ஸ்ரீபெர்டானா பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு

ஸ்ரீபெர்டானாவுக்கு ஒவ்வோர் ஆண்டும் மின்சாரக் கட்டணமாக ரிம 2.2 மில்லியன் செலவிடப்பட்டாலும் அதன் பராமரிப்புச் செலவு உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது “குறைவுதான்” என பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் கூறினார். அந்த வளாகத்தைப் பராமரிக்க சிக்கனமாகத்தான் செலவிடப்பட்டு வருவதாக ஷஹிடான் மக்களவையில் கூறினார். ஆனால், மற்ற நாடுகளில் அதிகாரத்துவ…

பழனிவேல்: முனீஸ்வரர் ஆலயம் உடைக்கப்படவில்லை

நேற்று,  கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்)  ஸ்ரீமுனீஸ்வீரர் காளியம்மன் ஆலயப் பகுதியில் மேற்கொண்டஉடைப்புப் பணியில்  ஆலயம்  உடைபடவில்லை என மஇகா தலைவர் ஜி.பழனிவேல் வலியுறுத்தியுள்ளார். “ஆலயத்தை ஒட்டியிருந்த கடைகள்தான் உடைக்கப்பட்டன.  ஆலயம் அப்படியேதான் இருக்கிறது”, என இன்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டத்தில் பழனிவேல் தெரிவித்தார். ஆலயம் அதற்கு ஒதுக்கப்பட்ட…

ஷரிசாட் ரிம100 மில்லியன் அவதூறு வழக்கைக் கைவிட்டார்

பிகேஆரின் ரபிஸி ரம்லி, சுரைடா கமருடின் ஆகியோர்மீது தொடுத்திருந்த ரிம100 மில்லியன் அவதூறு வழக்கை ஷரிசாட் அப்துல் ஜலில் நிபந்தனையின்றி மீட்டுக்கொண்டிருக்கிறார். அம்னோ மகளிர் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஷரிசாட்,  அவருக்கும் அவரின் பிள்ளைகளுக்கும் சொந்தமான நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) தொடர்பில் அவ்விருவரும் தம் பெயருக்குக் களங்கம்…

உத்துசானை ஆதரிப்பது ஜிஎல்சி-களின் வேலை அன்று: மஸ்லானைச் சாடியது மசீச

அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவில் கூடுதல் விளம்பரங்கள் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்ட நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானுக்கு மசீச கடும் கண்டனம் தெரிவித்தது. அமைச்சரின் அதிகாரம் தவறாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று கண்டித்த மசீச உதவித் தலைவர் கான் பெங் சியு, உத்துசான் போன்ற…

சமய அமலாக்க அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்

  பகாங் இஸ்லாமிய சமய இலாகா (ஜாய்ப்) உயர் அதிகாரி ஒருவர் இன்று பின்னேரத்தில் அவரது இந்திரா மகோட்டா, குவாந்தான், வீட்டிற்கு வெளியே கருப்பு அங்கியும் தலைக் குல்லாவும் அணிந்திருந்த ஆடவர்கள் என்று கூறப்படுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கேஎல் ஸ்ரீ முனீஸ்வரர் கோயில் உடைப்பு மீண்டும் தொடங்கியது; ஜெயதாஸ்…

தீபாவளி கொண்டாட்டம், திறந்த இல்ல உபசரிப்புகள், பத்துமலையில் அமைச்சர்களுக்கு, இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர் உட்பட, ஏகபோக விருந்து ஆகிய அனைத்தும் முடிவுற்ற ஒரு வாரத்திற்குப் பின்னர், கோயில் உடைப்பு விழா மீண்டும் தொடங்கி விட்டது! ஒரு வழக்குரைஞரும், பிகேஆர் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஜெயதாஸும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் வளாகத்தில்…

பள்ளிகளில் மாடு வெட்டுவதை பெர்காசாவின் இந்திய கூட்டாளிகள் ஆதரிக்கின்றனர்

பள்ளிகளில் மாடு வெட்டப்படுவதைத் தீவிரமாக ஆதரித்ததற்காக மலாய் இனவாத அமைப்பான பெர்காசா இந்நாட்டின் இந்து சமூகத்தினரால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது. ஆனால், இவ்விவகாரத்தில் பெர்காசாவின் நிலைப்பாட்டை பேரின்பம் (New Indian Welfare and Charity Association) என்ற அமைப்பு ஆதரிக்கிறது. "(பள்ளிகளில்) மலாய்க்காரர்கள் கொர்பான் செய்ய விரும்பினால், அதில் தவறு…

ஜிஎல்சிகள் உத்துசான், பெரித்தா ஹரியானில் அதிகமாக விளம்பரம் செய்ய வேண்டும்

மலாய் மொழி நாளிதழ்களான உத்துசான் மலேசியா மற்றும் பெரித்தா ஹரியான ஆகியவற்றில் அரசாங்க தொடர்பு நிறுவனங்கள் (ஜிஎல்சி) அதிகமான அளவில் விளம்பரம் செய்து அவற்றை காப்பாற்ற வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஜிஎல்சி தலைமை அதிகாரிகளுக்கு தாம் இது குறித்து கடிதங்கள் அனுப்பியுள்ளதாக துணை நிதி அமைச்சர் அஹமட்…

