நேற்று இரவு சிலாயாங் பாருவில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில் மொத்தம் 843 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்கள் கைது செய்யப்பட்டனர். குடியேற்றச் சட்டத்தின் கீழ் அவர்கள் பல்வேறு குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. மாநில பாதுகாப்புக் குழுவின் தலைவரான சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதின் ஷாரி, கைது செய்யப்பட்டவர்களில் இந்தோனேசியா, பங்களாதேஷ், இந்தியா,…
டிஏபி: ஜோகூர் பாலத்தில் சாலைக்கட்டண உயர்வு சட்டப்படி சரியானதா?
ஜோகூர் பாருவில், சிங்கப்பூருக்குச் செல்லும் வழியான ஜோகூர் பாரு சுங்கத்துறை, குடிநுழைவுத்துறை, குவரண்டின் (CIQ) வளாகத்தில் சாலைக்கட்டணம் உயர்த்தப்பட்டது “சட்டப்படி” செய்யப்பட்ட ஒன்றா என ஜோகூர் எதிரணித் தலைவர் பூ செங் ஹாவ் கேள்வி எழுப்பியுள்ளார். “ஆகஸ்ட் முதல் நாள் சாலைக்கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதற்குமுன், 1984ஆம் ஆண்டு …
நஸ்ரி: குற்றவாளிகள் இன்றி எம்எச் 17வழக்கை மலேசியாவில் நடத்த முடியாது
எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்மீது மலேசியாவில் வழக்கு நடத்துவது சாத்தியமற்றது என்கிறார் முன்னாள் சட்டவிவகார அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ். “(எம்எச் 17-ஐ சுட்டு வீழ்த்திய) கிளர்ச்சிக்காரர்களை விசாரணைக்கு இங்கு (மலேசியாவுக்கு) கொண்டுவர முடியாது என்கிறபோது அது போலி வழக்காகத்தான் இருக்கும்”, என அந்தச் சுற்றுலா, பண்பாட்டு …
வேதா: மஇகா-வே ரிம 540 மில்லியன் எங்கே போனது?
இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, இந்திய சமூகத்துக்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கொடுத்ததாகச் சொல்லப்படும் ரிம540 மில்லியன் எப்படிச் செலவிடப்பட்டது என்பதை மஇகா தலைவர் ஜி.பழனிவேல் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தத் தொகை பற்றி நஜிப்பே இவ்வாண்டு தொடக்கத்தில் பிரதமர்துறை துணை அமைச்சர் பதவியிலிருந்து வேதமூர்த்தி …
என்ஜிஓ: CIQ சாலைக்கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வீர்
சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா(எஸ்ஏஎம்எம்) சிங்கப்பூருக்குச் செல்லும் வழியான ஜோகூர் பாரு சுங்கத்துறை, குடிநுழைவுத்துறை, குவரண்டின் (CIQ) வளாகத்தில் சாலைக் கட்டணத்தை அளவுமீறி உயர்த்தும் முடிவைக் கண்டித்துக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. “பொதுப் போக்குவரத்து நிறுவனங்களும், ஊழியர்களும் பாதிக்கப்படும் மற்றவர்களும் அம்முடிவுக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய …
எம்எச்370-ஐத் தேடும் குத்தகையைப் பெற முன்னணி தரப்புகள் போட்டி
பல நிறுவனங்கள், காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச் 370-ஐத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிக்கான குத்தகையைப் பெறும் போட்டியில் குதித்திருப்பதாக வால் ஸ்திரிட் ஜர்னல் கூறியது. அவற்றில் Woods Hole Oceanographic Institute (WHOI)-உம் ஒன்று. இதுதான் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்த ஏர் பிரான்ஸ் விமானத்தை அது விழுந்து …
