கிளந்தான் காவல்துறை, அந்தக் குழுவினர் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து பேராக் மாநில அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தலை கோரி வருவதாகத் தெரிவித்தது. குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ கூறுகையில், அவர்கள் ஆகஸ்ட் 29 அன்று குவா முசாங், லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ வழியாகக்…
‘மரங்களா வாக்களிக்கப் போகின்றன?’ இசி-யைச் சாடினார் பிரதிநிதி
சுங்கை டூலாங்கில் ஆளற்ற ஒரு செம்பனைத் தோட்டம். அங்கு 22 வாக்காளர்கள் இருப்பதாக பதிவாகியிருப்பதுதான் ஆச்சரியம். 2017, முதல் காலாண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இக்குறைபாட்டைக் கண்டதாகக் கூறுகிறார் ஹுத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் கேசவன் சுப்ரமணியம். “அங்கு வீடு இல்லை; மரங்கள் மட்டும்தான் உண்டு ஆனால், 22 வாக்காளர்கள் …
எம்ஒ1-இன் துணைவியாரின் நகைகளை ஐஜிபி கைப்பற்ற வேண்டும் என்கிறது அமனா
மலேசியன் அதிகாரி 1-இன் மனைவியிடமிருந்து ரிம128 மில்லியன் மதிப்புடைய அல்லது 28 வகையான நகைகளை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கர் பறிமுதல் செய்ய வேண்டும் என்று பார்டி அமனா நெகாராவின் (அமனா) நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட் வலியுறுத்துகிறார். அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தொடர்ந்துள்ள…
அஸலீனா: டிஒஜே வழக்கு பற்றி மக்கள் பீதியடைய வேண்டியதில்லை
அமெரிக்க நீதித்துறையின் மிக அண்மைய பறிமுதல் செய்தல் வழக்கு பற்றி பீதியடைய வேண்டாம் என்று மலேசியர்களை பிரதமர்துறையின் அமைச்சர் அஸலீனா ஓத்மான் கேட்டுக்கொண்டார். இந்தக் குற்றச்சாட்டுகளால் எளிதில் ஏமாறக்கூடிய சில தரப்பினர்கள் இருப்பது குறித்து தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான அவர் கூரினார். அமெரிக்கா…
இசா தலைவர் பொறுப்பேற்கும் ஸ்பாட்டுக்கு பாஸ் இளைஞர்களின் ‘அனுதாப’க் குறிப்பு
இசா சமட் புதிய இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலப் பொதுப் போக்குவரத்து ஆணைய(ஸ்பாட்)த்துக்கு பாஸ் இளைஞர்கள் ‘அனுதாபக் குறிப்பு’ ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். பாஸ் இளைஞர் உதவித் தலைவர் அஹ்மட் பாத்லி ஷாரி ஸ்பாட் தொடர்புத் துறை மேலாளர் ஹஸிமின் சுலைமானிடம் அக்குறிப்பை வழங்கினார். அக்குறிப்பை வழங்கியபோது இசா …
ரபிசி: 60 உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதற்கு நிதி அமைச்சே…
கூடுதலாக 60 வகை உணவுப் பொருள்களுக்குப் பொருள், சேவை வரி விதிக்க (ஜிஎஸ்டி) நிதி அமைச்சின் அனுமதியைப் பெறாமலேயே மலேசிய சுங்கத்துறை முடிவு செய்து விட்டது என்று கூறிய இரண்டாம் நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனியை பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி சாடினார். புதிய பொருள்களுக்கு …
எம்பிஐ குழும நிறுவனங்களில் அதிரடிச் சோதனை: பல மில்லியன் ரிங்கிட்…
நேற்று பினாங்கிலும் கெடாவிலும், திடீர் பணக்காரராகும் திட்டத்தை நடத்தும் நிறுவனங்களுக்கு எதிராக, உள்நாட்டு வாணிக, கூட்டுறவு பயனீட்டாளர் விவகார அமைச்சு, பேங்க் நெகாரா, போலீஸ், சட்டத்துறை அலுவலகம் ஆகியவை கூட்டாக மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 1/2 மில்லியன் ரிங்கிட் ரொக்கமாக பிடிபட்டது, ரிம27 மில்லியன் கொண்ட வங்கிக் கணக்கு …
சிறுவர் பாலியல் குற்றங்களை விசாரிக்க தனி நீதி மன்றம்
சிறுவர் பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கென்றே தனி நீதி மன்றம் உருவாக்கப்பட்டிருப்பது அவ்விவகாரத்தில் அரசாங்கம் காட்டும் அக்கறைக்கும் சிறுவர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்க அது பாடுபடுவதற்கும் நல்ல சான்றாகும். வியாழக்கிழமை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அந்நீதிமன்றத்தை புத்ரா ஜெயாவில் திறந்து வைக்கிறார்.
