சீனர்கள் “வந்தேறிகள்” அல்ல, நஜிப் கெராக்கானிடம் கூறுகிறார்

  இந்நாட்டின் மேற்பாட்டிற்கு பங்களிப்புச் செய்த மலேசிய சீனர்கள் "வந்தேறிகள்" அல்ல. அவர்கள் மலேசியாவின் மைந்தர்கள் என்று பிரதமர் நஜிப் இன்று ஷா அலாமில் கெராக்கான் கட்சியின் 44 ஆவது தேசிய பேராளர்கள் மாநாட்டில் பேசிய போது கூறினார். இந்நாட்டின் மலைக்க வைக்கின்ற வளர்ச்சியில் சீன சமூகமும் அதன்…

இணையத்தை மேம்படுத்த உத்தரவிட்டார் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே

இணையம் குறைவான  வேகம்  கொண்டிருப்பதையும்  கட்டுப்படியாக  இருப்பதையுமே  மலேசியர்கள் விரும்புகிறார்கள்  எனக்  கூறி அதற்காகக்  கண்டனங்களுக்கு  ஆளானவர்  தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்  சாலே  சைட்  கெருவாக்.  இப்போது  அவர்  இணையத்தை  மேம்படுத்த  வழிவகை  காணும்படி தம்  அமைச்சுக்கு  உத்தரவிட்டுள்ளார். “அமைச்சுக்கு கட்டமைப்பை  மேம்படுத்துவதற்குச்  சிறப்பு  கவனம்  செலுத்தி  இணையத் …

தெரு ஆர்ப்பாட்டங்களுக்குத் தண்டனையைக் கடுமையாக்குவீர்: கெராக்கான் கோரிக்கை

தெருப்  பேரணிகளை  ஏற்பாடு  செய்வோருக்குச்  சிறைவாசம்  உள்பட  தண்டனைகளைக்  கடுமையாக்க  வேண்டும்  என  கெராக்கான்  இளைஞர்கள்  கோரிக்கை  விடுத்தனர். இன்று  அதன்  ஆண்டுக்  கூட்டத்தைத்  தொடக்கி  வைத்து  உரையாற்றிய  அதன்  தலைவர்  டான்  கெங்  லியான்,  பெர்சே  போன்ற  தெரு ஆர்ப்பாட்டங்களைக்  கண்டித்ததுடன்  “அமைதியைக்  காக்கும்”  அரசாங்கச்  சட்டங்கள் …

அரசாங்கத்துக்கு மலாய்க்காரர் ஆதரவு பெரிய அளவில் சரிவு

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  அரசாங்கம்  முதல்  முறையாக  பெரும்பான்மை  மலாய்க்காரர்  ஆதரவை இழந்திருப்பதைக்  கருத்துக்  கணிப்பு  ஒன்று  காட்டுகிறது. மலாய்க்கார  வாக்காளர்களில்  31  விழுக்காட்டினர்  மட்டுமே  அரசாங்கத்தின்மீது  திருப்தி  கொண்டிருப்பது  மெர்டேகா  மையம்  நடத்திய  கருத்துக்கணிப்பில்  தெரிய  வந்திருப்பதாக  சிங்கப்பூரின்  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  கூறிற்று. 2012-க்குப் …

சட்ட வல்லுனர்: ஜோகூர் தனியே பிரிந்து செல்ல முடியாது

மாநிலங்கள்,  ஜோகூர்  உள்பட,  மலேசியக்  கூட்டரசிலிருந்து  பிரிந்து  செல்வது  நடவாத  செயல்  என்கிறார் அரசமைப்பு  வல்லுனர்  அப்துல்  அசீஸ்  பாரி. ஜோகூர்  பட்டத்திளவரசர்  துங்கு  இஸ்மாயில்  சுல்தான்  இப்ராகிம்,  ஒரு  நேர்காணலில்,  அம்மாநிலம்  எந்த  நிபந்தனைகளின்  அடிப்படையில்  கூட்டரசில்  இணைந்ததோ  அந்த  நிபந்தனைகள்  மீறப்படும்  பட்சத்தில்  அதிலிருந்து  பிரிந்து …

நஜிப் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல்

பிகேஆரின்  பெட்டாலிங்  ஜெயா  செலாத்தான்  எம்பி  ஹீ  லோய்  சியான்,  பிரதமர்  நஜிப்மீது  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  கொண்டுவரப்போவதாகக் கூறும்  அறிவிக்கை  ஒன்றை  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்துள்ளார். அந்த  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  நாடாளுமன்றத்தின்  திங்கள்கிழமை  நிகழ்ச்சி  நிரலில் இடம்பெற்றுள்ளது. ஆனால், அன்று  விவாதத்துக்குக்  காத்திருக்கும்  28  தீர்மானங்களில்  அது  25வது …