பக்கத்தானை வலுப்படுத்த தலைவர்கள் உறுதி
சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம்மை பதவியிலிருந்து அகற்றுவது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பெரும் குழப்பத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் பக்கத்தான் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அந்த எதிரணியை வலுப்படுத்துவதற்கு இன்று (ஆகஸ்ட் 2) உறுதி பூண்டனர். மக்களின் ஆதரவால் பக்கத்தான் தோன்றி வளர்ச்சி அடைந்தது. ஆகவே, கூட்டணி உறுப்புக்…
மகாதிர்: எனக்கே தணிக்கை என்றால் மற்றவர் எழுத்துகளும் தணிக்கை செய்யப்பட…
முகநூலில் தம் பதிவு தடுக்கப்பட்டிருப்பதால் ஆத்திரமடைந்துள்ள முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மலேசியாவில் இணையம் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். “ அரசாங்கங்கள், குறைந்தபட்சம் மலேசிய அரசாங்கமாவது இணையத்தைத் தணிக்கை செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்”, என மகாதிர் இன்று மாலை தம் …
கேஜே: கீகீ செய்தது குற்றம் என்றால் பாங்கொலியைக் குறை சொன்னதும்…
சாலையில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என்பதற்காக சித்தி பாய்ரா அஷிகின் மீது குற்றம்சாட்டப்பட்டதுபோல் முகநூலில் அஸான் பாங்கொலியின் சத்தம் அதிகம் என்று முகநூலில் குறை சொன்னவர்மீதும் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதின் கேட்டுக்கொண்டிருக்கிறார். “மன்னிப்பு கேட்ட பின்னரும் கீகீ-மீது குற்றம் சுமத்தப்பட்டது.…
அசிசா எம்பி ஆவதற்கு டிஏபி ஆதரவு
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் சிலாங்கூர் மந்திரி புசார் ஆவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பல வாரங்களாக அது பற்றி எதுவும் பேசாதிருந்த லிம், மந்திரி புசார் ஆவதற்கான தகுதி அசிசாவிடம் இருக்கிறதா என்று மட்டுமே பார்க்க வேண்டும் …
பிகேஆர் தண்ணீர் உடன்பாட்டைக் கெடுத்து விடக் கூடாது
மாநில மந்திரி புசார் விவகாரத்தில் உள்ளுக்குள் சர்ச்சையிட்டுக் கொண்டிருக்கும் பிகேஆர், சிலாங்கூர் அரசும் மத்திய அரசும் செய்துகொண்டிருக்கும் தண்ணீர் உடன்பாட்டைக் கெடுத்து விடக் கூடாது எனப் பயனீட்டாளர் சங்கம் ஒன்று வலியுறுத்தியுள்ளது. பனீட்டாளர்கள் ஏற்கனவே மாநிலம் போதுமான தண்ணீரைக் கொண்டிருக்கிறதா என்ற கவலையில் இருக்கிறார்கள் என்று சுபாங், ஷா …
ஷாகுல் போன்ற ‘இனவாதிகளை’ பாஸ் களையெடுக்க வேண்டும்
பாஸ், இந்துக்களை இழிவுபடுத்திப் பேசிய அதன் உறுப்பினரான மார்க்கப் பேச்சாளர் ஷாகுல் ஹமிட்டுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என பினாங்கு துணை முதலமைச்சர் II, பி.இராமசாமி வலியுறுத்தியுள்ளார். ஷாகுல் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாலும் பாஸின் பெயரைக் கெடுத்ததற்காக பாஸ் அவரைத் தண்டிப்பது அவசியம் என்றாரவர். “பாஸ்…
