அறிக்கையாளர்கள் எல்லைகள் அற்ற அமைப்பின் (RSF) 2026-ஆம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில், மலேசியா கடந்த ஆண்டு பெற்ற 88-வது இடத்திலிருந்து தற்போது 95-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் 56.09 புள்ளிகளைப் பெற்றிருந்த மலேசியா, இந்த ஆண்டு 52.73 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. மலேசியா…
அன்வாரும் பொய் கண்டறியும் சோதனைக்கு உட்பட வேண்டும்- பாஸ் தலைவர்
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டிய முகம்மட் யூசுப் ராவுத்தர் பொய் கண்டறியும் சோதனைக்கு உடன்பட்டதுபோல் அன்வாரும் உடன்பட வெண்டும் என்கிறார் பாஸ் தலைவர் ஒருவர். அன்வார் பொய் கண்டறியும் சோதனை செய்து கொள்வது அவர்மீதான ஐயங்களைப் போக்க உதவும் என்று சிலாங்கூர்…
யுசோப்பிற்கு புக்கிட் அமானில் 4 மணி நேர ‘பாலிகிராஃப்’ சோதனை
முன்னாள் பி.கே.ஆர். புலனாய்வாளர் முஹம்மது யூசோஃப் ராவ்தர், புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்தில், நான்கு மணி நேர ‘பாலிகிராஃப்’ அல்லது ‘பொய் கண்டறிதல்’ பரிசோதனையை முடித்தார். பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட பாலியல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க போலீசாருக்கு உதவுவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது. முஹம்மது…
தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான வழக்கு: டிஏபி கவலை
தாய்மொழிப் பள்ளிகள் கூட்டரசு அரசமைப்புக்கு எதிரானவை என்பதால் அவற்றைச் சட்டவிரோதமானவை என்று அறிவிக்குமாறு தொடுக்கப்பட்ட்டிருக்கும் வழக்கை எண்ணி டிஏபி வருத்தம் கொள்கிறது. “1957 மெர்டேகாவிலிருந்து கடந்த 62 ஆண்டுகளாக சீன, தமிழ்ப் பள்ளிகள் இருப்பது குறித்து யாரும் கேள்வி எழுப்பியதில்லை. “இப்போது முதல் முறையாக, சீன, தமிழ்ப் பள்ளிகள்…
அசிலாவைச் சந்தித்தீர்களா என்ற கேள்விக்குப் புன்னகைத்து தலை அசைத்தார் பிரதமர்
இன்று புத்ரா ஜெயாவ்ல் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டைச் சந்தித்த செய்தியாளர்கள் மரண தண்டனைக் கைதியான அசிலா ஹத்ரியைச் சந்தித்த விவிஐபி அவர்தானா என்று வினவினர். அதற்கு மகாதிர் இலேசாக புன்னகைத்து இல்லை என்பதுபோல் தலை அசைத்தார். அந்தக் கேள்வியை அடுத்து பிரதமர் செய்தியாளர் கூட்டத்திலிருந்து அகன்றார். முன்னதாக,…
அசிலா பிப்ரவரியில் ஒரு முக்கிய பிரமுகரைச் சந்தித்தார்- ஷாபி
காஜாங் சிறையில் மரண தன்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் போலீஸ் படையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு முன்னாள் அதிகாரியான அசிலா ஹத்ரி மரண தண்டனைக் கைதிகளுக்கான இடத்திலிருந்து ஒரு மிக முக்கிய பிரமுகரைச் (விவிஐபி) சந்திப்பதற்காக இவ்வாண்டு பிப்ரவரியில் வெளியில் அழைத்து வரப்பட்டாராம். வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா கூறினார்.…
அது இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டு: அசிலாவின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் நஜிப்