மாத்தியாஸ் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார், போராட்டத்திற்கு தயாராகிறார்

  அவரவர் இலட்சியத்திற்காக மடிவதற்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வழக்குரைஞர் மாத்தியாஸ் சாங் விடுத்த சவாலை எந்த ஓர் அம்னோ தலைவரும் ஏற்றுக்கொள்ளாததால், அவர் தனது உண்ணாவிரதத்தை நேற்று முடித்துக் கொண்டார். பிரதமர் நஜிப் ரசாக், துணைப் பிரதமர் அஹம்ட் ஸாகிட் ஹமிடி, அம்னோ தலைவர்கள் முகமட் அலி ருஸ்தாம்,…

எம்பி: செராஸ் நெடுஞ்சாலையை வாங்கினால் டோல் உயர்வுக்கு அவசியமிருக்காது

சாலைக்  கட்டண  உயர்வைத்  தவிர்க்க  சாலைப்  பராமரிப்பு  நிறுவனங்களுக்கு  இழப்பீடு  கொடுப்பதற்குப்  பதிலாக  அந்த  நிறுவனங்கள்  சிலவற்றை  விலைக்கு  வாங்குவது பற்றி  அரசாங்கம்  ஆலோசிக்க  வேண்டும். சாலைக் கட்டண உயர்வு  பற்றிக்  கருத்துரைத்த  கூலாய்  எம்பி  தியோ  நை  சிங்  இதனைத்  தெரிவித்தார். செராஸ்- காஜாங்  11.5 கிலோ …

சாலைக் கட்டண உயர்வுக்கு மடத்தனமான ஒப்பந்தங்களே காரணம்

சாலைக்  கட்டணங்கள்  உயர்ந்ததற்கு  சாலை  பராமரிப்பு  நிறுவனங்களுடன்  அரசாங்கம்  செய்துகொண்ட  “மட்டுமீறிய  மடத்தனமான  ஒப்பந்தங்களே” காரணம்  என  டிஏபி  சாடியுள்ளது. கட்டண  உயர்வுக்குப் பதிலாக  இழப்பீட்டுத்  தொகையைக்  கொடுக்க  அரசாங்கத்துக்குக்  கட்டுப்படி  ஆகாது  என்பதால்  சாலைக்  கட்டண உயர்வைத்  தவிர்க்க  இயலவில்லை  என்று  பிரதமர்  துறை  அமைச்சர்  அப்துல் …

ஸெட்டிக்கு எதிராக போலீஸ் புகார்

ஜாரிங்கான்  மலாயு  மலேசியா  என்ற  என்ஜிஓ  ஒன்று  பேங்க்  நெகாரா  கவர்னர்  ஸெட்டி அக்டார்  அசீஸ்  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலிக்குக்  “குழிபறிக்கிறார்”  எனப்  போலீசில்  புகார்  செய்துள்ளது. அதன்  தலைமைச்  செயலாளர்  ஹம்டான்  முகம்மட்  சாலே  1எம்டிபிக்கு  வழங்கப்பட்ட  மூன்று  அனுமதிகள்  இரத்துச்  செய்யப்பட்டதற்கு  ஸெட்டியே …

நிபந்தனைகள் மீறப்பட்டால் ஜோகூரால் பிரிந்து செல்ல முடியும்-பட்டத்திளவரசர்

ஜோகூர் பட்டத்திளவரசர்  துங்கு  இஸ்மாயில்  சுல்தான்  இப்ராகிமைப்  பொருத்தவரை  எப்போதும்  ஜோகூருக்குத்தான்  முன்னுரிமை. அதனால்  சமூக வலைத்தளங்களில்  அவருடைய  செய்திகள்  ஏற்படும்  தாக்கத்தைப்  பற்றி  அவர்  கவலைப்படுவதில்லை. “நான்  மாநிலத்தின்  அடுத்த  சுல்தான். அந்த வகையில்  என்னுடைய  மிகப்   பெரிய  பொறுப்பு  ஜோகூர்  மக்களுக்குத்தான். மலேசியா  எனக்கு  முக்கியம்தான்.…

சைபுடின் பிகேஆரில் சேர்ந்ததில் அன்வாருக்கு மகிழ்ச்சி

சிறையில்  உள்ள  முன்னாள்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  அம்னோ  உச்சமன்ற  முன்னாள்  உறுப்பினர்  சைபுடின்  அப்துல்லா  பிகேஆரில்  சேர்ந்ததை  அறிந்து  மகிழ்ந்தாராம். இதை  அவரின்  துணைவியாரும்  பிகேஆர்  தலைவருமான  டாக்டர்  வான்  அசிசா வான்  இஸ்மாயில்  தெரிவித்தார்.  வான்  அசிசா  இன்று ஒரு  வழக்கின் பொருட்டு  நீதிமன்றம் …

