விவேகானந்தா ஆசிரமம் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும்

தேசிய  பாரம்பரிய  ஆணையம், பிரிக்பீல்ட்ஸ்  விவேகானந்தா  ஆசிரமத்தைப்  பாரம்பரிய  சின்னமாக  அறிவிக்க  முடிவு  செய்திருப்பதாக  சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்  கூறினார். அந்த  110-ஆண்டு  கட்டிடம்  தேசிய  பாரம்பரிய  சின்னமாக  அரசிதழில்  பதிவு  செய்யப்படும்  என  அமைச்சர்  மக்களவை  கேள்வி  நேரத்தின்போது  தெரிவித்தார். அம்முடிவுக்கு  எதிராக …

அம்னோவிலிருந்து முகைதினை வெளியேற்ற சதியா?

முகைதின்  யாசினை  அம்னோவின்  துணைத்  தலைவர்  பாதவியிலிருந்து  வெளியேற்ற  கட்சிக்குள்  கமுக்கமாக  வேலை  நடப்பதாக  அம்னோ  சுங்கை  புசார்  தொகுதித்  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ்  கூறிக்  கொண்டிருக்கிறார். “என்னைக்  கேட்டால்  முகைதினை  வெளியேற்ற  வேண்டும்  என்பேன். இதற்கு  ஆதரவாக  உள்ள  அம்னோ  தொகுதிகளின்  பட்டியல் ஒன்றைத்  தயாரித்து …

1எம்டிபி வெளிநாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து கெடாவில் சூரிய சக்தி திட்டத்தில்…

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  1எம்டிபி  வெளிநாட்டு  நிறுவனம்  ஒன்றுடன்  சேர்ந்து  கெடாவில்  நாட்டின்  மிகப்  பெரிய  சூரிய  மின்னாற்றல்  திட்டத்தை  உருவாக்குவதில்  ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுவதை  மறுத்தார். “1எம்டிபி  DeSable Capital Management LLC  நிறுவனத்துடன்  கூட்டு  ஒப்பந்தம்  எதையும்  செய்துகொள்ளவில்லை”, என  நேற்று  நாடாளுமன்றத்தில்  எழுத்துப்பூர்வமான   பதில் …

ஹனிபா: காலிட்டுக்கு பிணை அளிக்க வேண்டும்

  சிறையிலடைக்கப்பட்டிருக்கும் சமூக தன்னார்வலர் காலிட் முகமட் இஸ்மாத் பிணையில் வெளிவருவதற்கு சட்டத்துறை தலைவர் முகம்மட் அப்பாண்டி மனிதமிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரான முகமட் ஹனிபா மைடின் (அமனா-சிப்பாங்) கேட்டுக்கொண்டார். சமூக ஊடகத்தில் ஜொகூர் அரச குடும்பத்தைப் பற்றி பதிவுகள் செய்ததற்காக அவருக்கு எதிராக…

சிலாங்கூர் இளைஞர் தலைவர்: அம்னோ முகைதினை ஒதுக்கிடக் கூடாது

சிலாங்கூர்  அம்னோ  இளைஞர்  தலைவர்  சைனூரி  சைனல்,  முன்னாள்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  இன்னும்  அம்னோ  துணைத்  தலைவர்தான்  என்பதால்  அவரை  ஒதுக்கிவைப்பது  முறையாகாது  என்கிறார். “அவரை  அப்படியே  தள்ளிவைத்து  விடக்கூடாது. அவர்  துணைப்  பிரதமராக  இல்லை. ஆனால்,  அவர்  அம்னோவில்  இன்னமும்  இரண்டாவது  இடத்தில்  இருப்பவர்.…

‘ஓயாத அடக்குமுறை’: நஜிப்புக்கு அனைத்துலக அமைப்பு கண்டனம்

சீரமைப்பு  செய்யப்போவதாக  உறுதி  கூறியபடி  பதவிக்கு  வந்த  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், இப்போது  எதிர்ப்பாளர்கள்மீது  அடக்குமுறையைக்  கட்டவிழ்த்து  விடுகிறார்  அதன்  விளைவாக  அச்சம்  நிறைந்த  சூழல்  உருவாகியுள்ளது  என அனைத்துலக  மனித  உரிமை  கண்காணிப்பு (எச்ஆர்டபள்யு)  அமைப்பு கூறியுள்ளது. மலேசியாவில் பொது  விவாதங்களுக்கும் சுதந்திரமாக  பேசுவதற்கும்  வாய்ப்புகள் …

