழ்வுகளைச் சீர்குலைக்க மக்கள்…

மலேசியா ‘பழி தீர்க்கும்’ பாதையில் செல்கிறது

"விழிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். நீதிக்கு புறம்பாக தண்டனைகள் வழங்கப்படும். மக்கள் அதனை உணருவதற்கு முன்னர் சர்வாதிகாரம் அவர்கள் வீட்டுக் கதவு அருகில் வந்து விடும்" போலீஸ் மெர்தேகா செக்சுவாலட்டி விழாவைத் தடை செய்கிறது.  பெர்ட் தான் :  எல்லாமே தெரிந்த விஷயம் தான். போலீஸ் மூலம் அரசாங்கம் அச்சத்தை உருவாக்குகிறது.…

வேலைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மறியல் போராட்டம்

கடந்த அக்டோபர் மாதத்தில் வேலைச் சட்டம் 1955 க்கு செய்யப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நாடு முழுவதிலும் மறியல் போராட்டம் நடத்தினர். நாட்டில் இருபது இடங்களில் நடந்த தொழிலாளர்களின் மறியல் போராட்டத்தை மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) முன்னின்று நடத்தியது. சட்டத் திருத்தத்தின் பல்வேறு பகுதிகளுக்கு,…

BN-இன் ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும்

அக்டோபர் 6 இல் நாடாளுமன்றம் தொழில் சட்டத்தில்  மாற்றங்கள் கொண்டுவர ஏற்றுக்கொண்ட மசோதாவை மீட்டுக்கொள்வதே சிறந்தது என்கிறார் சுவராம் என்ற மனித உரிமை கழகத்தின் தலைவரான கா. ஆறுமுகம். தொழிலாளர்களின் உரிமைகளுக்கு சாவு மணி அடிக்கும் தன்மை கொண்ட இந்த மாற்றங்கள், தொழிலாளர்களை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஜடப்பொருட்களாக மாற்றி,…

பக்காத்தான் பதிவு: ஆர்ஓஎஸ் “பொய்சொல்கிறது”

பக்காத்தான் ரக்யாட்டைப் பதிவு செய்ய புதிதாக விண்ணப்பம் செய்யப்படவில்லை என்று சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) கூறியிருப்பதை அக்கூட்டணி மறுத்துள்ளது. சொல்லப்போனால், மார்ச் மாதத்திலிருந்து அது பதிவகத்தை விரட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்று பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியோன் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு நவம்பரில், பக்காத்தான் இடைக்காலத் தலைவர்…

மாட் சாபு தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்ய உத்துசான் விண்ணப்பம்

புக்கிட் கெப்போங் கம்யூனிஸ்ட் விவகாரம் மீது வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றின் தொடர்பில் பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு தொடுத்துள்ள வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உத்துசான் குழுமத்தின் தலைமை ஆசிரியரும் உத்துசாம் மிலாயு (மலேசியா) சென் பெர்ஹாட்டும் செய்து கொண்டுள்ள விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நவம்பர் 23ம்…

குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றார்களா என்று விசாரணை

மனிதக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட குடிநுழைவுத்துறை அதிகாரிகள் எண்மர்மீது இப்போது 2001ஆம் ஆண்டு பணத்தை வெள்ளையாக்குதல் மற்றும் பயங்கவாதத்துக்கு நிதியளித்தல் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்தப்படுகிறது. இதனைத் தெரிவித்த உள்துறை அமைச்சு, ஓராண்டுக்காலம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அந்த அதிகாரிகள்மீது ஏற்கனவே அவர்கள்மீது சுமத்தப்பட்டிருந்த…

யூரோ நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கத்தின் 6 பில்லியன் ரிங்கிட் ஊக்குவிப்புத்…

மலேசியப் பொருளாதாரம் ஐரோப்பிய கடன் நெருக்கடியின் தாக்கத்தைச் சமாளிப்பதற்கு உதவியாக 6 பில்லியன் ரிங்கிட் பெறும் ஊக்குவிப்புச் செலவுத் திட்டத்தை தயாராக வைத்துள்ளது. இவ்வாறு இரண்டாவது நிதி அமைச்சர் அகமட் ஹுஸ்னி ஹானாட்ஸ்லா கூறியிருக்கிறார். "நாங்கள் இடிதாங்கியை வைத்துள்ளோம்- வரவு செலவுத் திட்ட ஏற்பாடுகளின் கீழ் 6 பில்லியன்…

மனோகரன் எம்பி தமிழ்ப்பள்ளிகள் குறித்து மக்களவையில் கேள்வி

தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் Y.B. எம். மனோகரன் தமிழ்ப்பள்ளி குறித்து மக்களவையில் நேற்று (02.11.2011) கேள்வியெழுப்பினார். மனோகரன்  கல்வி அமைச்சரிடம் எழுப்பிய வாய்மொழியான கேள்விகளும் அக்கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் முகைதின் யாசின் அளித்த பதில்களும் பின்வருமாறு: கேள்வி : 1. 1960 தொடக்கம் 2011-ம் ஆண்டு வரை நாட்டின்…

