ரீசாவை தற்காத்து பேசிய நஜிப், மகாதீரின் மகன்களுக்கு வழங்கப்பட்ட வணிக…

1MDB நிதியில் 248 மில்லியன் அமெரிக்க டாலர் (RM1.08 பில்லியன்) சம்பந்தப்பட்ட பண மோசடி வழக்கில் தனது மகன் ரிசா அஜீஸை விடுவிக்க நீதிமன்றம் எடுத்த முடிவு குறித்து டாக்டர் மகாதிர் முகமதுவின் விமர்சனத்திற்கு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பதிலளித்துள்ளார். ரிசாவிற்கும் அரசு தரப்புக்கும் இடையில் எட்டப்பட்ட…

பிரதமர்: இயங்கலை கற்பித்தல் திறனை வளர்த்துகொள்ள ஆசிரியர்களுக்கு அழைப்பு

இன்றைய கற்பித்தல் துறையில் ஒரு புதிய நடைமுறையான இயங்கலை அல்லது ஆன்லைன் கற்பித்தல் மற்றும் 'வீட்டு அடிப்படையிலான கற்றல்' ஆகியவற்றில் திறன்களைப் பெறுமாறு நாட்டின் ஆசிரியர்களுக்கு பிரதமர் முகிதீன் யாசின் அழைப்பு விடுத்தார். தற்போது கோவிட்-19 பாதிப்பால் பள்ளியில் கல்வி கற்பித்தல் முடங்கிப் போயுள்ள நிலையில், இயங்கலை கற்பித்தலுக்கு…

கோவிட்-19: 36 புதிய பாதிப்புகள், 88 மீட்டெடுப்புகள், இறப்புகள் ஏதும்…

இன்று நண்பகல் நிலவரப்படி 36 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகி உள்ளன. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,855 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளில், வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட 28 பாதிப்புகள் உள்ளதாகக் கூறினார். 88…

கெடா சட்டமன்றம்: ஊடக அறிக்கை வெளியிட அனுமதி இல்லை

கெடா சுல்தான் சல்லேஹுதீன் பத்லிஷாவை சந்தித்த கெடா மாநில தேசிய கூட்டணியின் (பி.என்) சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று ஊடகங்களுக்கு எந்த அறிக்கையும் வெளியிட அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. காலை 9.15 மணி முதல் கூட்டம் நடைபெற்ற விஸ்மா டாருல் அமானுக்கு வெளியே ஊடகங்கள் கூடியிருந்தாலும் இந்த நிலைப்பாடு…

19 கெடா சட்டமன்ற உறுப்பினர்கள் கெடா சுல்தானை சந்தித்தனர்

இன்று காலை கெடா சுல்தான் அல் அமினுல் கரீம் சுல்தான் சல்லேஹுதீன் சுல்தான் பத்லிஷாவைச் சந்திக்க பாஸ், அம்னோ மற்றும் பேபாஸைச் சேர்ந்த 19 கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அலோர் செட்டாரில் உள்ள விஸ்மா டாருல் அமானுக்கு வந்தனர். காலை 9.15 மணி முதல் வந்தவர்களில், எதிர்க்கட்சித்…

புடு பகுதியில் முட்கம்பி வேலிகள் இடப்பட்டன

ஜாலான் புடுவில் சில பகுதிகள் நேற்று முன்தினம் முதல் முட்கம்பி வேலிகளால் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த பகுதி தீவிர நடமாட்டக் கட்டுப்பாட்டில் இல்லை என்று போலீசார் கூறுகின்றனர். ஜாலான் புடுவிலுள்ள டி மெஜஸ்டிக் பிளேஸ் தங்கும் விடுதிக்கு அருகிலுள்ள பகுதியில் இருந்து ஜாலான் லண்டாக் வரை முள் கம்பி…

நாடாளுமன்ற செயலாளர் திடீர் மாற்றம், ஆபத்தானது என்கிறது எதிர்க்கட்சி

நாடாளுமன்ற கூட்டத்திற்கு ஐந்து நாட்களே உள்ள நிலையில், அதன் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். இந்த திடீர் மாற்றம் குறித்து எதிர்க்கட்சி கூட்டணி தங்கள் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கை சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயல்பட வேண்டிய நாடாளுமன்ற நிறுவனத்தில், தலையீடுகள் உள்ளன என்ற கருத்துக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கூறினர்.…

கெடா சட்டமன்றம்: 36 சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை கெடா சுல்தானை…