முதலீட்டாளர்கள் பினாங்கிலிருந்து வெளியேற குவான் எங்தான் காரணம்: மசீச குற்றச்சாட்டு

முதலமைச்சர்  லிம்  குவான்  எங்கின்  நிர்வாகம்  சரியில்லை  என்றும்  அதன் விளைவாக  முதலீட்டாளர்கள்  பினாங்கிலிருந்து  வெளியேறுகிறார்கள்  என்றும்  பினாங்கு  மசீச  குற்றஞ்சாட்டியுள்ளது. அங்குள்ள தொழிற்சாலைகள் மற்ற  இடங்களுக்கு  இடம்பெயர்வதாக மாநில  மசீச  துணைத்  தலைவர்  டான்  தெக்  செங்  கூறினார்.  இதனால்  பினாங்கு  மக்கள்  பாதிக்கப்படுகிறார்கள். “கடந்த  வாரம் …

பக்கத்தான் ஹராபானும் பக்கத்தான் ரக்யாட்டும் ஒருங்கிருந்து செயல்படுவது சாத்தியமே

பக்கத்தான் ஹராபான்  பக்கத்தான் ரக்யாட்  இரண்டுமே ஒருங்கிருந்து  செயல்படுவது  முழுக்க  முழுக்க  சாத்தியம்தான்  என  பாஸ்  தலைமைச்  செயலாளர்  தகியுடின்  ஹசான்  கூறினார். 1990-இல்  அம்னோவிலிருந்து  பிரிந்துசென்ற செமங்காட்  46 (எஸ்46) வெவ்வேறு கூட்டணியை  ஏற்படுத்திக்கொண்டு  செயல்பட்டதை  அந்த கோட்டா  பாரு  எம்பி  சுட்டிக்காட்டினார். எஸ்46,  கிளந்தானில்  பாஸுடன் …

மக்கள் அடுத்த ஆண்டில் செலுத்தப்போகும் கூடுதல் வரி ரிம13 பில்லியன்

அடுத்த ஆண்டில் மக்கள் ரிம13 பில்லியனைக்  கூடுதல்  வரியாகச்  செலுத்துவார்களாம். பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லி  கூறுகிறார். பொருள்  சேவை  வரி,  கலால்  வரி, தனிப்பட்டவர்  வருமான  வரி, நிறுவன  வரி  என்ற  வகையில்  இந்த  வரி  வசூலிக்கப்படும். “பலர்  நினைக்கலாம்  நிறுவன  வரியால்  பொதுமக்கள்  பாதிக்கப்படுவதில்லை  என்று.…

பெர்சே: பெசாகாவின் ‘போர்’ முழக்கம் பொது ஒழுங்குக்கு ஒரு மிரட்டல்

யாராவது  சவால் விடுத்தால் “போரிடவும்”  தாங்கள்  தயார்  என்று தேசிய  சீலாட்  கூட்டமைப்பு(பெசாகா)த் தலைவர்  அலி  ருஸ்தம்  மிரட்டியிருப்பது  பொது  அமைதிக்கு  ஒரு  மிரட்டல்  என்பதால்  அதை  போலீஸ்  விசாரிக்க  வேண்டும்  என  பெர்சே  வலியுறுத்தியது.. நேற்றிரவு  சீலாட்  நிகழ்வு  ஒன்றில்  பேசியபோது  அவ்வாறு  கூறிய   அலி,  மலாய்க்காரர்கள் …

இப்போதைக்கு ஐஎஸ்ஏ திரும்ப வராது

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் திரும்ப கொண்டு வரப்படப்பட  வேண்டும்  என்ற  பிஎன்  எம்பியின்  கோரிக்கையை  அரசாங்கம்  நிராகரித்தது. அதைத்  திரும்பக்  கொண்டுவரும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனச்  சட்ட  அமைச்சர்  நன்சி சுக்ரி  தெரிவித்தார். “நடப்புச்  சட்டஙகளே  கடுங் குற்றங்களைச்  சமாளிக்கப்  போதுமானவை”, என்றாரவர். டத்தோ அப்துல் ரஹ்மான்…

