கிளந்தான் காவல்துறை, அந்தக் குழுவினர் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து பேராக் மாநில அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தலை கோரி வருவதாகத் தெரிவித்தது. குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ கூறுகையில், அவர்கள் ஆகஸ்ட் 29 அன்று குவா முசாங், லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ வழியாகக்…
ஹரப்பானுக்கு “தராசு” சின்னம், தேர்வு செய்தார் நஸ்ரி
எதிர்க்கட்சி கூட்டணியான ஹரப்பானுக்கு ஒரு சின்னத்தை தேர்வு செய்யும்படி சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸிடம் மூன்று வரைவு சின்னங்களை காட்டிய போது, இது கடினமான வேலை என்று கூறிய அவர், "நான் தராசுவை தேர்வு செய்கிறேன்", என்றார். தராசு பாரிசான் நேசனல் சின்னமாகும்.…
அறையில் இருக்கிற யானையைக் கவனிக்காமல், யானையின் பிணத்தை விசாரிக்கிறார்கள், கிட்…
பேங்க் நெகாரா 1990களில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைச் சந்தையில் சந்தித்த இழப்பு (போரெக்ஸ்) குறித்து விசாரணை நடத்தும் பணிக்குழுவின்முன் இன்று சாட்சியமளித்த லிம் கிட் சியாங், பணிக்குழுவினர் "யானையின் பிணத்தை" விசாரித்துக் கொண்டிருக்கின்றனர் என்று அவர்களிடம் கூறினார். இன்று புத்ராஜெயாவில் பணிக்குழுவினருடன் 30 நிமிட சந்திப்பு…
ஊழல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பிடிப்போம், எம்எசிசி சூழுரைக்கிறது
ஊழல்வாதிகள் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றாலும்கூட அவர்களைப் பிடிப்போம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்எசிசி) சூழுரைத்துள்ளது. ஊழல் பேர்வழிகளை விட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில், ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல் போன்றவற்றில் சம்பந்தப்பட்டவர்களை தவிர்த்து கலங்கமற்ற தலைவர்களை தேர்ந்தெடுங்கள் என்று எம்எசிசி தலைவர் ஸுல்கிப்ளி…
நள்ளிரவிலிருந்து எரி பொருள் விலை குறைகிறது
இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் நிலையங்களில் எரி பொருள் விலை இறக்கம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோன்95 மற்றும் ரோன் 97 ஆகியவற்றின் விலை 10 சென் குறைந்து ஒரு லீட்டர் தலா ரிம2.11 மற்றும் ரிம2.39 க்கு விற்கப்படும். டீசல் விலை 6 சென் குறைக்கப்பட்டு ஒரு…
மகாதிர்: மலாய்க்காரர்கள் டிஎபியைவிட சீனாவை ஆதரிக்கும் பிரதமருக்கு பயப்பட வேண்டும்
மலாய்க்காரர்களும் அம்னோவும் டிஎபியைவிட சீனா மீது நம்பிக்கை வைத்திருக்கும் பிரதமர் நஜிப் பற்றி பயம் கொள்வதற்கு அதிகப்படியான காரணங்கள் இருக்கின்றன என்று மகாதிர் முகமட் கூறுகிறார். மலாக்கா மற்றும் குவாந்தான் ஆகியவற்றின் புதிய துறைமுக வசதிகளை, நஜிப் நிருவாகத்தின் அனுமதியுடன், சீனாவின் இராணுவம் பயன்படுத்திக்கொள்ளும் சாத்தியம் உண்டு…