அல்டான்துன்யா ஷரிபுவைக் கொல்லச் சொன்னது நஜிப் அப்துல் ரசாக்தான் என்று போலீஸ் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் அசிலா ஹத்ரி குற்றஞ்சாட்டியிருப்பதை நஜிப் நிராகரித்தார். மலேசியாகினியிடம் பேசிய முன்னாள் பிரதமர், மங்கோலிய பெண்ணான அல்டான்துன்யா கொல்லப்பட்டது 2006-இல், பத்தாண்டுகளுக்குமேல் ஆகிவிட்ட நிலையில் இத்தகவல் …
நஜிப்தான் அல்டான்துன்யாவைக் கொல்லச் சொன்னார்:மரண தண்டனை கைதி அசிலா பரபரப்பு…
கொலைக் குற்றத்துக்காக காஜாங் சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அசிலா ஹத்ரி பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரின் நெருங்கிய நண்பர் அப்துல் ரசாக் பாகிண்டாவும்தான் அல்டான்துன்யாவைக் கொல்லச் சொன்னார்களாம். இதன் மூலம் அசிலா, மங்கோலிய பெண்ணான அல்டான்துன்யா ஷரிபுவைக் கொன்றது…
‘சோஸ்மா சட்டத்தை அகற்றுக!’, ஜொகூர் மாநில அரசு சாரா இயக்கங்கள்…
சோஸ்மா சட்டத்தை முழுமையாக அகற்றி, அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 பேர் உட்பட, அனைத்து சோஸ்மா கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென ஜொகூரைச் சார்ந்த 19 அரசு சாரா அமைப்புகள் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் ஏற்பாட்டில், நடந்தேறிய மெழுகுவர்த்தி ஏந்தல்…
மீடியா பிரைமா ஆள்குறைப்பு நடவடிக்கை: என்எஸ்டிபி-இல் 500பேர் வேலைநீக்கம் செய்யப்படுவர்
ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ஊடகக் குழுமமான மீடியா பிரைமா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அதன் நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் (என்எஸ்டிபி)-இலிருந்து 543 பணியாளர்களை நீக்கத் திட்டமிட்டுள்ளது. ஆள்குறைப்புத் திட்டத்தால் த நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ், பெரித்தா ஹரியான், ஹரியான் மெட்ரோ ஆகிய மூன்றுமே பாதிக்கப்படும்…
ஊடக மன்றம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
அமைச்சரவை மலேசிய ஊடக மன்றம் அமைக்க கொள்கை அளவில் ஒப்புக்கொண்டிருப்பதாக தொடர்பு, பல்லூடக துணை அமைச்சர் எட்டின் ஷியாஸ்லீ ஷித் கூறினார். மன்றம் பற்றி விவாதிக்க தன்னுடைய தலைமையில் அடுத்த வாரம் ஒரு கூட்டம் நடைபெறும் என்றும் ஊடகப் பேராளர்கள் எண்மர் அதில் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.…
என்ஜிஓ: கைமாறு எதிர்பார்த்து ஏற்பாடு செய்யப்படும் ஹஜ்ஜு, உம்ரா பயணங்கள்கூட…
மலாய்-முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஹஜ்ஜு, உம்ரா பயணங்களுக்கு ஏற்பாடு செய்வதும் ஒரு வகையில் கையூட்டு கொடுப்பதற்கு ஒப்பானதுதான் என்கிறார் ஊழல்-எதிர்ப்பு நிபுணர் ஒருவர். அரசியல்வாதிகளும் வணிகர்களும் எதையோ எதிர்பார்த்து இப்படிப்பட்ட பயணங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பது உண்டு என மோசடிகளைக் கண்டறியும் மலேசிய ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் அக்பர்…
பிரதமர் பதவி மாற்றம் பற்றிக் கேட்பதில் நேரத்தை வீணாக்காதீர்- குவான்…
