உள்ளூர் சந்தை, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் இந்த போதைப்பொருட்களின் மதிப்பு, சுமார் ரிம 25.5 மில்லியன் மதிப்புடையவை என மதிப்பிடப்பட்டுள்ளது. அரச மலேசியக் காவல்துறையின் (PDRM) போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஒமர் கான் (Hussein Omar…
ஆட்சியாளர்கள் நஜிப் வெளியேற அழுத்தம் கொடுக்க வேண்டும், பாஸ் வலியுறுத்து
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவியிலிருந்து வெளியேற ஆட்சியாளர்கள் மன்றம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதன்பின் அவர்கள் நாட்டின் நிர்வாகத்தைச் சீரமைக்க அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். சட்டத்துறைத் தலைவர் முகம்மட் …
‘செலாக்கா மலாயு’ என்று சொல்லவில்லை: அந்தோனி லோக்: மறுப்பு
குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க முயன்றதற்காகக் கைது செய்யப்பட்ட சிரம்பான் எம்பி அந்தோனி லோக், லாக்-அப்பிலிருந்து வெளிவந்தவுடனேயே ஒரு புதிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அவர் நேற்று கைது செய்யப்பட்டபோது ‘செலாக்கா புன்யா மலாயு’ என்று உரத்த குரலில் சத்தமிட்டாராம். நெகிரி செம்பிலான், கம்போங் உலு திமியாங்கில், சுமார் 100 …
டிபிபிஏ விவரங்கள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும்
அண்மையில் செய்துகொள்ளப்பட்ட பசிபிக்- வட்டார பங்காளித்துவ உடன்பாடு (டிபிபிஏ) பற்றிய விவரங்களைப் பொதுமக்கள் இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்து கொள்ளலாம். என்று அனைத்துலக வாணிக, தொழிலமைச்சர் முஸ்டபா முகம்மட் உறுதியளித்துள்ளார். “இன்னும் ஒரு மாதத்தில் அந்த உடன்பாடு பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். கூடவே செலவு ஆதாயப் பகுப்பாய்வு அறிக்கையும்…
டிபிபிஏ பற்றிய விவரங்களை வெளியிடுவீர்: அபிம் கோரிக்கை
அண்மையில் முடிவுற்ற பசிபிக் வட்டார பங்காளித்துவ உடன்பாடு(டிபிபிஏ) மீதான பேச்சுகளின் விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என மலேசிய முஸ்லிம் இளைஞர் இயக்கம் (அபிம்) அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. டிபிபிஏ-யால் நாட்டுக்கு நன்மைதான் என்று மக்கள் நம்பிக்கை கொள்வதற்கு அது உதவும் என அபிம் தலைமைச் செயலாளர் பைசல் அப்துல் அசீஸ் …
பாஸ்: ‘நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது முதலில் கலந்துரையாடல் தேவை
பிரதமர் நஜிப்புக்கு எதிராக எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தக் கோரும் தீர்மானத்தை பாஸ் ஆதரிக்கும். ஆனால், ஒன்று. முதலில் அதை நன்கு விவாதிக்க வேண்டும். எதிரணி சகாக்கள் எழுப்பும் விவகாரங்களுக்கு ஆதரவளிக்க தம் கட்சி எம்பிகள் எப்போதுமே …
ஆட்சியாளர் அறிக்கை பற்றி விவாதிக்க 2நாள்களை ஒதுக்குவீர், நாடாளுமன்றத்துக்கு வலியுறுத்து
அக்டோபர் மாத இறுதியில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தின்போது முதல் இரண்டு நாள்களை ஆட்சியாளர்கள் மன்றம் நேற்று வெளியிட்ட அறிக்கையை விவாதிக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டிருக்கிறார். “அது (அறிக்கை) நற்சிந்தனையும் நாட்டுப்பற்றும் கொண்ட மலேசியர்கள் கவலை கொண்டுள்ள மூன்று …
ஆட்சியாளார்கள்: 1எம்டிபி விசாரணை முடிக்கப்பட வேண்டும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
1எம்டிபி பற்றிய விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், தவறிழைத்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஆட்சியாளர்கள் மாநாடு கட்டளையிட்டது. "விசாரணயின் முடிவுகள் முழுமையானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும், அப்போதுதான் அரசாங்கத்தின் நேர்மை பற்றியும் அது உண்மையை மறைக்காது என்பது குறித்தும் மக்கள் நம்பிக்கை…
பெர்சே திரட்டிய நிதி விபரம் வெளியிடப்பட்டது, பிரதமரும் அவ்வாறு செய்யுமாறு…