தேர்தல் எல்லைத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மலாக்கா குடியிருப்பாளர்களுக்கு நீதிமன்றம்…
தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் தேர்தல் எல்லைகளைத் திருத்தி அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மலாக்கா குடியிருப்பாளர்கள் எழுவருக்கு மலாக்கா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. “இனி, மலாக்காவில் தேர்தல் எல்லைத் திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமுறை மேலாய்வு செய்யக் கேட்டுக்கொண்டு மனுச் செய்யலாம். இப்போது, எல்லை நிர்ணய நடவடிக்கைகளை …
‘போட்டியாளரின் உடை கவர்ச்சிமிக்கது என்று கூறவே இல்லை: செஸ் போட்டி…
தேசிய மாணவ செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட 12 ஒரு சிறுமி அணிந்திருந்த ஆடை மிகக் கவர்ச்சியானது என்று கூறவே இல்லை என அப்போட்டியின் இயக்குனர் மறுக்கிறார். தனக்கெதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தன்னை “அவமதிக்கும்” நோக்கம் கொண்டவை என்றும் தாம் சம்பந்தப்பட்ட சிறுமியைப் பார்த்ததுகூட இல்லை என்றும் போட்டி …
பதிவுபெற்ற அமைப்புகள் கூட்டரசு அரசமைப்பைப் பின்பற்ற வேண்டும்
சங்கப் பதிவகத்தில் பதிந்து கொண்டுள்ள அனைத்து அமைப்புகளும் கூட்டரசு அரசமைப்பைப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்) தலைவர் முகம்மட் ரஸின் அப்துல்லா கூறினார். “கூட்டரசு அரசமைப்புத்தான் நாட்டின் மிக உயர்ந்தபட்ச சட்டமாகும். எல்லாக் குடிமக்களும் அமைப்புகளும் குறிப்பாக அரசியல் கட்சிகளும் அதைப் பின்பற்றியாக வேண்டும்”, …
மலேசியாகினி ‘ஒருதலைபட்சமாக நடந்துகொள்ளும் ஊடகம்’: நூர் ஜஸ்லான் குற்றச்சாட்டு
உலக பத்திரிகை சுதந்திர தினமான இன்று, உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் இணைய செய்தித்தளமான மலேசியாகினியை “மிகவும் ஒருதலைபட்சமாக” நடந்துகொள்ளும் ஊடகம் என்று வருணித்தார். பிஎப்எம் 89.9 வானொலியின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டபோது நூர் ஜஸ்லான் அவ்வாறு கூறினார். “அரசாங்கம் கொடூரமானது என்றால் அரசாங்கத்தை மிகவும் குறைகூறி …
உதவிச் சம்பளம் மக்களின் வரிப்பணத்திலிருந்து கொடுக்கப்படுகிறது: பிஎஸ்டிக்கு மாணவர்கள் நினைவுறுத்து
அரசாங்க உதவிச் சம்பளம் பெறும் மாணவர்கள் அரசாங்கத்தை வெளிப்படையாகக் குறைகூறினால் அவர்களுக்குக் கொடுக்கப்படும் உதவிச் சம்பளங்கள் நிறுத்தப்படும் என்று கூறும் பொதுச் சேவைத் துறை(பிஎஸ்டி) கடும் கண்டனத்துக்கு இலக்காகியுள்ளது. பிஎஸ்டி உதவிச் சம்பளத்தில் படித்துக் கொண்டே சமூக வலைத்தளங்களிலும் மற்ற இடங்களிலும் அரசாங்கத்தைக் குறைகூறும் மாணவர்களின் “உதவிச் சம்பளங்களை …
தோட்டங்களில் கால்நடை வளர்ப்பாளர்களை விரட்டியடிக்கும் சைம் டார்பியின் திட்டம், அச்சத்தில்…