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர் பதவியை எப்போது பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பார் என்று கேள்வி கேட்பதிலேயே நேரத்தை வீணாக்க வேண்டாம் என டிஏபி அதன் கட்சி உறுபினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பினாங்கு டிஏபி ஆண்டுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், பிரதமர்…
ஆர்டிடி பணியாளர் கொள்ளையடித்ததுடன் வாகனங்களையும் மோதித் தள்ளினார்
கோலாலும்பூரில், சாலைப் போக்குவரத்துத் துறை பணியாளர் ஒருவர் உடல்குறையுள்ள ஒருவரிடம் கொள்ளையிட்டு தப்பி ஓட முயன்றார். நேற்று மாலை 4.50 அளவில் ஜாலான் சங்காட் புக்கிட் பிந்தாங்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் அந்நபர் தப்பியோடும் முயற்சியில் ஐந்து வாகனங்களையும் மோதித் தள்ளினார். அது மட்டுமல்லாமல் அவர் காரிலிருந்த உடல்குறையுடைய ஒருவரையும்…
சுரைடா: சம்பந்தமில்லாத என்ஜிஓ-கள் வாயைப் பொத்திக் கொண்டிருப்பதே நல்லது
பிகேஆர் சச்சரவில் சம்பந்தமில்லாத என்ஜிஓ-கள் இரு தரப்புகளையும் உசுப்பி விடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் சுரைடா கமருடின் வலியுறுத்தினார். “இது இரு தரப்பும் அமைதிகாக்கும் நேரம்”, என்றாரவர். சில சின்னஞ்சிறு என்ஜிஓ-கள் இருக்கின்றன. இவை கொசுக்கள் போன்றவை. கொசுக்கள் போன்றே அவ்வப்போது கடித்து தொந்திரவு…
பினாங்கு டிஏபி மாநாட்டில் அனல் பறக்கும் வாதங்கள் எதிர்பாக்கப்படுகின்றன
நாளை பட்டர்வர்தில் பினாங்கு டிஎபி ஆண்டுக் கூட்டம் நடைபெறுகிறது. டிஏபி அதன் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்ற குறைகூறல்கள் பெருகி வரும் நேரத்தில் ஆண்டுக் கூட்டம் நடைபெறுவதால் பேராளர்கள் பல பிரச்னைகளை முன்வைக்கலாம், அவை சூடான விவாதங்களுக்கு இட்டுச் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சோஸ்மா சட்டத்தின்கீழ் டிஏபி…
லீ லாம் தாய் , எம்சிபிஎவ்-இன் கெளரவ ஆயுள்கால உறுப்பினர்
சமூக ஆர்வலர் லீ லம் தாய் மலேசிய குற்றத் தடுப்பு அறநிறுவனத்தின் (எம்சிபிஎவ்) முதலாவது கெளரவ ஆயுள்கால உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான சான்றிதழை எம்சிபிஎவ் மூத்த உதவித் தலைவரான லீ, அந்த அறநிறுவனத்தின் தலைவரான துணைப் பிரதமர் வான் அசிசா வான் இஸ்மாயிலிடமிருந்து பெற்றார். நேற்று புத்ரா ஜெயாவில்…
செல்வாக்கு மிக்கவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் திரும்பவும் பரிசீலிக்கப்படலாம்- எம்ஏசிசி
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மூடப்பட்ட பல கோப்புகளைக் குறிப்பாக செல்வாக்கு மிக்கவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளத் திரும்பவும் பரிசீலனை செய்யக்கூடும் என எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்திபா கோயா கூறினார். பழைய வழக்குகளைத் திரும்பவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரி மகஜர்கள் வந்திருப்பதாக லத்தீபா கூறினார். “வழக்கு…
சாமிவேலுவுடன் சேர்ந்து வாழ்வதாகக் கூறிக்கொள்ளும் பெண் மாத அலவன்ஸ் ரிம25ஆயிரம்…
