சிவராசாவின் அரசியல் செயலாளர், 2 ஊழியர்களுக்கு 4 நாள் தடுப்புக்…

ரிம 20,000 தொடர்பான ஊழல் வழக்கு விசாரணைக்காக, எம்.ஏ.சி.சி.-ஆல் கைது செய்யப்பட்ட சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசாவின் அரசியல் செயலாளர் மற்றும் 2 ஊழியர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை வரை, 4 நாள் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று, மதியம் 12 மணியளவில் டாங் வாங்கி மாவட்டப் போலிஸ் தலைமையகத்தில்…

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊழியர்களை எம்.ஏ.சி.சி. கைது செய்தது

நேற்றிரவு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.), கிள்ளான் பள்ளத்தாக்கில் ஓர் எதிர்க்கட்சி எம்.பி.யின் மூன்று ஊழியர்களைக் கைது செய்தது. குடிநுழைவு தொடர்பான RM20,000  ஊழல் குற்றச்சாட்டை  விசாரணை  செய்வதற்கு உதவியாக அவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உத்துசான் மலேசியா செய்திகளின்படி, அவர்கள் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசாவின் ஊழியர்கள்…

ஹரப்பான் தலைவர் என்ற முறையில் மகாதிர் முதல் முறையாக சரவாக்…

  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் பிரதமர் மகாதிர் அம்னோவையும் பாரிசானையும் விட்டு விலகிய பின்னர் சரவாக்கில் முதல் முறையாக பேசவிருக்கிறார். கூச்சிங்கில் நடைபெறும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கை பற்றிய செராமாவில் மகாதிர் பேசுகிறார். இச்செராமில் டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், அமானாவின்…

நோர் ஓமார் : சிலாங்கூரை மீண்டும் பிஎன் கைப்பற்ற, முன்னாள்…

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், சிலாங்கூரைப் பாரிசான் மீண்டும் கைப்பற்ற அம்மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார்கள் மூவர் ஒன்றிணைந்துள்ளனர். சிலாங்கூர் மாநிலத்தின் அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் நோ ஓமார், முகமட் முகமட் தாயிப் அம்னோவில் இணைந்தது, மாநில பாரிசானுக்கு  ஒரு புதிய ஒளியைக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். “நாம் கலந்து…

போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகவும் வைத்திருந்ததாகவும் ஜொகூர் அரச குடும்பத்தினர் மீது…

ஜொகூர் அரச பரம்பரையைச் சேர்ந்த துங்கு ஆலாங் ரேஷா துங்கு இப்ராஹிம், கடந்த ஜூன் மாதம், மெதாம்ப்ஹிதமின் ரக போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகவும், கனாபிஸ் ரக கஞ்சாவை வைத்திருந்ததாகவும் நேற்று பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 31 வயதான துங்கு ரேஷா தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை, மாஜிஸ்திரேட் நுருல்ஹூடா…

எம்பிபிஜே-இல் வெளிப்படைத்தன்மை குறைந்து வருகிறது

பெட்டாலிங்  ஜெயா  மாநகராட்சி  மன்ற(எம்பிபிஜே)த்தின்   நடவடிக்கைகளில்  வெளிப்படைத்தன்மை   இல்லை   என   குடியிருப்பளர்   சங்கங்களின்  கூட்டமைப்பு  மைபிஜே  கூறியுள்ளது. மன்றம்  செப்டம்பர்  26-இல்,  அதன்  ஆண்டு  பட்ஜெட்  கலந்துரையாடலை    நடத்தவுள்ளது.  ஆனால்,    கவுன்சிலர்களுக்கும்    குடியிருப்பாளர்களுக்கும்  ஆகக்  கடைசி   நிதிப்  புள்ளிவிவரங்கள்  இன்னும்  கிடைக்கவில்லை   என   அது  கூறிற்று. ”கலந்துரையாடல்   பொருளுள்ளதாக  …

கிழக்கு மலேசியர்கள் தீவகற்ப மலேசியாவில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்

