"கிழக்கு நாடுகளுடன் நெருக்கமான உறவை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு தற்போது ஆராய்ந்து வருவதாக மூத்த மாநில அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா கூறுகிறார்." மேற்கு நாடுகளையும் அமெரிக்காவையும் சார்ந்திருப்பதை மாநில அரசு மறுபரிசீலனை செய்து வரும் நிலையில், வழக்கமாக அமெரிக்காவில் நடைபெறும் சரவாக் சுற்றுலா நடவடிக்கை…
பக்கத்தான் ஹராபான் அன்வார் பிரதமராவதை விரும்புகிறது
புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் எதிரணிக் கூட்டணியான பக்கத்தான் ஹராபான், அதன் முதல் நடவடிக்கையாக சிறையில் உள்ள அன்வார் இப்ராகிம்தான் பிரதமருக்கான அதன் வேட்பாளர் என அறிவித்துள்ளது. அதாவது, பொதுத் தேர்தலில் அது வெற்றிபெற்றால் அன்வார் பிரதமராவார். இதனை அறிவித்த நாடாளுமன்ற எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்…
டேய்லர் பல்கலைக்கழகத்துக்கு உதவிச் சம்பளத்தை நிறுத்துவதில் இனவாதம் தெரிகிறது: மசீச…
வருங்காலத்தில் டேய்லர்'ஸ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவிச் சம்பளம் வழங்குவதில்லை என மஜ்லிஸ் அமானா ரக்யாட் செய்துள்ள முடிவில் இனவாதம் பளிச்சிடுகிறது என மசீச சாடியது. அதனை அறிவித்த புறநகர், புறநகர் மேம்பாட்டு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப், அவர் “இனவாதி” என்பதை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிரார் என மசீச …
அமெரிக்காவில் நஜிப் மற்றும் அவரின் குடும்பத்தாரின் சொத்துகள்மீது விசாரணை
அமெரிக்க அதிகாரிகள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் புரிந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல்களை ஆய்வு செய்வதாக நியூயோர்க் டைம்ஸ் (என்ஒய்டி) தெரிவித்துள்ளது.. பிரதமரின் வளர்ப்பு மகன் ரிசா அசீசுக்குச் சொந்தமான நிறுவனம் அண்மைய ஆண்டுகளில் அமெரிக்காவில் வாங்கியுள்ள சொத்துகள் மற்றும் நஜிப்பின் குடும்ப நண்பர் ஒருவரின் …
முகைதின்: மற்ற இனங்களைப் புறக்கணிப்பது ஆபத்து
மலேசியாவில் எந்தவொரு அரசியல் கட்சியும் அதன் பாரம்பரிய ஆதரவுத் தளத்துக்கு வெளியில் உள்ளவர்களின் நலனையும் கருத்தில்கொள்ள வேண்டும் அப்படிச் செய்யாது போனால் தேர்தலில் வெற்றி பெறுவது நடவாத செயல் என்கிறார் அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின். “அரசியல் கட்சிகள் மலாய்க்காரர்கள் மற்றும் சாபா, சரவாக் சுதேசி மக்களின் …
மசீச கிளர்ச்சி அணியினர்மீது கைரி பாய்ச்சல்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் உறவுகளைத் துண்டித்துக் கொள்ள பாசீர் கூடாங் மசீச இளைஞர் பகுதி செய்துள்ள முடிவால் அம்னோ, மசீச உறவு நலிவடைந்துள்ளது. இப்படிப்பட்ட செயலை நாடும் அந்த மசீச இளைஞர் அணி ஆளும் கூட்டணியிலிருந்து விலகுவதே மேலானது என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் …
ரிங்கிட்டின் பலவீனத்துக்கு 1எம்டிபியே காரணம் என்று ஸெட்டி கூறியிருப்பதை அந்நிறுவனம்…
ரிங்கிட்டின் நடப்புப் பலவீன நிலைக்கு 1எம்டிபியைக் காரணம்காட்டிய பேங்க் நெகாரா கவர்னர் ஸெட்டி அக்தார் அசீஸின் செயல் ஏமாற்றமளிப்பதாக அந்நிறுவனம் கூறியது எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் விலை இறக்கம், அமெரிக்காவில் வட்டி விகிதம் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு, வளரும் பொருளாதாரங்களில் ஏற்பட்ட சுணக்கம் முதலிய காரணங்களினால், ரிங்கிட் …
பாஸ் கட்சி நாட்டை ஆள வேண்டுமாம், ஹாடி ஆசைப்படுகிறார்
கடந்த ஐம்பத்தெட்டு ஆண்டுகளாக நாட்டை ஆண்டுவிட்ட அம்னோவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார். அம்னோவுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, மலேசியாவை ஆபத்திலிருந்து காப்பாற்றக்கூடிய ஒரு வகையான இஸ்லாத்தின் வழி நாட்டை ஆள்வதற்கு பாஸ் அனுமதிக்கப்பட வேண்டும் என்று…
ஜோகூர் மசீச இளைஞர்கள்: பிரதமர் சிகப்புச் சட்டைகளைப் பாராட்டுவது சரியல்ல