ஐஎஸ் மிரட்டல் உண்மையானது; ஐஎஸ்ஏ-யைத் திரும்பவும் கொண்டுவர போடப்படும் நாடகமல்ல

இஸ்லாமிய  அரசு  அமைப்பு  போன்ற  தீவிரவாதிகளால்  நாடு  மிரட்டலை  எதிர்நோக்குவதாகச்  சொல்வது  உள்நாட்டுப்  பாதுகாப்புச்  சட்டத்தைத்  திரும்பவும்  கொண்டுவர  அரங்கேற்றப்படும் “நாடகமல்ல”  என்று  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார். ஆனால், நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  சிலர்  இதை  நம்ப மறுக்கிறார்களே  என்று  அவர்  வருத்தம்  தெரிவித்தார்.…

சுஹாகாம்:ஓராங் அஸ்லிகளுக்கும் கல்வி கற்கும் உரிமை உண்டு. அதை மீறாதீர்

மனித  உரிமைகள்  ஆணையம் (சுஹாகாம்),  அரசாங்கம் பூர்வ  குடி(ஓராங் அஸ்லி)களின்  தொடர்பில் தான் முன்வைத்த  பரிந்துரைகளைப் புறக்கணிக்கக்  கூடாது  என்றும்  ஓராங்  அஸ்லி  பிள்ளைகளுக்கு   முறையான  கல்வி  கிடைப்பதை  உறுதிப்படுத்த  இன்னும்  கூடுதலாக திட்டமிட  வேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ளது. “ஓராங்  அஸ்லிகள்  சமூக, பொருளாதார  ரீதியில்  ஒதுக்கப்படுவதற்கு அவர்களின் …

அமானா இளைஞர்கள்: 1எம்டிபி மீது அரச விசாரணை தேவை

பார்டி  அமானா  நெகாரா (அமானா)  இளைஞர்கள்  1எம்டிபிமீது  அரச  விசாரணை  ஆணையம்  அமைக்கக்  கோரிக்கை  விடுக்கும்  மகஜர்  ஒன்றை  இன்று  பேரரசரிடம்  சமர்ப்பித்தனர். அம்மகஜர்  1எம்டிபி  விசாரணையில்  எவ்வித  குறுக்கீடும்  நிகழாதிருக்க  உடனடியாக  பதவி  விலக  வேண்டும்  எனப் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  ஆலோசனை  கூற  வேண்டும் …

டிஏபி: சிலாங்கூர் ஞாயிற்றுக்கிழமையை டோல்-அற்ற நாளாக ஆக்கிட வேண்டும்

நெடுஞ்சாலைகளைப்  பயன்படுத்துவோர்  பிஎன்னால்  ஏற்பட்டுள்ள  விலை  உயர்வுகளை  எதிர்கொள்வதற்கு உதவியாக  சிலாங்கூர்  அரசு  ஞாயிற்றுக்கிழமையை  டோல்-அற்ற  நாளாக ஆக்கிட வேண்டும்  என  மாநிலச்  சட்டமன்ற  உறுப்பினர்  ஒருவர்  பரிந்துரைத்துள்ளார். சிலாங்கூர்  அரசு  ஸ்பிரிண்ட்  நெடுஞ்சாலையிலும்  டமன்சாரா- பூச்சோங்  நெடுஞ்சாலையிலும்(எல்டிபி)  இதைச்  செய்ய  முடியும்  என  கின்ராரா  சட்டமன்ற  உறுப்பினர் …

மா சியு கியோங்: ஹுடுட்டைத் தடுப்பேன், முடியாவிட்டால் பதவி துறப்பேன்

கெராக்கான்  தலைவர்  மா  சியு  கியோங், நாடாளுமன்றத்தில்  ஹுடுட் சட்டம்  நிறைவேற்றப்படுவதைத்  தடுக்கப்  போவதாக  சூளுரைத்தார்.  தவறினால்  அமைச்சரவையிலிருந்து  விலகிக் கொள்வதாகவும்  அவர்  உறுதி  கூறினார். “நாடாளுமன்றத்தில்  ஹுடுட்  நிறைவேற்றப்பட்டால் என்  கடமையைச்  செய்யத்  தவறியதாக  பொருள்படும். அதன்பின்னர் அமைச்சராக  இருக்க  மாட்டேன்”, எனப்  பிரதமர்  துறை  அமைச்சரான …

