அரசாங்கம் தனியார் ஆலோசனைச் சேவைக்கு ரிம7.2பில்லியன் செலவிட்டது

அரசாங்கம்  2009-இலிருந்து தனியார் ஆலோசனை நிறுவனங்களின்  சேவைக்காக ரிம7.2 பில்லியனைச் செலவிட்டிருக்கிறது  என நேற்று,  நாடாளுமன்றத்தில் பிகேஆர் கிளானா ஜெயா எம்பி வொங் சென்னுக்கு வழங்கப்பட்ட எழுத்து வடிவிலான பதிலில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி பார்த்தால்  மாதத்துக்கு  ரிம125 மில்லியன் அல்லது  ஒரு நாளைக்கு ரிம4 மில்லியன் செலவிடப்பட்டிருக்கிறது என…

தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? பக்காத்தான் எம்பிகள் கேள்வி

பக்காத்தான் ரக்யாட் எம்பிகளின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறினாலும் அந்த நிதியைக் கண்ணால் பார்க்க முடிவதில்லை என்கிறார் பத்து கவான் எம்பி கஸ்தூரி பட்டு. அந்த நிதி ஒதுக்கீடு மாநில மேம்பாட்டு அதிகாரிகள் (எஸ்டிஓ) வழியாக வழங்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை அந்நிதி எதிரணி எம்பிகள் கைக்குக்…

எம்பிகேஜெ நெருக்கடிக்குத் தீர்வு காணாதிருக்கும் சிலாங்கூர் அரசுக்குக் கண்டனம்

காஜாங் முனிசிபல் மன்ற (எம்பிகேஜெ) கவுன்சிலர்களுக்கும் தலைவருக்குமிடையில் நிலவும் சர்ச்சைக்கு சிலாங்கூர் அரசு தீர்வு காண முடியாமல் தத்தளிப்பதாக மசீச குறைகூறியுள்ளது. அச்சர்ச்சை பல மாதங்களாக நீடிக்கிறது என மசீச விளம்பரப் பிரிவுத் தலைவர் யாப் பியான் ஹொன் தெரிவித்தார். “அவர்களின் சர்ச்சையால் காஜாங் மக்கள் கவலை கொண்டிருக்கிறார்கள்.…

பக்கதான்: பிரதமர் சிறீ லங்கா மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

இம்மாதம் சிறீ லங்காவில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் நஜிப் ரசாக் புறக்கணிக்க வேண்டும் என்று பக்கத்தான் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறீ லங்கா அரசின் மோசமான மனித உரிமை மீறல்களை அவர்கள் சுட்டிக் காட்டினர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறீ லங்காவில் நடந்த உள்நாட்டில் போரில்…

வேதா கூறிவிட்டார்: இந்து விவகாரங்களில் தலையிட தெங்கு அட்னானுக்கு உரிமை…

ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தில் சில பகுதிகள் உடைக்கப்பட்டதைத் தற்காத்துப் பேசிய கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சூரை இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி சாடினார். “சிறிய கோயில், பெரிய கோயில் என்று விளக்கமளிக்கும் தகுதி” தெங்கு அட்னானுக்கு இல்லை என்றாரவர். நீண்ட மவுனத்துக்குப் பின் வாய் திறந்துள்ள பிரதமர்துறை  துணை…

மகாதிர்: முஸ்லிம்கள் மறுமை வாழ்வைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கக்…

மக்கள், மறுமை வாழ்வுக்கு ஆயத்தமாவதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருப்பது போதாது. முன்னேற்றம் காண விரும்பினால் இம்மை வாழ்வில் தொழில்நுட்ப அறிவு பெறுவதிலும் நாட்டம் செலுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் வலியுறுத்தியுள்ளார். அரபு உலகம் சமய அறிவைப் பெருக்குவதில் மட்டுமே குறியாக இருந்ததால்தான் வீழ்ச்சி…

மரியா சின் பெர்சே 2.0-இன் புதிய தலைவராகலாம்

தேர்தல் சீரமைப்புக்காக போராடும் கூட்டமைப்பு(பெர்சே)க்கு, மனித உரிமை போராளியான மரியா சின் அப்துல்லா,  நவம்பர் 30-க்குப் பின்னர் தலைவராவார் எனத் தெரிகிறது. பெர்சேயில் இடம்பெற்றுள்ள 19 என்ஜிஓ-களில் 13,  தலைவர் பதவிக்கு மரியா சின்னை நியமனம் செய்துள்ளன. இதனைத் தெரிவித்த மூவரடங்கிய தேர்தல் குழு, அம்மாதம் 30 ஆம்…

சுரேந்திரன் மக்களவையிலிருந்து மறுபடியும் வெளியேற்றப்பட்டார்

பாடாங் செராய் எம்பியும் பிகேஆர் உதவித் தலைவருமான என். சுரேந்திரன், நாடாளுமன்றக் கூட்டத்திலிருந்து இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டார். கோலாலும்பூர், ஜாலான் பி.ரம்லியில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரர் ஆலய உடைப்புமீது அவசரத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முயன்றபோது மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா அவரை வெளியேறுமாறு  உத்தரவிட்டார். அவசரத் தீர்மானத்தை…