பிரித்தாளும் முறைதான் மசாலைத் தூள் விவகாரத்துக்குக் காரணம்
உஸ்தாத் இந்துக்களை இழிவுபடுத்தி வசமாக சிக்கிக்கொண்டது அவருடைய துரதிர்ஷ்டம். ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடக்க நாட்டின் பிரித்தாளும் முறையில் வேரோடிக்கிடக்கும் இனவாதம்தான் காரணம் என்கிறார் மலேசிய சோசலிஸ்ட் கட்சி (பிஎஸ்எம்)த் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன். “பிரித்தாளும் முறையில் பிறந்து விட்டோம். வர்க்கப் போராட்டம் நடத்தி இம்முறையைத் தகர்த்தெறியாவிட்டால்…
போலீஸ் அமைதிப் பேரணிச் சட்டத்தைக் காண்பித்து உஸ்தாத்- எதிர்ப்பாளர்களை மிரட்டக்கூடாது
2012 அமைதிப் பேரணிச் சட்டம் (பிஏஏ) அரசமைப்புக்கு விரோதமானது என முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால் அது ஒரு “நல்ல சட்டம்” அல்ல என்பதைச் சுதந்திரத்துக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு (எல்எப்எல்) போலீசாருக்கு நினைவுபடுத்தியுள்ளது. நேற்று பிரிக்பீல்ட்சில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு எதிராக பிஏஏ-இன்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீஸ் எச்சரித்திருப்பதை …
பாஸுக்கு பரிந்து பேசிய டிஏபி மன்னிப்பு கேட்க வேண்டும்
‘பாஸ் அனைவருக்குமானது’ என்றுரைத்து முஸ்லிம்- அல்லாதாரர் அக்கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததற்காக டிஏபி மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியாங். “வாட்ஸ்அப்-இல் பாஸ் மத்திய குழு உறுப்பினர்களிடையே நடந்த உரையாடல் அம்பலமானதை அடுத்து பாஸ் அனைவருக்கும் நல்லது …
உஸ்தாத் மன்னிப்பு கேட்டார்
இந்துக்களை இழிவுபடுத்திப் பேசியதற்காகக் கடும் கண்டனத்துக்கு ஆளான இஸ்லாமிய சமயப் பேச்சாளரான ஷாகுல் ஹமிட் தம் செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். “அப்படிப் பேசியதற்காக வருந்துகிறேன். அனைவரிடமும் உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”, என புக்கிட் மெர்தாஜாம் பண்டார் பெர்டா பள்ளிவாசலில் செய்தியாளர்களிடம் ஷாகுல் கூறினார். “நானும் ஒரு இந்தியன் …
திடீர் தேர்தல் நடந்தால் அதிக இழப்பு பாஸுக்குத்தான்: எச்சரிக்கிறது டிஏபி
சிலாங்கூரில் மந்திரி புசார் நெருக்கடியின் விளைவாக ஒரு திடீர் தேர்தல் நடக்குமானால் மாநில ஆட்சி பிஎன் கைக்கு மாறும் அபாயம் இருப்பதாக டிஏபி எச்சரித்துள்ளது. அதில் பாஸ் கட்சிக்குத்தான் இழப்பு அதிகமாக இருக்கும் என்றும் அது கூறிற்று. பக்காத்தான் முடிவெடுக்க முடியாமல் இருப்பதைக் கண்டு சிலாங்கூர் மக்கள் எரிச்சலும் …
எம்எச்17: இறந்தவர்களின் சடலங்களைப் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன
எம்எச்17 விமானம் விழுந்து நொறுங்கியதில் கொல்லப்பட்ட மலேசியர்களின் சடலங்கள் கொண்டுவரப்படும்போது அவை முறையாக வரவேற்கப்படும். மலேசியா, அதற்கான எற்பாடுகளை கேஎல் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்கா ராயா வளாகத்தில் செய்து வருகிறது. நேற்று, பெர்னாமா அங்கு சென்றபோது பிண ஊர்திகள் அந்த வளாகத்துக்கு வெளியில் காத்திருப்பதைக் காண முடிந்தது.…