முஹைடின்: “ஆங்கிலத்தில் அறிவியல், கணித பாடங்களை போதிப்பது என்பது முடிந்து…

ஆங்கிலத்தில் அறிவியல், கணித பாடங்களைப் போதிக்கும் கொள்கையைத் தொடருவதில்லை என்ற முடிவு இறுதியானது என கல்வி அமைச்சர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார். ஆகவே அந்தக் கொள்கையை தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டும் என்ற வேண்டுகோட்கள், ஈராண்டுகள் காலம் கடந்தவை என துணைப் பிரதமருமான முஹைடின் சொன்னார். "2009ம் ஆண்டு…

“காமன்வெல்த் மாநாட்டின் போது நஜிப் புதல்வி பெர்த்தில் இல்லை”

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்-தில் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டின் போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் புதல்வி அங்கு இருந்ததாக கூறப்படுவதை பெர்த்-தில் மலேசியத் துணைத் தூதர் ஹமிடா அஸ்ஹாரி மறுத்துள்ளார். நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…

துணைப்பிரதமர்: சீன வணிகர்களின்றி மலேசியா இன்றைய நிலையை அடைந்திருக்க முடியாது

துணைப் பிரதமர் முகைதின் யாசின், மலேசியாவின் வளர்ச்சிக்குப் பெருமளவு பங்காற்றியுள்ளதாக சீனர்களின் வணிகச் சமூகத்தை வாயாரப் புகழ்ந்துள்ளார். “நீண்ட காலமாக உள்ளூர் சீன வணிகர்கள்தாம் நம் நாட்டின் தலையாய முதலீட்டாளர்களாக இருந்துள்ளனர் என்று தாராளமாகக் கூறலாம். அவர்கள் இல்லையென்றால் மலேசியா இன்றைய நிலையை எட்டியிருக்க முடியாது.” இன்று செர்டாங்கில்,…

சட்ட அமைச்சருக்குச் சட்டம் தெரியவில்லை

 உங்கள் கருத்து : “நஸ்ரி கூறியது நீதிமன்றத்தை அவமதிப்பதாகுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது மடத்தனமான கூற்று என்பது மட்டும் உண்மை. அதற்காக அவரைக் கூண்டில் நிறுத்த முடியுமா?” சட்ட அமைச்சர்: நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும் யுயுசிஏ-இல் மாற்றமில்லை ஜோக்கர்: என்ன ஓர் அபத்தமான கருத்தைச் சொல்லியிருக்கிறார் நடப்பில் சட்ட…

மசீச தலைமையகத்தில் சிவப்புச் சாயம் வீசப்பட்டது

கோலாலம்பூர் ஜாலான் அம்பாங்கில் உள்ள மசீச தலைமையகக் கட்டிடத்தில் சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளது இன்று காலை கண்டு பிடிக்கப்பட்டது. கீழ்த் தளத்தில் உணவு விடுதி அமைந்துள்ள இடத்துக்குப் பின்புறமுள்ள பக்க நுழைவாயிலுக்கு அருகில் தரையிலும் சுவரிலும் சிவப்புச் சாயம் வீசப்பட்டிருந்தது. அந்த இடத்தில் சாயம் வீசப்பட்டுள்ளதை இன்று காலை…

கொள்கை மாற்றம் மீது ஆசிரியர் பயிற்சி பெறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள்…

யூபிஎஸ்ஐ என்ற சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான கல்விப் பட்டப்படிப்பு மாணவர்கள், தங்களுக்கு வேலைகள் உறுதியற்றதாக இருக்கும் சூழ்நிலை குறித்து நேற்று ஆட்சேபம் தெரிவித்தனர். Gabungan Bertindak Mahasiswa, முஸ்லிம் பட்டப்படிப்பு மாணவர் இயக்கம், தீவகற்ப மலாய் மாணவர் சங்க சம்மேளனம்,  Legasi Mahasiswa Progresif,…

கல்வியாளர் அணிவகுப்பு: உங்கள் மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

'ஈவிரக்கமற்ற அரசியல்வாதிகள் தில்லுமுல்லு செய்யும் பல விஷயங்களை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கல்வி கற்ற மலாய்க்காரர்கள் வெளிப்படுத்தினால் மட்டுமே இந்த நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும்' புத்ராஜெயாவுக்கு அணிவகுத்துச் செல்ல கல்வியாளர்கள் யோசனை பெண்டர்: நமது கல்வியாளர்கள் நீண்ட காலமாக 'உணவைத் தேடும்'  (cari makan) கொள்கையைப் பின்பற்றி…