மலேசியா முழுவதிலுமுள்ள அதன் தோட்டங்களில், கால்நடை வளர்ப்பு நடவடிக்கையை நிறுத்தப்போவதாக சைம் டார்பி நிறுவனம் அறிவித்திருப்பது தனக்கு வியப்பை அளிப்பதாக, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 19,2017 இல், சுங்கை சிப்புட் ஈப்பில் தோட்டத்தில் நடந்த கூட்டத்தில் சைம் டார்பி…
ஸக்கீர் நாய்க் பற்றி பெர்காசாவும் ஐநாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது
பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா (ஹிண்ட்ராப்) ஸக்கீருக்கு மலேசிய அரசு வழங்கிய நிரந்தர தங்கும் சிறப்புரிமை (பிஆர்) பற்றி ஐநா பாதுகாப்பு மன்றத்தின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவுக்கு (சிடிசி) புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. அதற்கு சவால் விடும் வகையில் மலாய்க்காரர் உரிமைகளுக்காக போராடும் அமைப்பான பெர்காசாவும் சிடிசிக்கு…
போலீசார் இரகசியக் கும்பல் தலைவர்களை அடையாளம் கண்டுள்ளனர், கைது நடவடிக்கை…
இந்நாட்டிலுள்ள இரகசியக் கும்பல்களின் தலைவர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களைக் கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று துணை ஐஜிபி நூர் ரஷிட் இப்ராகிம் இன்று கூறினார். சம்பந்தப்பட்ட குண்டர் கும்பல் தலைவர்கள் கைது செய்யப்படுவதைத் தொடர்ந்து குண்டர்தனம் நசுக்கப்படும் என்று…
‘கிளந்தானில் அமனாவுக்கு ஒரு வாக்குக்கூட கிடைக்காது’
காலஞ்சென்ற பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசிசின் மருமனார், அப்துல் அரிப்பாமி அப்ட் ரஹ்மான், பார்டி அமனா நெகரா(அமனா)வுக்கு கிளந்தானில் ஒரு வாக்குக்கூட கிடைக்காது என்று உறுதியாகக் கூறுகிறார். மாச்சாங் பாஸ் தகவல் தலைவரான அவர், கிளந்தானை பாஸ் தக்க வைத்துக்கொள்ளும் என்று நம்புகிறார். “அமனா கிளந்தானில் …
நடேஸ்வரன்: செய்தியாளர்களுக்கு எழுதும் எழுத்துகளைத் தற்காத்துக்கொள்ளும் துணிச்சல் வேண்டும்
நேர்மையான, பொறுப்பான செய்தியாளர்களைப் பாதுகாக்க சட்டத்தில் போதுமான விதிகள் உண்டு என்பதால் அவர்கள் தாங்கள் எழுதுவதைத் தற்காக்கும் துணிச்சல் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் என்கிறார் மூத்த செய்தியாளர் ஆர். நடேஸ்வரன். “செய்தியாளர்களுக்கு அவர்கள் எழுதுவதைத் தற்காக்கும் துணிச்சல் வேண்டும். அவர்கள் சட்டத்துக்குட்பட்டு எழுதும்போது கவலைப்பட வேண்டியதில்லை, சட்டமே அவர்களைப் …
ஸக்கீர் வழக்கில் பெர்காசா பங்கேற்க அனுமதி
சமயப் போதகர் ஸக்கீர் நாய்க்கை கைது செய்து அவரது நாட்டிற்கு திருப்பி அனுப்பக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் பெர்காசா என்ற மலாய்க்காரர்கள் உரிமைப் போராட்ட அமைப்பு மூன்றாம் தரப்பாக பங்கேற்க வாதிகளின் ஒப்புதலோடு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர் பி. வேதமூர்த்தி…
1எம்டிபி-ஐபிஐசி தீர்வு குறித்து பிஏசி தலைவர் மெளனமாக இருப்பது ஏன்?…
