மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணி தொடங்கியது (தொடர்ச்சி) 5,000 பேர்…

பிற்பகல் மூன்று மணி அளவில் அந்த அரங்கத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிறைந்திருந்தனர். பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி அங்கு சென்றடைந்தார். அதற்குச் சற்று நேரத்தில் சிலாங்கூரில் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி, முன்னாள் பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியாவும் வந்து சேர்ந்தனர்.…

ரோஸ்மாவின் கைப்பைகள்: “நஸ்ரியின் மௌனம் ஒப்புதலுக்கு அடையாளமா?

பிரதமரின் துணைவியார் வைத்துள்ள விலை உயர்ந்த பிர்க்கின் ரக கைப்பைகள் மீது நாடாளுமன்றத்தில் தாங்கள் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் பதில் அளிக்கத் தவறியிருப்பது உண்மையை ஒப்புக் கொள்வதற்கு அடையாளமா என்று டிஏபி வினவியுள்ளது. பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மான்சோர் 24 மில்லியன்…

மத மாற்ற எதிர்ப்பு பேரணி ஷா அலாமில் தொடங்கிற்று

முஸ்லிம்கள் மத மாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்ட மத மாற்ற எதிர்ப்பு பேரணி இன்று ஷா அலாமில் பிற்பகல் மணி 2 அளவில் தொடங்கிற்று. முஸ்லிம் அரசு சார்பற்ற அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பேரணி "ஒரு மில்லியன் முஸ்லிம்கள் கூடும் பேரணி" என்று கூறப்படுகிறது. இப்பேரணி…

பிஎன் சிலாங்கூரை மீண்டும் கைப்பற்றும் என்கிறார் முஹைடின்

சிலாங்கூரில் "நீல அலை" கண்ணுக்குத் தெரிவதாக துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று கூறியிருக்கிறார். அந்த மாநிலம் மீண்டும் பிஎன் ஆட்சிக்குத் திரும்ப வேண்டும் என்ற மக்கள் விருப்பத்தை அது காட்டுவதாக அவர் சொன்னார். "சிலாங்கூர் முழுவதும் நீல அலை தென்படுகிறது. பிகேஆர்-டிஏபி-பாஸ் கூட்டுக்கு ஆட்சியுரிமையை வழங்கிய மூன்று…

சரவாக் திட்டங்கள்: அன்வார் குற்றசாட்டை புத்ராஜெயா நிராகரிக்கிறது

சரவாக்கிற்கு அங்கீகரிக்கப்பட்ட மொத்தம் 2.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 310 திட்டங்களில் 92 விழுக்காடு இன்னும் தொடங்கப்படவில்லை என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் குற்றம் சாட்டியிருப்பதை கூட்டரசு அரசாங்கம் நிராகரித்துள்ளது. அக்டோபர் 20ம் தேதி வரையில் மொத்தம் 2.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 228 திட்டங்கள் அல்லது…

கம்போங் புவா பாலாவின் 9 குடும்பங்களுக்கு தீபாவளி மகிழ்ச்சி இல்லை

2009-இல், கம்போங் புவாபாலாவில் வீடமைப்புத் திட்டத்துக்கு இடமளிக்கும் வகையில் வெளியேற்றப்பட்ட 24 குடும்பங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பரிசைப் பெறப்போகிறார்கள். அக்குடும்பத்தினர் நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த இழப்பீடு அவர்களுக்குக் கிடைக்கப்போகிறது. “கடைசி இந்திய கிராமம்” என்று பெயர்பெற்றிருந்த கம்போங் புவாபாலா இருந்த இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கான…

துணை அமைச்சர்: அஜிஸ் பேரி-யின் இடைநீக்கத்தை மீட்டுக் கொள்ளுங்கள்

சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி-யின் இடைநீக்கத்தை மீட்டுக் கொள்ளுமாறு உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லா, யூஐஏ என்ற அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத் தலைவர் ஸாலேஹா கமாருதினைக் கேட்டுக் கொண்டுள்ளார். ஸாலேஹாவுக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் அந்த இடைநீக்கம் "பாதகமானது" என சைபுதின் குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தி…

ஸாலேஹா, உங்கள் மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் செவி சாயுங்கள்

"அப்துல் அஜிஸ் சொல்லிய கருத்து 'பல்கலைக்கழக நலன்களுக்கு எதிரானது. அது பல்கலைக் கழகத்தின் தோற்றத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது' என அது கூறுவது இடைநீக்கத்துக்குக் கொடுக்கப்பட்ட பொருத்தமில்லாத வாதமாகும்." முனைவர் இடைநீக்கம் மீது யூஐஏ-யில் ஆர்ப்பாட்டம் நிகழ்கிறது லவர் பாய்: அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக (யூஐஏ) தலைவர் ஸாலேஹா கமாருதினை…

