சுபாங் பள்ளிவாசலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் சுல்தான் உத்தரவு

சுபாங்   எம்பி   சிவராசா  ராசையாவைப்  பேசுவதற்கு    அனுமதித்த   சுபாங்  பள்ளிவாசலுக்கு    எதிராக    நடவடிக்கை   எடுக்குமாறு   சிலாங்கூர்    சுல்தான்   மாநில   சமய   விவகாரத்   துறை(ஜயிஸ்)யைப்   பணித்துள்ளார். சுல்தான்   ஷராபுடின்  இட்ரிஸ்   ஷாவின்   தனிச்   செயலாளர்    முனிர்   பானி  வழியாக    அவ்வுத்தரவு    வந்தது   என  ஜயிஸ்   இயக்குனர்   ஹரிஸ்   காசிம்   கூறினார்.…

ஒரு விஐபி-இடம் கையூட்டுக்குப் பேரம்பேசியதாக நம்பபடும் நபர் கைது

ஒரு   விஐபி-இடம்,     விசாரணையில்  உள்ள  ஒரு   வழக்கைக்  கைவிடுவதற்குப்   பேரம்   பேசி   அதற்காகக்  கையூட்டும்  பெற்றதாக     சந்தேகிக்கப்படும்   ஓர்  ஆடவரை   மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணையம்   கைது     செய்துள்ளது. 54-வயதுடைய   அந்நபர்,   ரிம70,000   கொடுத்தால்   அந்த  விஐபிக்கு   எதிரான  வழக்கை   ஒன்றும்  இல்லாதபடி   செய்துவிட   முடியும்    என்று   கூறியிருந்தார்   என  …

புரோட்டோன் குழந்தையை வரிசெலுத்துவோர் தாங்கும் நிலை வரவே வராது- ஜொகாரி…

இதற்குமேலும்    புரோட்டோன்   நிறுவனத்தை    நடத்துவதில்    அரசாங்கத்துக்குத்   துளியும்   விருப்பமில்லை   என்கிறார்   இரண்டாம்   நிதி  அமைச்சர்   ஜொகாரி   அப்துல்  கனி. சீனாவின்    கீலி    ஆட்டோமோபில்   ஹோல்டிங்க்ஸுடன்      செய்துகொள்ளப்பட்டுள்ள   ஏற்பாட்டின்படி       சத்துக்கள்   எல்லாம்  உறிஞ்சப்பட்டு    புரோட்டோன்   வெறும்  “சக்கையாக”    அரசாங்கத்திடம்   மீண்டும்   திரும்பி  வரும்    என்று    டிஏபி-இன்  பெட்டாலிங்   ஜெயா    எம்பி  …

தேர்தல் களத்தில் பிஎஸ்எம் – 20 தொகுதிகளில் போட்டியிடும்!

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) விவசாயிகள் மற்றும் பூர்வக்குடி மக்கள் பிரதிநிதிகளை வேட்பாளர்களாகக் களமிறக்கவுள்ளது. நாட்டில் பிரபலமான, பெரிய அரசியல் கட்சிகளெல்லாம் அரசியல் சாணக்கியர்களையும் நிபுணர்களையும் குறிவைத்து தங்கள் பிரம்மாஸ்தரத்தை எய்யும் போது, பி.எஸ்.எம். எப்படி இவர்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தது? 1998இல்,…

த ஸ்டார் அதன் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்துள்ளது

  மே 27 இல் வெளியிடப்பட்ட த ஸ்டாரின் முதல் பக்கச் செய்தி சம்பந்தப்பட்ட சர்ச்சையின் விளைவாக அந்நாளேடு அதன் முதன்மை ஆசிரியர் லீன்னெ கோவை உள்விசாரணை தீரும் வரையில் இடைநீக்கம் செய்துள்ளது. அதன் செயல்முறை ஆசிரியர் துரைராஜ் நடேசனும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாளேடு அறிவித்தது. இடைப்பட்ட காலத்தில்,…

மலேசிய மாணவர்கள் மான்செஸ்டர் குண்டு வெடிப்பு விசாரணையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

  சமீபத்தில் மான்சென்ஸ்டர் நகரில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் சம்பந்தமாக  நேற்று மூன்று மலேசிய மாணவர்களை  மான்செஸ்டர் மாநகர் போலீசார் தடுத்து வைத்துள்ளனர். மான்செஸ்டர், லோங்சைட் போலீஸ் நிலையத்திற்கு அம்மாணவர்கள் மாலை மணி 5.40க்கு கொண்டுசெல்லப்பட்டனர் என்றும் விசாரணைக்குப் பின்னர் இரவு மணி 9 க்கு அவர்கள்…