முகைதின்: தேசிய சொத்துகள் கொள்ளயடிக்கப்படுவதை அம்னோ உறுப்பினர்கள் தடுத்து நிறுத்த…

  நாட்டின் சொத்துகள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த அம்னோ உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று அம்னோவின் துணைத் தலைவர் முகைதின் யாசின் இன்று அம்னோ உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். "ஒவ்வொரு அம்னோ போராட்டவாதியின் இரத்தத்தில் பாயும் போராட்ட உணர்வை சுலபமாக மலிவான விலைக்கு வாங்கப்படுவதற்கு அனுமதிக்காதீர்கள்", என்றாரவர். சில…

சிலாங்கூர் பாஸ் பெர்காசாவுடன் ஒத்துழைக்காது

நேற்று பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலியும் கட்டித்தழுவிக் கொண்ட போதிலும் சிலாங்கூர் பாஸ் பெர்காசாவுடன் ஒத்துழைக்காது என்று இன்று அது வலியுறுத்தியது. "சிலாங்கூர் பாஸ் பெர்காசாவுடனான எந்த ஒத்துழைப்புக்கும் ஒப்புக்கொள்ளாது. "பாஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் பாரிசானுக்கு எதிரான அதன்…

பாஸின் அரசியல் உறவுகள் பிகேஆருடன் மட்டுமே

பாஸ்  கட்சிக்கு  இப்போதைக்கு  அம்னோ  அல்லது  பக்கத்தான்  ஹராபானுடன்  ஒத்துழைக்கும்  எண்ணம்  எதுவும்  கிடையாது. இதைத்  தெரிவித்த  அதன்  தேர்தல்  இயக்குனர்  முஸ்டபா  அலி, “இப்போதைக்கு  அரசியல்  ரீதியில்  நாங்கள்  ஒத்துழைப்பது  பிகேஆருடன்  மட்டுமே; வேறு  யாருடனும்  அல்ல”,  என்றார். “பக்கத்தான்  ஹராபானுடன்  தொடர்பில்லை அம்னோவுடனும்  அப்படியே”, என …

ஐஜிபி: எங்களை அரசியலுக்குள் இழுக்காதீர்கள்

நாட்டின்  அரசியலுக்குள்  போலீசை  இழுக்க  வேண்டாம்  என்று  இன்ஸ்பெக்டர்  ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  கூறினார். “எங்களை  அரசியலுக்குள்  இழுக்க  வேண்டாம். அரசியல்  விவகாரங்களில்  நாங்கள்  தலையிடுவதில்லை. “புகார்களின்  அடிப்படையில்  விசாரணை  செய்வதுதான்  எங்கள்  வேலை.  அரசியல்  அறிக்கைகள்........அதில்  நாங்கள்  தலையிட  விரும்பவில்லை”, என  கோலாலும்பூரில் …

கைருடினும் சாங்கும் குற்றம் சாட்டப்பட்டிருப்பது குற்றவியல் சட்டத்தின்கீழ் சோஸ்மாவின்கீழ் அல்ல

முன்னாள்  அம்னோ  தலைவர்  கைருடின்  அபு  ஹாசானும்  அவரின்  வழக்குரைஞர்  மத்தியாஸ்  சோங்கும்   குற்றவியல்  சட்டத்தின்கீழ்தான்  குற்றம்  சாட்டப்பட்டிருக்கிறார்கள்,  பாதுகாப்புச்  சட்ட(சோஸ்மா)த்தின்கீழ்  அல்ல  எனச்  சட்டத்துறை  தலைவர்(ஏஜி)  முகம்மட்  அபாண்டி  அலி  விளக்கினார். அவ்விருவரும்  சோஸ்மாவின்கீழ்  கைது  செய்யப்பட்டது  அரசாங்கம்  அதிகாரத்தைத்  தவறாக  பயன்படுத்திக்  கொண்டிருப்பதைக்  காண்பிப்பதாக  பலரும் …

1எம்டிபி கணக்குகளின் ஆய்வு 3-4 மாதங்களில் முடிவுறும்

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி)த்தின்  கணக்குகளை  ஆய்வு  செய்யும் தேசிய  கணக்காய்வுத்  துறை  மூன்று  மாதங்களில்  ஆய்வை  முடித்துக்  கொண்டு  அறிக்கை வெளியிடும்  என  அதன்  துணை  இயக்குனர்  ஆர். ராஜ  சுந்தரக்  கண்ணன்  இன்று  தெரிவித்தார். இப்போது  ஆய்வின்  இரண்டாம்  கட்டம்  நடைபெறுவதாக  அவர்  சொன்னார். இதில்  இதுவரை …