நஜிப்-ஆதரவு பேரணியாக இருந்தாலும் சட்டத்தைப் பின்பற்றத்தான் வேண்டும்

பேரணி  நடத்துவோர்  பிஎன்னைச்  சேர்ந்தவர்களோ,  பக்காத்தான்  சேர்ந்தவர்களோ  ஒரே  வகை  நியாயம்தான்  கடைப்பிடிக்கப்படுகிறது  என்கிறார்  பினாங்கு  போலீஸ்  தலைவர்  அப்துல் ரகிம்  ஹனாபி. பிஎன்,  பக்காத்தான் ரக்யாட்  பேரணி  ஏற்பாட்டாளர்களிடம்  போலீஸ்  வெவ்வேறு  விதமாக  நடந்துகொள்கிறது  என்று  கூறப்படுவதை  அவர்  மறுத்தார். ஞாயிற்றுக்கிழமை,  செபராங்  ஜெயா,  பண்டார்  சன்வே-யில் …

புத்தாண்டு பேரணி டி-சட்டைகளை தயாரித்தவர் கைது

  துருன் என்ற அரசு சார்பற்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த புத்தாண்டு பேரணியில் பங்கேற்ற ஆர்பாட்டக்காரர்கள் அணிந்திருந்த டி- சட்டைகளைத் தயாரித்து விற்றவர் இன்று வாக்குமூலம் அளிக்க செர்டாங் போலீஸ் தலைமையகத்திற்கு சென்ற போது கைது செய்யப்பட்டார். முகமட் ஸுல் ரைடி அஹமட் தார்மிஸி பீனல் சட்டம் செக்சன்…

தீயணைப்பு படையின் ரிம50 மில்லியன் டம்பமான செலவு

  தீயணைப்பு மற்றும் மீட்பு இலாகவுக்கு தேவையற்ற கருவிகளை வாங்கியதன் மூலம் நிதி அமைச்சு ரிம50 மில்லியனை வீண் செலவு செய்துள்ளது என்று நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு (பிஎசி) குற்றம் சாட்டியது. 116 வெட்டும் தீயணைப்பு கருவிகள் வாங்கப்பட்டது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று…

தியன் சுவாவுக்கு ஒரு மாத சிறை தண்டனை

  தடை செய்யப்பட்டுள்ள புலாபோல் போலீஸ் பயிற்சி மையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக பிகேஆர் உதவித் தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான தியன் சுவாவுக்கு இன்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டணையும் ரிம1000 அபராதம் விதித்தது. அந்த மையத்திலிருந்து வெளியேற மறுத்ததால் சுவா ஏப்ரல் 28,…

சீபோர்ட் தமிழ்ப்பள்ளி நிலத்தைத் திருப்பி எடுத்துக்கொள்ள பிகேஎன்எஸ் ஆயத்தமாகிறது

சீபோர்ட்  தமிழ்ப்பள்ளி  அமைந்துள்ள  நிலப்பகுதி  பள்ளிக்கே  உரியதாக  அரசு  ஏட்டில்  பதிவு  செய்யப்படுவது  தொடர்பில்  மாநில  அரசிடமிருந்து  எந்த  அறிவிப்பும்  இதுவரை  இல்லை  என்பதால்,  சிலாங்கூர் மேம்பாட்டுக்  கழகம் (பிகேஎன்எஸ்)  அந்த நிலத்தைத்  திரும்ப  எடுத்துக்கொள்ள  தயாராகி  வருகிறது. 27  மாணவர்கள்  இன்னும்  அந்த  இடத்தையே  பள்ளிக்கூடமாக  பயன்படுத்திக்  …

கமலநாதன் தாக்கப்பட்ட சம்பவம்: வழக்குரைஞர்கள் கொடுத்துதவ மசீச இளைஞர்கள் முன்வந்தனர்

கல்வி  துணை  அமைச்சர் II பி. கமலநாதனைத்  தாக்கியதாகக்  கூறப்படும்  நபருக்கு  எதிராக சட்டத்துறை  தலைவர் (ஏஜி) அலுவலகம்  எந்த  நடவடிக்கையும்  எடுக்காதிருப்பதால் அந்நபருக்கு  எதிராக  வழக்கு  தொடுப்பதில்  வழக்குரைஞர்களைக்  கொடுத்துதவ  மசீச  முன்வந்தது.  போலீஸ்  விசாரணை  முடித்து  ஏஜி-யிடம்  அறிக்கை  கொடுத்து  ஒரு வாரம்  ஆகிறது  ஆனால், …

