இனி கோயில் உடைப்பை அனுமதியோம்: குழு சூளுரை

செப்டம்பர் மாதம் கோலாலும்பூரில் 101ஆண்டு பழைமையான ஸ்ரீமுனீஸ்வரர் காளியம்மன் ஆலயத்தை உடைக்கும் முயற்சி நடைபெற்றதைத் தொடர்ந்து வருங்காலத்தில் கோயில் உடைப்புகளைத் தடுப்பதற்காக இந்து பாதுகாப்புப் படை ஒன்று அமைக்கப்படும் என  தெலுக் இந்தான் முன்னாள் எம்பி, எம். மனோகரன் கூறினார். அதில் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு  அவர்கள் ஆலயங்களைப் பாதுகாக்கவும் …

பரிசோதனைக்காக’ ஹெரால்ட் பறிமுதல் செய்யப்பட்டதாம்: அரசாங்கம் கூறுகிறது

‘கிறிஸ்துவ இதழான த ஹெரால்ட் பறிமுதல் செய்யப்பட்டதைத் தற்காத்துப் பேசியுள்ளது உள்துறை அமைச்சு. அண்மையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த வார இதழ்  ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பளித்ததைச் சுட்டிக்காட்டிய அமைச்சு, அதில் அச்சொல் பயன்படுத்தப்படாதிருப்பதை உறுதிசெய்வதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டது என விளக்கமளித்தது. “பரிசோதனையில் அதில் ‘அல்லாஹ்’…

“ரொம்ப நன்றி” ஒரு பட்ஜெட் நாடகம்

மலேசிய பிரதமர் நஜிப் 2014-ஆம்  ஆண்டுக்கான ஒரு பொறுப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் ஆனால், அது இரண்டு அடிப்படை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தவறி விட்டது என சாடுகிறார் கா. ஆறுமுகம். குறைந்த சம்பளக் கொள்கையில் மாற்றமில்லை என்பதால் இந்த பட்ஜெட் உண்டாக்கும் விலைவாசி…

த ஹெரால்ட் தடுத்து வைக்கப்பட்டது: பிரதமரின் வாக்குறுதி என்னவாயிற்று?

கடந்த வெள்ளிக்கிழமை கோத்தா கின்னாபாலு விமானநிலையத்தில் உள்துறை அமைச்சின் அதிகாரிகளால் மலேசிய ரோமன் கத்தோலிக்க வார வெளியீடான த ஹெரால்ட்டின் 2,000 பிரதிகள் தடுத்து வைக்கப்பட்டன. இந்தத் தடுத்து வைக்கும் நடவடிக்கை "அல்லாஹ்" என்ற சொல் சாபா மற்றும் சரவாக்கில் பயன்படுத்தலாம் என்று பிரதமர் நஜிப் அளித்திருந்த வாக்குறுதி…

கட்சி பிஎன்னிலிருந்து வெளியேற வேண்டும், கெராக்கான் பேராளர்கள்

கட்சி கடந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியுற்றதைத் தொடர்ந்து கட்சி தொடர்ந்து பாரிசான் பங்காளியாக இருப்பது குறித்து நேற்று நடைபெற்ற கெராக்கான் தேசிய மாநாட்டில் பல பேராளர்கள் கேள்வி எழுப்பினர். கெராக்கன் அதற்குரிய மரியாதையைப் பெறவில்லை என்று ஜொகூர் மாநில பேராளர் டான் லாய் சூன்…

பிரதமர் துறைக்கு மிக அதிகமான நிதி ஒதுக்கீடு

நாட்டின் நிதி பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு மக்கள் வாயையும் வயிற்றையும் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தும் பிரதமர் நஜிப் ரசாக், அவரது அமைச்சின் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி இதற்குமுன் இல்லாத அளவிற்கு பெருத்துள்ளது. பிரதமர் துறையின் அடுத்த ஆண்டிற்கான செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரிம16.45 பில்லியன் ஆகும். நடைமுறைச் செலவுக்கு…

மா கெராக்காரன் தலைவராக தேர்வு பெற்றார்

பாரிசான் பங்காளிக் கட்சியான கெராக்கான் அதன் நடப்பு இடைக்கால தலைமைச் செயலாளர் மா சியு கியோங்கை அக்கட்சியின் 2013- 2016 தவணைக்கான தலைவராக தேந்தெடுத்துள்ளது. மா 1086 வாக்குகளைப் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட பினாங்கு மாநில கெராக்கான் தலைவர் தெங் சாங் இயோவை தோற்கடித்தார். தெங் 577…

தமிழ்ப்பள்ளிகளுக்கான 2000 ஏக்கர் நில ஒப்பந்தம் குறித்த முழு விபரம்…

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 26, 2013. கடந்த புதன்கிழமை, 23 ஆம் தேதி ஈப்போவில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கமும் பேராக் இந்திய மேம்பாட்டு கல்வி வாரியமும் 2000 ஏக்கர் நிலத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டதாக  தமிழ் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.  …