மாசிங்: உள்ளூர் போலீஸ்மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது

சரவாக்கின் நில மேம்பாட்டு அமைச்சர் ஜேம்ஸ் மாசிங், செம்பனை எண்ணெய் நிறுவனங்களும் வெட்டுமர நிறுவனங்களும் முரடர்களையும் குண்டர்களையும் வைத்து மக்களை மிரட்டி வருவது குறித்து கவலை கொண்டிருக்கிறார். போலீசார் இதைப் பார்த்துக்கொண்டு நடவடிக்கை எடுக்காதிருப்பது மேலும் வருத்தம் தருவதாக அவர் சொன்னார். “தங்கள் பாரம்பரிய நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யும்…

கடத்தப்பட்ட பிரிட்டிஷ் சிறுவன் கிடைத்து விட்டான்

நேற்று பங்சாரில் அவனின் தாயார் இல்லத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 20-மாதச் சிறுவனான பிரெட்டி ஜோசப், இன்று பிற்பகல் கிடைத்து விட்டான். அவன் தாமான் தித்திவங்சாவில் சோர்வுடனும் பசியுடனும் தத்தித் தத்தித் தனியே நடந்துசெல்வதை பேருந்து ஓட்டுனர் ஹமிட் முகம்மட் இசா,57, கண்டார். “அப்போதுதான் ஒரு சிறுவன் கடத்தப்பட்டது பற்றி…

பாஸ் உதவித் தலைவர் பதவிக்கு ஐவர் போட்டி

நவம்பர் 21-இல் நடைபெறும் பாஸ் கட்சித் தேர்தலில்  மூன்று உதவித் தலைவர்கள் பதவிக்கு ஐவர் போட்டியிடுவார்கள் என்பது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிளந்தான் முன்னாள்  ஆட்சிக்குழு உறுப்பினர் ஹுஸாம் மூசா,  தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான்,  மத்திய செயல்குழு உறுப்பினர் அபு பக்கார் சிக் பொக்கோக் சேனா…

ஸ்ரீலங்காவைப் புறக்கணிப்பீர்: தமிழர்களுக்கு ஆதரவாக பெர்காசா பிரதமரிடம் கோரிக்கை

ஆச்சரியம் ஆனால் உண்மை.  மலாய்க்காரர் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசா தமிழர்களுடன் சேர்ந்து,  இம்மாதப் பிற்பகுதியில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்காவில் தங்கள் சகோதரர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை எண்ணி ஆத்திரமடைந்துள்ள தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்…

கையூட்டு கேட்ட டிஏபி ஆள் யார்? Banner King நிறுவனம்…

பதாதை தயாரிக்கும் நிறுவனம் அதன் இயக்குனரிடம் கையூட்டு கேட்டதாகக் கூறும் நபரை அடையாளம் காட்ட வேண்டும் என டிஏபி எம்பி ஒருவர் “இறுதி எச்சரிக்கை” விடுத்துள்ளார். 2008 பொதுத் தேர்தலின்போது டிஏபி வேட்பாளர் ஒருவர்  Banner King நிறுவனத்திடம் 30 விழுக்காடு கையூட்டு கேட்டதாக அதன் இயக்குனர் சான்…

பெர்சே-க்கு விரைவில் புதிய தலைவர்கள்

தேர்தல் சீரமைப்பு இயக்கமான பெர்சே-க்கு  விரைவில் புதியவர்கள் தலைமையேற்பார்கள். நவம்பர் 30-இல் அதற்கான தேர்தல் நடைபெறும் என பெர்சே இயக்கக்குழு உறுப்பினர் மரியா சின் கூறினார். “பெர்சேயில் உள்ள என்ஜிஓ-களிலிருந்து அதற்கான நியமனங்கள் செய்யப்பட்டு விட்டன, முடிவு விரைவில் அறிவிக்கப்படும்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். தேசிய நிலையில் ஐந்து…

நஜிப்: புரட்சி செய்ய வாங்க, பணம் தருகிறோம்

வாருங்கள், புரட்சி செய்யுங்கள் என்று பிரதமர் நஜிப் ரசாக் மலேசிய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆட்சிக் கவிழ்ப்பு புரட்சி செய்யலாமா என்றெல்லாம் நினைப்பதற்கு வழி விடாமல், "அராப் வசந்தம்' போன்ற புரட்சியாக இருக்ககூடாது என்று கூறி நஜிப் முந்திக் கொண்டார். இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற உலக சமுதாய வாணிக…

முன்னாள்-இயக்குனருக்குக் கொடுக்கப்பட்ட டத்தோ பட்டம் திரும்பப் பெறப்பட்டது

ஜோகூர் மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு இயக்குனர் ஹம்சான் சரிங்காட்டுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ‘டத்தோ’ பட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இஸ்மாயில் அல்மர்ஹும் சுல்தான் இஸ்கண்டரின் உத்தரவின்பேரில் அது உடனடியாக திரும்பப் பெறப்படுவதாக ஜோகூர் அரச மன்றச் செயலாளர் அப்துல் ரஹிம் ரம்லி கூறினார். “ஹம்சான்…