தேர்தல் சீர்திருத்த இயக்கமான பெர்சே அதன் பெர்சே 4 பேரணிக்கு திரட்டிய நிதியின் கணக்கு விபரத்தை இன்று வெளியிட்டது. பிரதமர் நஜிப் ரசாக்கும் அவ்வாறு செய்யுமாறு பெர்சே அவருக்கு சவால் விட்டது. பெர்சேயின் தகவல்படி, ஆகஸ்ட்29-30 கோலாலம்பூர் பேரணிக்கு ரிம2,647,361.74 திரட்டப்பட்டது. அதில் ரிம2,064,652.74 நன்கொடைகளாகப் பெறப்பட்டது.…
குடியிருப்பவர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க முயன்ற டிஎபி எம்பி கைது செய்யப்பட்டார்
நெகிரி செம்பிலான், கம்போங் உலு திமியாங்கில் குடியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதைத் தடுக்க முயன்ற சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் மற்றும் திமியாங் சட்டமன்ற உறுப்பினர் இங் சின் சாய் இன்று காலையில் கைது செய்யப்பட்டனர். வெளியேற்றப்படும் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாக காலை மணி 8 லிருந்து…
PKFZ விவகாரத்தால் நஜிப்மீது வெறுப்படைந்திருக்கிறார் லிங்
டாக்டர் லிங் லியோங் சிக் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது வெறுப்புக் கொள்ள காரணம் இருக்கிறது என்றும் அதனால்தான் அவர் நஜிப் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார் என்றும் முன்னாள் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறினார். “மூத்த அரசியல்வாதி என்ற முறையில் …
குவான் எங்: நம்பிக்கை-இல்லாத் தீர்மானத்தை டிஏபி ஆதரிக்கும்
நாடாளுமன்ற எதிரணித் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது நம்பிக்கை-இல்லா வாக்கெடுப்பு நடத்த தீர்மானம் கொண்டு வந்தால் டிஏபி அதை ஆதரிக்கும். இதைத் தெரிவித்த அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அது ஒரு முக்கியமான தீர்மானம் என்றும் அதை …
ஹிஷாமுடின்: அம்னோவில் அந்த எழுவர் யார் என்பது தெரியாது
அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேனுக்கு அம்னோவில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான எழுவர் பற்றித் தெரியவில்லை. அவர்கள் யார் என்று வினவியதற்கு, “தெரியாது” எனச் சுருக்கமாகப் பதிலிறுத்தார். கட்சித் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரிடம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலக வேண்டும் என்று …
நெத்தன்யாகு- நஜிப் கைகுலுக்கல் மீது பாஸின் ஆத்திரம் இன்னும் தீரவில்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தாம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவுடன் கைகுலுக்கியது திட்டமிடப்படாத ஒன்று என விளக்கமளித்தாலும் பாஸின் ஆத்திரம் கொஞ்சமும் குறையவில்லை. அல்-அக்காசா பள்ளிவாசல் தொடர்பில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்குமிடையில் சச்சரவு மூண்டுள்ள வேளையில் நஜிப் சிரித்துக் கொண்டே நெத்தன்யாகுவின் கரத்தைப் பிடித்துக் குலுக்கியதுதான் ஆத்திரத்துக்குக் காரணம் …
நிக் நஸ்மி-மீது மீண்டும் குற்றம் சாட்ட இயலாது: நீதிமன்றத்தில் வலியுறுத்து
சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் கருப்பு 505 பேரணி நடத்தியபோது 10-நாள்களுக்கு முன்னதாகவே பேரணி பற்றித் தெரியப்படுத்தத் தவறியதாக மூன்றாவது தடவையாக குற்றம் சாட்டப்பட்டார். கடந்த வியாழக்கிழமை முறையீட்டு நீதிமன்றம், அமைதிப் பேரணிக்கு 10 நாள்களுக்கு முன்னதாகவே அதைத் தெரியப்படுத்தத் தவறுவது குற்றம் என்று …
பக்கத்தான் ஹராபான் விவகாரத்தால் பிகேஆரில் பிளவில்லை
பக்கத்தான் ஹராபான் அமைக்கப்பட்டதன் தொடர்பில் பிகேஆர் மத்திய செயல்குழு உறுப்பினர்கள் 25பேர் மகஜர் தாக்கல் செய்ததை அடுத்து அக்கட்சி பிளவு பட்டிருப்பதாகக் கூறப்படுவதை அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி மறுத்தார். புதிய கூட்டணி அமைக்கப்பட்டதன்மீது கேள்வி எழுப்பும் அம்மகஜர் பற்றி இன்னும் விவாதிக்கப்படவே இல்லை என்றாரவர். மேலும் …
