அரண்மனை மொழி மாற்றம் பெற வேண்டும்: சைட் ஹுசின் அலி

ஜனநாயகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அரண்மனை மொழி சீரமைப்புச் செய்யப்படுவது அவசியமாகிறது என்று பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் செனட்டர் சைட் ஹுசின் அலி கூறினார். இன்று பிற்பகல், பெட்டாலிங் ஜெயாவில் அவர் எழுதிய "The Malay Rulers: Regression or Reform",  என்ற புதிய நூல் வெளியிடப்பட்டது. அந்நிகழ்ச்சியில்…

சிறைச்சாலை இருட்டறையில், தனிமையில் உதயகுமாரின் தீபாவளி

மலேசிய இந்துக்கள் நேற்றிரவு தீபாவளியை கொண்டாடினர். ஆனால், ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் காஜாங் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டு, இருட்டறையில் அடைக்கப்பட்டிருந்தார். அக்டோபர் 31 ஆம் தேதியிட்ட ஒரு கடிதத்தில் குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் இடத்திற்கு அருகில் இன்னும் தனி அறையில் அடைக்கப்பட்டிருப்பதாக உதயகுமார் தெரிவித்துள்ளார். "தூக்குமேடையின் கதவு திறந்துவிடப்படும் சத்தத்தை…

அம்பிகா: நஜிப் “40,000 வங்காளதேசி வாக்குகள்” என்று கூறிக் கொண்டிருப்பது…

கடந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் 40,000 வங்காளதேசிகள் வாக்களித்திருந்தனர் என்பதை மீண்டும் மீண்டும் பிரதமர் நஜிப் மறுத்து வருவது பொதுத் தேர்தலின் போது நடந்த இதர தேர்தல் மோசடிகள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதைத் தவிர்ப்பதற்காக அவர் நடத்தும் திசை திருப்பும் நாடகம் என்று பெர்சே இணைத்…

மலேசிய இந்துக்கள் நாடுதழுவிய அளவில் இன்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்

பத்துமலை வளாகத்தில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் பிரதமர் நஜிப்பும் அவரது துணைவியார் ரோஸ்மாவும் கலந்து கொண்டனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு அங்கிருந்தனர். மஇகா ஏற்பாடு செய்திருந்த இந்த திறந்தவெளி தீபாவளி கொண்டாட்டத்தில் சுற்றுப்பயணிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். காலை மணி 10.15 க்கு…

அம்னோ மலாய்க்காரர்களை ஏழையாக வைத்திருப்பதை அவர்களுக்கு நினைவூட்டுறார் அன்வார்

நேற்று சுங்கை லீமாவ் இடைத் தேர்தல் ஈடுபட்டுள்ள எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அத்தொகுதியில் சென்ற இடங்களில் எல்லாம்  ஜிஎஸ்டி வரி குறித்து அவர் முன்பு கூறியிருந்ததைத் தற்காத்து பேசினார். நேற்றிரவு நடந்த செராமாவில் பேசிய அன்வார் டிவி3 இல் கூறப்பட்டதை நம்பிக் கொண்டு இருப்பவர்களிடம் "ஏன் இந்த…

த ஹெரால்ட் மேல்முறையீட்டை ஆதரிக்கக் கூடாது என்று வழக்குரைஞர் மன்றத்திற்கு…

"அல்லாஹ்" என்ற சொல் மீதான சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக த ஹெரால்ட் மேல்முறையீடு செய்தால், அதனை ஆதரிக்கக் கூடாது என்றும் ஆதரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முஸ்லிம் வழக்குரைஞர்கள் கூட்டம் ஒன்று வழக்குரைஞர் மன்றத்தை எச்சரித்துள்ளது. வழக்குரைஞர் மன்றம் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அனைத்து…