த ஸ்டார் முதல் பக்கம் உணர்ச்சியற்றதே தவிர தேசநிந்தனையானதல்ல

  த ஸ்டார் நாளேடு அதன் முதல் பக்கத்தில் முஸ்லிம்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த படத்தையும் "மலேசிய பயங்கரவாதத் தலைவர்" என்ற மற்றொரு செய்தித் தலைப்பையும் வெளியிட்டிருந்தது ஓர் உணர்சியற்ற செயலாகும். அதற்கு தேசநிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொள்ள வேண்டியதில்லை என்று கெராக்கான் ஹாபுஸ்கான் அக்தா ஹாசுதான் (ஜிஎச்எஎச்) கூறிகிறது.…

எஸ்ஆர்சி பணத்தை உண்மையான ரமதான் உணர்வோடு திருப்பிக் கொடுங்கள், முஸ்லிம்களுக்கு…

  அரசு நிறுவனமான எஸ்ஆர்சிஇன்டர்நேசனலிலிருந்து வந்ததாக சந்தேகிப்படும் பணத்தைப் பெற்றுக்கொண்ட முஸ்லிம்கள் அதை ரமதான் உணர்வோடு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று பார்டி அமனா நெகாராவின் பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாஹிட் ராவா கூருகிறார். இந்த புனித ரமதான் மாதத்தில், அம்னோ தொகுதித் தலைவர்களையும் பிஎன் கட்சிகளையும்…

த ஸ்டார்மீது போலீஸ் விசாரணை

ஆங்கில    நாளேடான    த   ஸ்டார்       தேச  நிந்தனைக்   குற்றம்    புரிந்துள்ளதா,  சமயங்களுக்கிடையில்   பகைமையைத்    தூண்டிவிட   முயன்றதா     என்று   விசாரிக்கப்பட்டு   வருகிறது. அந்நாளிதழ்     அதன்   முன்பக்கத்தில் முஸ்லிம்கள் தொழுகை செய்யும் படத்தையும்     மலேசிய   பயங்கரவாதத்    தலைவர்    என்ற   செய்தித் தலைப்பையும்  ஒருசேர   வெளியிட்டதன்    தொடர்பில்    நிறைய    போலீஸ்     புகார்கள்     செய்யப்பட்டிருப்பதாக   …

வலைத்தளங்களில் பதிவிடுகையில் கவனம் தேவை: பாஸ் கட்சியினருக்கு துவான் இப்ராகிம்…

நோன்பு  திறக்கும்   நிகழ்வை   அரசியலாக்கக்   கூடாது    என்று    பாஸ்   துணைத்   தலைவர்     துவான்   இப்ராகிம்     அறிவுறுத்தியுள்ளார். “நோன்பு   திறப்பதை   அரசியலாக்கக்கூடாது,    அரசியல்    நோக்கங்களுக்குப்   பயன்படுத்திக்கொள்ளக்   கூடாது.  மாறாக,  பல்லினங்களையும்   ஒன்றிணைக்கும்    மேடையாக    அதைப்   பயன்படுத்திக்கொள்ள     வேண்டும்”,  என  துவான்   இப்ராகிம்   இன்று   முகநூலில்   கூறினார். சமூக   வலைத்தளங்களில்   பதிவிடும்போது   …

வாக்காளர்கள் சிலாங்கூருக்கும் பினாங்குக்கும் குடிபெயரும் போக்கு தென்படுகிறது

கடந்த   ஐந்தாண்டுகளில்   மிக  உயர்ந்த   நிகர   குடிநுழைவு   விகிதம்   சிலாங்கூரிலும்   பினாங்கிலும்   பதிவாகியுள்ளதை    டிஏபி   எம்பி   ஒருவர்   கவனப்படுத்துகிறார். 2015- 2016இல்   சிலாங்கூரில்  நிகர  குடிநுழைவு   விகிதம்    19,400  ஆகவும்   பினாங்கில்   12,000  ஆகவும்    இருந்தது    என   செர்டாங்   எம்பி    ஒங்   கியான்  மிங்   ஓர்    அறிக்கையில்    கூறினார்.…

