ஹோட்டல் ஶ்ரீ மலேசியா : நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் என்ற…

சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி கலந்துகொள்ளவிருந்த கூட்ட நிகழ்ச்சியைத் திடீரென இரத்து செய்ததற்கான காரணத்தை, ஹோட்டல் ஶ்ரீ மலேசியாவின் வாரியத் தலைவர், அசிஸ் ஷேக் ஃபாட்ஷீர் விளக்கப்படுத்தினார். அரசியல் நிகழ்ச்சிகளை நடத்தினால், அத்தங்கும் விடுதியின் நற்பெயருக்குக் கலங்கம் ஏற்படும் என்ற அச்சத்தினாலேயே, ஈப்போ ஹோட்டல் ஶ்ரீ மலேசியாவில்,…

பிஎன் தலைவர்கள் தேர்வு செய்த வேட்பாளர்களை ஆதரியுங்கள், விக்னேஸ்வரன்

  எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட பிஎன் வேட்பாளர்களை சிலாங்கூரிலுள்ள அனைத்து மஇகா தொகுதி மற்றும் கிளைத் தலைவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று மஇகா உதவித் தலைவர் எஸ். எ. விக்னேஸ்வரன் கூறுகிறார். தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெறும் வாய்ப்பைப் பாதிக்கும் எந்தப் பிரச்சனையையும்…

நஜிப்பைத் தொடர்ந்து, ஷாஹிட்டும் அன்வாரை மருத்துவமனையில் சந்தித்தார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோலாலம்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடித்து, சிகிச்சைப் பெற்றுவரும் அன்வார் இப்ராஹிமை, துணைப் பிரதமர் அஹ்மட் ஷாஹிட் ஹமிடி இன்று சந்தித்தார். “வலதுபுற தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அன்வார் இப்ராஹிமை, இப்போதுதான் கோலாலம்பூர் மருத்துவமனையில் சந்தித்தேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும்,"என்று தனது டுவிட்டர்…

‘நாடாளுமன்ற விவாதங்கள், மகாதீர் காலத்தில் வெளிப்படையாக இருந்தன’

பிரதமர் நஜிப்புடன் ஒப்பிடுகையில், டாக்டர் மகாதீர் நிர்வாகக் காலத்தின் போது, நாடாளுமன்றத்தில் முக்கியமான பல விஷயங்கள் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டன. முன்னாள் மந்திரி, ஷேட் ஹமிட் அல்பார்,  நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடரக்கூடிய வகையிலான கேள்விகளுக்குக் கூட, விவாத அமர்வில் அல்லது வாய்வழி விசாரணையில் அரசாங்கத்தால் பதிலளிக்கப்படும்; சில சமயங்களில்…

கல்வி அமைச்சு : தலைமையாசிரியர் இடமாற்றம் – சாதாரண நடைமுறை

பட்டர்வொர்த்தில், தமிழ்ப்பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு, முதலமைச்சர் லிம் குவான் எங் வருகையே காரணம் எனும் குற்றச்சாட்டைக் கல்வி அமைச்சு மறுத்தது. இது ஒரு சாதாரண விஷயம், பினாங்கில் உள்ள தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகளில் இது நடைமுறையில் உள்ளது, என துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்தார்.…

தபால் மற்று சுகாதார பணியாளர்களுக்கு தபால் வாக்களிப்பு

  எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலின் போது கடமையிலிருக்கும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் அரசாங்க சுகாதாரதுறை பணியாளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதி விரிவுப்படுத்தப்படும். இந்த முடிவை தேர்தல் ஆணையம் கடந்த செப்டெம்பர் 25 இல் எடுத்ததாக ஆணையத்தின் தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா…

சுங்கை சிப்புட்டில் வெற்றி பெற முடியும் என்கிறார் சிவநேசன்

  சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவிருக்கும் டிஎபியின் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் எ. சிவநேசன் தமது மற்றும் தமது கட்சியின் நற்பெயர் அவரது வெற்றிக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தாம் சுங்கை சிப்புட் தொகுதியில் கடுமையாக உழைத்து வருவதாக 61 வயதான…

நஸ்ரி : அஸ்மின் தவறான இடத்தில் குரைத்து கொண்டிருக்கிறார்

அரசுக்குச் சொந்தமான  தங்கும்விடுதி ஒன்றின் அறையில், பேராக் பிகேஆர் ஏற்பாடு செய்திருந்த உள்கட்சி கூட்டத்திற்கான அனுமதியை, தங்கும் விடுதியின் நிர்வாகம் இரத்து செய்தது குறித்து கருத்துரைக்க சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர்  நஸ்ரி அப்துல் அஜீஸ் மறுத்துவிட்டார். அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் பிகேஆரின் துணைத் தலைவர் முகம்மது…

