மேற்கு ஆசிய மோதலின் தாக்கத்திற்கு மத்தியில் பொதுமக்களின் சுமையைக் குறைக்க, புடி மதானி RON95 (Budi95) பெட்ரோல் மானியத் திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் ரிம 1.99 என நிர்ணயிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையை பராமரிக்க அரசாங்கம் பாடுபடும். "RON95 விலையை எங்களால் நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.…
சிறைக்கூடங்களிலிருக்கும் சிசிடிவிகளுக்கு என்ன ஆயிற்று?, கேட்கிறார் கஸ்தூரி பட்டு
அனைத்து போலீஸ், இமிகிரேசன் சிறைக்கூடங்கள் மற்றும் விசாரணை அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதையும் அவை இயங்கும் நிலையில் இருப்பதையும் புத்ரா ஜெயா உறுதிப்படுத்த வேண்டும். இது போக்கிரி போலீஸ் அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துகொள்வதைத் தடுப்பதற்கும் நேர்மையான மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடைய அதிகாரிகளைப் பாதுகாப்பதற்கும் உதவும்…
எரிபொருள் விலை குறைகிறது
இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் சில்லறை விலை குறைகிறது. ரோன்95 ஒரு லீட்டருக்கு 5 சென் குறைந்து ரிம2.05 க்கும், ரோன்97 ஒரு லீட்டருக்கு 7 சென் குறந்து ரிம2.31 க்கும் விற்கப்படும். டீசல் விலை ஒரு லீட்டருக்கு 8 சென் குறைந்து ரிம1.94 விற்கப்படும்.
“இந்த கெலிங் சாகப் போகிறான் போல் தெரிகிறது”, போலீஸ் வாட்ஸ்அப்பில்…
தடுப்புக்காவல் கைதி எஸ். பாலமுருகன் மரணம் மீதான பொதுவிசாரணையில் அவரைப் பற்றிய இன மற்றும் இழிவுபடுத்தும் பதிவுகள் போலீஸ் வாட்ஸ்அப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது வெளியாகியுள்ளது. இந்த வாட்ஸ்அப் குழுமம் வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையக போலீஸ்காரர்களை உள்ளடக்கியது. மாவட்ட சிஐடி தலைவர் எஎஸ்பி நோர்சானிஸாம் நோர்டின்…
சிவராசா சிலாங்கூர் சுல்தானிடம் மன்னிப்புக் கோரினார்
கம்போங் மெலாயு சுபாங் அன்-நூர் மசூதியின் பிரார்த்தனை மண்டபத்தில் பேசியதற்காக பிகேஆர் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா சிலாங்கூர் சுல்தானிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். மசூதியில் என்ன நடந்தது என்பது பற்றி விளக்கம் அளிக்கும் கடிதம் ஒன்றை கடந்த திங்கட்கிழமை சுல்தானுக்கு அனுப்பியதாக சிவராசா இன்று வெளியிட்ட…
பிரதமராவதற்கு தயக்கத்துடனான தமது விருப்பத்தை மீண்டும் தெரிவிக்கிறார் மகாதிர்
முன்னாள் பிரதமர் மகாதிர் இன்னொரு முறை பிரதமர் ஆகும் எண்ணத்திற்கு வலுவூட்டுவது போல் தெரிகிறது. இது நடக்கலாம், ஆனாலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே என்று நிக்கி ஏசியன் ரிவியுவுடனான உரையாடலின் போது மகாதிர் கூறினார். "வேட்பாளர் இல்லையென்றால்...நான் முயற்சிப்பேன், அதற்கு அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன்",…
14 ஆவது பொதுத்தேர்தலுக்கு பழைய தேர்தல் எல்லையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்,…
மார்ச் 8 இல் முன்மொழியப்பட்ட தேர்தல் தொகுதி எல்லை மறுவரையலுக்குப் பதிலாக இப்போது இருக்கும் தொகுதி எல்லையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தேர்தல் ஆணையம் (இசி) தள்ளப்படலாம் என்று அதன் தலைவர் முகம்ட் ஹசிம் அப்துல்லா கூறுகிறார். இது சிலாங்கூர் மற்றும் மலாக்கா மாநிலங்களில் மேற்கொண்ட தொகுதி…
குவான் எங்: பிரதமர் வேட்பாளர் தேர்வு நிகழ்ச்சி நிரலில் இல்லை
பக்கத்தான் ஹரப்பான் 14 ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் அதன் பிரதமர் யார் என்பது குறித்து இப்போதைக்கு அது எந்த முடிவும் எடுக்காது என்று டிஎபியின் தலைமைச் செயலாளர் குவான் எங் கூறினார். ஹரப்பான் தலைவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை, ஜூன் 9, சந்திக்கின்றனர். ஆனால், பிரதமர் என்பது…
சீபீல்ட் கோவில் அகற்றப்படும் திட்டம் முடக்கப்பட்டிருப்பதை மந்திரி புசார் உறுதிப்படுத்தினார்
சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவிலை அங்கிருந்து அகற்றும் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதை சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி உறுதிப்படுத்தினார். இது ஒரு பழமையான கோவில் என்பதாலும் சமூகம் அதன் ஆதங்கத்தை தெரிவித்திருப்பதாலும் தாம் இது குறித்து சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளருடன் பேசி வெளியேற்றும் திட்டத்தை நிறுத்திவைக்க இணங்க…
ஸாகிட் மலாக்கா ‘ஜெருசலம் ஜூப்ளி’ நிகழ்ச்சிக்கு தடை விதித்தார்
மலாக்காவில் ஜூன் 15 லிருந்து 18 வரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த "ஜெருசலம் ஜூப்ளி" நிகழ்ச்சியை ரத்து செய்ய போலீசாருக்கு துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி உத்தரவிட்டார். அந்த பேரணியை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டால் அது முஸ்லிம்களை நோகச் செய்யும் என்று ஸாகிட் கூறினார். "'ஜெருசலம் ஜூப்ளி'யை ஏற்பாடு…
பாலமுருகன் மரண விசாரணையில் போலீஸ் லாக்-அப் விதிகள் பற்றி தெரியாது…
தடுப்புக்காவல் கைதிகளைக் கையாளும் விதி முறைகள் பற்றி தமக்குத் தெரியாது என்று ஒரு முன்னாள் புலன் விசாரணை அதிகாரி தடுப்புக்காலில் இருந்த போது மரணமுற்ற எஸ். பாலமுருகன் சம்பந்தப்பட்ட விசாரணையில் கூறினார். வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுப்புக்காவல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் அரசு…
எப்ஜிவிஎச்-இன் சிஇஓ-விடமிருந்து கையூட்டு பெற்றதாக த ஸ்டார் பணியாளர்மீது குற்றச்சாட்டு
த ஸ்டார் செய்தித்தாளின் பணியாளர் ஒருவர் ரிம20,000 கையூட்டு பெற்றார் என இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. எம். யோகேஸ்வரன், இவ்வாண்டு மே 30ஆம் நாள், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள த இண்டர்மார்க் ஹோட்டலில், பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் ஹொல்டிங்ஸ் பெர்ஹாட் (எப்ஜிவிஎச்) முன்னாள் தலைமை …
சிஎம்: மலாக்கா கடன்பட்டிருப்பதற்கு ஊழல் காரணம் அல்ல
மலாக்கா மாநிலம் அதிக அளவு கடன்பட்டிருப்பதற்கு ஊழலே முக்கிய காரணம் என்று கூறப்படுவதை முதலமைச்சர் இட்ரிஸ் ஹருன் மறுத்தார். மக்களின் தேவைகளுக்காக அடிப்படை கட்டுமான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பில் மாநில அரசு உள்ளது. ஆனால், அதற்காகும் செலவுகளை ஈடு செய்ய போதுமான வருமானம் அதற்கில்லை என்று …
நாடுகடத்தப்படும் சட்டவிரோத தொழிலாளர்கள் திரும்பி வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்
அதிகாரிகள் சட்டவிரோத தொழிலாளர்களை மலேசியாவிலிருந்து நாடு கடத்துவது மட்டும் போதாது, அவர்கள் திரும்பி வராமலிருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாண்டு ஜனவரிக்கும் மே-க்குமிடையில் 23,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோத அன்னிய தொழிலாளர்கள் நாடு கடத்தப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் முஸ்தபார் அலி கூறியிருப்பதற்கு எதிர்வினையாக பிகேஆர் தலைமைப் பொருளாளர் …
லண்டன் தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பு ஏற்கிறது
லண்டனில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்லாமிய் அரசு (ஐஎஸ்) பொறுப்பு ஏற்பதாக அது கூறிகொண்டது. கடந்த சனிக்கிழமை இரவு லண்டன் பாலத்தில் மூவர் ஒரு வாகனத்தை பாதசாரிகள் மீது மோதியதோடு அருகிலிருந்த மதுபானம் விற்கும் இடம் மற்றும் உணவகங்களில் இருந்தவர்களைக் குத்தினர். இச்சம்பவத்தில் எழுவர் கொல்லப்பட்டனர் மற்றும்…
அன்வார்: பிரதமர் ஆவது குறித்து மகாதிர் முடிவெடுக்க முடியாது
பக்கத்தான் ஹராபானின் பிரதமர் வேட்பாளரை நியமிப்பதில் பங்காளிக்கட்சிகளின் ஒருமித்த கருத்து தேவை என்பதை அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார். அவரின் முன்னாள் எதிரி டாக்டர் மகாதிர் முகம்மட், எதிரணியினர் விரும்பினால் மீண்டும் பிரதமராவதற்குத் தயார் எனக் கூறியிருப்பது குறித்து கருத்துக் கேட்டதற்கு அன்வார் இவ்வாறு குறிப்பிட்டார். “இதை முடிவு செய்வது …
பிரதமர்: பயங்கரவாதத்துக்கு எதிராக கருத்தியல்சார் போரிலும் வெற்றிபெறுவது முக்கியம்