பிரதமரின் விமானத்துக்கு ஆறு மாதங்களில் ரிம40.8மில்லியன் செலவானது

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பயன்படுத்தும்   ஜெட்  விமானத்துக்கு  வாடகை, பராமரிப்புச்  செலவு, பயணச்  செலவு  என ஆறு  மாதங்களில்  ரிம40.8 மில்லியன்  செலவானதாக  பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லி  கூறினார். அந்த  ஏசிஜே320  ஜெட்  2015  ஏப்ரலுக்கும்  செப்டம்பருக்குமிடையில்  42  தடவை  பறந்திருப்பதாக  பிகேஆர்  உதவித்  தலைவருமான …

பிஏசிக்கு ஐந்து புதிய உறுப்பினர்கள் நியமனம்

நாடாளுமன்ற  தேர்வுக்  குழு  பொதுக்  கணக்குக்குழுவுக்கு ஐந்து எம்பிகளை  நியமித்துள்ளது. நால்வர்  பிஎன்  எம்பிகள். அமைச்சர்களாக  பதவியேற்றுள்ளவர்களுக்குப்  பதிலாக  இவர்கள்  நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பாஸ்,  கட்சிதாவிய  தன்  உறுப்பினர்  ஒருவருக்குப்  பதிலாக  புதிதாக  ஒருவரை  நியமித்துள்ளது. புதிதாக  பிஏசி  உறுப்பினர்களாக  நியமிக்கப்பட்டிருக்கும்  பிஎன்  எம்பிகள்  வருமாறு:  ஜாசின்  எம்பி  அஹ்மட் …

குற்றவியல் சட்டம் தவறாக பயன்படுத்தப்படாது: உள்துறை அமைச்சர் உறுதி கூறினார்

கீழறுப்பு, வேவுபார்த்தல், நாடாளுமன்ற  ஜனநாயகத்துக்கு  எதிரான  செயல்களில்  ஈடுபடுவோருக்கு  எதிரான  வழக்கு  விசாரணைகளில்  அதிகார அத்துமீறல்  நிகழாது  என  புத்ரா  ஜெயா  உத்தரவாதம்  அளிக்கிறது. குற்றம்சாட்டப்படுவோர்மீது  நீதிமன்றங்களில்  வழக்கு  தொடுக்கப்படும்போது  அவர்கள்  எதிர்வாதம்  செய்ய  இடமுண்டு  என்பதால் அதிகார  அத்துமீறல்  நிகழ வாய்ப்பில்லை  என  உள்துறை  அமைச்சர்  அஹ்மட் …

அலி ருஸ்தாம்: சவால் விடுக்கப்படுமானால், சீலாட் போருக்குத் தயார்

  சவால் விடுக்கப்படுமானால் போரிடத் தயார் என்று பெசாக்கா (தேசிய சீலாட் பெடரேசன்) தலைவரும் சிவப்புச் சட்டை பேரணி ஏற்பாட்டாளருமான முகமட் அலி ருஸ்தாம் இன்று கூறினார். மலாய் இனம், இஸ்லாம் மற்றும் நாட்டின் தலைவர்களின் கௌரவத்தை தற்காப்பதற்காக கோலாலம்பூரில் இன்னும் மக்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதுதான் செப்டெம்பர்…

குவான் எங்: மக்களிடமிருந்து ரிம26ஐ எடுத்துக்கொண்டு ரிம1ஐ திருப்பித்தரும் பட்ஜெட்…

  அரசாங்கம் நெருக்கடிலிருந்து தப்பித்துகொள்வதற்கு வாணிபத்துறை மீது வரி விதிக்காமல் மக்கள் மீது வரி விதித்துள்ளதை பட்ஜெட் 2016 ஒப்புக்கொள்கிறது. அரசாங்கம் திவாலாவதிலிருந்தும் அரசாங்க ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் போவதிலிருந்தும் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) அரசாங்கத்தைக் காப்பாற்றியிருப்பதை பட்ஜெட் 2016 ஒப்புக்கொள்வதை ஊடகங்கள் பரவலாக…

இசா: நஜிப் பதவி விலகக் கோரிய கிளைகள் ஒப்பந்தத்தை மீறிவிட்டன

13 நெகிரி செம்பிலான் அம்னோ கிளைகள் பிரதமர் நஜிப் கட்சியின் தலைவை பதவியைத் துறக்க வேண்டும் என்று கோரியுள்ள தீர்மானம் அம்னோவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரஸ்பர ஒப்பந்தத்தை மீறியதாகும். அந்த அம்னோ கிளைகள் அவற்றின் கருத்தை சமீபத்தில் நடைபெற்ற அம்னோ பேராளார்கள் கூட்டத்தில் கூறியிருக்க வேண்டும். அக்கூட்டத்தில் நஜிப்புக்கு முழு…