கோலாலம்பூர் மருத்துவமனையில் இருக்கும் அன்வாரை நஜிப் சந்தித்தார்

இன்று, பிரதமர் நஜிப் இரசாக்கும் அவரின் துணைவியார் ரொஸ்மா மன்சோரும், கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அன்வார் இப்ராஹிமை சந்தித்தனர். தனது உத்தியோகபூர்வ ட்விட்டரில், அன்வாரைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம் ஒன்றை நஜிப் பகிர்ந்தார். "நான் இன்று கோலாலம்பூர் மருத்துவமனையில்,  அன்வார் இப்ராஹிமைச் சந்தித்தேன். அவர் விரைவில் குணமடைய…

அரசியல் காரணங்களுக்காக தலைமையாசிரியர் மாற்றப்பட்டார், டிஏபி குற்றச்சாட்டு

மாநில அரசாங்கத்தின் உதவியை வழங்க வந்த முதல்வர் லிம் குவான் எங்-ஐ, பள்ளியில் அனுமதித்ததற்காக, பினாங்கில் உள்ள தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவரை, இடமாற்றம் செய்த மாவட்டக் கல்வி இலாகாவை டிஏபி இன்று குற்றம் சாட்டியது. செப்ராங் பிறை மாநகர சபை உறுப்பினர், சதீஸ் முனியாண்டி, தலைமையாசிரியர் அந்நிகழ்ச்சியில் கலந்து…

பெர்சத்துவின் சிறப்புப் பொதுக்கூட்டத்தை ரோஸ் அங்கீகரிக்கவில்லை

  நவம்பர் 2 இல் நடைபெற்றது பெர்சத்துவின் சிறப்புப் பொதுக்கூட்டம் என்று அக்கட்சி கூறிக்கொண்ட போதிலும், மன்றங்களின் பதிவாளர் (ரோஸ்) அதை "உச்சமன்றத்தின் கூட்டம்" என்று வர்ணித்துள்ளார். "நவம்பர் 2, 2016 இல் சிறப்புப் பொதுக்கூட்டத்தை நடத்தியதாக பெர்சத்து கூறுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் அது ஒரு உச்சமன்ற…

சிலாங்கூர் அரசு இலவச ஆணுறை கொடுத்ததா?

  சமூக ஊடகங்கள் சிலாங்கூர் அரசு இளைஞர்களுக்கு இலவசமாக கருத்தடை ஆணுறைகளைக் கொடுத்ததாக கூறிக்கொள்கின்றன. சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் "போஸ்டர்கள்" அவதூறாவை என்று சிலாங்கூர் மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் சுஹாய்மி ஷாபிஎய் கூறியதாக அவரை மேற்கோள் காட்டி சினார் ஹரியான் ஓன்லைன் செய்தி கூறுகிறது.…

வி.கே. லிங்கத்தைப் பிடிக்க எம்எல்எ, ஜோ லோ வைப் பிடிக்க…

  நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்ததற்காக ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் வி.கே. லிங்கத்தை நாட்டிற்கு கொண்டு வர சட்டத்துறை தலைவர் முகமெட் அபாண்டி அலி கிரிமினல் விவகாரங்கள் பரஸ்பர உதவி சட்டம் 2002(MLA)இன் கீழ் நடவடிக்கை எடுத்தால், அது அவருக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும்.…

வங்கி அனுமதியின்றி, காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு அபராதம், சிறை…

வங்கியின் ஒப்புதல் இன்றி, மூன்றாம் தரப்பினருக்குக் கார்களைக் குத்தகைக்கு விடும் உரிமையாளர்கள் மீது, அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று உள்துறை அமைச்சர் ஷாஹிட் ஹமிடி கூறினார். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, மூன்றாம் நபருக்கு வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பது, ‘வாடகை கொள்முதல் சட்டம் 1967’-ஐ மீறுவதும்…

அரசு ஊழியர்களின் சம்பளம் மாதம் இருமுறை செலுத்தப்பட மாட்டாது

அரசாங்க ஊழியர்களுக்கு  மாதம் ஒரு முறை சம்பளம் வழங்குவதை அரசாங்கம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வரும், எனப் பொதுச் சேவை தலைமை இயக்குநர் ஷைனால் ரஹிம் செமான் தெரிவித்தார். எதிர்காலத்தில் மாதம் இரண்டு முறை ஊதியம் வழங்க, முன்னோடி திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று, செய்தி ஊடகம் ஒன்றில் வெளியான…