கிழக்கு  மலேசியர்கள்   தீவகற்ப  மலேசியாவிலும்   கிழக்கு  மலேச்சியாவில்   உள்ள   தீவகற்ப   மலேசியர்கள்   கிழக்கு  மலேசியாவிலும்   வாக்களிக்க   அனுமதிக்க  வேண்டும்  என்று பெர்சே  தேர்தல்   ஆணையத்தையும்   புத்ரா  ஜெயாவையும்   கேட்டுக்கண்டிருக்கிறது. இதை  நாடாளுமன்றத்  தேர்வுக்குழு   2011-லேயே  பரிந்துரைத்ததைச்   சுட்டிக்காட்டிய   தேர்தல்   சீரமைப்புக்காக   போராடிவரும்   அவ்வமைப்பு,  அதை   அவசரமாக  அமல்படுத்த  வேண்டிய  …

பாதுகாவலர்களாக பணியாற்றிவந்த அபு சயாப் ஆள்கள் கைது

கோலாலும்பூரில்  பாதுகாவலர்களாக  வேலை   செய்துவந்த   பிலிப்பினோ   நாட்டவர்   எழுவரை  போலீஸ்  கைது   செய்துள்ளது.  அவர்கள்  அனைவருமே  அபு  சயாப்   ஆள்கள்   என்று   ஐயுறப்படுகிறது. புக்கிட்  அமான்   பயங்கரவாத   எதிர்ப்புப்  பிரிவு,  செப்டம்பர்  14-இல்,   மாநகரின்  பல   பகுதிகளில்   அவர்களைக்  கைது   செய்ததாக    இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்   போலீஸ்   முகம்மட்  ஃபுசி  …

கிட் சியாங்: மசீச ஒரு கோட்பாடற்ற கட்சி என்பதை பீர்…

  சிறந்த பீர் விழா 2017 நிகழ்ச்சியை நடத்துவதற்கு டிபிகேஎல் அனுமதி அளிக்க மறுத்ததை மசீச தலைவர் லியோ தியோங் லாய் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, மசீச ஒரு கோட்பாடற்ற கட்சி என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அக்கட்சியைச் சாடியுள்ளார். மசீச ஒரு கோட்பாடுகள் இல்லாத…

பீர் விழா வேண்டும் என்று நேற்று கூறிய மசீச தலைவர்…

  சிறந்த பீர் விழா 2017 ஐ அக்டோபர் 6-7 திகதிகளில் நடத்துவதற்கு கேஎல் மாநகர் மன்றம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது. இந்த விழா கோலாலம்பூரில் 2011 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வந்துள்ளது. எந்தப் பிரச்சனையும் எழுந்ததில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு, பாஸ் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்…

எரிபொருள் விலை கடந்த மூன்று மாதங்களில் முதல் முறையாகக் குறைகிறது

  கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து விலை ஏற்றம் கண்ட எரிபொருள்கள், முதல் முறையாக இன்று நள்ளிரவிலிருந்து குறைந்த விலையில் விற்கப்படும். ரோன்95 மற்றும் ரோன்97 ஒரு லீட்டருக்கு முறையே இரண்டு மற்றும் மூன்று சென் விலை குறைந்து ரிம2.19 க்கும் ரிம2.49 க்கும் விற்கப்படும். டீசல் விலை…

ஆட்சிக் கவிழ்ப்பில் ரஹ்மான் டஹ்லானுக்கு உடன்பாடில்லை

பிஎன்  வியூகத்தலைவர்   அப்துல்   ரஹ்மான்   டஹ்லானுக்கு   ஆட்சிக்கவிழ்ப்பு   செய்வதில்   உடன்பாடில்லை. அதுவும்  இப்போதைய   நிலையில்   அதற்கு   அவசியமுமில்லை   என்று  பிரதமர்துறை    அமைச்சர்  நினைக்கிறார். “அரசியல்  புரட்சியில்    எனக்கு   உடன்பாடில்லை.  அதுவும்   ஆட்சித்தவணை   முடியும்   தருவாயில்   இருக்கும்போது   அதுபோன்ற  செயலில்   ஈடுபட  வேண்டிய   அவசியமும்  இல்லை”,  என  மலேசியாகினிக்கு    அனுப்பிய  …

1எம்டிபி மீதான போலீஸ் விசாரணை முடிவுக்கு வந்தது

போலீஸ்   1எம்டிபிமீது   மேற்கொண்ட  விசாரணை  முடிவுக்கு   வந்தது.  அதில்  புதிதாக   எதுவும்   கண்டுபிடிக்கப்படவில்லை   என்பதால்   பொதுமக்களுக்குத்  தெரிவிக்க   எதுவுமில்லை  என   இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்   முகம்மட்  ஃபுசி  ஹருன்   தெரிவித்தார். “விசாரணை  முடிவடைந்தது.  மேல்  விசாரணை   செய்ய   வேண்டிய   அவசியமில்லை. “ஒருவேளை   பொதுக்கணக்குக்குழு(பிஏசி)  அல்லது   அமைச்சரவை   உத்தரவிட்டால்  மேல்விசாரணை  …

ரோஹிஞ்யா விவகாரம் சரியாகக் கையாளப்படாவிட்டால் ஆசியான் ‘ஐஎஸ் புகலிடமாக’ மாறும்…

மியான்மாரின்  ராக்கைன்  மாநிலத்தில்   ரோஹிஞ்யா   விவகாரத்துக்கு  அவசரமாக   முடிவு  காணப்பட    வேண்டும்,   தவறினால்  அது   தீவிரவாதிகள்  வளருமிடமாக   மாறி  விடும்  என  மலேசிய    வெளியுறவு  அமைச்சர்   அனிபா  அமின்   கூறினார். அவ்விவகாரம்  தொடர்பில்   மலேசியாவின்    ஆழ்ந்த  கவலையைத்    தெரிவித்துக்கொண்ட    அனிபா,   தென்கிழக்காசியாவையும்   தெற்காசியாவையும்    தனது   தளமாக்கிக்கொள்ள    நாட்டம்  கொண்டுள்ள   …

தாபிஸ் தீ: விசாரணைக்குப் பின்னரே எழுவரின் நிலை தெரியவரும்

வியாழக்கிழமை   கம்போங்  டத்தோ  கிராமாட்   சமயப்  பள்ளிக்குத்   தீவைக்கப்பட்ட    சம்பவத்தில்   கைதான   ஏழு   இளைஞர்களின்   நிலை   விசாரணைக்குப்  பின்னரே  முடிவு   செய்யப்படும்  என்று  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்  போலீஸ் (ஐஜிபி)  முகம்மட்  ஃபுசி   ஹருன்    கூறினார். “இரசாயனத்  துறை,  தீயணைப்பு   மீட்புத்   துறை   அறிக்கைகளுக்காகவும்   வேறு  சில    அறிக்கைகளுக்காகவும்  …

பியோங்யாங் சென்றுவர டிஎம்ஜே-க்குச் சிறப்புச் சலுகை: வட கொரியா வழங்கியது

ஜோகூர்  பட்டத்திளவரசர்   துங்கு  இஸ்மாயில்   சுல்தான்  இப்ராகிம்   எப்போது   வேண்டுமானாலும்   ஜோகூரிலிருந்து   நேரடியாக   பியோங்யாங்   செல்ல   முடியும். நேற்று    அவருக்கும்   வட  கொரிய  தூதர்   கிம்  யு  சோங்-குக்குமிடையில்   நடைபெற்ற    சந்திப்பை   அடுத்து   அவருக்கு   அச்சலுகையை    பியோங்யாங்   வழங்கியது. “இது  மிகப்   பெரிய   கெளரவம்    ஏனென்றால்  மற்ற  உலகத்   …

கிட் சியாங் : ஆர்.சி.ஐ. சீக்கிரமாக விசாரணையை முடித்தது, நஜிப்…

திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே, ஆர்.சி.ஐ. தனது விசாரணையை முடித்து கொண்டது, பிரதமர் நஜிப் ரசாக் சாட்சியம் அளிப்பதிலிருந்து தவிர்ப்பதற்காகவா, என்று லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பினார். ஆர்.சி.ஐ.க்குச்  சாட்சியமளித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட், 1993- ஆம் ஆண்டு அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய வங்கி இழப்புக்கு ஆர்.சி.ஐ.…

பாஸ் மற்றும் ஹரக்காவுக்கு எதிராக சித்தி காசிம் வழக்கு தொடர்கிறார்

  தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக வழக்குரைஞர் சித்தி காசிம் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் கட்சியின் நாளிதழ் ஹரக்கா டெய்லி மீது வழக்கு தொடர்வதற்காக சட்டப்பூர்வமான கோரிக்கை கடிதத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பியுள்ளார். "பாஸ் மற்றும் ஹரக்காவுக்கு எதிரான தமது வழக்கு தாம் செய்திருந்த கொர்பான்…

கசானாவிலிருந்து நோர் முகமட் யாக்கோப் பதவி விலகினார்

கசானா நேசனலின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக, நோர் முகமட் யாக்கோப் அறிவித்துள்ளார். அரசுக்குச் சொந்தமான அம்முதலீட்டு நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, காசானா இயக்குனர்கள் குழுவிலிருந்தும், கசானா ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்தும் விலகப்போவதாக நோர் கடிதம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. அவரின் பதவி விலகல் எதிர்வரும்  செப்டம்பர்…

மகாதிர்: பிரதமர் மேயிடம் எதை வாங்குவதற்கு நஜிப் பேசினார்?

  கடந்த வாரம் பிரதமர் நஜிப் அமெரிக்க அதிபர் டிரம்பை வாசிங்டனில் சந்தித்தது பற்றி கடுமையாக விமர்சித்திருந்த முன்னாள் பிரதமர் மகாதிர், அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் போது நஜிப் லண்டனில் பிரிட்டீஷ் பிரதமர் தெரெசா மேயிடம் என்ன பேசினார் என்று கேட்கிறார். குறிப்பாக, பிரிட்டீஷ் அரசிடமிருந்து ஏதாவது வாங்குவதற்கு…

அன்வார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்

  சிறையிலடைக்கப்பட்டிருக்கும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கோலாலம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது மகள் நூருல் இஸ்ஸாவும் பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிசி ரமலியும் மலேசியாகினியிடம் இதை உறுதிப்படுத்தினர். இன்று பிற்பகல் மணி 2.00 அளவில் நிலையற்ற இரத்த அழுத்தத்தின் காரணமாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக…

போரெக்ஸ் மீதான ஆர்சிஐ முடிவுக்கு வந்தது

அன்னிய  செலாவணி    வணிகத்தில்   பேங்க்  நெகாராவுக்கு    ஏற்பட்ட   பில்லியன்  கணக்கான   ரிங்கிட்   இழப்பு  குறித்து    விசாரணை   செய்ய   அமைக்கப்பட்ட   அரச  ஆணையத்தின்    நடவடிக்கைகள்   இன்றுடன்  முடிவுக்கு   வருகின்றன. வியாழக்கிழமை  அதன்   நடவடிக்கைகளை   முடித்துக்கொள்ள   முன்பு   திட்டமிடப்பட்டிருந்தது. எட்டாவது  நாளான  இன்று   விசாரணைகள்   முடிவுக்கு    வருவதாக   ஆர்சிஐ   தலைவர்   முகம்மட் …

பிகேஆர் உதவித் தலைவர்: கட்சித் தாவல் ஆருடங்களில் உண்மையில்லை

சிலாங்கூர்   சட்டமன்ற   உறுப்பினர்கள்   சிலர்   கட்சிமாறத்   திட்டமிடுகிறார்கள்   என்ற  ஆருடத்தை    மறுத்த   பிகேஆர்   உதவித்   தலைவர்   தியான்  சுவா,  அதில்  எள்ளளவும்   உண்மையில்லை    என்றார். டிவிட்டரில்    பதிவிட்டிருக்கும்    பத்து    எம்பி,   அது  மாநில   அரசுக்குக்  குழிபறிப்பதற்காக   பிஎன்  மேற்கொள்ளும்  “விஷமத்தனமான  பிரச்சார”த்தின்   ஒரு  பகுதி   என்றார். “சிலாங்கூர்   அரசு  …