10-நாள் முன்னறிவிப்பு விவகாரத்தில் கூட்டரசு நீதிமன்றம் துணிச்சலுடன் தீர்ப்பளிக்க வேண்டும்
அமைதிப் பேரணி நடத்துவதற்குமுன் 10 நாள்களுக்கு முன்னதாக போலீசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற விதி சட்டப்படி சரியானதே என்ற முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக பிகேஆர் இளைஞர் பகுதி கூறியது. ஜோகூர் பிகேஆர் நிர்வாகச் செயலாளர் ஆர். யுனேஸ்வரனைக் குற்றவாளியாக்கிய இத்தீர்ப்பு, கடந்த ஆண்டு இதே நீதிமன்றம் தம் …
நஜிப்புக்கு வீர வரவேற்பு
ஐநா பேரவைக் கூட்டத்துக்கும் மீலான் நகருக்கும் வருகை மேற்கொண்டு விட்டு நாடு திரும்பிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை வரவேற்க ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். பிரதமரையும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரையும் ஏற்றிவந்த சிறப்பு விமானம் காலை மணி 9.55க்குத் தரை இறங்கியது.…
முன்னாள் சிஎம்-மீது அரச நிந்தனை வழக்கு
சிலாங்கூர் இளவரசர் மதம் மாறினார் எனத் தம் முக நூல் பக்கத்தில் பதிவிட்ட மலாக்கா முன்னாள் முதலமைச்சர் அப்துல் ரஹிம் தம்பி சிக்மீது அரச நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரச நிந்தனைச் சட்டத்தின் பகுதி 4(1), (சி)இன்கீழ் குற்றம் சாட்டப்பட்ட அப்துல் ரஹிம் …
உத்துசான் வழக்கில் இழப்பீட்டை மதிப்பிடுவதில் உதவ அன்வாருக்கு நீதிமன்றம் அழைப்பு
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா அவருக்குக் கொடுக்க வேண்டிய இழப்பீட்டை மதிப்பிட நாளை நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். அன்வாருக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க உத்துசான் செய்து கொண்ட மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற நீதிபதி ஹுயு …
நஜிப் ‘பத்திரமாக வெளியேற’ இடமளித்து நாட்டை அழிவிலிருந்து காப்போம்
மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின், நாட்டைப் பாதுகாக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “பத்திரமாக வெளியேற” இடமளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். “அவர் பத்திரமாக வெளியேற வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர் பதவி விலகிச் செல்வதை எளிதாக்குவோம்”, என காடிர் நேற்றிரவு தம் வலைப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். “எது …
பெர்காசா: மலாய்க்காரர்கள் அமைதி காத்து, பெர்காசாவில் சேர வேண்டும்
மலாய்க்காரர்களின் உரிமைக்காக போராடும் பெர்காசா இப்போதைக்கு எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காது, ஏனென்றால் மலாய் சமூகம் தலைமைத்துவ நெருக்கடியில் சிக்கியுள்ளதோடு பெரும் குழப்பத்தில் இருக்கிறது என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார். மாறாக, பெர்காசா உறுப்பினர்கள் அந்த அரசு சார்பற்ற அமைப்புக்கு புதிய…
நாளையிலிருந்து இரண்டு நாள்களுக்குப் பல மாநிலங்களில் பள்ளிகள் மூடப்படும்
கிளந்தான், சரவாக், சாபா, லாபுவான் ஆகியவை தவிர்த்து மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகளை நாளை தொடங்கி இரண்டு நாள்களுக்கு மூடும்படி கல்வி அமைச்சர் மஹாட்ஸிர் காலிட் பணித்துள்ளார். தீவகற்ப மலேசியாவில் பல பகுதிகளில் புகைமூட்டத்தின் விளைவாகக் காற்றின் தரம் ‘ஆரோக்கியமற்றதாகவும்’ ‘ஆரோக்கியத்துக்கு மிகவும் கேடு செய்வதாகவும்’ இருப்பதாக அறிவிக்கப்பட்டதை …
கனி வெளியில் வந்து உண்மைகளைச் சொல்ல வேண்டும்
முன்னாள் சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல் வெளியில் வந்து 1எம்டிபி ஊழல் பற்றிய உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது. போலீஸ் சிறப்புப் பிரிவு (எஸ்பி) முன்னாள் துணைத் தலைவர் அப்துல் ஹமிட் படோர் அரசாங்கத்துக்கு எழுதி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு திறந்த மடலில் …