கெடா மாநில ஆட்சிக்குழுவில் இடம் பெற மசீச தீவிரம்

கெடா மாநில ஆட்சிக்குழுவில் கெராக்கானுக்கு உரிய இடம் காலியாக இருக்கிறது. அதன் மேல் மசீச குறிவைத்துள்ளது. மசீச தலைவர் டாக்டர் சுவா சோய் லெக் அந்த இருக்கை மசீசவுக்கும் வேண்டும் என்கிறார். மாநில ஆட்சிக்குழுவில் இன்னும் நிரப்பப்படாத இரு இருக்கைகள் இருக்கின்றன. அவை கெராக்கான் மற்றும் மசீச ஆகிய…

நஜிப்புக்கு லண்டனில் தீபாவளி பரிசு!

லண்டனில் கடந்த இரண்டு நாள்களில் பிரதமர் நஜிப் இரண்டாவது எதிர்ப்பு ஆர்பாட்டத்தை எதிர்கொண்டார். லண்டனில் உலக இஸ்லாமிய பொருளாதார கருத்தரங்கில் (டபுள்யுஐஇஎப்) பங்கேற்க வந்திருக்கும் நஜிப்புக்கு இது அவர் எதிர்பாராத ஒரு தீபாவளி வரவேற்பாகி விட்டது. அப்பொருளாதார கருத்தரங்கு நடைபெறும் இடத்திற்கு வெளியில் ஆர்பாட்டக்காரர்கள் ஊழல்கள் மற்றும் நன்னெறியற்ற…

கொள்கை மாற்றத்தால் பேறுகுறைந்தவர்களுக்கு மகிழ்ச்சியற்ற தீபாவளி

கடந்த ஜூலை மாதத்திலிருந்து பொதுநல இலாகாவிலிருந்து நிதி உதவி பேறுகுறைந்தவர்ளுக்கு கிடைக்காததால் அவர்களுக்கு நாளைய தீபாவளி கசப்பானதாக இருக்கும். இருபதுக்கு மேற்பட்ட பேறுகுறைந்தவர்கள் தனிப்பட்ட முறையில் கடந்த அக்டோபரில் புகார் செய்திருந்தனர். ஆனால், அவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்குபோலாகி விட்டது என்று பேறுகுறைந்தவர்களுக்கான அரசு சார்பற்ற…

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

செம்பருத்தி இணையத்தள வாசகர்கள் அனைவரும் எங்களின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.  சுடரின் நடனம் தொடரும் தீபங்களில், காணும் போதே களிப்புறும் உள்ளம். வானின் இருளில் வண்ணங்கள் தூவி, மிளிரும் ஒளியில் சிதறும் பூக்கள். பட்டுத் துணியும் பரிசுப் பொருளும், கிடைத்திட‌ இன்புறும் சின்னஞ் சிறார்கள். என்றும் இனிமையாய் இவ‌ர்க‌ளைப்…

நீதி, நியாயம், சமதர்மம் ஆகியவை வழி அமைதியை வளர்த்து சுபிட்சத்தை…

-சிலாங்கூர் மாநில மந்திரி புசார்  காலிட் பின் இப்ராஹிம், நவம்பர் 1, 2013.    வணக்கம். இவ்வினிய வேளையில் எல்லா மலேசியர்களுக்கும், குறிப்பாக இந்துக்களுக்கு, எனது தீபாவளி வாழ்த்துகளைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.   மலேசிய இந்துக்களுக்கு தீபாவளி முக்கியப் பண்டிகையாகும். அறிவு, செழிப்பு, கல்வி, நீதி, தர்மம்,…

மூன்று இல்லாமைகளை அகற்றுவோம்; அமோகமாகத் தீபத்திருநாளை கொண்டாடுவோம்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர், அக்டோபர் 30, 2013. அன்பான மலேசியர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில்  மகிழ்ச்சியடைகிறேன். நமது இதிகாசங்கள் நமக்கு  உணர்த்த முற்படும் அற்புதங்களுக்கு  அளவே இல்லை. ஆனால் அவ்வப்போது வாழ்ந்த நம் முன்னோர்களும், நாமும் இதிகாசங்களில் உள்ளவைகளை புரிந்து…