ஜொஹாரி: புதிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பதற்கு அமைச்சரவை அனுமதி தேவை
புதிய பொருள்களுக்கு பொருள், சேவை வரி விதிப்பதாக இருந்தால் அமைச்சரவையின் அனுமதி தேவை என இரண்டாம் நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி கூறினார். ஜூலை முதல் நாளிலிருந்து புதிதாக 60 வகை உணவுப் பொருள்களுக்குப் (ஜிஎஸ்டி விதிக்கும் திட்டம் கைவிட்டது குறித்துக் கருத்துரைத்தபோது ஜொஹாரி இவ்வாறு கூறினார்.…
நஜிப்: அம்னோ இஸ்லாத்திற்காக போராடுகிறது, அதனால்தான் பாஸ் எங்களை விரும்புகிறது
அம்னோவின் கோட்பாடுகளும் போராட்டங்களும் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றின் கௌரவத்தை ஆதரிப்பதாக இவ்வளவு காலமாக இருந்து வந்துள்ளதால், பாஸ் விரும்பும் கட்சியாக அம்னோ இருக்கிறது என்று பிரதமர் நஜிப் ரசாக் கூறுகிறார். பாஸ் கட்சி எதிரணியில் இருந்த போது டிஎபியால் கொடுமைபடுத்தப்பட்டது. ஆனால், பாஸ் இப்போது அம்னோவை…
அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்ததே இல்லை என்கிறார் மகாதிர்
அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தாக்கல் செய்துள்ள மிக அண்மைய 1எம்டிபி சொத்துகள் சம்பந்தப்பட்ட வழக்கின் பின்னணியில் எதிர்க்கட்சி இருப்பதாகக் கூறப்படுவதை எள்ளிநகையாடினார் முன்னாள் பிரதமர் மகாதிர். "நான் எந்த ஓர் அமெரிக்க அதிகாரியையும் சந்தித்ததே இல்லை", என்று சேனல் நியுஸ் ஆசியாவுடன் இன்று நடந்த ஒரு நேர்காணலில்…
டிஒஜேயின் பயமுறுத்துகிற கோரிக்கைகள் விவகாரத்தில் ஏஜியின் அலட்சியம், மகாதிர் சாடினார்
1எம்டிபி பண மோசடி விவகாரம் குறித்து டிஒஜே சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மலேசிய சட்டத்துறை தலைவர் முகமட் அபாண்டி அலி தெரிவித்திருக்கும் கருத்து நகைப்புக்குரியது என்று பெர்சத்துவின் தலைவர் மகாதிர் கூறினார். கடந்த வியாழக்கிழமை, டிஒஜே தாக்கல் செய்த மிக அண்மைய சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான சிவில் வழக்கு…
அமெரிக்கத் தூதரகம்: மலேசியாவிடமிருந்து ஆட்சேபக் குறிப்பு ஏதும் வரவில்லை
அமெரிக்க நீதித்துறையின் (டிஒஜே) 1எம்டிபி-தொடர்புடைய சிவில் பறிமுதல் செய்தல் வழக்கு இந்நாட்டின் விவகாரத்தில் தலையிடும் ஒரு விதமான செயல் என்று பல அமைச்சர்கள் கூவியிருந்த போதிலும், அமெரிக்க நீதித்துறை எந்த ஓர் ஆட்சேபக் குறிப்பையும் இதுவரையில் பெறவில்லை. டிஒஜே கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ள சிவில் 1எம்டிபி-தொடர்புடைய…
இனிமேல் டிஒஜே பற்றி அறிக்கைகள் இல்லை, நஜிப் கூறுகிறார்
அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தாக்கல் செய்துள்ள மிக அண்மைய சிவில் பறிமுதல் செய்தல் வழக்கு பற்றி தாம் அறிக்கைகள் ஏதும் விடப்போவதில்லை என்று பிரதமர் நஜிப் ரசாக் கூறுகிறார். டிஒஜே தாக்கல் செய்துள்ள அண்மைய வழக்கை தற்காப்பு அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன் கடுமையாகச் சாடியுள்ளது பற்றி இன்று…
கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து புதிய ஜிஎஸ்டி திட்டம் கைவிடப்பட்டது
ஜூலை முதல் நாளிலிருந்து புதிதாக 60 உணவுப் பொருள்களுக்குப் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கும் திட்டத்தை அரச மலேசிய சுங்கத் துறை கைவிட்டது. அப்பொருள்கள் ஜிஎஸ்டி பட்டியலில் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டதும் ஊடகங்களில் எழுந்த எதிர்ப்பு குறித்து நிதி அமைச்சின் ஆலோசனை நாடப்பட்டு அதன் ஆலோசனையின்பேரில் அத்திட்டத்தை இரத்துச் …
மகாதிர்: ரோஸ்மா டிஓஜேமீது வழக்கு தொடுக்கலாமே
பிரதமரின் துணைவியார் ரோஸ்மா அவர்மீது அவதூறு கூறப்படுவதாக நினைத்தால் அமெரிக்க நீதித்துறைமீது வழக்கு தொடுக்கலாம் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். ரோஸ்மாமீது அவதூறு கூறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவரின் வழக்குரைஞர்கள் எச்சரித்திருப்பதை அடுத்து பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா நிர்வாகத் …
இசா சமட் எப்ஜிவி தலைவர் பதவியை இழக்கிறார்?
இன்று பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் ஹொல்டிங்ஸ் பெர்ஹாட் (எப்ஜிவி) தலைவர் முகம்மட் இசா சமட் அப்பதவியிலிருந்து தூக்கப்பட்டு அவருக்குப் பதிலாக டெலிகோம் மலேசியா தலைவர் சுலைமான் மஹ்பூப் அப்பதவியில் அமர்த்தப்படுவாராம். பெரித்தா ஹரியானும் நியு ஸ்ரேட்ஸ் டைம்சும் இதைத் தெரிவித்துள்ளன. நேற்று, த ஸ்டார் நாளேடு எப்ஜிவி தலைமையில் …
பணவீக்கம் எகிறும், மக்களின் இரத்தம் கொதிக்கும்: ரபிசி எச்சரிக்கை
பணவீக்கம் எகிறப்போவது என்பதில் ஐயமில்லை. புத்ரா ஜெயா 60 அடிப்படைப் பொருள்களுக்கு பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) விதிக்க விரும்புவதுதான் இதற்குக் காரணம் என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி. ஒரு தேர்ந்த கணக்காளருமான ரபிசி, இதன் விளைவாக பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் கொதித்தெழுவார்கள் என எச்சரித்தார்.…
நவீன் கொலை வழக்கு: தூக்குத்தண்டனை சாத்தியமல்ல, மூத்த வழக்குரைஞர்கள் கருத்து
பெத்தாலிங் ஜெயா – தி.நவீன் மரணத்தில் தொடர்புடைய 5 இளையர்களும் குற்றவியல் சட்டத்தின்கீழ், கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கலாம். ஆனால், கட்டாய மரண தண்டனையை எதிர்கொள்ளும் சாத்தியம் இல்லை. சந்தேக நபர்களில் நால்வர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக கட்டாய மரண தண்டனை விதித்தல் அல்லது பதிவு…
டிஓஜேக்குத் துணிச்சல் இருந்தால் வழக்கு தொடுக்கட்டும்: சவால் விடுகிறார் ஹிஷாம்
1எம்டிபி விவகாரத்தில் தவறு நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டா? இருந்தால் அமெரிக்க நீதித்துறை (டிஓஜே)யிடம் தாராளமாக வழக்கு தொடுக்கட்டும் என அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் கூறினார். மலேசிய முதன்மை அதிகாரி (எம்ஓ1)யின் பெயர் குறிப்பிடப்படாதது அவர் யார் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்று கூறிய அவர், இப்போது எம்ஓ1-இன் …
புவாட்: முகைதின் கபடதாரி அதனால்தான் ஹராபான் அவரை நிராகரிக்கிறது
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசினுக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்ம்மீதும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர்மீதும் குறை சொல்லத் தகுதி இல்லை என்கிறார் சிறப்பு விவகாரத்துறை தலைமை இயக்குனர் முகம்மட் புவாட் ஸர்காஷி. முகைதின் ஒரு கண்ணியவான்போல் “நடிப்பது” இருக்கட்டும், முதலில் அவர் …
ஹரபான் அதன் பிரதமர் வேட்பாளரை அறிவித்தே ஆக வேண்டும்: கெராக்கன்…
கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியாங் அடுத்த பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராபானின் பிரதமர் வேட்பாளார் யார் என்பதைத் தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருக்கிறார். அன்வார் இப்ராகிம், தாம் ஹராபானின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு விரும்பவில்லை என்று அறிவித்து விட்டதை அடுத்து டான்-னுக்கு இவ்வார்வம் ஏற்பட்டுள்ளது.…
நஜிப் நாளை பெர்லிஸ் அம்னோ அடிமட்ட உறுப்பினர்களைச் சந்திக்கிறார்
பெர்லிஸ் மாநிலத்தில் அடிமட்ட அம்னோ உறுப்பினர்களையும் தலைவர்களயும் பிரதமர் நஜிப் நாளை சந்திக்கிறார். இது இவ்வாண்டின் பிரதமரின் முதல் வருகை என்று பெர்லிஸ் அம்னோ தொடர்புத் தலைவர் ஷாஹிடான் காசிம். நிகழ்ச்சிகள் தேவான் 2020இல் மணி 4.00 க்கு தொடங்கும் என்றாரவர். ஆகவே, பெர்லிஸ் மக்கள் திரண்டு…
திருமதி எம்ஒ1 இன் இளஞ்சிவப்பு வைரம், தங்க நகைகள் டிஒஜேயின்…
பெயர் கூறப்படாத "மலேசியன் அதிகாரி1 இன் (எம்ஒ1) மனைவிக்கு வழங்கப்பட்ட யுஎஸ்$22.3 மில்லியன் மதிப்புடைய 22 - காரட் இளஞ்சிவப்பு இருதய வடிவிலான வைரம் அமெரிக்கா அம்பலப்படுத்திய 1எம்டிபி பற்றிய விபரங்களில் ஒன்றாகும். இது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த இளஞ்சிவப்பு வைரம் மற்றும் யுஎஸ்$1.3 மில்லியன்…