55 அரசு அதிகாரிகள் ஊழல் செய்தது கண்டறியப்பட்டுள்ளது

அரசு ஊழியர்களின் ஒழுக்கக் கேடுகளைப் புலன் ஆய்வு செய்யும் சிறப்புக் குழு, அக்டோபர் 28 வரை, மொத்தம் 55 அரசு ஊழியர்கள் ஊழலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளது. அக்குழு 11 அமைச்சுகளிலும் அரசாங்க அமைப்புகளிலும் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து இதைக் கண்டறிந்ததாக பிரதமர்துறை அமைச்சர் துணை அமைச்சர் ரசாலி இப்ராகிம் கூறினார்.…

பாஸ்: அரசாங்கம் ‘அல்லாஹ்’ விவகாரம் தொடர்பில் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க…

கிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவதை ஒரு விவகாரமாக்கியதற்காக அரசாங்கம் முஸ்லிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் (வலம்) வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்த பாஸ் அனுமதிக்கிறது என்றுகூட அவர்கள் பாஸுக்கு எதிராகக் குற்றம் சுமத்தினார்கள் என்று மாபுஸ்(வலம்)…

பிரதமர் செல்லக்கூடாது! கிள்ளானில் பேரணி!

இலங்கை அரசு இலட்சக்கணக்கான அதன் குடிமக்களைக் கொன்று குவித்திருக்கிறது. அந்நாட்டின் ஆயிரக்கணக்கான பெண்கள் உலக வரலாறு கண்டிராத வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கொடுமைகளை இழைத்தது அந்நாட்டு சாதாரண மக்கள் அல்ல. அந்நாட்டு இராணுவப் படையினர். அந்நாட்டு இனவெறியர்களின் கொடூரச் செயல்களை உலக மக்கள் கண்ணாரக்…

கூ னான்: கோயிலை உடைக்கவில்லை; அழகுபடுத்துகிறோம்

கோலாலலும்பூர் மாநகராட்சி மன்றம் ஸ்ரீமுனீஸ்வரர் காளியம்மன் ஆலயத்தை உடைக்கவில்லை; அதை அழகுபடுத்தப் போகிறது என்கிறார் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சூர் கூறினார். ஜாலான் பி.ரம்லியில் உள்ள அது ஒரு சிறு கோயில் என்று கூறிய அமைச்சர் அங்கு சில சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பது அமைச்சுக்குத் தெரிய…

கோயிலில் மதுபானங்கள் இருந்ததாகச் சொல்வது அபத்தம்- ஆலய சட்ட ஆலோசகர்

ஸ்ரீமுனீஸ்வரர் காளியம்மன் கோயிலின் சட்ட ஆலோசகர், கோயிலில் சட்ட விரோத நடவடிக்கைகள் நடப்பதாகவும் அங்கு மதுபானங்கள் இருந்ததாகவும் கூட்டரசு அமைச்சர் தெங்கு அட்னான் மன்சூர் கூறியிருப்பது ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு என்றார். “யாரும் எதை வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம். நாங்கள் கோயில் நிர்வாகக் குழுவுடனும் தலைவருடனும் அணுக்கமாக இருந்து வந்திருக்கிறோம். …

வெள்ளிக்கிழமை நாட்டில் இடி, மழை, பூகம்பம்: பழனிவேல் பிரதமரிடம் பேசப்…

வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறீ லங்காவில் கூடும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் நஜிப் கலந்துகொள்ளும் பிரச்னை குறித்து மஇகா தலைவர் ஜி. பழனிவேல் பேசப் போகிறார். சிறீ லங்கா அரசு அந்நாட்டு தமிழர்களை தவறாக நடத்தியது குறித்து மலேசிய தமிழர்களும், இதர நாட்டிலுள்ள தமிழர்களும் சினமடைந்துள்ளதை…

‘கோமாங்கோ-வை வழிநடத்துகிறேனா? சொல்பவர்மீது வழக்கு தொடுப்பேன்’: மரினா மிரட்டல்

மரினா மகாதிர், தாம் கோமாங்கோ மனித உரிமை கூட்டமைப்பை வழிநடத்துவதாகக் கூறிய ஒரு முஸ்லிம் அமைப்பு அவ்வாறு சொன்னதை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று கோரினார்.  தவறினால்  அதன்மீது  வழக்கு தொடுக்கப்படும். “ஈக்காத்தான் முஸ்லிம் மலேசியா (இஸ்மா) அமைப்பு, வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்களில் விநியோகிக்கப்பட்ட துண்டறிக்கையில் கோமாங்கோவைப் பின்னணியில் இருந்து வழிநடத்தி…