1எம்டிபி-க்கும் அனைத்துலக பெட்ரோலிய முதலீட்டு நிறுவன(ஐபிஐசி)த்துக்குமிடையில் காணப்பட்ட தீர்வு குறித்து பொதுக் கணக்குக் குழுத் தலைவர் ஹசன் அரிப்பின் வாய் திறக்காமலிருப்பது ஏனென்று டிஏபி எம்பி டோனி புவா வினவினார். பல பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஓராண்டுக் காலமாக பேச்சு நடத்திய பின்னர் 1எம்டிபியும் ஐபிஐசி-யும் …
ஆகா! மற்ற இடங்களைப் போல் அல்லாமல் இங்கு மே தினம்…
இதர சில நாடுகளைப் போலல்லாமல், இந்நாட்டில் தொழிலாளர் தினம் (மே தினம்) எவ்வளவு அமைதியாகக் கொண்டாடப்படுகிறது என்பதை பிரதமர் நஜிப் மலேசியர்களுக்கு நினைவுறுத்தினார். இதில் சுவாரசியமானது இங்கு இந்நாள் அமைதியாகவும் நல்லிணக்கத்தோடும் கொண்டாடப்படுகிறது. வேறு சில நாடுகளில் இந்நாள் சர்ச்சைகள், நேரடித் தாக்குதல்கள், ஏன் கலவரங்கள் போன்றவற்றால் கலங்கப்படுத்தப்படுகிறது…
ஜுகதி: 40 நாடாளுமன்ற இடங்கள், 5 மாநிலங்கள் என்பது வெறும்…
பாஸ் ஐந்து மாநிலங்களையும் 40 நாடாளுமன்ற இடங்களையும் கைப்பற்றும் என்பது வெறும் பேச்சல்ல ஆய்வுகளின் அடிப்படையில்தான் அந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக பாஸ் கட்சியின் வியூகவாதி முகம்மட் ஜுகதி மட்சூகி கூறுகிறார். கிளந்தானைத் தக்க வைத்துக்கொள்வது, திரெங்கானு, கெடா, பகாங், சிலாங்கூர் ஆகியவற்றைக் கைப்பற்றுவது பாஸின் குறிக்கோள். பாஸ் ஆய்வுக்…
மே தினப் பேரணியில் கூட்டமே இல்லை
இவ்வாண்டு கோலாலும்பூரில் நடைபெற்ற மே தினப் பேரணியில் கூட்டமே இல்லை. கலந்துகொண்டவர்கள் 200 பேர் சொச்சம்தான். கடந்த ஆண்டில் 1,500 பேர் வந்தனர். அதற்கும் முந்திய ஆண்டில் 20,000 பேர் திரண்டிருந்தனர். மலேசிய சோசலிசக் கட்சி ஏற்பாடு செய்திருந்த இவ்வாண்டு பேரணி தொழிலாளர் வேலை இழப்பு நிதி என்ற …
கட்சித் தாவல் வதந்திகளை மறுக்கிறார் சிலாங்கூர் பிகேஆர் பிரதிநிதி
சிலாங்கூரில் பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வர் கட்சிமாறி புதிய கூட்டணி அரசை அமைக்க உதவுவார்கள் என்று கூறும் செய்திகளை வெறும் வதந்திகள் என செமந்தா சட்டமன்ற உறுப்பினர் தரோயா அல்வி மறுத்தார். “அது குறித்து இதுவரை நான் எதுவும் கேள்விப்படவில்லை”, என்றவர் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது. மந்திரி …
மலாய் ஒதுக்கு நிலத்துக்கு அம்னோ உரிமையாளராவதைத் தடுக்கும் முயற்சியில் திரெங்கானு…
திரெங்கானு மாநிலத்தில் மலாய்க்காரர்களுக்கென ஒதுக்கப்பட்ட நிலத்துக்கு அம்மாநில அம்னோ உரிமையாளராவதற்கு இடமளிக்கும் வகையில் மாநிலச் சட்டங்களில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை எதிர்த்து மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கைத் தொடுத்துள்ள பண்டார் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அஸான் இஸ்மாயில், 2015 மாநில நிலச் சட்டங்களின் பிரிவு 9-க்குக் …
மே தினம் நல்வாழ்த்துகள்
செம்பருத்தி . கோம் மலேசியத் தொழிலாளர்களுக்கும் உலகெங்குமுள்ள இதர தொழிலாளர்களுக்கும் அதன் மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது


