அறிக்கையாளர்கள் எல்லைகள் அற்ற அமைப்பின் (RSF) 2026-ஆம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில், மலேசியா கடந்த ஆண்டு பெற்ற 88-வது இடத்திலிருந்து தற்போது 95-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் 56.09 புள்ளிகளைப் பெற்றிருந்த மலேசியா, இந்த ஆண்டு 52.73 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. மலேசியா…
நஜிப்: ரோஸ்மாவுக்குப் பிறந்த நாள் பரிசாக கடிகாரம் கொடுக்க விரும்பினேன்
எஸ்ஆர்சி வழக்கு முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், விடுமுறைக்காகக் குடும்பத்தோடு ஹவாய் சென்றிருந்ததாகவும் அப்போது மலேசியாவில் வெள்ள நெருக்கடி ஏற்பட்டு உடனே திரும்பி வர வேண்டியிருந்தது என்றும் விடுமுறைக்கிடையில் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து செல்வதற்குப் பரிகாரமாக தன் மனைவியின் பிறந்த நாள் பரிசை- ஒரு கடிகாரத்தை-த் தேர்ந்தெடுப்பதை அவரிடமே…
எம்டியுசி தொழிலாளர் சட்டத் திருத்தத்தைத் தடுக்க செனட்டர்களைச் சந்தித்தது
தொழிலாளர் சட்டச் சீரமைப்புச் சட்டவரைவு நாட்டில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குச் சமாதி கட்டிவிடும் என்று கூறிக்கொள்ளும் மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி), இன்று தேசிய செனட் மன்ற உறுப்பினர்களைச் சந்தித்து மேலவையில் அதற்கெதிராக வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டது. தொழிலாளர் சட்டங்களில் செய்ய உத்தேசித்துள்ள திருத்தங்கள்மீது விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்த எம்டியுசி அச்சட்டவரைவு…
வேதமூர்த்தியிடம் மன்னிப்பு கேட்டார் அஸ்வாண்டின்
ஜாரிங்கான் மலாயு மலேசியா தலைவர் அஸ்வாண்டின் ஹம்சா, கடந்த ஆண்டு ஒரு பேரணியில் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியைச் சிறுமைப்படுத்திப் பேசியதற்கு இன்று நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு ரிம90,000 இழப்பீடு கொடுக்கவும் ஒப்புக்கொண்டார். கடந்த ஆண்டு, கிறிஸ்மஸ் தினத்தன்று கிள்ளானில் நடந்த ஒரு பேரணியில் வேதமூர்த்தியைப் பலவாறு இழிவுபடுத்திப்…
சாமிவேலுவுக்கு எதிராக அவரின் மகன் வேள்பாரி வழக்கு
எஸ். வேள்பாரி அவரின் தந்தை மஇகா முன்னாள் தலைவர் ச. சாமிவேலு-வுக்கு எதிராக கோலாலும்பூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தன் தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவரா, அவரால் தமது சொந்த விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள முடியுமா என்பதை நீதிமன்றம் கண்டறிய வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். ”எங்களுக்கு இதைத் தவிர…
குற்றமுள்ள மனசு குறுகுறுக்கிறது- சுரைடாவைச் சாடினார் சைபுடின்
கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் அதற்கும் தயார் என்று கூறிய பிகேஆர் உதவித் தலைவர் சுரைடாவை கட்சித் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் சாடினார். நேற்று ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோது சுரைடா அவ்வாறு கூறியது “தவற்றை ஒப்புக்கொள்வது போன்றது” என்று சைபுடின் குறிப்பிட்டார். “கட்சியின் ஒழுங்கு விதிகளைத் தெரிந்தே மீறியவர்கள்தான் அப்படியெல்லாம்…
Pak Li மருந்து பிளாஸ்டரில் நச்சுப்பொருள்- சுகாதார அமைச்சு எச்சரிக்கை
Pak Li மருந்து பிளாஸ்டரில் diphenhydramine. எனப்படும் நச்சுப்பொருள் இருப்பதால் பொதுமக்கள் அதை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்துகிறது. அதில் diphenhydramine. சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து டிசம்பர் 5 ஆம் நாள் அப்பொருளின் பதிவு இரத்துச் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தலைமை இயக்குனர் டாக்டர்…
முகைதின்: சினமூட்டும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்
உள்துறை அமைச்சு பொது அமைதியையும் தேசிய நல்லிணக்கதையும் கெடுக்கும் முயற்சிகளை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காது என அதன் அமைச்சர் முகைதின் யாசின் எச்சரித்துள்ளார். அண்மையில் நடந்துள்ள மூன்று நிகழ்வுகளை அவர் சுட்டிக்காட்டினார். ஜாலோர் கெமிலாங் தப்பாகக் காண்பிக்கப்பட்டது, நெகரா கூ வேறு மொழிகளில் பாடப்பட்டது, ஹட் யாய் அமைதி…
குவான் எங்: ஆவி வாக்காளர்கள் என்று கூறி இன உணர்வைத்…
கடந்த பொதுத் தேர்தலில் டிஏபி ஆவி வாக்காளர்களைப் பயன்படுத்தி அம்னோவைத் தோற்கடித்ததாக ஒமார் ஃபவிட்சார் கூறியிருப்பது இன உணர்வுகளைத் தூண்டிவிடும் ஒரு முயற்சி என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று கூறினார். “அது ஒரு தீய நோக்கம் கொண்ட குற்றச்சாட்டு. இன உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்காக…
பிகேஆர் காங்கிரஸ்: தியான் சுவா பேச்சுக்குக் கூட்டத்தினர் எதிர்ப்பு
இன்று பிகேஆர் காங்கிரஸ் இறுதி நாள் கூட்டத்தில் பேசிய உதவித் தலைவர் தியான் சுவா, மிகுந்துவரும் கண்மூடித்தனமான வெறித்தனத்திலிருந்து கட்சியைக் காப்பது தலைவர் அன்வார் இப்ராகிமுன் கடமை என்றுவலியுறுத்தினார். தியான் சுவா பேச எழுந்தபோதே கூட்டத்தில் இலேசான சலசலப்பு. நேற்று பிகேஆர் காங்கிரஸ் அஸ்மினைச் சாடும் மேடையாக மாறிவிட்டதாகக்…
பிகேஆர் காங்கிரஸ் இறுதி நாளில் அஸ்மினையும் அவரின் ஆதரவாளர்களையும் காணோம்
இன்றைய பிகேஆர் காங்கிரஸின் இறுதிநாள் கூட்டம் பல தலைவர்கள் இல்லாமலேயே தொடங்கியது. துணைத் தலைவர் அஸ்மின் அலி, உதவித் தலைவர் சுரைடா கமருடின், மகளிர் பிரிவுத் தலைவர் ஹனிசா தல்ஹா ஆகியோரும் அஸ்மின் ஆதரவாளர்களான உச்சமன்ற உறுப்பினர் பலரும் கூட்டத்துக்கு வரவில்லை. நேற்று அஸ்மின் ஆதரவாளர்கள் பேராளர் கூட்டத்திலிருந்து…
அன்வார் இப்ராகிம்மீதான சத்திய பிரமாணத்தை புலனாய்வு செய்க: போலீசுக்கு யூசுப்…
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தன்னிடம் பாலியல் நீதியில் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டிய அவரின் முன்னாள் உதவியாளர், அச்சம்பவத்தை விவரமாக விவரித்து தான் செய்த சத்திய பிரமாணத்தைப் போலீஸ் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதன் தொடர்பில் முகம்மட் யூசுப் ராவுத்தர் இன்று செந்தூல் மாவட்ட…
’நான் விட்டுக்கொடுப்பவன், அதனால் வந்த வினைதான் பிகேஆர் இளைஞர்கள் மோதல்’-…