பயங்கரவாதத்தை ஒடுக்க இராணுவம், போலீஸ், கைது நடவடிக்கைகள் மட்டும் போதாது, கருத்தியல் போராட்டத்திலும் வெற்றி பெறுவது முக்கியம் என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். அண்மையில் காபூல், மென்செஸ்டர் (யுனைடெட் கிங்டம்), மராவி(பிலிப்பீன்ஸ்), ஜாகார்த்தா ஆகியவற்றில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் மோசமானவை, கவலையளிப்பவை . “அல்ஹம்துலில்லாஹ், நம் நாட்டில் …
சிவராசாவுக்கு எதிராக பெர்காசா ஆர்ப்பாட்டம்
கோத்தா டாமன்சாராவிலுள்ள சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசாவின் அலுவலகத்திற்குமுன் பெர்காசா இளைஞர்கள் கூடி, குதித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அனுமதிக்கப்படாத எவரும் மசூதியிலோ அதன் வளாகத்திலோ பேசக் கூடாது என்று சிலாங்கூர் சுல்தான் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு பணியாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று பெர்காசா இளைஞர் தலைவர்…
அதிர்ச்சியில் நஜிப், லண்டன் தாக்குதலைக் கண்டித்தார்
மத்திய லண்டனில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் அறுவர் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. இன்று மலேசியா இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தது. இச்சம்பவத்தால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் நஜிப் ரசாக் கூறினார். "நான் அதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்துள்ளேன். இது போன்ற மிகக்கொடிய செயல்களை மலேசியா கண்டிக்கிறது. நாம் பிரிட்டீஷ் மக்களுடன்…
மத்திய லண்டன் பயங்கரவாதிகளின் தாக்குதல், அறுவர் கொல்லப்பட்டனர்
பிரிட்டீஷ் ஆயுதம் தாங்கிய போலீசார் மூன்று சம்பவங்கள் நடந்த மத்திய லண்டனுக்கு விரைந்தனர். அங்கு லண்டன் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை ஒரு வாகனம் மோதித்தள்ளியது மற்றும் அருகிலிருந்த மார்க்கெட் பகுதியில் பலர் கத்தியால் குத்தப்பட்டனர் என்று கூறப்பட்டது. லண்டன்வாசிகளுக்கு டிவிட்டர் வழி போலீசார் அனுப்பிய பாதுகாப்பு ஆலோசனையில்,…
கர்பாலுக்கு தாவோ சமயக் கோவில், வியப்பில் குடும்பம்
காலஞ்சென்ற கர்பால் சிங்கை பெருமைப்படுத்தும் ஒரு தாவோயிசக் கோவில் அவருடைய குடும்பத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மே 1 இல், பேராக் மாநிலத்தில் இக்கோவில் அமைக்கப்பட்ட போது குடும்பத்தோடு கலந்தாலோசிக்கப்படவில்லை என்று கர்பாலின் மகன் ராம்கர்பால் சிங் கூறினார். "அது அமைக்கப்படுவதற்கு முன்பு அது குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. இது…
பினாங்கில் பெருகிவரும் செலவினத்தைச் சமாளிக்க அரசு நிலம் விற்கப்படுகிறதா?
பினாங்கு அரசு பல்கிப் பெருகியுள்ள அதன் நடைமுறைச் செலவினத்தை எப்படிச் சமாளிக்கிறது? அரசுக்குச் சொந்தமான நிலங்களை விற்கிறதா? என்று பிஎன் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கை வினவியுள்ளது. டிஏபி முதன்முதலாக பினாங்கைக் கைப்பற்றிய 2008-இல் இருந்ததைவிட 2017-இல் செலவினம் 500 விழுக்காடு அதிகரித்துள்ளதாக பிஎன் ‘வியூகத் தொடர்புக்குழு’ …
மூத்த பத்திரிகையாளர் ரெஹ்மான் காலமானார்
மூத்த எழுத்தாளரும் பத்திரிகியாளருமான ரெஹ்மான் ரஷிட் ,62, இன்று காலை காலமானார். அவரின் இளவல் ரபிக் ரஷிட்டை பெர்னாமா தொடர்புகொண்டபோது காலை மணி 6.30 வாக்கில் செலாயாங் மருத்துவமனையில் அவர் மரணமுற்றதாக தெரிவித்தார். “இறப்புக்கான உண்மைக் காரணம் இன்னும் தெரியவில்லை. முன்பிருந்த மாரடைப்பு இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று …
‘வழக்குரைஞருக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ரிம9.5 மில்லியன் குறித்து விரைவில் விவாதிப்போம்’
முகம்மட் ஷாபி அப்துல்லா பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து ரிம9.5 மில்லியன் பெற்றதாகக் கூறப்பட்டிருப்பதன் தொடர்பில் அடுத்து என்ன சட்ட நடவடிக்கை எடுப்பது என்று விரைவில் விவாதிப்போவதாக சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞர் என். சுரேந்திரன் கூறினார். அன்வார் இப்ராகிமின் குதப் புணர்ச்சி …