‘அல்லாஹ்’ தீர்ப்பு சாபா, சரவாக் கிறிஸ்துவர்களையும் கட்டுப்படுத்துவதாகவே இருக்கும்

அரசாங்கம் என்னதான் உத்தரவாதம் அளித்தாலும் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பில் முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சாபா, சரவாக் ஆகியவற்றையும் பாதிக்கவே செய்யும் என்கிறது சரவாக் வழக்குரைஞர் சங்கம். ஏனென்றால், அரசாங்கத்தின் உத்தரவாதம் “சட்டப்படியான ஒன்றல்ல” என அச்சங்கத்தின் தலைவர் கைரில் அஸ்மி முகம்மட் ஹஸ்பி கூறினார்.…

இசி: சுங்கை லிமாவில் ஆவி வாக்காளர்கள் இல்லை

சுங்கை லிமாவ் இடைத் தேர்தலில் ஆவி வாக்காளர்கள் வாக்களித்திருக்கலாம் என்று கூறப்படுவதைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. பிரதமர்துறை அமைச்சரும்  பிஎன் உச்சமன்ற உறுப்பினருமான ஷஹிடான் காசிம், வாக்காளர் பட்டியல் “அடையாளம் காணமுடியாத” வாக்காளர்கள் பலரைக் கொண்டிருப்பதாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என இசி தலைவர் அப்துல் அசீஸ்…

மகாதிர்: சாகும்வரை அரசியலை விட்டு விலகமாட்டார் போலிருக்கிறது கிட் சியாங்?

அன்பளிப்புக்களைப் பொருளாகவும் பணமாகவும்  அள்ளிக்கொடுப்பதால் மட்டும் வாக்குகளை வென்றுவிட முடியாது. திங்கள்கிழமை, நடந்துமுடிந்த சுங்கை லிமாவ் இடைத் தேர்தல் பற்றி தம் வலைப்பதிவில் கருத்துக்களை பதிவு செய்துள்ள முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இவ்வாறு கூறினார். “அரசியல் கட்சியின் ஆதரவுக்கு அடிப்படையாக இருப்பவை தலைவர்கள், வேட்பாளர்களின் போராட்டங்களும்…

கர்பால்: பாஸ் கட்சியின் பதிவை இரத்துச் செய்ய வேண்டும் என்று…

டிஏபி கட்சித் தலைவர் கர்பால் சிங், பக்காத்தான் ரக்யாட் பங்காளிக் கட்சியான பாஸ் கட்சியின் பதிவை இரத்துச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை என்பதால் அதனிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்றார். “இன-அடிப்படையில் அமைந்த அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆகியவற்றின் பதிவை இரத்துச் செய்ய வேண்டும் என்று…

இனத் தீவிரவாதம் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல, முன்னாள் இராஜதந்திரி எச்சரிப்பு

மலேசிய அரசியல் இன மற்றும் சமய தீவிரவாதங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருமானால், அது அதன் பொருளாதாரப் போட்டித் திறனை இழக்கச் செய்யும் என்று முன்னாள் மூத்த இராஜதந்திரி ஒருவர் இன்று எச்சரிக்கை விடுத்தார்.. பல இனங்களையும் பல சமயங்களையும் கொண்ட மலேசியாவில் விவாதங்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால்,…

பிஎன் எம்பி: “சீனர்களுக்கு இன்னும் என்ன வேண்டும்?” என்று கேட்பதை…

வெளிநாட்டு கல்வி தகுதிச் சான்றுகளை அங்கீகரிப்பது குறித்து செய்யப்பட்டுள்ள ஏராளமான புகார்கள் மீது அரசாங்கம் கவனம் செலுத்து வேண்டும். அதை விடுத்து, தொடர்ந்து சீனர்களுக்கு இன்னும் என்ன வேண்டும் என்று கேட்பதை நிறுத்த வேண்டும் என்று பாரிசான் பிந்துலு நாடாளுமன்ற உறுப்பினரான தியோங் கிங் சிங் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் உரையின் போது கூறினார்.…

பள்ளி, விரைவு பேருந்து கட்டணம்: இன்னும் முடிவுசெய்யப்படவில்லை

நிலப் போக்குவரத்து ஆணையம் (Spad) விரைவுப் பேருந்துகளுக்கும் பள்ளிப் பேருந்துகளுக்குமான கட்டணங்களை இன்னமும் ஆராய்ந்து வருகிறது.  புதுக் கட்டணங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. புதிய கட்டணங்களை இறுதிசெய்ய இன்னும் சிறிது காலம் தேவைப்படுவதாக ஸ்பாட் தலைவர் சைட் அமிட் அல்பார் கூறினார். “செய்யும் முடிவு எல்லாருக்கும் திருப்தி…