அம்பிரின்: ஏஜியின் அறிக்கை திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படும்

ஆடிட்டர் ஜெனரலின் 2010 ஆம் ஆண்டிற்கான அறிக்கை திங்கள்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று ஆடிட்டர் ஜெனரல் அம்பிரின் புவாங் கூறினார். அதே நாளில் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு உறுப்பினர்களுக்கும் அவ்வறிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். கணக்காய்வு அறிக்கைக்கு கருவூலம் அளித்துள்ள விளக்கங்களும் அறிக்கையுடன்…

யூஐஏ பள்ளிவாசலிலிருந்து பிகேஆர் இளைஞர் தலைவர் ‘இழுத்துச் செல்லப்பட்டார்’

ஆர்ப்பாட்டம் நிகழ்வதற்கு முன்னதாக யூஐஏ என்ற அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகப் பள்ளிவாசலில் பிகேஆர் இளைஞர் தலைவர் ஷாம்சுல் இஸ்காண்டார் முகமட் அக்கின் வெள்ளிக் கிழமை தொழுகையில் ஈடுபடுவதிலிருந்து வெளியேற்றப்பட்டார். யூஐஏ பாதுகாவலர்கள் தம்மைப் பிடித்துக் கொண்டு கறுப்பு நிற புரோட்டோன் ஷத்திரியா கார் ஒன்றில் ஏற்றி பல்கலைக்கழக வளாகத்துக்கு…

சிறீலங்கா குறித்து ஆஸ்திரேலியாவில் மாநாடு

அக்டோபர் 28-ம் நாள் வெள்ளிக்கிழமை இன்று ஆஸ்திரோலியாவின் பேர்த் நகரில் 22-வது காமன்வெல்த் நாடுகளின் மாநாடு ஆரம்பமாகி அக்டோபர் 30-ம் நாள்வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், அக்டோபர் 20-ம் நாள் வியாழக்கிழமை, நேற்று உலகத்தமிழ் பேரவை மற்றும் ஆஸ்திரேலிய தமிழர் பேரவை இணைந்து நடாத்தும் சிறீலங்கா குறித்த மாநாடு ஒன்று…

மலேசியா-பர்மா கைதிகள் பரிவர்த்தனைக்கு எதிர்ப்பு கூடுகிறது

குடி நுழைவுக் குற்றங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள பர்மியக் குடி மக்களை அவர்களுடைய சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் திட்டத்தைக் கைவிடுமாறு அரசாங்கத்தை எதிர்க்கட்சிகளும் மனித உரிமை அமைப்புக்களும் கேட்டுக் கொண்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் பொருட்டு அவற்றில் வைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட…

அசீஸ் பேரியின் இடைநீக்கத்தை எதிர்த்து யுஐஏ-இல் ஆர்ப்பாட்டம்

யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா (யுஐஏ) பள்ளிவாசலுக்கு வெளியில் அப்பல்கலைக்கழகத்தின் நன்கு பிரபலமான சட்டவிரிவுரையாளர் அப்துல் அசீஸ் பேரி பணி இடைநீக்கம் செய்ப்பட்டதை எதிர்த்து நூற்றுக்கணக்கான  மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து பள்ளிவாசலிலிருந்து வெளியில் வந்த மாணவர்கள் “அறிவு வாழ்க”, “கொடுமையை எதிர்ப்போம்”, “அசீஸ் பேரியை…

அஜிஸ் பேரிக்கு ஆதரவாக வழக்குரைஞர்களும் கல்வியாளர்களும் அணி திரளுகின்றனர்

அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் இடை நீக்கம் செய்துள்ள அரசியலமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அஜிஸ் பேரிக்கு ஆதரவாக சட்டத்துறையிலும் கல்வித் துறையிலும் உள்ள அவரது நண்பர்கள் ஒன்று திரளுகின்றனர். அந்த நடவடிக்கை "அப்துல் அஜிஸின் கல்விச் சுதந்தரத்துக்கும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்தரத்துக்கும் ஏற்பட்டுள்ள அப்பட்டமான அத்துமீறல்" என மலாயாப்…

“மானபங்கத்துக்கு இலக்கானவர்” வலைப்பதிவாளர்கள் கூறிக் கொள்வதை மறுக்கிறார்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் பதின்ம வயது புதல்வரால் "மானபங்கப்படுத்தப்பட்டதாக" கூறப்பட்ட இளம் பெண், அந்த விவகாரத்தில் தாம் இழுக்கப்பட்டது மீது தாம் "அதிர்ச்சியும் அச்சமும்" அடைந்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளார். மானபங்கப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட பள்ளி மாணவியை சித்தரிப்பதற்குப் பல வலைப்பதிவாளர்கள் பயன்படுத்தியுள்ள படத்தில் உள்ள 21 வயதான…

சிறிய கட்டுமான நிறுவனத்துக்கு ரிம900மில்லியன் குத்தகையா?