இ. மரியம் ரோசலின் தடையின்றி சாமிவேலுவை சந்திக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மஇகா முன்னாள் தலைவர் சாமிவேலுவுடன் சேர்ந்து வாழ்ந்ததாகக் கூறிகொள்ளும் அப்பெண், அவரது முதன்மை வழக்கின் முடிவு இன்னும் தெரியாத நிலையில் மாதந்தோறும் கொடுக்கப்பட்டு வந்த 25,000…
மேவ்கோம், சிஏஏஎம் ஆகிய இரண்டும் ஒருங்கிணைக்கப்படும் – செய்தித்தளம் தகவல்
மலேசிய ஆகாயப் போக்குவரத்து ஆணையம் (மேவ்கோம்), மலேசிய சிவில் ஆகாயப் போக்குவரத்து ஆணைக்குழு(சிஏஏஎம்) ஆகிய இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட பின்னர் மலேசியாவில் சிவில் ஆகாயப் போக்குவரத்தை முறைப்படுத்த ஒரே ஒரு அமைப்பு மட்டுமே இருக்கப் போகிறது. அமைச்சரவை சிஏஏஎம்-முக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்க இப்போதுள்ள இரண்டையும் ஒருங்கிணைக்க இணக்கம் தெரிவித்திருப்பதாக…
பாலியல் குற்றச்சாட்டுமீதான விசாரணையைத் துரிதப்படுத்தும் போலீசாருக்கு அன்வார் நன்றி
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள்மீதான விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ள போலீசாரின் செயலைப் பாராட்டினார், நன்றி தெரிவித்தார். “விசாரணைக்கு உதவியாக போலீசிடம் வாக்குமூலம் அளிக்கவும் தயார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார். அன்வாரின் முன்னாள் ஆய்வு அதிகாரி முகம்மட் யூசுப் ராவுத்தர் அன்வார்…
போலியோவால் பாதிக்கப்பட்டவர்களில் 75 விழுக்காட்டினருக்கு நோய் அறிகுறியே தெரிவதில்லை
போலியோ அல்லது இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 75 விழுக்காட்டினருக்கு அந்நோய் இருப்பதற்கான அறிகுறியே காணப்படுவதில்லை என்கிறார் சுகாதார அமைச்சின் நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவு நிபுணர் டாக்டர் ரொஹானி ஜாஹிஸ். போலியாவால் பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் ஒருவருக்குத்தான் காய்ச்சல், சோர்வு, குமட்டல், வாந்தி, தலைவலி முதலியவை இருக்கும். “போலியோ வைரசால்…
கட்டிக்காத்த ஒற்றுமை நொடிப்பொழுதில் கெட்டுவிடலாம்- சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை
சிலாங்கூர் சுல்தான் ஷரபுட்டின் இட்ரிஸ் ஷா, மக்களின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி பல்லாண்டுகளாக உருவாக்கிய ஒற்றுமையை உருக்குலைப்பது எளிது என்றும் எச்சரித்தார். “வலுவான ஒற்றுமையைக் கொண்ட நாட்டை உருவாக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால், நாம் எச்சரிக்கையாக இல்லாமல் பகைமை பாராட்டிக் கொண்டிருந்தால் நாடு கண்ணிமைக்கும்…
சரவாக் எம்டியுசி, செனட்டர்களைச் சந்தித்த தேசிய எம்டியுசி தலைவர்களைச் சாடியது
மலேசிய தொழிற்சங்கக் காங்கிரசுக்குள் விரிசல்கள் விரிவடைந்து வருகின்றன. சரவாக் எம்டியுசி செயலாளர் எண்ட்ரு லோ, 1967 தொழிலாளர் உறவுச் சட்ட (ஐஆர்ஏ)த்துக்குத் திருத்தம் கொண்டுவரும் சட்டவரைவு தொடர்பில் மேலவை உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசிய எம்டியுசி தலைவரையும் தலைமைச் செயலாளரையும் சாடியிருப்பது அதற்கு ஓர் அறிகுறியாகும். “தலைவர் அப்துல் ஹாலிமும்…
