நஜிப் : ஹராப்பான் இளைஞர்களுக்கு 1எம்டிபி – ஐபிஐசி-யில் எந்தத்…

1எம்டிபி - சர்வதேசப் பெட்ரோலியம் முதலீட்டு நிறுவனம் (ஐபிஐசி) ஆகியவற்றிற்கு இடையேயான மத்தியஸ்த தீர்வு நடவடிக்கை தொடர்பில், நஜிப், 1எம்டிபி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக, பக்காத்தான் ஹராப்பானின் 10 தலைவர்கள் முன்னெடுத்திருக்கும் சட்ட நடவடிக்கையில், அவர்களின் தலையீட்டு உரிமை குறித்து, நஜிப் இன்று கேள்வி எழுப்பினார். மனுதாரர், இலண்டனில்…

அமைச்சர்: டுரியான் ஆண்களுக்கு நல்லது

  டுரியானில் பாலுணர்வுக்கு வலுவூட்டும் சத்துகள் இருப்பதால், அவை குறித்து மிக அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விவசாயம் மற்றும் விவசாயத் தொழில் சார்ந்த அமைச்சர் அஹமட் ஷாபிரி சீக் வேண்டுகோள் விடுத்தார். இந்தப் பழத்தினால் ஆண்களுக்குக் கிடைக்கூடிய பயன்கள் பற்றி தமது நண்பர் ஒருவர் கூறிக்கொண்டதை…

சோசலிசம் 2017 – இடதுசாரி அரசியல் இன்றைக்கு ஏற்புடையது!

எதிர்வரும் நவம்பர் 19, 2017, ஞாயிற்றுக்கிழமை, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), சோசலிசம் 2017 நிகழ்ச்சியை, ‘இடதுசாரி அரசியல் இன்றைக்கு ஏற்புடையது!’ என்றக் கருப்பொருளோடு ஏற்பாடு செய்துள்ளது. தொடர்ந்து 13-வது ஆண்டாக, பி.எஸ்.எம். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு சமகால விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.…

எண்ணெய் விலை உயர்ந்தது, பிரிம் தொகை உயர வாய்ப்புள்ளது

பெட்ரோலியத்தின் விலை உயர்ந்ததன் காரணமாக, அரசாங்கம் ‘1 மலேசியா மக்கள் உதவிநிதி’யை (பிரிம்) அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று, 2-ஆம் நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் கானி கூறியுள்ளார். பீப்பாய்க்கு 1 அமெரிக்க டாலர் அதிகரித்திருப்பதன் வழி, அரசாங்கம் 300 மில்லியன் ரிங்கிட் அதிகம் சம்பாதிக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.…

டாக்டர் எம் : அது ரஃபிசியின்  யோசனை, சொத்து அறிவிக்க…

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தனது சொத்துக்களை அறிவிக்கத் தயாராக இருப்பதாக துன் டாக்டர் மகாதிர் முகமட் தெரிவித்தார். "ஆமாம், நான் என் சொத்துக்களை அறிவிக்க முடியும், ஆனால் நான் வேட்பாளரா அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரியாது," என்று இன்று, நாடாளுமன்றத்தில் நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில்…

மகாதிர்: நானும்கூட குப்பையைக் கிளற முடியும்

  இரண்டு-அம்னோ தொடர்புடைய நாளேடுகள் மகாதிருடைய பேத்தியின் ஊதாரித்தனமான வாழ்க்கையை படமிட்டு காட்டியதைத் தொடர்ந்து, தாமும் அவர்கள்மீது சேற்றை வாரி இறைக்க முடியும் என்று அவரது வைரிகளுக்கு மகாதிர் எச்சரிக்கை விடுத்துள்ளார் அரசியல் இது எப்போதுமே ஒரு வியூகமாக இருக்கும் என்று கூறிய அவர், இதன் ஒட்டுமொத்த நோக்கம்…

பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கிறது

    இன்று நள்ளிரவிலிருந்து ரோன்95 விலை ஒரு லீட்டருக்கு 7 சென் உயர்ந்து ரிம2.38 க்கு விற்கப்படும். ரோன்97 விலை ஒரு லீட்டருக்கு 6 சென் உயர்கிறது. ஒரு லீட்டரின் விலை ரிம2.66. டீசல் விலை 5 சென் உயர்கிறது. ஒரு லீட்டர் விலை ரிம2.20. கடந்த…

தேர்தலில் போட்டியிடவிருக்கும் 30 ஹரப்பான் வேட்பாளர்கள் சொத்துக்களை அறிவிப்பர்

  தேர்தலில் போட்டியிடவிருக்கும் வருங்கால ஹரப்பான் வேட்பாளர்களில் 30 பேர், இப்போது பதவியிலிருக்கும் சிலர் உட்பட, தங்களுடைய சொத்துக்களை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் பிகேஆர் துணைத் தலைவர் முகமட் ரபிஸி ரமலியால் உருவாக்கப்பட்ட இன்வோக் மலேசியா என்ற அமைப்பால் உதவப்பட்ட தனிப்பட்டவர்களில் சிலராவர். அந்த…