பிகேஆர் தலைமைச் செயலாளர், சைபுடின் நசுத்யோன், கோலாலம்பூரில் ரிம900 மில்லியன் செலவில் மகளிர், குழந்தைகள் மருத்துவமனை கட்டும் குத்தகைப் பணி ஒரு சிறிய கட்டுமான நிறுவனத்துக்கும் அதன் பங்காளி நிறுவனமான யுஇஎம் குரூப் பெர்ஹாட்டுக்கும் வழங்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். சைபுடின் குறிப்பிட்டது பினாங்கைத் தளமாகக் கொண்டுள்ள நஜ்கோம்…

கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் போலீசாரை உள்துறை அமைச்சு தற்காக்கிறது

ஷா அலாம் கிளன்மேரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரிகள் சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொண்டிருப்பதாக உள்துறை அமைச்சு  கூறியது. இளைஞர்கள் இருந்த திசையில் போலீசார் மூன்று முறை சுட்டதை,  அந்தச் சம்பவம் பற்றிய புலனாய்வுகள் காட்டியுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று வழங்கப்பட்ட…

PPSMI மீதான பிரச்னை தேர்தல் விவகாரமாகிறது

அறிவியலையும் கணிதத்தையும் ஆங்கிலத்தில் கற்பிப்பது மீதான விவகாரம் பினாங்கில் சூடு பிடித்து வருகிறது.  13வது பொதுத் தேர்தலில் வாக்குகளை திசை திருப்பக் கூடிய வலிமையை அந்த விவகாரம் பெற்றிருப்பதால் பாரிசான் நேசனலும் பக்காத்தான் ராக்யாட்டும் அது குறித்து தங்கள் நிலையை அவசியம் அறிவிக்க வேண்டியிருக்கும். அடுத்த மாதத் தொடக்கத்தில்…

கல்வியாளர்களுக்கு சோகமான நாள்

"காரணம் கோரும் கடிதமே தேவையற்றது, அந்தப் பேராசிரியரை இடைநீக்கம் செய்தது விவேகமில்லாதது. அஜிஸ் பேரி உண்மையைத் தானே சொன்னார். ஆனால் அந்த உண்மைகள் அதிகார வர்க்கத்துக்குப் பிடிக்கவில்லை." பல்கலைக்கழகம், அஜிஸ் பேரி-யை இடைநீக்கம் செய்தது பார்வையாளன்: அம்னோவின் மோசடியான வழிகளை அம்பலப்படுத்தும் யாரையும் வழிக்குக் கொண்டு வருவதற்கு அம்னோ…

கடாபி பிடிபட்ட பின்னர் இறந்தார்

லிபியாவின் முன்னாள் தலைவர் முவாம்மார் கடாபி இன்று நடந்த சண்டையில் ஏற்பட்ட காயத்தால் பிடிபட்ட பின்னர் இறந்து விட்டதாக லிபியாவின் இடைக்கால ஆட்சியாளர்கள் கூறினர். கடாபியின் சொந்த ஊரான சிர்தேயில் இது நடந்தது. "அவர் (கடாபி) தலையிலும் கூட சுடப்பட்டார்", என்று தேசிய மாற்ற மன்றத்தின் அதிகாரி அப்டெல் மஜிட்…

ரஹிம் நோர் பெர்காசா ஆண்டுக் கூட்டத்தை திறந்து வைக்கிறார்

பெர்காசா என்ற மலாய் உரிமைகளை வலியுறுத்தும் அமைப்பின் தொன்னூற்றொன்பது தொகுதிகளைப் பிரதிநிதிக்கும் சுமார் 1,400 பேராளர்கள் புதன்கிழமை நடைபெறவிருக்கும் அதன் 2 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பர் என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார். தேவான் செண்டரம், கொம்பிளக்ஸ் செண்டரம், கோலாலம்பூர், தாமான் செதியாவங்சாவில் அக்கூட்டத்தில் 3,000 பார்வையாளர்கள் கலந்துகொள்வர்…

தெங்கு அட்னான்: ‘ஹிம்புன்’ ஏற்பாட்டில் அம்னோ சம்பந்தப்படவில்லை

ஒரு மில்லியன் முஸ்லிம்கள் பேரணி (ஹிம்புன்) என அழைக்கப்படும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் அம்னோ சம்பந்தப்படவில்லை. வரும் சனிக்கிழமை ஷா அலாம் அரங்கத்தில் அதனை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பேரணியை ஏற்பாடு செய்வதற்கு முக்கியமான மூளையாக அம்னோ இருந்ததாகக் கூறப்படும் தகவல்கள் ஆதாரமற்றவை என அம்னோ தலைமைச் செயலாளர்…