அசிசா: பொம்மை மந்திரி புசாராக இருக்க மாட்டேன்
சிலாங்கூர் மந்திரி புசார் பதவியை ஏற்க தயாராக இருப்பதுபோல் காணப்படும் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், அவர் அப்பதவியில் ஒரு “கைப்பாவை” போலத்தான் இருப்பார் என்று சொல்லப்படுவதை மறுக்கிறார். மந்திரி புசார் பதவிக்கு அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது பற்றி முதன்முறையாக கருத்துரைத்த வான் அசீசா,…
இந்து சமயத்தை இழிவுபடுத்திய உஸ்தாத்துக்கு கடும் கண்டனம்
இன்று நூற்றுக்கணக்கானவர் கோலாலும்பூர், பிரிக்பீல்ட்சில் ஒன்று திரண்டு இந்து சமயத்தை இழிவுபடுத்திப் பேசிய இஸ்லாமிய சமயப் பரப்புரையாளரான உஸ்தாஸ் ஷாகுல் ஹமிட்-டுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டனர் மஇகாவும் இன்னும் சில என்ஜிஓ-களும் அந்தக் கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. அதில் கலந்துகொண்ட மஇகா உதவித் தலைவர் எம்.சரவணன், …
நாடற்ற சிறார்களில் பலர் சட்டவிரோதமாக வழிகளில் பிறந்தவர்கள்
நாடற்ற சிறார்களில் பெரும்பாலோர் கள்ளத்தொடர்பில் பிறந்தவர்கள் அல்லது அங்கீகரிக்கப்படாத திருமணத்தின் மூலமாக பிறந்தவர்கள் என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி. “சில ஆண்கள் வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் செய்வார்கள். அதைத் தங்களின் சட்டப்படியான மனைவியிடம் தெரிவிப்பதில்லை. “அந்தக் குற்ற உணர்வில், பிறக்கும் குழந்தைகளையும் பதிவு செய்வதில்லை”, என்று …
பாஸ் சிலாங்கூர்: பக்காத்தானிலிருந்து விலக நினைக்கவில்லை
சிலாங்கூர் பாஸ், பக்காத்தான் ரக்யாட்டிலிருந்து விலகி அம்னோவுடன் இணைந்து சிறுபான்மை மாநில அரசை அமைக்கத் திட்டமிடுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. வாட்ஸ்எப்-இல் பாஸ் மத்திய குழு உறுப்பினர் முகம்மட் ஸுஹடி கூறியிருப்பதுபோல் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட சிலாங்கூர் பாஸ் செயலாளர் முகம்மட் கைருடின் ஒத்மான், அந்த இஸ்லாமியக் கட்சி …
அன்வார்: பக்காத்தான் உடையும் அறிகுறி எதுவுமில்லை
அப்துல் காலிட் இப்ராகிமை சிலாங்கூர் மந்திரி புசார் பதவியிலிருந்து அகற்றுவதற்கு பாஸ் எதிர்ப்புத் தெரிவிப்பதால் பக்காத்தான் ரக்யாட் உடையும் என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பவில்லை. அதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று கூறிய அவர், அவ்விவகாரத்தில் பக்காத்தானுக்குள் கருத்துவேறுபாடு இருப்பதை ஒப்புக்கொண்டார். அடிநிலை தலைவர்கள் …
ஸுஹடி: காலிட் பதவிக்காலத்தை முடிக்க இடமளிப்பதே ஜனநாயகமாகும்
பாஸ் அதன் உறுப்பினர்கள் மந்திரி புசார் விவகாரம் பற்றிப் பேசுவதற்குத் தடை போட்டிருந்தாலும் அதன் மத்திய குழு உறுப்பினர் முகம்மட் ஸுஹடி மர்சுகி அதை மதிப்பதாக தெரியவில்லை. அப்துல் காலிட் இப்ராகிமை மந்திரி புசார் பதவியிலிருந்து தூக்கும் பிகேஆர் முயற்சிகளை அவர் தொடர்ந்து குறை கூறியுள்ளார். ஏற்கனவே கைபேசி…