மொத்தம் 36 கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கெடாவின் சுல்தான், அல் அமினுல் கரீம் சுல்தான் சல்லேஹுதீன் சுல்தான் பத்லிஷாவை, அலோர் செட்டாரில் உள்ள விஸ்மா டாருல் அமானில் நாளை சந்திக்க உள்ளனர். இந்த விஷயத்தை உறுதிப்படுத்த தேசிய கூட்டணி (பி.என்), பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) மற்றும் பேபாஸை…

‘என்னை கட்டாயப்படுத்த வேண்டாம்’ – இரண்டாவது ஆடியோ பதிவு வெளியானது

பாக்காத்தானை விட்டு வெளியேறும் முன், பெர்சத்துவின் உச்ச மன்ற கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது ஆடியோ பதிவு டாக்டர் மகாதிர் முகமது சார்பு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரின் குரலை ஒத்திருந்த அந்த ஆடியோவில், தான் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப பதவி விலகுவதிலிருந்து அவரைத் தடுக்க வேண்டாம் என்று…

கோவிட்-19: 40 புதிய பாதிப்புகள், 70 பாதிப்புகள் மீட்கப்பட்டன

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மதியம் நிலவரப்படி 40 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகி உள்ளன என்று தெரிவித்தார். அதில், 31 பாதிப்புகள் மலேசிய அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இறக்குமதி பாதிப்புகள் எதுவும் இல்லை என்று அவர் கூறினார். இவ்வாறு, மலேசியாவில் மொத்த கோவிட்-19…

பதவிகளுக்காக திசைமாறும் தவளை அரசியல், நெறிகளுக்கும் கொள்கைகளுக்கும் இடம் இல்லை…

மே 18 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் நேரத்தை குறைப்பதற்கான முயற்சி, முகிதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணிக்கு (பிஎன்) பெரும்பான்மை இல்லை என்பதைக் காட்டுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தங்கள் இருக்கைகளை இடைவெளி…

நஜிப்பின் வளர்ப்பு மகன் ரீசா ஆஜிஸ் விடுவிக்கப்பட்டார்

கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வளர்ப்பு மகன் ரீசா ஆஜிசை 1MDB நிதிகளுடன் இணைக்கப்பட்ட RM 1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 5 பண மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து இன்று விடுவித்தது. அரசு தரப்பும் குற்றம்சாட்டப்பட்டவரும் ஒரு உடன்பாட்டை எட்டியதை தொடர்ந்து, நீதிபதி அஸ்மான்…

ஜோகூர் சட்டமன்றம் அசல் நிகழ்ச்சி நிரலின் படி அமைதியாக முடிந்தது

ஜோகூர் சட்டமன்றம் அசல் நிகழ்ச்சி நிரலின் படி அமைதியாக முடிந்தது குழப்பம் மற்றும் சண்டைகள் ஏற்பட்ட மலாக்கா மற்றும் பேராக் மாநில சட்டமன்றங்களுடன் ஒப்பிடும்போது, ஜோகூர் மாநில சட்டமன்றம் இன்று அமைதியாக தோன்றியது. பெரிகாத்தான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் தரப்பினர் அரசியல் ஆட்டங்களில் ஈடுபடக்கூடாது என்ற அரச…

வேற்றுமை கிருமியை பரப்ப வேண்டாம், ஜோகூர் சுல்தான் கூறினார்

ஜொகூர் மாநில சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் அரசியல் ரீதியாக பிளவு பட வேண்டாம் என்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார் அறிவுறுத்தினார். தேசிய கூட்டணி தலைமையில் புதிய மாநில அரசாங்கக் கட்சி, மற்றும் பக்காத்தான் ஹராப்பான் கட்சிக்கும் இடையே விவாதங்களும் வாக்குவாதங்களும் ஏற்படக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் அவரது ஆலோசனை…

கையெழுத்திடப்பட்ட 23 உறுதிமொழிகள் பெரிக்காத்தான் கையில் உள்ளன

கெடா தேசிய கூட்டணி (பி.என்) தற்போது மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, நான்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உட்பட 23 கையெழுத்திடப்பட்ட உறுதிமொழிகள் (statutory declaration) தயாராக உள்ளன. பக்காத்தான் ஹராப்பானிடம் இருந்து மாநில அரசைக் கைப்பற்றுவதற்கான அடுத்த கட்டத்திற்காக அவர்கள் காத்திருப்பதாக கெடா பாஸ் வட்டாரங்கள்…

