தேர்தலில் நஜிப்புக்கு உதவவே ஆர்சிஐ-க்கு மூன்றுமாத காலவரை

பொதுத்   தேர்தலில்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டை    எதிர்ப்பதற்குப்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்குக்கு     உதவுவதற்காகவே  பேங்க்   நெகாராவின்  அன்னிய   செலாவணி  வணிகத்தில்    ஏற்பட்ட   இழப்புகளை   விசாரிக்க   அமைக்கப்பட்டிருக்கும்   அரச   ஆணையம்  (ஆர்சிஐ)   மூன்று  மாதங்களில்   விசாரணையை   முடிக்க    வேண்டும்    என்று   காலவரையறை   நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக   லிம்   கிட்  சியாங்   நினைக்கிறார்.…

சரவாக்கில் ஐந்தாவது நபருக்கு ரேபிஸ்

சரவாக்   செரியான்   மவட்டத்தில்   52வயது   நபர்   ஒருவர்   ரேபிஸ்   நோயால்  பாதிக்கப்பட்டுள்ளார். கம்போங்   ரெமுனைச்  சேர்ந்த   அவருக்கு    வெறிநாய்க்கடி   நோய்  கண்டிருப்பது    ஜூலை  18-இல்   உறுதிப்படுத்தப்பட்டதாக    சுகாதாரத்    தலைமை   இயக்குனர்   டாக்டர்   நூர்   ஹிஷாம்    இன்று    தெரிவித்தார். மே   மாதத்    தொடக்கத்தில்   ஒரு   நாயால்   கடியுண்ட     அவருக்கு    ஜூலை   …

‘வாங்க டீ சாப்பிடலாம்’; ரபிசியை அழைக்கிறார் ஜமால்

சுங்கை  புசார்    அம்னோ   தொகுதித்   தலைவர்   ஜமால்   முகம்மட்  யூனுஸ்,  பிகேஆர்    உதவித்   தலைவர்     ரபிசி  ரம்லியை   ரொட்டி   சானாயும்   தே   தாரிக்கும்   சாப்பிட     அழைப்பு   விடுத்துள்ளார். ரபிசி,  ஜமாலைப்  புகழ்ந்து   பேசிவிட்டாராம்   அதற்காகத்தான்   இந்த   அழைப்பு. அம்னோ   இளைஞர்களுக்குத்     தலைமை   தாங்கும்   தகுதி    தன்னிடம்   இருப்பதாக   ரபிசி  …

பெல்டா வாக்காளர்கள் பிஎன்னுக்குத்தான் வாக்களிப்பர்: சாலே உறுதியாக நம்புகிறார்

பெல்டா   வாக்காளர்களைத்    தங்கள்   பக்கம்   ஈர்க்கும்   பக்கத்தான்  ஹராபானின்   நோக்கம்   வெறும்  கனவாகத்தான்   முடியப்போகிறது   என்கிறார்   தொடர்பு,  பல்லூடக   அமைச்சர்   சாலே  சைட்   கெருவாக். அவர்களின்  கனவு   ஈடேறாது.  பெல்டா   வாக்காளர்கள்  தங்களின்   நலனைக்   கவனித்துக்கொள்வது  அம்னோ-பிஎன்  கூட்டணியே   என்றே   முழுமையாக    நம்புகிறார்கள்    என   சாலே   குறிப்பிட்டார். “பெல்டா  …

நஜிப்: இந்திய முஸ்லிம்கள் பூமிபுத்ராக்களே

நாட்டின் இந்திய முஸ்லிம்களுக்கு பூமிபுத்ரா தகுதி அளிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசிக்கும் என்று பிரதமர் நஜிப் கூறுகிறார். "இந்திய முஸ்லிம்கள் பூமிபுத்ராக்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதை எவ்வாறு அமல்படுத்துவது என்பதுதான் கேள்வி. இதை நிறுவாக அடிப்படையில் செய்வதா அல்லது கேட்டுக்கொண்டவாறு அரசு அறிக்கையில் பதிவு செய்வதா என்பது…

மகாதிர்: ஹரப்பானில் நான்தான் வெற்றி வீரன்

  மகாதிர் முகம்மட் தாம் பாக்கத்தான் ஹரப்பானில் பிரதமர் நஜிப்புக்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் சமமானவர் என்று நம்புகிறார். 'நான் ஹரப்பான் தலைவர்களில் ஒருவர். அவைத் தலைவர் என்ற முறையில் நான் தலைமைத்துவ மன்றத்துக்கு தலைமை ஏற்பேன். "ஹரப்பானின் தரவரிசைச்யில், நான்தான் வெற்றி வீரன்", என்று மகாதிர் புத்ராஜெயவில் இன்று…

எம்ஆர்டி திட்டத்தை அரசியல் திட்டமாக்குவதா?, அஸ்மின் சீற்றம்

சுங்கை  பூலோ-  காஜாங்   எம்ஆர்டி  ரயில்   சேவை   தொடக்கிவைக்கப்பட்ட   நிகழ்வை   அம்னோ    அதன்    அரசியல்   ஆதாயத்துக்காக  பயன்படுத்திக்கொள்ள   முயன்றிருக்கிறது   என  சிலாங்கூர்   மந்திரி   புசார்   அஸ்மின்   அலி   குற்றஞ்சாட்டினார். “எம்ஆர்டி   திட்டத்தை    அம்னோ    அதன்   சொந்தத்   திட்டம்போல்   காண்பித்துக்கொள்ள    முயன்றதாக    எங்களுக்குத்   தகவல்   கிடைத்துள்ளது”,   என   அஸ்மின்    செய்தியாளர்களிடம்  …

எம்ஆர்டி ஓர் அன்பளிப்பு அல்ல- பிகேஆர் தலைவர்

மக்களுக்கு   வசதிகள்    செய்து  கொடுப்பது    அரசாங்கத்தின்   கடமை  ஐயா.  கடமை.  எம்ஆர்டி   திட்டத்தை   மக்களுக்குப்  பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்கின்   “அன்பளிப்பு”   என்று  கூறிய      தொடர்பு,  பல்லூடக   அமைச்சர்   சாலே   சைட்   கெருவாக்குக்கு    என   பிகேஆர்   தலைமைப்   பொருளாளர்   டான்   ஈ  கியு   இவ்வாறு   பதிலடி   கொடுத்துள்ளார். “சாலேயால்  …

அபாண்டி: நான் எதையும் மறைக்கவில்லை; மகாதிருக்கு அஞ்சவில்லை

சட்டத்துறைத்  தலைவர்(ஏஜி)   முகம்மட்    அபாடிண்டி    அலி,    தாம்  1எம்டிபி   ஊழல்  விவகாரம்   தொடர்பான   ஆதாரங்களை  மறைப்பதாக   முன்னாள்   பிரதமர்   மகாதிர்    குற்றம்   சாட்டுவதை   மறுக்கிறார். ஏஜி   என்ற   முறையில்   தாம்   எடுக்கும்  முடிவுகள்   அனைத்தும்    விசாரணை    அறிக்கைகளை   அடிப்படையாகக்  கொண்டவை  என்றாரவர். “இதில்  மறைப்பதற்கு   ஏதுமில்லை”,  என்றவர்   மலேசியாகினிக்கு   …

பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு ஒரு நற்செய்தி

வரும்  ஞாயிற்றுக்கிழமை     பெல்டா   குடியேற்றக்காரர்களுக்கு  நற்செய்தி  காத்திருக்கிறது.    பெல்டா   குடியேற்றக்காரர்கள்  தினமான    அன்று   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்   அதனை    அறிவிப்பார். இதனைத்   தெரிவித்த  பிரதமர்துறை   துணை  அமைச்சர்    ரசாலி   இப்ராகிம்,  நாட்டின்     மேம்பாட்டில்   பெல்டா   குடியேற்றக்காரர்களின்   பங்களிப்பைப்  பாராட்டி   அவர்களின்   நிதிச்சுமையைக்   குறைக்க    அரசாங்கம்   தொடர்ந்து   அவர்களுக்கு   …

பி.எஸ்.எம். தேசியத் தலைவராக டாக்டர் நசீர் மீண்டும் தேர்வு

மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் தலைவராக டாக்டர் முகமட் நசீர் ஹசிம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று நடந்துமுடிந்த கட்சி உள்தேர்தலில், டாக்டர் நசீர் பெரும்பான்மை பேராளர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்வு பெற்றார். சிரம்பானில் நடந்த கட்சியின் 19-வது தேசிய மாநாட்டில், 2017/2019-ம் ஆண்டுக்கான புதிய செயலவையினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சரஸ்வதி முத்து…

கைரி ஜமாலுடின்: தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டும் அரசியல் திண்மை இருக்கிறதா?

  தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்ட வேண்டும். நாட்டில் ஒற்றுமையை வளர்க்க இது ஒரு பிரபலமான கருத்து. ஆனால், தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டும் திண்மை அரசியலிலுள்ள யாருக்காவது உண்டா என்று இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் அபு பாக்கர் கேள்வி எழுப்பினார். அது ஒரு சிறந்த குறிக்கோள், ஏனென்றால்…

டிஎபி: மறுதேர்தல் நடத்துவது பற்றிய கடிதம் ரோஸிடமிருந்து கிடைத்தது

டிஎபி அதன் மத்திய செயற்குவுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் எனக்கோரும் அதிகாரப்பூர்வமான கடிதம் ரோஸிடமிருது இன்று காலை கிடைத்ததாக அக்கட்சியின் சட்டப் பிரிவு தலைவர் கோபிந்த் சிங் கூறினார். டிஎபியின் மத்திய செயற்குழு எதிர்வரும் புதன்கிழமை கூடி இதனை விவாதிக்கும். அதன் பின்னர் ஓர் அறிக்கை வெளியிடப்படும் என்றாரவர்.…

அம்னோ இளைஞர் பதவிக்குக் குறி வைக்கிறார் ஜமால்

சுங்கை    புசார்    அம்னோ    தலைவர்     ஜமால்    முகம்மட்   யூனுஸ்,   அடுத்த  பொதுத்  தேர்தலுக்குப்   பின்னர்      அம்னோ  இளைஞர்   தலைவர்   பதவிக்குப்    போட்டியிடும்   விருப்பத்தை   வெளிப்படுத்தியுள்ளார். எதையும்    துணிந்து    சொல்லும்    செய்யும்      அரசியல்வாதியான     அவர்,   பொதுத்  தேர்தலில்    தனக்கு  போட்டியிட    இடம்  கிடைக்காது  போனால்   அதுதான்  நடக்கும்   என்றார் .…

முக்ரிஸ்: கெடாவில் பாஸுடன் பேச்சுகள் நடத்த இடமுண்டு

கெடாவில்   பக்கத்தான்  ஹராபானும்   பாஸும்  சமரசம்   செய்துகொள்ள   வாய்ப்பிருப்பதாக   பார்டி   பிரிபூமி   பெர்சத்து  மலேசியா (பெர்சத்து)  துணைத்  தலைவர்    முக்ரிஸ்   மகாதிர்   கூறுகிறார். ஹராபானுக்கும்  பாஸ்  கட்சிக்குமிடையில்   தேசிய   நிலையில்    ஒட்டுறவு  இல்லை      என்றாலும்   கெடா  நிலைமை   வேறு   என    கெடாவில்    பெர்சத்து   தேர்தல்   பணிகளுக்குப்  பொறுப்பேற்பார்   என …

சாலே: எம்ஆர்டி, மக்களுக்குப் பிரதமரின் பரிசு

எம்ஆர்டி   பெருஞ்  செலவில்  அமைந்த   திட்டமாக    இருக்கலாம்   ஆனால்,  அது  மக்களுக்கான   திட்டம்    என்கிறார்   தொடர்பு,  பல்லூடக    அமைச்சர்   சாலே  சைட்  கெருவாக். 51 கிலோமீட்டர்   நீளம்  கொண்ட   எம்ஆர்டி  சுங்கை  பூலோ - காஜாங்   சேவையினால்   நாள்தோறும்   400,000  பயணிகள்   பயனுறுவர்    என   அமைச்சர்  அவரது    வலைத்தள்மான  …

செப்டம்பருக்குமுன் தேர்தல் இல்லை: ஜாஹிட் திட்டவட்டம்

அடுத்து   பொதுத்   தேர்தல்    செப்டம்பர்   மாதத்துக்குமுன்   நடத்தப்படாது    என்று   துணைப்  பிரதமர்   அஹமட்  ஜாஹிட்   ஹமிடி    நேற்று   உறுதியாகக்    கூறினார். “(செப்டம்பர்  என்பது)  மிகவும்  பக்கத்தில்   இருக்கிறது.  அது (பொதுத்  தேர்தல்)  அதன்  பிறகுதான்    நடத்தப்படும்”,  என  ஜாஹிட்   கூறியதாக    சேனல்   நியுஸ்   ஆசியா   அறிவித்துள்ளது. நேற்று,   கோலாலும்பூர், …

ஃபெல்டா லண்டனில் ஹாட்டல் வாங்கியது தொடர்பில் எம்ஏசிசி அதிரடிச் சோதனை

மலேசிய    ஊழல்தடுப்பு   ஆணையத்தைச்   சேர்ந்த   சுமார்     எட்டு   அதிகாரிகள்      அதிரடிச்  சோதனை   நடத்துவதற்காக  இன்று  காலை  மணி   10.20  அளவில்     கோலாலும்பூர்,  ஜாலான்   கர்னியில்    உள்ள   ஃபெல்டா  அலுவலகத்தில்  வந்திறங்கினார்கள். அவர்கள்,   ஃபெல்டா   இன்வெஸ்ட்மெண்ட்    கார்ப்பரேசன் (எப்ஐசி)   லண்டனில்  கென்சிங்டனில்   நான்கு-நட்சத்திர    தங்குவிடுதி   வாங்கியது   தொடர்பில்   விசாரணை   நடத்துவதற்காக  …

முக்ரீஸ்: ஆதிக்கமுடைய அம்னோ மலாய் அமைப்புகளை தோல்வியுறச் செய்து விட்டது

பாரிசான் நேசனலில் அம்னோதான் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால், அது மலாய்க்காரர்களின் நலன்களைக் கவனித்துக்கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்தத் தவறி விட்டது என்று பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் துணைத் தலைவர் முக்ரீஸ் மகாதிர் கூறுகிறார். பாரிசானில் அம்னோ ஆதிக்கமுடையதாக இருப்பதை மலாய்க்காரர்கள் விரும்புகிறார்கள். அது அவர்களின் உரிமைகளையும் நலன்களையும்…

மிதவாதம் பேசும் நஜிப் பிடிஎன்னை கலைக்காவிட்டால், ஹரப்பான் அதைச் செய்யும்,…

  மிதவாதத்தை தூக்கிப்பிடிக்கும் பிரதமர் நஜிப் ரசாக் அதே வேளையில் இனவாதத்திற்கு தூபம் போடுவதாக கருத்தப்படும் பிடிஎன்னுக்கு (Biro Tata Negara)ஆதரவு கொடுப்பது அவரது கபடவேடதாரித்தனத்தைக் காட்டுகிறது என்று பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு கூறுகிறார். ஒரே மலேசியாவை ஆதரித்து வாதாடும் நஜிப், பிரிவினைவாதத்தையும் வேறுபாட்டையும்…

சிங்கப்பூரில் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

  நேற்று, சிங்கப்பூர் பேச்சாளர் சதுக்கத்தில் சுமார் 400 சிங்கப்பூர் மக்கள் கூடி பிரதமர் லீ ஹிசியன் அதிகார அத்துமீறல் குறித்து விசாரிக்க ஒரு சுயேட்சை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இவ்விவகாரம் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் லீ குவான் இயுவின் வீடு சம்பந்தமாக இன்றைய…

பெண்டாத்தாங் என்ற சொல்லை தடை செய்ய வேண்டும், சுப்ராவின் பழைய…

  பிரதமர் துறையிலிருந்து செயல்படும் பிடிஎன் (Biro Tata Negara) என்ற அமைப்பு நடத்தும் குடிமைப் பயிற்சியில் மாணவர்களிடையே இனவாதத்தையும், மலாய்க்காரர்களின் மேலாண்மை தத்துவத்தையும் பரப்புகிறது என்ற கடுமையான குற்றச்சாட்டு 2015 ஆம் ஆண்டில் எழுந்தது. பிடிஎன் பயிற்சியில் இந்நாட்டு இந்தியர்களும் சீனர்களும் பெண்டாத்தாங் என்று மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது.…

நஜிப்: எதிர்காலப் பொதுத்தேர்தல்களில் வெற்றியை உறுதிசெய்ய பிடிஎன் தேவைப்படுகிறது

  அரசாங்கம் தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்யும் மலேசியர்களை உருவாக்கும் நோக்கத்தோடு குடிமைப் பயிற்சி (பிடிஎன் (Biro Tata Negara)) தோற்றுவிக்கப்பட்டது என்று பிரதமர் நஜிப் ரசாக் கூறுகிறார். அவ்வகையில், பிடிஎன் இன்னும் பொருத்தமானதாக இருக்கிறது. அது தொடர்ந்து அதன் பங்கை அடுத்தப் பொதுத்தேர்தலிலும் அதற்கடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் ஆற்ற…