நஜிப்: சீனி உதவித் தொகை இரத்தானது தாம்பத்திய உறவுக்கு நல்லது

சீனிக்கான உதவித் தொகையை அரசாங்கம் இரத்துச் செய்ததைத் தற்காத்துப் பேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அதிக சீனி ஒருவரின் புணர்ச்சித்திறனைப் பாதிக்கும் என்று எச்சரித்தார். இன்று காலை கெராக்கான் ஆண்டுக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது நஜிப் இவ்வாறு கூறினார். நேற்று, அவர் தம் பட்ஜெட் உரையில்,…

மாடுவெட்டிய விவகாரம் தொடர்பில் கமலநாதனைச் சாடியது பெர்காசா

கல்வி அமைச்சு பள்ளிகளில் மாடுவெட்ட அனுமதித்ததில்லை என்று அறிக்கை வெளியிட்டதன்வழி கல்வி அமைச்சர் II பி.கமலநாதன் இஸ்லாத்தை அவமதித்து விட்டார் என பெர்காசா சாடியுள்ளது. “பள்ளிகளில் குர்பான் செய்ய அனுமதி இல்லை என்று பி.கமலநாதன் அறிக்கை வெளியிட்டது மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் செயலாகும்”, என பெர்காசா அமைப்பின் இளைஞர்…

கமலநாதன், பிரச்னையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்

உங்கள் கருத்து  ‘அவ்வப்போது அறிவுரை கூறுவோம் என்கிறீர்களே, அதன் பொருள் என்ன? ஒவ்வோர் ஆண்டும் இது தொடர்வதற்கு இடமளித்து அதன்பின்னர் செய்தித்தாள்களில் நாடகமாட போகிறீர்களா? கமலநாதன்: பள்ளிகளில் குர்பானுக்கு இடமில்லை ஆரிஸ்46:  பாவம் கல்வி துணை அமைச்சர் II, பி.கமலநாதன். அமைச்சின் விதிமுறைகளை மீறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு எதிராக…

ஜிஎஸ்டி கூடுதலான வரியல்ல, முகைதின் யாசின்

நேற்று அறிவிக்கப்பட பொருள் மற்றும் சேவைகள் வரி கூடுதலான வரியல்ல. இவ்வரி நீண்ட காலமாக அமலில் இருந்து வரும் விற்பனை மற்றும் சேவைகள் வரிக்கு மாற்றாகும் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார். ஏன் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு பல அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன என்றும் அவர்…

புதிய வரி விதிப்பின் மூலம் அரசாங்கம் மக்களைத் தண்டிக்கிறது, அன்வார்

பிரதமர் நஜிப் அறித்த 2014 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு அறிக்கையில் பொருள்கள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது "மக்களைத் தண்டிக்க" உதவுகிறது என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். இந்த வரி ஏழை மற்றும் செல்வந்தர்களுக்கிடையிலான பிளவை மேலும் விரிவாக்க உதவும் என்று கூறிய அன்வார்,…

நாளை உதவித் தொகை இரத்தாவதால் சீனி விலை உயரும்

சீனிக்கு வழங்கப்பட்டுவரும் 34சென் உதவித்தொகை நாளை  தொடக்கம் இரத்துச் செய்யப்படுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்தார். இப்போது சீனியின் விலை ஒரு கிலோகிராம் தீவகற்ப மலேசியாவில் ரிம2.50 ஆகவும் கிழக்கு மலேசியாவில் ரிம2.60 ஆகவும் உள்ளது. இந்நடவடிக்கை நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் செய்யப்பட்டதாக…

ஜிஎஸ்டி 2015-இல் அமலாக்கப்படும்

மிகுந்த சர்ச்சைக்குள்ளான பொருள், சேவைகள் வரி(ஜிஎஸ்டி), 6 விழுக்காடு என்னும் விகிதத்தில்  2015,  ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலாக்கம் காணும். இன்று நாடாளுமன்றத்தில் 2014 பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இதனைத் தெரிவித்தார். அது அமலாக்கம் காணும்போது விற்பனை, சேவை வரி இரத்தாகும். அரிசி,…

நஜிப் பட்ஜெட் 2014: பொருள்கள் மற்றும் சேவை வரி வருகிறது…

இதுவரையில் சர்ச்சையில் இருந்து வந்த பொருள்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2015 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்படும். அவ்வரி 6 விழுக்காடாக இருக்கும். இது நஜிப்பின் பட்ஜெட் உரையின் சிறப்பு அம்சமாகும். நிதி அமைச்சர் நஜிப் ரசாக்கின் 2014 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் கருப்பொருள் "பொருளாதார மீட்சியை வலுப்படுத்துதலும்…