கோவிட்-19: 37 புதிய பாதிப்புகள், இரண்டு இறப்புகள்

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இன்று மதியம் நிலவரப்படி 37 புதிய கோவிட்-19 பாதிப்புகள் உள்ளதாகத் தெரிவித்தார். மொத்தம் 21 பாதிப்புகள் மலேசியர் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டவை என்றும் நான்கு இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 33 உள்ளூர் பாதிப்புகள் என்றும் அவர் கூறினார். எனவே, மலேசியாவில்…

அஸ்மின்: இந்த மாத இறுதியில் பொருளாதார மீட்பு திட்டத்தை அரசாங்கம்…

கோவிட்-19க்குப் பிந்தைய பொருளாதாரத்தை புதுப்பிக்க ஆறு மாத பொருளாதார மீட்பு திட்டத்தை இந்த மாத இறுதியில் அரசாங்கம் அறிவிக்கும். இந்த தொற்றுநோய் மலேசியா உள்ளிட்ட உலகளாவிய சந்தைகளை பாதித்துள்ளதாக அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார். “வணிகங்களின் செயல்பாட்டை நிறுத்த வேண்டியிருந்தது, வேலையில்லா…

நாடாளுமன்றத்தின் புதிய நிகழ்ச்சி நிரல் மே 18 நம்பிக்கையில்லா தீர்மானத்தை…

மே 18 அன்று நாடாளுமன்றத்தின் ஒரு நாள் அமர்வுக்கான அறிவிப்பு கடிதத்தில் இப்போது ஒரே ஒரு நிகழ்ச்சி நிரல் மட்டுமே உள்ளது - அது, பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் உரை மட்டுமே. இறுதியில் இது பிரதமர் முகிதீன் யாசினின் அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு…

TNB தலைவராக மஹாட்ஸீர் நியமனம் குறித்து மஸ்லீ கேள்வி

தற்போது விசாரணையில் உள்ள சூரிய மின்சக்தித் திட்ட வழக்குடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தெனகா நேஷனல் பெர்ஹாட்டின் (TNB) தலைவராக அம்னோ துணைத் தலைவர் மஹாட்ஸீர் காலித் நியமிக்கப்பட்டது குறித்து முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மஹாட்ஸீரின் பெயரை மேற்கோள் காட்டவில்லை என்றாலும், அவரது…

நான் இன்னும் கெடாவின் மந்திரி புசார் – முக்ரிஸ்

மாநில சட்டசபையில் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறினாலும், தான் இன்னும் கெடா மந்திரி புசாராக இருப்பதாக முக்ரிஸ் மகாதீர் தன் பதவியை தக்க வைத்துக் கொண்டார். "கெடாவில் அரசியல் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது, நான் இன்னும் மந்திரி புசாராக தான் இருக்கிறேன், அரசாங்கம் இன்னும் நடைமுறையில்…

என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டனர்

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தான் குற்றமற்றவர் என்பதையும் தன் தலைமைத்துவத்தின் தரத்தையும் நிரூபிக்க முயற்சிப்பதில் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார். ஒரு வீடியோ வெளியீட்டில், அவர் மலேசிய அரசியலின் நிலையற்ற தன்மை பற்றி பேசினார். "மலேசியாவின் அரசியல் எவ்வாறு…

‘இப்போது மலாய்க்காரர்கள் கோழையாகி விட்டனர்’ – டாக்டர் மகாதீர் முகமது

டிஏபி கட்சி அரசாங்கத்தில் ஓர் அங்கமாக இருந்தால், அது மலாய்க்காரர்களை அழித்துவிடும் என்று பல மலாய்க்காரர்கள் நம்புவது மிகவும் வெட்கமாக உள்ளது. ஆம். மலாய்க்காரர்களுக்கு பல பலவீனங்கள் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவர்கள் வணிகத்திலும் நிறுவனத்திலும் சிறந்து விளங்கவில்லை. போதைப்பொருள், குற்றங்கள் மற்றும் ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஏராளமான…

16 புதிய பாதிப்புகள், 2 மாதங்களில் மிகக் குறைவான பதிவு

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நண்பகல் வரை 16 புதிய கோவிட்-19 பாதிப்புகள் உள்ளன என்றும், இது இரண்டு மாதங்களில் மிகக் குறைவான பதிவு ஏன்றும் கூறியுள்ளார். நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை அமல்படுத்துவதற்கு முன்பு தான் மலேசியா இவ்வளவு குறைந்த பாதிப்பை பதிவு செய்திருந்தது.…