கம்போங் ஹாக்கா: கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்

இன்று காலை மணி 11.30 லிருந்து நெகிரி செம்பிலான், மன்தின் ஹாக்கா கிராம மக்களின் வீடுகள் நில மேம்பாட்டாளரால் இடித்துத்தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருள்செல்வன், சுவாராம் செயல்முறை இயக்குனர் ஏ. நளினி ஆகியோருடன் டிஎபி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும்…

சீனப்பள்ளிகளுக்கு 2.25 மில்லியன்! மக்கள் பணத்தில் மக்களுக்கே லஞ்சமா?

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், அக்டோபர் 31, 2013.  மலேசியாவை முன்னேறிய நாடுகளின் பட்டியலில் சேர்க்கப் பாடுபடுவதாகக் கூறும் பிரதமர் நஜிப் மற்றும் அவரின் அமைச்சரவையிடமும் அதற்கான அணுகு முறைகள் அறவே இல்லை என்பதனை உணர்த்துகிறது கெடா சுங்கை லீமாவ்  இடைத்தேர்தலில் அங்குள்ள சீனப்பள்ளிகளுக்கு 2.25 மில்லியன் நிதி ஒதுக்கீடு…

அன்வார்: என்றும் ஜிஎஸ்டி-க்கு எதிர்ப்புத் தெரிவித்ததில்லை

பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யைக்  கொள்கை அளவில்  என்றும்  எதிர்த்ததில்லை  என்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.  இன்னும் சொல்லப்போனால், அந்த வரி பயனான ஒன்று, வெளிப்படையான ஒன்று என்றே எப்போதும் கூறி வந்திருப்பதாக அவர் சொன்னார். ஆனால், அதை அரசாங்கத்தின் பற்றாக்குறை நிலையைக் குறைத்து,  ஊழலை…

கம்போங் ஹாக்காவை இடித்துத்தள்ளிய அரசாங்கம் பிஎஸ்எம் அருள்செல்வனை கைது செய்தது

நெகிரி செம்பிலான், மன்திங் கம்போங் ஹாக்கா இடித்துத்தள்ளப்படுவதை தடுக்க முயன்ற பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருள்செல்வன் மீண்டும் கைது செய்யப்பட்டார். இடித்துத்தள்ளுவதற்கு வசதியாக இன்று காலை மணி 11.30 அளவில் அந்த இடத்தை போலீஸ் சுற்றிவளைத்திருந்தனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ்.…

பெர்தாம் வெள்ளம்: பல ஆண்டுகளாகவே எச்சரிக்கப்பட்டு வந்தது

கேமரன் மலையில் சுல்தான் அபு பக்கார் அணைக்கட்டை ஆராய்ந்து வந்துள்ள  ஆராய்ச்சியாளர்கள்  பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கு வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பது பற்றி எச்சரித்து வந்துள்ளனர். 1997-இல், மலாயாப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்,  கேமரன் மலையில் காடுகள் பெருமளவு அழிக்கப்படுவது  அணைக்கட்டின் வெள்ளத்தடுப்பு ஏற்பாடுகளைச் சீர்குலைத்து  வருவதாக எச்சரித்தனர். மூன்றாண்டுகளுக்கு…

கெராக்கானும் டிஏபி போலவே மலாய்க்காரர்களுக்குக் குழி பறிக்கிறது

கெராக்கானும் டிஏபியைப் போன்றதுதான் என்று வருணித்த மலாய் வலச்சாரி அமைப்பான பெர்காசா, உள்ளுக்குள் சீன-இனவாதத்தை வைத்துக்கொண்டு வெளிவேடம் போடும் அக்கட்சி, மலேசியாவில் மலாய்க்காரர் மேலாதிக்கத்தையும் அரசியல் அதிகாரத்தையும் தகர்க்கும் இரகசிய திட்டத்தைக் கொண்டிருப்பதாக சாடியது. “மலாய்க்காரர்கள் முட்டாள்கள் அல்லர்”, என பெர்காசாவின் தகவல் தலைவர் ருஸ்லான் காசிம் கூறியதாக…