புக்கா புவாசா: பணிய மறுக்கும் லிம் குவான் எங்

பக்கத்தான் ஹரப்பான் ஜூன் 11 இல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள தேசிய அளவிலான புக்கா புவாசா நிகழ்ச்சியில் பினாங்கு முதலமைச்சர் பங்கேற்கிறார். இதை லிம் குவான் எங் உறுதிப்படுத்தியுள்ளார் என்று பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியான் கூறுகிறார். இந்த தேசிய அளவிலான நிகழ்ச்சி பினாங்கில் நடத்தப்படும். அந்நிகழ்ச்சியில்…

“சங்கிலி மற்றும் பூட்டு” சம்பவம் பற்றிய இசியின் மௌனத்திற்கு கடும்…

  புத்ரா ஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமையகத்தின் வாசல் கதவுகள் சங்கிலியால் பூட்டப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்டது. தேர்தல் பதிவேடுகளின் வரைவு நகல்களை அரசியல் கட்சிகளுக்கு கொடுப்பதில்லை என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்க்கும் ஆட்சேப மனுவை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை…

த ஸ்டார் ஆசிரியர்கள் உள்துறை அமைச்சுக்கு வந்தனர்

  த ஸ்டார் நாளிதழின் நான்கு ஆசிரியர்கள் இன்று உள்துறை அமைச்சுக்கு வந்திருந்தனர். அந்நாளிதழின் சனிக்கிழமை பதிப்பின் முதல் பக்கம் சம்பந்தப்பட்ட விவகாரத்திற்கு, நாட்டிலுள்ள முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்களிக்கத் தவறியது, விளக்கம் அளிக்க அவர்கள் வந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அந்நால்வரும், நாளிதழின் தனித்துறை நிபுணத்துவ ஆசிரியர் எம். சண்முகம்…

என்னை நஜிப்புடன் ஒப்பிடாதீர்கள்: மகாதிர் வலியுறுத்து

முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்,   தம்மைத்    தம்மால்   உருவாக்கப்பட்டவரான    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்குடன்   ஒப்பிட க்  கூடாது    என்றார். “என்னை  நஜிப்புடன்   ஒப்பிடாதீர்கள்.  நான்   எவ்வளவோ  விசயங்களுக்கு      இடமளித்தேன்,  கட்சியினர்   என்னை     எதிர்ப்பதற்குக்கூட   அனுமதித்தேன். “அப்படிப்பட்டவர்களை   நஜிப்   வெளியேற்றுவார்.   அவருடன்   ஒத்துபோகாதவர்களை     நீக்கி  விடுவார்”,  என    …

ஷா ஆலம் போலீஸ் நிலைய போதைப் பொருள் துறை எரிந்து…

ஷா  ஆலம்  போலீஸ்  நிலையத்தில்   போதைப்   பொருள்  துறை    செயல்பட்டு   வந்த   ஒற்றை-மாடிக்   கட்டிடம்   இன்று   காலை   ஏற்பட்ட   தீ   விபத்தில்   மிக   மோசமாக   எரிந்து   போயிற்று. ஷா  ஆலம்   தீ அணைப்பு  மற்றும்  மீட்புத்   துறையின்   உதவி   இயக்குனர்    முகம்மட்    சானி   ஹருல்,     அதிகாலை   மணி   3.43க்கு  …

ஊழலுக்கு எதிரான எம்ஏசிசியின் போராட்டம் 1எம்டிபியையும் உள்ளிட்டிருக்க வேண்டும்

ஊழலுக்கு  எதிரான   போராட்டத்தை   முடுக்கி  விட்டிருக்கும்   மலேசிய    ஊழல்தடுப்பு   ஆணைய(எம்ஏசிசி)த்தைப்   பாராட்ட    வேண்டும்   என்கிறார்   யாயாசான்  1மலேசியா   அறங்காவல்  வாரியத்    தலைவர்  சந்திரா  முஸாபார். கிட்டத்தட்ட   ஒவ்வொரு    நாளும்   அரசாங்க   உயர்   அதிகாரிகள்  பிடிபடுவது   பற்றியும்   அமலாக்க    அதிகாரிகள்   நீதிமன்றத்தில்    நிறுத்தப்பட்டுக்  குற்றம்  சாட்டப்படுவது   பற்றியும்      செய்திகள்   வருகின்றன.…

முதல்பக்கச் செய்திக்காக ஸ்டார் நாளேட்டைத் தடை செய்க: ஜோகூர் சட்டப்…

கடந்த சனிக்கிழமை  வெளியிட்ட    முதல் பக்கச்  செய்திக்காக  ஸ்டார்    நாளேட்டுக்குத்    தடை  விதிக்க    வேண்டும்   என    ஜோகூர்   சட்டமன்ற   உறுப்பினர்   ஒருவர்   கோரிக்கை    விடுத்தார். இவ்வாறு   கோரிக்கை   விடுத்த   அம்னோ     கெம்பாஸ்  சட்டமன்ற   உறுப்பினரான   தெங்கு  புத்ரா   ஹருன்   அமினுர்ரஷிட்,    அந்நாளேட்டின்     உரிமையாளர்கள்   “இஸ்லாம்   தொடர்பான    செய்திகளை    நல்ல  …

பாஸ் உதவித் தலைவர் : அம்னோவுடன் பாஸ் கைகோத்தால் குற்றம்;…

சில   டிஏபி   தலைவர்கள்   அம்னோ    தலைவர்களுடன்  “கைகோத்து”  நிற்கிறார்கள்.  அதைப்   பார்க்கும்    எவரும்   அம்னோவும்   டிஏபியும்   ஒத்துழைப்பதாகக்  கூறுவதில்லை. “ஆனால்,  பாஸ்   தலைவர்கள்   அம்னோ     தலைவர்களுடன்    அரசாங்க    நிகழ்வொன்றின்போது   ஒன்றாக   அமர்ந்து   தேநீர்   அருந்துவதுபோல்   படங்கள்     வெளிவந்தால்   உடனே   அவர்கள்   அம்னோவுடன்   சேர   விரும்புவதாகக்  கதை   கட்டி  விடுகிறார்கள்.…

முதல் பக்கச் செய்தி: த ஸ்டார் ஆசிரியருக்கு உள்துறை அமைச்சு…

  கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட த ஸ்டார் நாளிதழின் முதல் பக்கத்தில் முஸ்லிம்கள் பிரார்த்தணை செய்வதைக் காட்டும் படத்துடன் பயங்கரவாதம் பற்றிய இன்னொரு தலைப்புச் செய்தியும் வெளியிடப்பட்டிருப்பது குறித்து நாளைக்கு விளக்கம் அளிக்க வருமாறு உள்துறை அமைச்சு அந்நாளிதழின் தலைமை ஆசிரியருக்கு ஆணையிட்டுள்ளது. இந்த விவாகாரத்தில் அந்நாளிதழ் அதிகக்…

பினாங்கு ஆர்பாட்டக்காரர்கள் இஸ்லாத்தைப் பிரதிநிதிக்கவிலை, அமனா எம்பி கூறுகிறார்

  ஜாரிங்கான் முஸ்லிமின் புலாவ் பினாங் (ஜேஎம்பிபி) முஸ்லிம்களைப் பிரதிநிதிக்கவில்லை மற்றும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று கூறும் உரிமை அதற்கு இல்லை என்று பார்டி அமனா நெகாராவின் செப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹனிபா மைதின் கூறினார். ஜேஎம்பிபி அதன்…

எம்சிஎ: கெலாங் பாத்தா வேட்பாளர் யார்?, அவசரம் ஒன்றுமில்லை

  14 ஆவது பொதுத் தேர்தலில் கெலாங் பாத்தா நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடவிருக்கும் வேட்பாளரை தேர்வு செய்வதில் மசீச அவசரப்பட போவதில்லை.. வேட்பாளர் ஒருவரை முன்னதாகவே அறிவிப்பதைவிட இது ஒரு சிறந்த முறையாகும் என்று மசீசவின் துணைத் தலைவர் வீ கா சியோங் கூறினார். "வேட்பாளர் பற்றி நாங்கள்…

குவான் எங் “புக்கா புவாசா”வில் கலந்துகொள்ளக்கூடாது என்பது குருட்டுப் பிடிவாதம்,…

  பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் புக்கா புவாசா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுவது பிறர் எண்ணங்களையோ நம்பிக்கைகளையோ சிறிதும் பொறுத்துக் கொள்ளாத குருட்டுப் பிடிவாதம் என்று நாளைய நல்ல மலேசியாவுக்கான மையம் (சென்பெட்) கூறுகிறது. பல்லின மலேசியாவில் இதர இன மற்றும் சமயக்…