டிஏபி-யைக் கடுமையாக விமர்சித்து வந்த சுல்கிப்ளி கட்சியின் எல்லாப் பதவிகளிலிருந்தும்…

முன்னாள் டிஏபி உதவித் தலைவரான சுல்கிப்ளி முகம்மட் நூர். அக்கட்சியின் எல்லாப் பதவிகளிலிருந்தும் இன்று விலகினார். பல மாதங்களாக அக்கட்சியைக் குறைகூறி வந்த சுல்கிப்ளி, பாயான் பாரு டிஏபி தொடர்புத் தலைவர், பினாங்கு டிஏபி செயற்குழு உறுப்பினர், பினாங்கு மாநில சுற்றுலா பிரிவுத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்து விலகுவதாக…

முக்ரிஸ்: சீனர்கள், பிஎன்னை ஆதரிப்பதை நிரூபிக்க வேண்டும்

சுங்கை லிமாவ் இடைத் தேர்தல், சீனர்கள் பின்னை ஆதரிப்பதை நிரூபித்துக்காட்ட நல்ல வாய்ப்பு என்று கூறினார் கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர். இடைத் தேர்தலில் சீனர்கள் முக்கிய பங்காற்ற முடியும்  என்றாரவர். அத்தொகுதியில் சுமார் 1,800 சீன வாக்காளர்கள் உள்ளனர். “சீனர்களில் பாதிப்பேர் வாக்களித்தால் போதும் அத்தொகுதியை…

வெள்ளப் பேரிடரில் காணாமல்போன பெண்ணைத் தேடும் பணி தொடர்கிறது

புதன்கிழமை கேமரன் மலையில் ஏற்பட்ட வெள்ளத்திலும் சகதி ஓட்டத்திலும் அடித்துச் செல்லப்பட்ட இந்தோனேசியர் என நம்பப்படும் ஒரு பெண்ணைத் தேடும் பணி தொடர்கிறது. அப்பணியில், கேமரன் மலை தீ அணைப்பு மீட்புப் பணித் துறை, போலீஸ், சிவில் தற்காப்புத் துறை, ரேலா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 300 பேர்…

ரிங்லெட் துயரச் சம்பவம், அதைவிட மோசமான அவலங்கள் நிகழும் என்பதற்கு…

கேமரன் மலையில் அணைக்கட்டு நீர் திறந்துவிடப்பட்டதால்  பெர்தாம் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளம், அதை விடவும் மோசமான அவலங்கள் அடுத்து நிகழலாம் என்பதற்கான அறிகுறியாகும் என்று தெலுக் இந்தான் முன்னாள் எம்பி எம். மனோகரன் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அணைக்கட்டு நீர் திறந்து விடப்பட்டதில்  நிலையான இயக்க முறைமைகள் (எஸ்ஓபி)…

PKFZ விவகாரத்தில் லிங் விடுவிக்கப்பட்டார்

கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், பல பில்லியன் ரிங்கிட் பெறும் PKFZ திட்டத்தில் அரசாங்கத்தை ஏமாற்றியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக்கை விடுவித்துள்ளது. தீர்ப்புக் குறித்து கருத்துரைக்குமாறு லிம்மைக் கேட்டதற்கு “கருத்துச்சொல்ல எதுவுமில்லை” என்று கூறிவிட்டார். PKFZ திட்டத்துக்கான நிலத்தின் பெறுமதி ரிம1,088,456,000…

உதயகுமார் தனி அறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்

ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் "கட்டளைகளை ஏற்றுக்கொள்ள மறுத்ததால்" தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் இரு தடவைகளில் மொத்தம் 13 நாள்களுக்கு அடைக்கப்பட்டிருந்தார். பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் அனுப்பியிருந்த கடிதத்தில் இதனை சிறைச்சாலை இலாகா உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், உதயகுமார் குற்றச்சாட்டியது போல் "இருட்டறையில்" அடைத்து வைத்திருக்கப்படவில்லை என்று அந்த இலாகா கூறிக்கொண்டது.…

வாக்காளர்களுக்குக் கையூட்டு கொடுக்கும் முயற்சிகள் குறித்து: பாஸ் எச்சரிக்கை

கெடா சுங்கை லிமாவ் இடைத் தேர்தலில்  பிஎன் வேட்பாளருக்கு வாக்களிக்கப்பதற்காகக் கையூட்டு கொடுக்கும் முயற்சி நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என பாஸ் தலைவர்கள் கூறுகின்றனர். பல இடைத் தேர்தல்களிலும்  அது நடந்துள்ளதாகக் கூறிய பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார், சுங்கை லிமாவிலும் அது நடந்தால் தேர்தல்…