ஸ்ரீபெர்டானா பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு

ஸ்ரீபெர்டானாவுக்கு ஒவ்வோர் ஆண்டும் மின்சாரக் கட்டணமாக ரிம 2.2 மில்லியன் செலவிடப்பட்டாலும் அதன் பராமரிப்புச் செலவு உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது “குறைவுதான்” என பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் கூறினார். அந்த வளாகத்தைப் பராமரிக்க சிக்கனமாகத்தான் செலவிடப்பட்டு வருவதாக ஷஹிடான் மக்களவையில் கூறினார். ஆனால், மற்ற நாடுகளில் அதிகாரத்துவ…

பழனிவேல்: முனீஸ்வரர் ஆலயம் உடைக்கப்படவில்லை

நேற்று,  கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்)  ஸ்ரீமுனீஸ்வீரர் காளியம்மன் ஆலயப் பகுதியில் மேற்கொண்டஉடைப்புப் பணியில்  ஆலயம்  உடைபடவில்லை என மஇகா தலைவர் ஜி.பழனிவேல் வலியுறுத்தியுள்ளார். “ஆலயத்தை ஒட்டியிருந்த கடைகள்தான் உடைக்கப்பட்டன.  ஆலயம் அப்படியேதான் இருக்கிறது”, என இன்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டத்தில் பழனிவேல் தெரிவித்தார். ஆலயம் அதற்கு ஒதுக்கப்பட்ட…

ஷரிசாட் ரிம100 மில்லியன் அவதூறு வழக்கைக் கைவிட்டார்

பிகேஆரின் ரபிஸி ரம்லி, சுரைடா கமருடின் ஆகியோர்மீது தொடுத்திருந்த ரிம100 மில்லியன் அவதூறு வழக்கை ஷரிசாட் அப்துல் ஜலில் நிபந்தனையின்றி மீட்டுக்கொண்டிருக்கிறார். அம்னோ மகளிர் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஷரிசாட்,  அவருக்கும் அவரின் பிள்ளைகளுக்கும் சொந்தமான நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) தொடர்பில் அவ்விருவரும் தம் பெயருக்குக் களங்கம்…

உத்துசானை ஆதரிப்பது ஜிஎல்சி-களின் வேலை அன்று: மஸ்லானைச் சாடியது மசீச

அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவில் கூடுதல் விளம்பரங்கள் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்ட நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானுக்கு மசீச கடும் கண்டனம் தெரிவித்தது. அமைச்சரின் அதிகாரம் தவறாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று கண்டித்த மசீச உதவித் தலைவர் கான் பெங் சியு, உத்துசான் போன்ற…

சமய அமலாக்க அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்

  பகாங் இஸ்லாமிய சமய இலாகா (ஜாய்ப்) உயர் அதிகாரி ஒருவர் இன்று பின்னேரத்தில் அவரது இந்திரா மகோட்டா, குவாந்தான், வீட்டிற்கு வெளியே கருப்பு அங்கியும் தலைக் குல்லாவும் அணிந்திருந்த ஆடவர்கள் என்று கூறப்படுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கேஎல் ஸ்ரீ முனீஸ்வரர் கோயில் உடைப்பு மீண்டும் தொடங்கியது; ஜெயதாஸ்…

தீபாவளி கொண்டாட்டம், திறந்த இல்ல உபசரிப்புகள், பத்துமலையில் அமைச்சர்களுக்கு, இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர் உட்பட, ஏகபோக விருந்து ஆகிய அனைத்தும் முடிவுற்ற ஒரு வாரத்திற்குப் பின்னர், கோயில் உடைப்பு விழா மீண்டும் தொடங்கி விட்டது! ஒரு வழக்குரைஞரும், பிகேஆர் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஜெயதாஸும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் வளாகத்தில்…

பள்ளிகளில் மாடு வெட்டுவதை பெர்காசாவின் இந்திய கூட்டாளிகள் ஆதரிக்கின்றனர்

பள்ளிகளில் மாடு வெட்டப்படுவதைத் தீவிரமாக ஆதரித்ததற்காக மலாய் இனவாத அமைப்பான பெர்காசா இந்நாட்டின் இந்து சமூகத்தினரால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது. ஆனால், இவ்விவகாரத்தில் பெர்காசாவின் நிலைப்பாட்டை பேரின்பம் (New Indian Welfare and Charity Association) என்ற அமைப்பு ஆதரிக்கிறது. "(பள்ளிகளில்) மலாய்க்காரர்கள் கொர்பான் செய்ய விரும்பினால், அதில் தவறு…

ஜிஎல்சிகள் உத்துசான், பெரித்தா ஹரியானில் அதிகமாக விளம்பரம் செய்ய வேண்டும்

மலாய் மொழி நாளிதழ்களான உத்துசான் மலேசியா மற்றும் பெரித்தா ஹரியான ஆகியவற்றில் அரசாங்க தொடர்பு நிறுவனங்கள் (ஜிஎல்சி) அதிகமான அளவில் விளம்பரம் செய்து அவற்றை காப்பாற்ற வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஜிஎல்சி தலைமை அதிகாரிகளுக்கு தாம் இது குறித்து கடிதங்கள் அனுப்பியுள்ளதாக துணை நிதி அமைச்சர் அஹமட்…