‘அல்லாஹ்’தொடர்பில் அரச ஆணையைச் சிறுமைப்படுத்தாதீர்: அமைச்சர் எச்சரிக்கை

‘அல்லாஹ்’ என்னும்  சொல்  முஸ்லிம்களுக்கு  மட்டுமே உரியது  என்ற  அரச  ஆணையைக்  கேலி  செய்வோருக்கு  எதிராக  கடும்  நடவடிக்கை  எடுக்கப்படும்  எனப்  புறநகர்,  வட்டார  மேம்பாட்டு  அமைச்சர் ஷாபி  அப்டால்  எச்சரித்துள்ளார். அதன்  தொடர்பில்  சினமூட்டும்  வகையில்  அறிக்கைகள்  விடுப்பது  இஸ்லாம்  மட்டுமே  கூட்டரசின்  அதிகாரப்பூர்வ  சமயம்  என்பதை …

கார் விலைகள் கணிசமாக குறையும் என எதிர்பார்ப்பதற்கில்லை

தேசிய  வாகனக்  கொள்கை- 2014, கார்  விலைகள் 20- 30 விழுக்காடு  குறையும்  என்ற  எதிர்ப்பார்ப்பை  ஏற்படுத்தி  இருந்தாலும் விலைகள்  குறிப்பிடத்தக்க அளவுக்குக்  குறையும்  என மலேசிய மோட்டார் வாகனச்  சங்கம் (எம்ஏஏ) நினைக்கவில்லை.  “கடந்த  ஆண்டு  இறுதியில்,  நவம்பர்,  டிசம்பரில்  வாகனத்  தயாரிப்பு நிறுவனங்கள்  சில  விலையில் …

நாம் மட்டும் எளிதில் உணர்ச்சிவசப்படாதவர்களாக இருந்தால்….’

எளிதில்  உணர்ச்சிவசப்படுபவர்களாக  இருப்பதுதான்  மலேசியர்களின்  சாபக்கேடு. அப்படி  இல்லாதிருந்தால் அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய  விவகாரங்களைத்  தங்களுக்குச்  சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு   நாட்டைப் பிரித்தாளும்  தந்திரத்தைத்  தொடர்ந்து  நடத்திக்கொண்டிருக்க  முடியாது  என இஸ்லாத்தில்  சகோதரிகள்  அமைப்பின்  நிறுவனர்  ஜைனா  அனவார் (இடம்) கூறினார். அவர்,  பணிஓய்வுபெற்ற  கடற்படை  அதிகாரி எஸ். தயாபரனின்  ‘No Country…

சீபோர்ட் தமிழ்ப்பள்ளிக்கு முன்னாள் எஸ்ஜேகேசி டாமன்சாரா குழுவினர் ஆதரவு

  சீபோர்ட் தமிழ்ப்பள்ளி தற்போது இருக்கும் இடத்திலேயே நிலைநிறுத்துவதற்காக போராட்டம் நடத்தும் அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிப்பதற்காக எஸ்ஜேகே(சி) டாமான்சாரா சீனப்பள்ளியை காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட "Save Our School" போராட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நேற்று சீபோர்ட் தமிழ்ப்பள்ளிக்கு வருகையளித்தனர். சீபோர்ட் தமிழ்ப்பள்ளிக்கு நேற்று வருகை…

சீபோர்ட் தமிழ்ப்பள்ளியின் போராட்டத்திற்கு இந்திய சமூகம் ஆதரவுக் குரல் எழுப்ப…

  சீபோர்ட் தமிழ்ப்பள்ளி தற்போது இருக்கும் இடத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தமது முழு ஆதரவை தெரிவிப்பதற்காக தாம் சீபோர்ட் தமிழ்ப்பள்ளிக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று பின்னேரத்தில் சீபோர்ட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற ஒரு செய்தியாளர்…

டாக்டர் லின்: PKFZ மீது ஏஜி வழக்குத் தொடுத்தது ‘மடத்தனமான…

கிள்ளான் துறைமுகத்  தீர்வையற்ற  மண்டலத்  திட்டம் தொடர்பில் சட்டத்துறை தலைவர்  அப்துல்  கனி  பட்டேய்ல்  சட்ட  நடவடிக்கை மேற்கொண்டது  “மடத்தனமான  செயல்”  என முன்னாள் போக்குவரத்து  அமைச்சர்  டாக்டர்  லிங்  லியோங்  சிக்   சாடினார். அத்தீர்வையற்ற  மண்டலம்  அமைப்பதற்கு  நிலம்  கொள்முதல்  செய்ததில்  அரசாங்கத்தை ஏமாற்றியதாக அவர்மீதும் …