ஸுரைடா: ‘ராவாங் திட்டம்’ என்பது அம்னோவின் கட்டுக் கதை

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின் அலியைப்  பதவியிலிருந்து  வெளியேற்ற ‘லங்கா  ராவாங்’  என்ற  பெயரில்    ஒரு  திட்டம்  உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை  பிகேஆர்  மகளிர்  தலைவி  ஸுரைடா  கமருடின்  நிராகரித்தார். முன்னாள்  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  சைபுடின்  அப்துல்லாவை  பிகேஆர்  தன்  பக்கம்  இழுத்துக்  கொண்டதை  அடுத்து  இப்படிப்பட்ட  வதந்தி …

அன்வாரின் உடல்நலன் பற்றி அறிய சுஹாகாம் சிறைக்கு வருகை

அன்வார்  இப்ராகிமின்  உடல்நலன்  பற்றிப் புகார்களைப்  பெற்றதைத்  தொடர்ந்து  மனித  உரிமைகள்  ஆணையம்(சுஹாகாம்) சிறைக்குச்  சென்று  அவரைச்  சந்தித்தது. அக்டோபர்  2-இல் Otai Reformasi என்ஜிஓ  கொடுத்த  மகஜரை  அடுத்து  கடந்த  செவ்வாய்க்கிழமை  சுங்கை  பூலோ  சிறைச்சாலை  சென்று  அன்வாரைக்  கண்டதாக  சுஹாகாம்  ஓர்  அறிக்கையில்  கூறியது. சுங்கை …

கட்சியைக் காப்பாற்ற நஜிப் பதவி விலக வேண்டும் என நெகிரியில்…

2016 பட்ஜெட்டைத்  தாக்கல்  செய்ததற்காக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ஒரு  புறம்  பாராட்டப்படும்  வேளையில்  நெகிரி  செம்பிலானில்  13  அம்னோ  தொகுதிகள்  அவர்  கட்சித்  தலைவர்  பதவியிலிருந்து  வெளியேற  வேண்டுமெனக்  கோரிக்கை  விடுத்துள்ளன. அவர்களுக்குத்  தலைமை  ஏற்றுள்ள தாமான்  டிகேகே தொகுதித்  தலைவர்  கமருல்  அஸ்மான்  ஹபிபுர் …

அஸ்மின்: பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  நேற்று  தாக்கல்  செய்த பட்ஜெட் 2016,  பொருளாதார  வளர்ச்சியைத்  தூண்டிவிடாது  உண்மையில்  அதை  மந்தப்படுத்தி விடும்  என்று  சிலாங்கூர்  மந்திரி  புசார்   அஸ்மின்  அலி  கூறினார். “பட்ஜெட்  2016  மிகுந்த  ஏமாற்றத்தைத்  தருகிறது.  அது  பொருளாதார  வளர்ச்சிக்கு  மிகவும்  தேவைப்படும்  உந்து  சக்தியைக் …

பிரதமர் பட்ஜெட் உரையை முடித்தவுடன் எழுந்த கேள்வி “ரிம2.6 பில்லியன்…

  நிதி அமைச்சர் நஜிப் ரசாக் 2016 ஆம் ஆண்டுக்காண பட்ஜெட் உரையை 90 நிமிடங்களுக்கு நிகழத்தி முடித்தவுடன், நாடாளுமன்ற எதிரணி உறுப்பினர்கள் ஒன்றாக அட்டையைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றனர். அந்த அட்டையில் "ரிம2.6 பில்லியன் எங்கே?" என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் அவையில் குழப்ப நிலை ஏற்பட்டது.…

சீனச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை குறைந்ததற்குக் குடிநுழைவுத் துறை காரணமல்ல

சீனச்  சுற்றுப்பயணிகள்  மலேசியாவுக்கு  வருகை  புரிய  தயக்கம்  காட்டுவதற்கு  விசாவைக்  காரணம்  காட்டி  குடிநுழைவுத்  துறைமீது  பழி  போடுவது  நியாயமல்ல  என  உள்துறை  துணை  அமைச்சர்  நூர்  ஜஸ்லான்  கூறினார். விசா  ஒரு  பிரச்னையே  அல்ல  என்று  கூறிய  அதற்கு  வேறு  காரணங்கள்  உள்ளன   என்றார். “விசா  கட்டணம் …