அரசுதொடர்பு நிறுவனத் தலைவர்களுக்கு கொளுத்த சம்பளம் தேவையா? டிவிட்டரில் கைரியும்…

டிஏபி எம்பி ஒங் கியான் மிங்,  தேவைக்கு அதிகமாகவே  அரசுத்தொடர்பு நிறுவனங்களை  அமைப்பதும் அவற்றின் தலைவர்களுக்கு கொளுத்த சம்பளம் கொடுக்கப்படுவதும்  அவசியம்தானா என்று நேற்று  கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு டிவிட்டரில் பதிலளித்த இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின்(இடம்), உயர்திறன் படைத்தவர்களை அரசுத்துறைகளுக்குக் கவர்ந்திழுக்க வேண்டியிருக்கிறது என்று…

சீனப் பள்ளிகளுக்கு ரிம2 மில்லியன்: முகைதின் ஒதுக்கீடு

திங்கள்கிழமை சுங்கை லிமாவ் இடைத் தேர்தலுக்கு முன்னதாக சீனச் சமூகத்தினரின் ஆதரவைப் பெறும் முயற்சிகளை பிஎன் தொடர்கிறது. இன்று துணைப் பிரதமர் முகைதின் யாசின், சுங்கை லிமாவ் சீனக் கல்வி நிதிக்கு ரிம200,000 வழங்கப்படும் என்றார். . சுங்கை கிரிங் பிஎன் நடவடிக்கை மையத்தில், பெரும்பாலும் சீனர்களைக் கொண்ட…

எல்லாக் குற்றங்களுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்மீது பழி போடக் கூடாது

நாட்டில் நடக்கும் எல்லாக் குற்றங்களுக்குமே வெளிநாட்டவர்தான் காரணம் என்று ஒட்டுமொத்தமாக அவர்கள்மீது பழி போடக்கூடாது என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி. கடும் குற்றங்களில் 10-இலிருந்து 15 விழுக்காடுவரைதான் வெளிநாட்டவர்களால் செய்யப்படுகின்றன என்றும் பெரும்பாலான குற்றங்களைப் புரிபவர்கள் மலேசியர்தான் என்றும் அஹ்மட் ஜாஹிட், இன்று மக்களவையில் கூறினார்.

நாளிதழ் வெளியிடுவதற்கான அனுமதி ஒரு சலுகைதான், உரிமையல்ல, ஒரே மலேசியா…

மலேசியாகினி இணையதள உரிமையாளர் எம்கினி டோட்கோம் செண். பெர்ஹாட்டின் நாளிதழ் வெளியிடுவதற்கான அனுமதி கோரிக்கை மீதான மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணையில் வெளியிடுதலுக்கான அனுமதி ஒரு சலுகையே தவிர அது ஓர் உரிமையல்ல என்று அரசாங்கத் தரப்பு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியது. நாளிதழ் வெளியிடுவதற்கு எம்கினி டோட்கோம் செய்திருந்த…

பிரசுர உரிமம் என்பது சலுகைதானே தவிர, உரிமை அல்ல: அரசுதரப்பில்…

மலேசியாகினி இணையத்தள உரிமையாளரான  எம்கினி டோட்காம் சென்.பெர்ஹாட்  பிரசுர உரிமத்துக்காக  செய்த விண்ணப்பத்தை எதிர்க்கும் அரசாங்கம்,  பிரசுர உரிமம்  என்பது சலுகைதானே  தவிர, உரிமை அல்ல என்ற  வாதத்தை முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைத்தது. பேச்சுரிமை மீதான அரசமைப்பின் பிரிவு 10-இன்படி  பிரசுர உரிமம் வழங்கப்படுவது  ஓர் உரிமை என்று…