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சிகப்புச் சட்டைப் பேரணியைப் போற்றிப் பாராட்டுவது அவர் இதுகாறும் எடுத்துரைத்த வந்துள்ள மிதவாத நிலைப்பாட்டையும் 1மலேசியா சித்தாந்தத்தையும் விட்டு விலகிச் செல்வதாகும் என ஜோகூர் மசீச இளைஞர் பகுதி கூறியது. “பிரதமரும் பிஎன் தலைவருமான அவர் அவ்வாறு செய்தது தகாது என நினைக்கிறோம்”,…
தி எட்ஜ் மீதான தடை இரத்து: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் தி எட்ஜ் பைனான்சியல் டெய்லிக்கும் தி எட்ஜ் பைனான்சியல் வீக்லிக்கும் விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடையை இரத்துச் செய்தது. நீதிபதி அஸ்மாபி முகம்மட் அத்தீர்ப்பை வழங்கினார். தடைவிதிப்பால் தி எட்ஜுக்கு ஏற்பட்ட இழப்பை மதிப்பிடுமாறு பணித்த நீதிபதி, வழக்குச் செலவாக உள்துறை அமைச்சு ரிம15,000-ஐ தி …
நேப்பாளப் பெண் கருக்கலைப்புக் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை
கடந்த ஆண்டு அக்டோபரில் தனியார் மருத்துவ நிலையமொன்றில் “சட்டவிரோதமாக”க் கருக்கலைப்புச் செய்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த நேப்பாள தொழிலாளர் நிர்மலா தாபாவை புக்கிட் மெர்தாஜாம் செஷன்ஸ் நீதிமன்றம் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது. அவரை விடுவித்த நீதிபதி எம்.விஜயலட்சுமி அரசுத் தரப்பு குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிவிட்டது எனக் கூறினார்.
ஐஜிபி: போலீஸ் நஜிப்பின் கருவி அல்ல: கைருடின் சட்டத்தை மீறியுள்ளார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 1எம்டிபி விவகாரத்தை மூடிமறைக்க போலீசை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக பாஸ் பொக்கோக் சேனா எம்பி மாபுஸ் ஒமார் கூறியிருப்பதை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் மறுத்துள்ளார். அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குச் சதி செய்தார் என முன்னாள் அம்னோ உறுப்பினர் கைருடின் …
உங்களுக்குத்தான் எங்கள் உதவி அதிகம் தேவை: மசீச இளைஞர்களுக்கு அம்னோ…
அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் ஹிம்புனான் ரக்யாட் பெர்சத்து பேரணிக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதற்காக அவருடன் உறவுகளை முறித்துக்கொள்வதாக அறிவித்த பாசிர் கூடாங் மசீச இளைஞர் பகுதியை அங்குள்ள அம்னோ இளைஞர் அணி சாடியுள்ளது. அதன் தலைவர் அஸ்மான் ஜாப்பார், பாசிர் கூடாங் மசீச இளைஞர் பகுதி …
சிவப்புச் சட்டையினரின் இனவாத வலையில் சிக்கிக் கொள்ளாதீர், அஸ்மி ஷரோம்
கடந்த புதன்கிழமை சிவப்புச் சட்டையினர் எழுப்பிய இனவாத கூச்சல்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என்று மலேசியர்களை மலாயா பல்கலைக்கழக சட்ட விரியுரையாளர் அஸ்மி ஷரோம் கேட்டுக் கொண்டார். சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் சீன மக்களை "சீனப் பன்றிகள்" என்று கூப்பிடுவதை நியாயப்படுத்தியை தாம்…
கெராக்கான்: பிஎன் ஒன்றுபடவில்லை என்றால் பெரிய ‘சுனாமி’ ஏற்படலாம்
பினாங்கு கெரான் பேராளர்களிடையே உரையாற்றிய கட்சித் தலைவர் மா சியு கியோங், எதிர்வரும் பொதுத் தேர்தலில் “மிகப் பெரிய சுனாமி” ஏற்பட்டு அதில் பிஎன் மொத்தமாக அடித்துச் செல்லப்படலாம் என்று எச்சரித்தார். மக்களின் ஆதரவு எதிரணி பக்கம் திரும்பலாம் என்பதைத்தான் சுனாமி என்று அவர் குறிப்பிட்டார். பிஎன் தலைவர்கள் …
அம்பிகா: கைருடின் நீண்ட காலம் காவலில் வைக்கப்படுவது சரியல்ல
வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், முன்னாள் அம்னோ தலைவர் கைருடின் அபு ஹாசான் விசாரணைக்காக நீண்ட காலத்துக்குத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைச் சாடினார். “மேல் நடவடிக்கைக்காகக் காவலில் வைப்பதே தண்டனை ஆகிவிடக் கூடாது. ஆறு நாள்களுக்கு அவரைக் காவலில் வைப்பது அதிகாரமீறல் என்றே நினைக்கிறேன். “இவ்வளவு நீண்ட …
1எம்டிபிமீது அமெரிக்க எப்பிஐ விசாரணை: WSJ தகவல்
அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவான எப்பிஐ 1எம்டிபி விவகாரம் மீது விசாரணைதைத் தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அம்னோ தலைவர் கைருடின் அபு ஹாசன் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளையில் இவ்விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரமொன்று தெரிவித்ததாக நிதியியல் நாளேடான வால் ஸ்திரிட் ஜர்னல் கூறியது. கைருடின் எப்பிஐ அதிகாரிகளைச் சந்திக்க அமெரிக்கா …
1எம்டிபி மீது புகார் செய்த இருவர் நாட்டை விட்டு வெளியேறத்…
பத்து கவான் அம்னோ தொகுதி முன்னாள் துணைத் தலைவர் கைருடின் அபு ஹசானும் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் முன்னாள் உதவியாளர் மத்தியாஸ் சாங்கும் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்விருவரும் 1எம்டிபிமீது பல நாடுகளில் புகார் செய்தவர்களாவர். இன்று காலை நியூ யோர்குக்கும் லண்டனுக்கும் செல்லவிருந்ததாக கைருடின் …
முகைதின்: தலைவர்கள் இனவாதம் பேசி ‘ஹீரோக்கள்’ ஆகப் பார்க்கிறார்கள்
அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின், இன உணர்வுகளை உசுப்பி விடுவதற்காக நிகழ்வுகள் நடத்தப்படுவது பற்றிக் கவலை தெரிவித்தார். இப்படிப்பட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றவர்கள் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்கள் என்பதுடன் அவர்களின் செய்கை சமுதாயத்தில் அச்சத்தை உண்டு பண்ணுகிறது என்றும் அவர் சொன்னார். யார், எவர் என்பதை…
WSJ: 1எம்டிபி-இலிருந்து ஐபிஐசி-க்கு அனுப்பப்பட்ட இன்னொரு யுஎஸ்$1 பில்லியனையும் காணோம்
1எம்டிபி நிறுவனம் அபு டாபியில் உள்ள இண்டர்நேசனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்துக்கு(ஐபிஐசி)ச் செலுத்திய இன்னுமொரு யுஎஸ்$1 பில்லியனும் காணாமல் போயிருப்பதாக வால் ஸ்திரிட் ஜர்னல் (WSJ) கூறியுள்ளது. “எம்டிபி அபு டாபி நிறுவனமான ஐபிஐசிக்கு அனுப்பியதாகக் கூறும் $993 மில்லியன் எங்கே என (அபு டாபி) அதிகாரிகள் விசாரணை …
பெர்சே பேரணிக்குப் பிள்ளையை அழைத்து வந்தது பற்றி எம்பி-இடம் விசாரணை
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி அவரின் பிள்ளையை பெர்சே 4 பேரணிக்கு அழைத்து வந்தது தொடர்பில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இன்று டாங் வாங்கி போலீஸ் தலைமையகம் சென்ற அவரிடம் மஞ்சள்நிற டி-சட்டை அணிந்து பேரணியில் கலந்து கொண்டது பற்றியும் மே மாதம் பெர்மாத்தாங் பாவில் …
ஹாடி: பாஸ் ‘துரோகமிழைத்த’ கட்சியுடன் ஒத்துழைக்காது
இஸ்லாத்துக்குத் துரோகமிழைத்த கட்சியுடன் ஒத்துழைக்க இயலாது என்று கூறிய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், அவர்கள் “துரோகிகள்”, “எதிரிகளை விடவும் மோசமானவர்கள்” என்றார். பாஸ் முக நூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த காணொளி ஒன்றில் ஹாடி இவ்வாறு கூறினார். அவர் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் பார்டி அமானா நெகராவைக் …
நஜிப்பின் சொத்துகளை முடக்கிவைக்க அனினா நீதிமன்றத்தில் மனு தாக்கல்
லங்காவி அம்னோ மகளிர் உறுப்பினர் அனினா சாடுடின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொத்துகளை முடக்கிவைக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அனினா, பிரதமரின் சொந்தக் கணக்கில் செலுத்தப்பட்ட யுஎஸ்700 மில்லியன் தொடர்பில் நஜிப் மீதும் கட்சியின்மீதும் வழக்கு தொடுத்ததை அடுத்து அம்னோ அவரது உறுப்பியத்தை இரத்துச் …
நஜிப்: பேரணியில் நிகழ்ந்த இனத்தை இழிவுபடுத்தும் செயல்கள் விசாரிக்கப்படும்
அரசாங்கம் பாதுகாப்புக்கும் மற்ற இனங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்படுவதை,, மிரட்டல் விடுப்பவர்கள் சிகப்புச் சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களாக இருந்தாலும்கூட பார்த்துக் கொண்டிருக்காது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார். “அதனால்தான் தடைவிதிக்கப்பட்ட பகுதிக்குள் (பெட்டாலிங் ஸ்திரிட்) நுழைய முயன்ற கூட்டத்தை அதிகாரிகள் கலைத்தனர், அதற்காக தண்ணீர் பீரங்கிகளையும் பயன்படுத்த வேண்டியதாயிற்று.…