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், நேற்று பிகேஆர் இளைஞர்களுக்கிடையே நிகழ்ந்த கைகலப்புக்கு தன்னுடைய “மன்னிக்கும் மனமும் விட்டுக்கொடுக்கும் போக்குமே” காரணம் என்கிறார். “நான் விட்டுக்கொடுப்பவன், மன்னிக்கும் குணமுள்ளவன் அதன் விளைவாக சில நேரங்களில் நேற்று நடந்ததைப்போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன”, என்றவர் சொன்னார். மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் பிகேஆர்…
பணத்துக்காக அமைச்சர்களிடம் கை ஏந்துவதா: எம்பிகளைச் சாடினார் அம்னோ பேராளர்
அம்னோ பொதுப்பேரவை இன்றைய பேரவைக் கூட்டத்தில் அம்னோ பேராளர் ஒருவர் நிதி ஒதுக்கீடு கேட்டு அமைச்சர்களிடம் கை ஏந்திய அம்னோ எம்பிகளைச் சாடினார். அவர்கள் கரையான்கள் போன்றவர்கள் என்று அம்னோ புக்கிட் குளுகோர் பேராளர் ஒமார் ஃபவுட்சார் காட்டமாகக் கூறினார். “அம்னோவுக்கு அப்படிப்பட்ட கரையான்கள் தேவையில்லை. அவர்கள் கட்சியை…
பொது மருத்துவர்களுக்கான கட்டண வரம்பு அகற்றப்படும்- சுகாதார அமைச்சர்
அமைச்சரவை பொது மருத்துவர்கள்(ஜிபி) மற்றும் பல் மருத்துவர்களுக்கான கட்டண உச்சவரம்பை அகற்றுவதற்கு முடிவு செய்துள்ளது. அம்முடிவு அமலுக்கு வருமானால் அதன் பிறகு இவ்வளவுதான் கட்டணம் விதிக்கலாம் என்ற உச்ச வரம்பு இருக்காது. “ எது பொருத்தமான கட்டணம் என்று முடிவு செய்யும் பொறுப்பு பொதுமக்களிடமே விடப்படுகிறது”, எனச் சுகாதார…
புனித அன்னம்மாள் சிலையை மாசுப்படுத்திய ஆடவர் ஒரு மனநோயாளியாம்
புக்கிட் மெர்தாஜாம் புனித அன்னம்மாள் தேவாலயத்தில் உள்ள தெய்வச் சிலைகளை மாசுபடுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் “மன நோயாளி” என்றும் அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் செபராங் பிறை கவுன்சிலர் டேவிட் மார்ச்சல் கூறினார். சந்தேகப் பேர்வழியின் குடும்பத்தார் அச்சம்பவம் பற்றி முகநூலில் படித்தறிந்த பின்னர் தன்னை அணுகியதாக…
பகை மறந்து நல்லிணக்கம் காண இதுவே சரியான தருணம்- பிகேஆர்…
பிகேஆர் தலைவர்களிடையே காணப்படும் இணக்கம் விரைவில் கட்சியின் எல்லா நிலைகளிலும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கிறார் பிகேஆர் மகளிர் அணித் தலைவர் ஹனிசா தல்ஹா. “இரு தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து முன்செல்ல வேண்டிய வழிமுறைகள் பற்றி விவாதிப்பதைக் காண மனநிறைவாக இருந்தது. இதுதான் சரியான முடிவு”, என்றாரவர். ஹனிசா இன்று…
பிகேஆர் இளைஞர் பூசல் தெருச் சண்டையாக மாறியது
பிகேஆர் இளைஞர் காங்கிரசில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் முற்றி இன்று பிற்பகல் அது தெருச் சண்டையாக மாறியது. பிகேஆர் இளைஞர் காங்கிரஸ் நடைபெறும் மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில்தான் சச்சரவு தொடங்கியது. இந்த வாக்குவாதம் நண்பகல் வாக்கில் மண்டபத்துக்கு வெளியிலும் தொடர்ந்து. வாய்ச் சண்டை கைகலப்பாக மாறியது. கற்களும்…
அம்னோ கொல்லைப்புற வழியில் அரசாங்கம் அமைக்க முயலாது- ஜாஹிட்
அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, பக்கத்தான் ஹரப்பான் கட்சிகளுடன் கைகோத்து பின்வாசல் வழியாக அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் அம்னோ மற்றும் பிஎன் ஒருபோதும் ஈடுபடாது என்பதை மீண்டும் வலியுறுத்தினார். இன்று காலை அம்னோ பேரவைக் கூட்டத்தில் இதனை வலியுறுத்தி அவர், பாஸுடன் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள முவாஃபக்காட் நேசனல்…
பிகேஆர் இளைஞர் ஆண்டுக்கூட்டத் தொடக்கவிழாவில் அமளி
இன்று காலை பிகேஆர் இளைஞர் ஆண்டுக் கூட்டம் தொடங்கியபோது அதில் கலந்துகொள்ளச் சென்ற பதவிநீக்கம் செய்யப்பட்ட அவைத் தலைவர் மிர்சான் அட்லியும் அவரின் ஆதரவாளர்களும் வாசலில் நின்றிருந்த பாதுகாப்புக் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் இரு தரப்புகளுக்குமிடையில் வாக்குவாதமும் தள்ளுமுல்லுவும் ஏற்பட்டது. பிறகு செய்தியாளர்களிடம் அது பற்றிக் குறிப்பிட்ட…
பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுவதை மறுக்கிறார் அன்வார்
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், அவர்மீது அவரின் முன்னாள் ஆய்வு அதிகாரி முகம்மட் யூசுப் ராவுத்தர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டை மறுத்தார். அன்வார் கடந்த ஆண்டு அக்டோபர் 2-இல் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார் என்பது யூசுப் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு. ஆனால், அன்வார் குறிப்பிட்ட அந்நாளில் இடைத் தேர்தல்…
அன்வார்மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது: மொகைதின் அப்துல் காதர்
அன்வார் இப்ராகிமுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தும்படி அவரின் உதவியாளரான முகம்மட் யூசுப் ராவுத்தரை யாரோ தூண்டி விட்டிருக்கிறார்கள் என்கிறார் யூசுப்பின் உறவினர் ஒருவர். அன்வார் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று யூசுப் சத்திய பிரமாணம் செய்திருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது மொகைதின் அப்துல் காதர் அவ்வாறு கூறினார்.…
முன்னாள் ஐஜிபி: அமைதி ஒப்பந்தத்தைக் கொண்டாடுவதில் தவறில்லை, கம்முனிசத்துக்குப் புத்துயிர்…
ஹட்ஜாய் அமைதி ஒப்பந்தத்தை நினைவுகூர்வது அல்லது கொண்டாடுவது தவறில்லை என்கிறார் போலீஸ்படை முன்னாள் தலைவர் அப்துல் ரகிம் நூர். “30ஆண்டுகளுக்குமுன் அரசாங்கம் ஹாட்ஜாய் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நிகழ்வை அல்லது வரலாற்றுச் சிறப்புமிக்க அத் தருணத்தை நினைவுகூர விரும்பினால் அது தவறல்ல. “அதைக் கம்முனிஸ்டுகளுடனான பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது,…
வேதமூர்த்தி தாஜுடினை மன்னிக்கலாம், இந்துக்கள் மன்னிக்க மாட்டார்கள்- பி. இராமசாமி
ஜெலுத்தோங் எம்பி ஆர்.எஸ்.என். ராயரை நெற்றில் இட்டிருப்பது சின் பெங்கின் அஸ்தியா என்று கேட்டு அசிங்கப்படுத்திய பாசிர் சாலாக் எம்பி தாஜுடின் அப்துல் ரஹமானை மன்னித்துவிட்டு மற்ற வேலைகளைக் கவனிக்கச் சொல்கிறார் செனட்டர் வேதமூர்த்தி . வேதமூர்த்தி வேண்டுமானால் மன்னித்து மறக்கலாம் ஆனால் மலேசிய இந்துக்கள் மன்னிக்க மாட்டார்கள்…
