இசி-யுடன் பெர்சே கருத்துவேறுபாடு கொண்டிருப்பதை அரசியல் என்று சொல்வது தப்பு

தேர்தல்  ஆணையத்தின்(இசி)  நடவடிக்கைகளுடன்  ஒத்துப்போவதில்லை  என்பதற்காக  தான்  “அரசியல்  பேசுவதாக” பிரதமர்துறை  அமைச்சர்  நன்சி  சுக்ரி கூறி இருப்பது  சரியல்ல  எனத் தேர்தல்  சீரமைப்புக்குப்  போராடும்  அமைப்பான  பெர்சே 2.0  மறுப்புத்  தெரிவித்துள்ளது. “கருத்துவேறுபாடு  கொள்வது  ஜனநாயகத்தின்  அடிப்படைக்  கோட்பாடுகளில்  ஒன்று  என்பதை  அமைச்சர்  மறந்து  விட்டார்  போலும்”,…

பழைய குற்றச்சாட்டின் காரணமாக அன்வார் ஜப்பானுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது

பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார் இப்ராகிம்,   1999-இல்  ஊழல் புரிந்ததாகக்  குற்றம்சாட்டப்பட்டுச்  சிறை  வைக்கப்பட்டிருந்தார்  என்பதுதான்  அவர்  ஜப்பானுக்குள்  நுழைய  அனுமதி  மறுக்கப்பட்டதற்கான  காரணமாகும். ஜப்பானில்  அல்லது  வேறு  எந்த  நாட்டிலும்  ஓராண்டு  அல்லது  அதற்கும்  கூடுதல்  காலத்துக்கு  சிறை வைக்கப்பட்ட  ஒருவருக்கு  ஜப்பானுக்குள்  நுழைய  அனுமதி   மறுக்கப்படுகிறது …

மசீச மூத்த தலைவர்: சுவா- லியோ சர்ச்சை ஓய வேண்டும்

மசீச  முன்னாள்  தலைவர்களில்  ஒருவரான  டாக்டர்  லிங்  லியோங் சிக்,  மசீச-வின்  புதிய  தலைவர்  லியோ  தியோங்  லாயும்  அவருக்குமுன்  அப்பதவியில்  இருந்த டாக்டர்  சுவா  சொய்  லெக்கும்  தொடர்ந்து  சர்ச்சையிடுவதை  நிறுத்த  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டிருக்கிறார். “தேர்தலில்  ஈடுபடும்போது  தேர்தல்  முடிவுகளை  ஏற்றுக்கொள்ளவும்  தயாராக  இருக்க  வேண்டும்.…

தைப்பூசத்தைக் கேவலப்படுத்தும் டிவிட்டர் பதிவுகள்

தைப்பூசக்  கொண்டாட்டத்தை  இழித்தும்  பழித்தும்  கூறும் பதிவுகள்  டிவிட்டரில்  வலம்  கொண்டிருக்கின்றன. அவை  மலேசியாவில்  இன,  சமய  சகிப்புத்தன்மை  சீரழிந்து  வருவதற்கு  எடுத்துக்காட்டுகளாய்  விளங்குகின்றன. இதற்கு  இன-அடிப்படையில்  அமைந்த  கட்சிகள்    தேர்தலில்  வாக்குகள்  பெறுவதற்காக இன,  சமய  உணர்வுகளைத்  தூண்டி  விடுவதுதான்  காரணம்  எனப் பார்வையாளர்கள்  கருதுகின்றனர். முகநூலில்…

ஜப்பானிய தூதரகத்திடம் பக்காத்தான் ஆட்சேபம் தெரிவித்தது

ஜப்பானுக்குச் சென்ற மாற்றரசுக் கட்சித்  தலைவர் அன்வார் இப்ராகிம்  அங்கிருந்து  திருப்பி  அனுப்பப்பட்டதன்  தொடர்பில் பக்காத்தான்  ரக்யாட்  ஜப்பானிய  தூதரகத்திடம்  ஆட்சேபக்  கடிதம்  ஒன்றைக்  கொடுத்துள்ளது. அக்கடிதத்தில்,  அன்வார்  திருப்பி  அனுப்பட்டதற்கான  காரணத்தை ஜப்பானிய  தூதர்  ஷிகேரு  நகமுரா  விளக்க  வேண்டும்  என்ற  கோரிக்கை  விடுக்கப்பட்டிருந்தது. தம் பயணத்துக்குத் …

தேசிய வாகனக் கொள்கையால் கார் விலை குறையப்போவதில்லை

நேற்று  அறிவிக்கப்பட்ட  2014-2020 தேசிய  வாகனக்  கொள்கை (என்ஏபி)  நடப்பு கார்  விலைகள்  உயர்வாக  இருப்பதற்கான அடிப்படைக்   காரணங்களைக்  கவனிக்கத்  தவறிவிட்டது  என்பதால்  கார் விலைகள்  குறையும்  சாத்தியம்  இல்லை  என்று  பிகேஆர்  கருதுகிறது. இறக்குமதி  செய்யப்படும் கார்களுக்கு  110 விழுக்காடு  சுங்க  வரி,  அங்கீகரிக்கப்பட்ட  உரிமம்(ஏபி) …

அங்காடி வியாபாரிகள் விலைகளைக் குறைக்க அரசாங்கம் உதவ வேண்டும்: டிஏபி,…

டிஏபி-யும்  மசீச-வும்  அங்காடி  வியாபாரிகளின்  செலவுகளைக்  குறைக்கவும்  அவர்களின்  எண்ணிக்கையை  அதிகரிக்கவும்  பல ஆலோசனைகளை  முன்வைத்துள்ளன. சுகாதார   அமைச்சு,  அங்காடி  வியாபாரிகளுக்கு  சுகாதார   பயிற்சி வழங்கும்  பொறுப்பைத்  தனியார்துறையிடம்  ஒப்படைத்திருப்பதை  டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எதிர்க்கிறார். “சுகாதார   அமைச்சு இலவசமாகவே  பயிற்சிகளை  நடத்தலாமே?  எதற்காக தனியார் …

கங்கோங் விவகாரத்தில் விரைந்து கருத்துரைத்த நஜிப் அல்லாஹ் விவகாரத்தில் மவுனமாக…

பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக், கங்கோங்  கீரை தொடர்பில்  கிண்டல்  செய்து  நடத்தப்பட்ட  ஆர்ப்பாட்டம்  குறித்து  கருத்துரைப்பதில்  காட்டிய  வேகத்தை  அல்லாஹ்  என்னும்  சொல்லைப்  பயன்படுத்துவது  மீதான  சர்ச்சையில்  காண்பிக்காதது  ஏன்  என்று  டிஏபி  வினவியுள்ளது. “அல்லாஹ்  விவகாரம்  குறித்து  அமைச்சரவை  விவாதிக்கத்  தொடங்கி  17 நாள்களுக்குமேல்  ஆகிவிட்டன.…

2018-க்குள் கார்களின் விலை 20-30 விழுக்காடு குறையும்

இன்று  முதல்  அமலுக்கு  வரும் 2014 தேசிய  வாகனக்  கொள்கையைத்  தொடர்ந்து  2018-க்குள்  கார்களின்  விலை  20-30 விழுக்காடு  குறையும்  என  எதிர்பார்க்கலாம்.  கடந்த  வாரம்  அனைத்துலக  வாணிப,  தொழில்துறை  அமைச்சு நடத்திய  செய்தியாளர்  கூட்டமொன்றில் கார்  தயாரிப்புக்கான  சட்டங்கள்  தளர்த்தப்படுவது  கார்களின்  விலை  குறைய  காரணமாக இருக்கும் …

ஆக, மே 13 கலவரங்களுக்குத் தானே காரணம் என்பதை அம்னோ…

உங்கள்  கருத்து: ‘உண்மையில்,  அம்னோ  இந்த  மே  13-ஐச்  சொல்லியே  சீனர்களை  மிரட்டத்  தவறுவதில்லை’ அம்னோ  ஆர்ப்பாட்டக்காரர்கள்:  இன்னொரு  மே 13  நடப்பதைத்தான்  டிஏபி  விரும்புகிறதா? தொலு :  மக்களின்  பொருளாதார  அவல நிலையைக் கண்டுகொள்ளாமலிருப்பதற்கு  எதிர்வினையாகத்தான்  பிரதமரை  இலக்காக  வைத்து  கிண்டலும்  கேலியும்  செய்யப்படுகிறது.  இது,  ஒரு …

பிஎன்னை அதன் போக்கில் செயல்பட விடுவது மலேசியாவைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி…

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  நாட்டைப்  பிளவுபடுத்தும் விவகாரங்கள்  பெருகிவருவதைக்  கவனிக்காது  இருந்தால் மலேசியா  சின்னாப் பின்னமாகிவிடும்  என  முன்னாள்- எம்சிஏ  தலைவர்  ஒங்  தி  கியாட்  எச்சரித்துள்ளார். “வாதங்கள்-எதிர்வாதங்களும்,  வெறுப்புணர்வும்,  மிரட்டல்களும்  கட்டுமீறிச்  செல்வதைப்  பார்த்து  என்னைப்  போன்ற  பொதுமக்கள்  கவலை  கொள்கிறோம்”, என  ஓங்  அவரது …